Home Tamil Cinema News சிம்புவுடன் நடிப்பது கஷ்டம் – புலம்புகிறார் அறிமுக நடிகை

சிம்புவுடன் நடிப்பது கஷ்டம் – புலம்புகிறார் அறிமுக நடிகை

108

gautham

கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு – மஞ்சிமா மோகன் நடித்து வரும் படம் அச்சம் என்பது மடமையடா. மஞ்சிமா மோகன் அளித்த பேட்டியில் சிம்புவுடன் நடிக்கிறது ரொம்பக் கஷ்டம் என்று தெரிவித்து இருக்கிறார்.

சிம்பு படப்பிடிப்புத் தளத்தில் நிறைய வேடிக்கை செய்து கொண்டே இருப்பார். அவரால் நான் எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்கிறேன். முக்கியமான காட்சிகளின் போது கூட என்னால் சிரிப்பை நிறுத்த முடிவதில்லை.

சிம்பு, மஞ்சிமா மோகனுடன் இணைந்து ராணா டகுபதி, டேனியல் பாலாஜி மற்றும் பலர் நடித்து வரும் அச்சம் என்பது மடமையடா படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்நிலையில் படத்தின் நாயகி மஞ்சிமா மோகன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நடிகர் சிம்புவுடன் நடிப்பது கடினமாக உள்ளது என்று தெரிவித்திருக்கிறார்.

படத்தின் காட்சிகளை நடிக்க முடியாத அளவுக்கு சிம்புவின் காமெடி இருக்கிறது. எல்லோரும் என்னைப் பார்க்கிறார்களே என்பது பற்றிக் கூட கவலைப்படாமல் நான் சிரித்துக் கொண்டே இருக்கிறேன். இதனால் சிம்புவுடன் இணைந்து நடிப்பது கடினமாக உள்ளது. ஆனால் சிம்புவிற்கு எந்த ஒரு காட்ச்சியும் கடினமானது அல்ல – இவ்வாறு மஞ்சிமா மோகன் தெரிவித்து இருக்கிறார்.

இருமொழி படமாக தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் உருவாகி வரும் இப்படத்தில் சிம்பு ஒரு பைக் விரும்பியாக நடித்திருக்கிறாராம். மலையாளப் படங்களில் நடித்து புகழ்பெற்ற மஞ்சிமாவின் ரோல் மாடல் நயன்தாராவாம். என்னடா சிம்பு பற்றிய செய்திகள் தற்போது வெளிவருவதில்லை என்றிருந்த திரையுலக ரசிகர்களுக்கு புதிய விருந்தாக இந்த செய்தி அமைந்துள்ளது என்றுதான் கூறவேண்டும்.