மீண்டும் விஜய் சேதுபதியுடன் ஜோடி சேரும் மடோனா!

மீண்டும் விஜய் சேதுபதியுடன் ஜோடி சேரும் மடோனா!

108

 

kadhalum-kadanthu-pogum

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் அனேகன், தனி ஒருவன் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை தொடர்ந்து ஏ.ஜி.எஸ் எண்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில், பிரம்மாண்டமான படம் உருவாகிறது.

இதுபற்றிய செய்திக்குறிப்பில், இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் டி.ராஜேந்தர் நடிக்க, விஜய் சேதுபதி கதாநாயகனாகவும், ப்ரேமம், காதலும் கடந்து போகும் உள்ளிட்ட படங்களில் நடித்த மடோனா செபஸ்டியன் கதாநாயகியாகவும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

ஹிப் ஹாப் ஆதி இசையமைக்கும் இந்தத்திரைப்படத்தில் அபிநந்தன் ஒளிப்பதிவு செய்ய, இப்படத்தினை கல்பாத்தி S.அகோரம், கல்பாத்தி S.கனேஷ், கல்பாத்தி S.சுரேஷ், ஆகியோர் தயாரிக்கின்றனர். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை கே.வி.ஆனந்துடன் இணைந்து சுபா மற்றும் கபிலன் வைரமுத்து எழுதுகின்றனர். இயக்கம் கே.வி.ஆனந்த். ஜூலை மாதம் இத்திரைப்படத்திற்கான படப்பிடிப்பு துவங்கவிருப்பதாக அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY