Home Tamil Cinema News நடிகர் சிம்புவின் பீப் சாங்கிற்கு பதிலடி கொடுத்த பெண்

நடிகர் சிம்புவின் பீப் சாங்கிற்கு பதிலடி கொடுத்த பெண்

515

அனிருத் இசையில் சிம்பு பாடியதாக, கூறப்படும் ஆபாச பாடலுக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகின்றன. ஆபாச பாடலை 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கேட்டு விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

பெண்களை மிகவும் இழிவுப்படுத்திவிட்டார் என தமிழகத்தில் உள்ள மாதர் சங்கங்கள் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சிம்பு எந்த வழக்காக இருந்தாலும் சட்ட ரீதியாக சந்திக்க தயார் என கூறிவிட்டார்.

தற்போது மலேசியாவை சேர்ந்த பெண், சிம்பு பீப் சாங்கிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஒரு பாடலை பாடியுள்ளார்.