Home Tamil Cinema News கலாபவன் மணி மரணத்தால் வேதனையில் ஆழ்ந்த திரையுலகம்

கலாபவன் மணி மரணத்தால் வேதனையில் ஆழ்ந்த திரையுலகம்

169

Kalabavan-Mani-Facebook

பிரபல நடிகர் கலாபவன் மணி நேற்று கொச்சியில் காலமானார். கல்லீரல் மற்றும் சிறுநீரக பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த அவர் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

வில்லன், நகைச்சுவை நடிகர், குணச்சித்திர நடிகர், பாடகர், இசையமைப்பாளர் என பன்முகத் திறமை கொண்டவர் கலாபவன் மணி. அவரது மறைவுக்கு மலையாளம் மற்றும் அனைத்து திரையுலகை சேர்ந்த பல்வேறு கலைஞர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அவரது மரண செய்தியை கேட்டு திரையுலகினர் பலர் ட்விட்டரில் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் கலாபவன் மணியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவருடைய சகோதரர் ராமகிருஷ்ணன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, சந்தேக மரணம் என வழக்குப் பதிந்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

மேலும் மரணத்துக்கான காரணத்தைக் கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவருடைய சாலக்குடி இல்லத்தில் காவல்துறை தீவிரமாக விசாரித்து வருகிறது. கள்ளச்சாராயத்தில் உள்ள மெத்தனால் என்ற நச்சுத்தன்மையுள்ள அமிலம் அவருடைய உடலில் இருந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறப்படுகின்றன.

இதனால், உடற்கூறு ஆய்வுக்காக கலாபவன் மணியின் உடல் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது. அதனையடுத்து, திருச்சூர் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு இன்று காலை நடத்தி முடிக்கப்பட்டது. இதனால் கலாபவன் மணியின் மரணம் விவரம் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.