Home Tamil Cinema News மகேஷ்பாபு நடிகைகளுடன் போனில் கூட பேச மாட்டாராம்!

மகேஷ்பாபு நடிகைகளுடன் போனில் கூட பேச மாட்டாராம்!

164

Mahesh-Cop

தெலுங்கு முன்னணி நடிகர் மகேஷ்பாபு நிகழ்ச்சி ஒன்றில் பேட்டியிளித்தார், அதில் ஒரு குடும்பத்தலைவன் தனது மனைவியிடம் எப்படி பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து அவர் கூறி இருப்பதாவது:

கணவன் மனைவிக்கு பொறுப்புள்ளவனாக இருக்க வேண்டும். அவ்வாறு செயல்படாத மனிதன் முட்டாள். என்னுடைய அப்பா எப்போதும் எங்கள் குடும்பத்துடன் மிகுந்த ஈடுபாட்டுடன் இருப்பார். அதையே நான் கடை பிடிக்கிறேன்.

பெரிய நடிகர் என்றால் ‘கிசுகிசு’ வருவது சாதாரணம் அதற்கு நானே பொறுப்புள்ளவனாக இருக்க வேண்டும். ஒரு நடிகையுடன் ஒரு படத்தில் நடித்து முடித்து விட்டால், சூட்டிங் முடிந்த பிறகு அவர்களுக்கும் எனக்கும் உள்ள பந்தம் முடிந்துவிட்டது.

படப்பிடிப்பு முடிந்த பிறகு சம்பந்தப்பட்ட நடிகை என்னுடன் போனில் தொடர்பு கொண்டால் கூட அவரது போனை எடுக்க மாட்டேன். ஏனென்றால் என்னைக் குறித்து கிசுகிசு வருவதை என்னாலும், குறிப்பாக என் மனைவியாலும் ஏற்றுக் கொள்ள முடியாது. அது மட்டுமல்ல ஒரு மனைவி இந்த கிசுகிசுவை ஏற்க வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு மகேஷ்பாபு கூறியுள்ளார்.

Related Posts