Home Tamil Movie Reviews மருது – விமர்சனம்

மருது – விமர்சனம்

747
TheNeoTV Tamil Movie Rating
  • Our Rating

Summary

'குட்டிப் புலி', 'கொம்பன்' படங்களை இயக்கிய முத்தையா-வின் இயக்கத்தில் விஷால், ஸ்ரீதிவ்யா, சூரி ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள மூன்றாவது கிராமத்து பாணி ஆக்ஷன் மற்றும் சென்டிமென்ட் கலந்த திரைப்படம் 'மருது'.

2.5
இயக்கம்: முத்தையா
ஒளிப்பதிவு: வேல்ராஜ்
இசை: டி இமான்
தயாரிப்பு: ஜி என் அன்புசெழியன் (கோபுரம் பிலிம்ஸ்)
நடிகர்கள்: விஷால், ஸ்ரீதிவ்யா, சூரி, ராதாரவி, ஆர்.கே.சுரேஷ்

‘குட்டிப் புலி’, ‘கொம்பன்’ படங்களை இயக்கிய முத்தையா-வின்  இயக்கத்தில் விஷால், ஸ்ரீதிவ்யா, சூரி ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள மூன்றாவது கிராமத்து பாணி ஆக்ஷன் மற்றும் சென்டிமென்ட் கலந்த திரைப்படம் ‘மருது’.

Marudhu-Movie-Posters

ராதாரவி ராஜபாளையத்தில் பெரிய தலைக்கட்டாக வலம் வருகிறார், இவர் கை காட்டியவர் தான் அந்த ஊரில் பதவிகளை பிடிக்க முடியும் என்ற அளவுக்கு ஊரினை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார். ராதாரவியின் இடது கை போல் அவர் சொல்லும் அத்தனை அடிதடி, கட்டப்பஞ்சாயத்து வேலைகளை முடித்துக்கொடுப்பவர் தாரை தப்பட்டை புகழ் ஆர்.கே.சுரேஷ்.

இவரை அடுத்த MLA ஆக்க ராதாரவி முயற்சி செய்து வருகிறார். இதே ஊரில் மூட்டை தூக்குபவர் விஷால், தன் அப்பத்தாவின் வளர்ப்பில் வீரமாகவும், ஊரில் எந்த தவறு நடந்தாலும் அதனை தட்டிக்கேட்கும் கோபக்கார ஹீரோவாக வலம் வருகிறார்.

ஸ்ரீதிவ்யாவை ஒரு கோவிலில் பார்க்க, பார்த்தவுடன் மோதல் பிறகு காதல் என விஷாலின் வாழ்க்கை சந்தோஷமாக செல்ல, ஸ்ரீதிவ்யாவின் அம்மாவை ஒரு சில காரணங்களுக்காக ஆர்.கே.சுரேஷ் கொலை செய்தது விஷாலுக்கு தெரிய வருகிறது.

vishal_146279280540

அவர் இறந்ததற்கு ஏதோ ஒரு விதத்தில் விஷாலும், அவருடைய அப்பத்தாவும் காரணமாக அமைய, பிறகு என்ன அப்பத்தா விஷாலுக்கு கொம்பை சீவி விட விஷால் ஆர்.கே.சுரேஷின் அநியாயங்களை அடக்குவது தான் மீதிக்கதை.

ராஜபாளையத்தில் மூட்டைத் தூக்கும் தொழிலாளியாக, தன் அப்பத்தாவிற்கு செல்லப் பேரனாக வரும் விஷால், கதாபாத்திரமாகவே மாறி நடித்துள்ளார். குட்டிப்புலி சசிக்குமார் போன்று பெண்களுக்கு மரியாதை கொடுப்பவர். காதலி ஸ்ரீதிவ்யா-விற்காக எதிரிகளை விரட்டி விரட்டி வேட்டையாடும் விஷால், ஆக்ஷன் காட்சிகளை சிறப்பாக செய்துள்ளார்.

சூரியுடன் இணைந்து காமெடியிலும் கலக்கியிருக்கிறார். விஷாலின் நண்பனாக வரும் சூரி, காமெடியில் மட்டுமில்லாமல், குணச்சித்திர வேடத்திலும் சிறப்பாக நடித்திருக்கிறார். அதே நேரத்தில் கிளைமேக்ஸில் செண்டிமெண்ட் காட்சிகளிலும் கலங்கடிக்க வைத்திருக்கிறார்.

vishal_146279280530

ஸ்ரீதிவ்யா-விற்கு நடிப்பை வெளிப்படுத்த அதிக காட்சிகளும், வாய்ப்புகளும் இதில் இருக்கிறது. அதை சரியாக செய்து மனதில் நிற்கிறார். அவர் இதில் விஷாலையே கை நீட்டி அடிக்கும் அளவிற்கு தைரியமான பெண்ணாக நடித்திருக்கிறார். தென் மாவட்டத்து பெண்களுக்கே உரிய அழகிய பாவனை.

விஷாலின் அப்பத்தாவாக வரும் கதாபாத்திரம் பலமாக உள்ளது. இவர் படத்தின் மற்றொரு ஹீரோ என்றே கூறலாம். அந்த அளவிற்கு காமெடியிலும், சென்டிமென்ட் காட்சிகளிலும் கலக்கல்.

ஆர்.கே.சுரேஷ் அவர் வீட்டில் உள்ளவர்களை தவிர எல்லோரையும் வெட்டுகிறார், குத்துகிறார், லாஜிக் அத்துமீறல். இந்த ஊரில் போலிஸ் எல்லாம் இருக்கிறார்களா? இல்லையா! என்று கேட்கும் அளவிற்கு உள்ளது.

vishal_146279280520

வசனங்களில் அனல் பறக்க விட்டிருக்கிறார் இயக்குனர் முத்தையா. அதிலும் குறிப்பாக, நமக்கான பையன் நம்மைத் தேடி வந்தா நாம தரமானவள்னு அர்த்தம் வர்லைன்னா? தகுதி இல்லாதவள்னு அர்த்தம்! ‘பொண்ணுங்கள’ கும்பிட்டு தான் பழக்கம் கூப்பிட்டு பழக்கமில்ல.

பொண்ணுக்கு ஒண்ணுன்னா புலி மாதிரி அடிப்பேன். தேவைப்பட்டா ‘புலியையே அடிப்பேன்’. சம்பாதிக்கற மாப்ளை கேப்பாக, நீ என்ன சமைக்கற மாப்ளை கேக்குற? சமைக்கற பையன் தான் பொறுப்பானவனா இருப்பான். இதுபோன்ற வசனங்களினால் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார் முத்தையா.

டி இமானின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஆட்டம் போட வைத்தாலும் பின்னணி இசை காதை பதம் பார்க்கிறது. இயக்குனர் வேல்ராஜின் ஒளிப்பதிவில் பாடல் காட்சிகளும், ஆக்ஷன் காட்சிகளும் பரவாயில்லை ரகம்.

மொத்தத்தில் ‘மருது’ – சென்டிமென்ட்டுக்காக பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here