Home Tamil Movie Reviews மாப்ள சிங்கம் – விமர்சனம்

மாப்ள சிங்கம் – விமர்சனம்

558
TheNeoTV Tamil Movie Rating
  • Our Rating

Summary

தமிழ் சினிமாவில் ஒரு சில கதைகள் வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்று ரசிகர்களை ஜாலியாக இரண்டு மணி நேரம் சிரிச்சுட்டு போங்கள் என்று சொல்லும் விதத்தில் வந்துள்ளது. அந்த விதத்தில் அதே போல வெளிவந்துள்ள படம் தான் மாப்ள சிங்கம். இருப்பினும், இதில் சின்னதாக பெண் கல்வி பற்றியும் தூவி விட்டு மசாலா விருந்து படைத்துள்ளனர்.

2.7
இயக்கம்: ராஜசேகர்
ஒளிப்பதிவு: தருண் பாலாஜி
இசை: ரகு நந்தன்
தயாரிப்பு: எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன்
நடிகர்கள்: விமல், அஞ்சலி, சூரி, ராதாரவி, மயில்சாமி, மதுமிலா, மனோ பாலா, காளி வெங்கட், சிங்கமுத்து, ராம்தாஸ்

 

தமிழ் சினிமாவில் ஒரு சில கதைகள் வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்று ரசிகர்களை ஜாலியாக இரண்டு மணி நேரம் சிரிச்சுட்டு போங்கள் என்று சொல்லும் விதத்தில் வந்துள்ளது.

maxresdefault9

அந்த விதத்தில் அதே போல வெளிவந்துள்ள படம் தான் மாப்ள சிங்கம். இருப்பினும், இதில் சின்னதாக பெண் கல்வி பற்றியும் தூவி விட்டு மசாலா விருந்து படைத்துள்ளனர்.

தேனி மாவட்டம் வீரபாண்டியூர் ஊராட்சி மன்றத் தலைவர் ராதாரவி. அந்தப் பகுதியின் மெஜாரிட்டியான சாதியைச் சேர்ந்தவர். நிறைய சாதி வெறி பிடித்தவர். சாதிவிட்டு சாதி திருமணத்தை அடியோடு வெறுப்பவர்.

இவருடைய தம்பி கு.ஞானசம்பந்த்த்தின் மகன் விமல். 12-ம் வகுப்பு பெயில். பெரியப்பா பெயருக்கு இருக்கும் மரியாதையோடு ஊரில் கெத்தாக வலம் வருபவர். வெட்டி ஆபீஸர் என்பதால் இவரும் பெரியப்பா வழியில் காதலர்களை பிரித்து வைக்கும் பாவத்தைச் செய்து வருகிறார். இவருக்கு 3 அல்லக்கைகள்.

MaplaSingam-Movie-Stills-18

அதே ஊரின் காலம்காலமாக நடைபெற்று வரும் தேரோட்டம் சில வருடங்களாக தடை பட்டு நிற்கிறது. தேரை நாங்கள்தான் இழுப்போம் என்று இரண்டு சாதியினரும் மல்லுக் கட்டி நிற்கிறார்கள். ஒவ்வொரு வருடம் தேரோட்டத்தின்போதும் ரகளைகளும், சாதி சண்டைகளும் நடப்பது இங்கே சகஜம்.

ராதாரவிக்கு எதிரணியில் ஜெயப்பிரகாஷும், இவருடைய உறவினரான முனீஷ்காந்தும் முன்னணியில் இருக்கிறார்கள். ஜெயப்பிரகாஷின் மகள் ஹீரோயின் அஞ்சலி. அஞ்சலியின் அண்ணன் ராதாரவியின் மகளைக் காதலிக்கிறான். திருமணம் செய்ய தயாராக இருக்கிறார்கள் இந்த ஜோடி.

இந்த நேரத்தில் ஒரு கேஸ் விஷயமாக அஞ்சலியை சந்தித்து பேசும் விமலுக்கு வழக்கம்போல பார்த்தவுடன் காதல் பிறக்கிறது. அஞ்சலிக்கும் விமலின் தங்கை, தனது அண்ணனின் காதல் தெரிந்துவிடுகிறது.
திடீரென்று ராதாரவி தன் மகளுக்கு திருமணம் நிச்சயம் செய்கிறார்.

நிச்சயம் மட்டும்தானே கல்யாணம் இல்லையே என்று சொல்லி தங்கைக்கு சமாதானம் சொல்லி பெண் பார்க்க வைக்கிறார் விமல். திடீரென்று விமலின் தங்கை காணாமல் போய்விட. இதற்கு ஜெயப்பிரகாஷின் மகன்தான் காரணம் என்று நினைத்து அவரது வீட்டை அடித்து நொறுக்குகிறார்கள் ராதாரவியின் ஆட்கள்.

1434987613_vimal-anjali

ராதாரவியின் மகளோ சென்னைக்கு வந்து டைட்டல் பார்க்கில் டிசிஎஸ் நிறுவனத்தில் வேலைக்கு சேர வந்திருப்பது பின்புதான் அவர்களுக்குத் தெரிகிறது. இந்த நேரத்தில் ராதாரவிக்கும் மகளின் காதல் விவகாரம் தெரிய வர கொதிக்கிறார். தன் விருப்பப்படிதான் தன் மகளின் கல்யாணம் நடக்கும் என்கிறார்.

இடையில் முனீஸ்காந்தின் அடியாட்கள் விமலை அடித்து காயப்படுத்திவிட.. இதனை யோசித்துப் பார்க்கும் ராதாரவி, விமலை அடுத்த ஊராட்சி மன்றத் தேர்தலில் தலைவர் பதவிக்கு நிறுத்துகிறார். அதே நேரம் எதிரணியின் சார்பாக அஞ்சலி தேர்தலில் நிற்கிறார். தேர்தலில் அஞ்சலி ஒரு வோட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று தலைவராகிறார்.
தொடர்ந்து ராதாரவியின் மகளுக்கு கல்யாணப் பத்திரிகை தயாராகி திருமண ஏற்பாடுகள் நடக்க.

அஞ்சலி எதிர்க்கட்சியின் சார்பாக நின்று ஊராட்சி மன்றத் தலைவராகிவிட. அஞ்சலியை காதலிக்கும் விமலுக்கு சிக்கலுக்கு மேல் சிக்கலாகிறது. இதையெல்லாம் அவர் எப்படி சமாளித்து அஞ்சலியைக் கைப்பிடிக்கிறார் என்பதுதான் மீதிக் கதை.

Mapla-Singam-Movie-Review

விமல் நமக்கு இந்த ரூட் தான் பாஸு பெஸ்ட், என்று சொல்கிற அளவுக்கு ஊருக்குள் காலேரை தூக்கிவிட்டு, காதலர்களை பிரிப்பது, பின் தனக்கே ஒரு கட்டத்தில் காதல் வர, மதுமிலா காதலை சேர்த்து வைக்க உதவி செய்வது என நீண்ட இடைவேளைக்கு பிறகு களவாணி விமலாக பதிகிறார்.

அஞ்சலி போதுங்க இன்னும் எத்தனை படத்துல, பசங்கள மிரட்டிற மாதிரியே லவ் பண்ணுவீங்க, எங்கேயும் எப்போது. அஞ்சலியை நியாபகப்படுத்தினாலும், அந்த க்யூட் இதில் மிஸ்ஸிங்.

சூரி, காளி வெங்கட் கிடைக்கிற கேப்பில் எல்லாம் அதகளம் செய்கின்றனர். ஏ எண்டர் ஆடியன்ஸ் என்று சொல்லப்படுபவர்களுக்கு வேண்டுமென்றால் சூரி காமெடி சிரிப்பு வராமல் இருக்கலாம், ஆனால், ஜனரஞ்சக சினிமா ரசிகர்கல் பலரையும் கவர்ந்து இழுத்து விடுகிறார். அதிலும் ‘எங்க ஊர்ல தான் கல்யானுத்துக்கு பொண்ணுங்க சம்மதம் கேட்க மாட்டோம், அப்படி கேட்ட ஒரு பொண்ணு எங்க ஊர்ல ஒரு ஆம்பளைக்கு கல்யாணம் நடக்காது’ என தன் வழக்கமான சிங்கில் பஞ்சில் தூள் கிளப்புகிறார். கூடவே எக்ஸ்ட்ரா போனஸாக காளி வெங்கட்.

இவர்களே போதும் என்று நினைத்தால், சுவாமிநாதன் தன் பங்கிற்கு கலக்குகிறார்.அதும் மதுமிலா ஓடி போய்விட்டார் என தவறாக கூறிவிட்டு அவர் செய்யும் கலாட்டக்கள் செம்ம. ராதாரவி தற்போது புல் பார்மில் இருக்கிறார் போல, நடிக்கும் அனைத்து படங்களிலும் அசத்துகிறார்.

IMG_6094-0

யார் அந்த வெள்ளைக்காரர், தமிழ் எல்லாம் பேசுகிறார் என கிண்டல் செய்தாலும், ‘ உங்க ஊர்ல வேலையில்லாதவங்க தான் தேர்தல் நிற்பாங்களா’ என கேட்டு சூரிக்கே கவுண்டர் கொடுக்கிறார். படம் என்ன தான் ஜாலியாக இருந்தாலும், கதைந்னு பெரிதாக ஏதும் இல்லை. அதிலும் தேசிங்குராஜா படத்தில் அஞ்சலி, ராதாரவி, காளி வெங்கட் மட்டும் எக்ஸ்ட்ராவாக சேர்த்தது போல் உள்ளது.

ஒளிப்பதிவுக்கு அதிக முன்னுரிமை கொடுக்காமல் இயக்கத்திற்கும், காட்சிகளுக்கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுத்திருப்பது போல தெரிகிறது. தருண் பாலாஜியின் ஒளிப்பதிவில் பாடல் காட்சிகளில்தான் மட்டுமே அவர் தெரிகிறார். ரகுநந்தனின் இசையில் ‘எதுக்கு மச்சான் காதலு’ பாடலும், ‘இடுப்பழகி’ பாடலும், ‘வந்தாரு வந்தாரு மாப்ள சிங்கம்’ பாடலும் கேட்கும் ரகம்.

வரிசையாக தொடர்ந்து இது போன்ற கமர்ஷியல் படங்கள் வந்து கொண்டேயிருப்பதால் அடிக்கடி சிரிப்பை உதிர்க்க வைக்கும் காமெடிகளை விட்டுவிட்டால், இந்தப் படத்தில் சொல்வதற்கு வேறு ஒன்றுமில்லை.

மொத்தத்தில் மாப்ள சிங்கம் – மாப்ள இருக்காரு ஆனா சிங்கம்தான் இல்லை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here