Home Tamil Movie Reviews மனிதன் – விமர்சனம்

மனிதன் – விமர்சனம்

528
TheNeoTV Tamil Movie Rating
  • Our Rating

Summary

பாலிவுட்டில் சுபாஷ் கபூரின் கதை மற்றும் இயக்கத்தில் 2013-ம் ஆண்டு வெளிவந்த "ஜாலி LLB" திரைப்படத்தின் மறுபதிப்பே "மனிதன்". இதனை வாமனன், என்றென்றும் புன்னகை உள்ளிட்ட படங்களை இயக்கிய ஐ அஹமது இயக்கியுள்ளார்.

3.2
இயக்கம்: ஐ அஹமது
ஒளிப்பதிவு: ஆர் மதி
இசை: சந்தோஷ் நாராயணன்
தயாரிப்பு: உதயநிதி ஸ்டாலின் (ரெட்ஜெயன்ட் மூவீஸ்)
நடிகர்கள்: உதயநிதி ஸ்டாலின், ஹன்சிகா மோத்வானி, பிரகாஷ் ராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், ராதாரவி, விவேக், சதீஷ்

பாலிவுட்டில் சுபாஷ் கபூரின் கதை மற்றும் இயக்கத்தில் 2013-ம் ஆண்டு வெளிவந்த “ஜாலி LLB” திரைப்படத்தின் மறுபதிப்பே “மனிதன்”. இதனை வாமனன், என்றென்றும் புன்னகை உள்ளிட்ட படங்களை இயக்கிய ஐ அஹமது இயக்கியுள்ளார்.

mani-2

பொள்ளாச்சியில் வக்கீல் வேலை செய்யும் உதயநிதிக்கு சரியாக வாடாத தெரியாமல் தனக்கு வரும் அனைத்து வழக்குகளிலும் தோற்றுக்கொண்டே இருக்கிறார். அதனால் அவருக்கு தான் காதலிக்கும் மாமா மகள் ஹன்சிகாவின் வீட்டிலும் கேலியும் கிண்டலுமே மிஞ்சுகிறது.

இதனால் கோபமுறும் ஹன்சிகா ‘நீ வக்கீல் தொழிலுக்கு சரிப்பட மாட்டே” என சண்டை போட்டுவிட ‘ஜெயித்து விட்டு தான் திரும்பி வரணும் ‘என்ற முடிவோடு சென்னையில் உள்ள தனது வக்கீல் மாமா விவேக் வீட்டிற்கு கிளம்புகிறார்.ஆனால் விவேக்கோ இவரைப்போலவே டம்மி வக்கீலாக இருக்கிறார்.

mani-5

பிளாட்பாரத்தில் படுத்து தூங்கி கொண்டிருந்த மக்களின் மேல் காரை ஏத்தி கொன்று விட்ட பணக்கார பையனை பிரபல வக்கீலான பிரகாஷ்ராஜ் தன் வாத திறைமையால் காப்பாற்றுகிறார். தன்னை நம்பி யாருமே வழக்கை தராததால் இதனை பொதுநல வழக்காக எடுத்து மேல் முறையீடு செய்து அனைவரது கவனத்தையும் ஈர்கிறார் உதயநிதி. பின்னர் இவர் அந்த வழக்கில் எப்படி ஜெயிக்கிறார் என்பதே படத்தின் மீதிக்கதை.

mani-8

சற்றே கடினமான ரோல்தான். நிறுத்தி நிதானமாக பொறுமையாக டீல் பண்ணுகிறார் உதயநிதி. யதார்த்தத்திற்கு மிக அருகில் நிற்கிறது அவரது கேரக்டர். அதனாலேயே பைட் சீன்களில் செமத்தியாக அடியெல்லாம் வாங்குகிறார். பிரகாஷ்ராஜ் நடிப்பு அசுரன் என்று தெரிந்தும், சரிக்கு சரி நின்று மோத முடிவெடுத்த அந்த துணிச்சலுக்காகவே முதல் சபாஷ். அந்த போட்டியில் ஓரளவுக்கு ஸ்கோர் செய்யவும் முடிந்திருக்கிறது அவரால்.

ஹன்சிகாவே பணம் கொடுத்து செல்போன் வாங்கித்தர சொன்னதாகவும், ஆனால் இரண்டாயிரம் ரூபாய் சைனா செட்டில் விஷயத்தை முடித்துவிட்டதாகவும் உதயநிதி அளக்கிற இடத்தில், ஐயோ வக்கீலே… எப்படிங்க இவ்ளோ தூரம் படிச்சீங்க? என்று சந்தேகப்பட வைக்கிறது அந்த கேரக்டர். அதென்னவோ தெரியவில்லை. லவ் சீன்களில் மட்டும் ஹன்சிகாவை வளைத்து வளைத்து பிரகாசம் ஆகிறார் உதயநிதி.

mani-7

பெற்ற மகனைத் தூக்குக் கயிற்றில் இருந்து காப்பாற்றிக் கொடுத்த வக்கீலுக்குக் கொடுக்க வேண்டிய ஃபீஸைக் கூட குறைவாக கொடுப்பதும் கேட்டால் மிரட்டுவதுமான, அந்த கோடீஸ்வர அல்பத்தனம் கலந்த வில்லத்தனம் தமிழ் சினிமாவுக்கு ரொம்பவே புதுசு.

சக்தியின் பாதுகாப்புக்கு வேண்டும் என்றே ஒரு நோஞ்சான் போலீசை அரசு நியமிப்பதும் அதை வைத்து காமெடி மட்டும் செய்து விட்டு அப்படியே அம்போ என்று விட்டு விடாமல், சரியான சமயத்தில் அந்தக் கேரக்டரை சரியாகப் பயன்படுத்தும் வகையில் செய்திருப்பது அருமை.

mani-12

விவேக் கேரக்டருக்குப் பொருத்தமாக இருக்கிறார் சில இடங்களில் நகைசுவை வெடி வெடிக்கிறார். நேர்மையான பத்திரிக்கையாளர் கேரக்டரை ஷட்டில் ஆகவும் ஷார்ப்பாகவும் நடித்து பாராட்டுப் பெறுகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
சங்கிலி முருகன் நேர்த்தி. ராகுல் திவானின் தாத்தா மற்றும் கமலக் கண்ணன் பாத்திரங்களுக்கான நடிகர் தேர்வும் அவர்கள் நடிப்பும் வெகு சிறப்பு.

mani-9

ஒளிப்பதிவாளர் மதியின் ஸ்பெஷல் லைட்டுகளில் குளித்து மேலும் மெருகேறியிருக்கிறார் ஹன்சிகா. அவரை அதிகம் நடிக்க வைத்து நமக்கும் ஹன்சிகாவுக்கும் ஒருசேர சங்கடத்தை தரவில்லை இயக்குனர். பாடலும் காதலும் தேவை என்பதால் ஹன்சிகாவும் படத்தில் இருக்கிறார்.

சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். மதியின் ஒளிப்பதிவில் தன்னுடைய பங்கினை சிறப்பாக செய்திருக்கிறார். பொதுவாகவே இதுபோன்ற நீதிமன்ற கதைகளை பின்னணியாக கொண்ட படங்களில், வண்டி வண்டியாக வசனம் பேசுகிற வழக்கத்தை முதன் முறையாக மாற்றியிருக்கிறார் அஜயன் பாலா.

மொத்தத்தில் “மனிதன்” – குடும்பத்துடன் ரசிக்க சிறந்த படமே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here