Home Tamil Cinema News மருது படத்தின் வில்லன் மனுஷனே கிடையாதாம்!

மருது படத்தின் வில்லன் மனுஷனே கிடையாதாம்!

589

RK Suresh

குட்டிப்புலி, கொம்பன் ஆகிய படங்களை இயக்கிய முத்தையா தற்போது விஷால் நடிப்பில் உருவாக்கிவருகின்ற படம் ‘மருது’. இந்தப் படத்தில் ஸ்ரீதிவ்யா, ராதாரவி ஆகியோரும் நடித்துள்ளனர். இதில் வில்லனாக தாரை தப்பட்டை படத்தில் மிரட்டியய ஆர்.கே.சுரேஷ் நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் ஆர்.கே.சுரேஷ் கதாபாத்திரம் குறித்து விஷால் கூறும்போது, என் படங்களில் என் கதாபாத்திரம் சிறப்பாக இருக்க வேண்டும் என்று நினைப்பதைப் போலவே எனக்கு எதிரியாக வரும் வில்லன் பாத்திரமும் சிறப்பாக அமைய வேண்டும் என்று விரும்புவேன்.

இதில் வில்லனாக வரும் ஆர்கே சுரேஷ் ஒரு மனுஷனே கிடையாது. அவர் ஒரு பேய், ராட்சசன் என்று கூறலாம். அந்த அளவுக்கு வெளுத்து வாங்கியிருக்கிறார். எங்கள் இருவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் நேஷனல் ஜியாகிரபி போல மிரட்டும் என்று கூறினார். மேலும் மருது படத்தில் அவருடன் நடித்தவர்கள் பற்றி கூறும்போது,

கதாநாயகி ஸ்ரீதிவ்யா. என்னுடன் அவர் நடிக்கும் முதல் படம் ‘மருது’ தான். அவருக்குப் பொருத்தமான வேடம் சிறப்பாகச் செய்திருக்கிறார். படத்தில் கிராமத்துப் பாட்டியாக மலையாள நடிகை லீலா நடித்திருக்கிறார். அவருக்கு இதுதான் தமிழில் முதல்படம். பிரமாதப்படுத்தியிருக்கிறார். நான்தான் கதாநாயகன், ஸ்ரீதிவ்யாதான் கதாநாயகி என்றாலும் பாட்டி பாத்திரம்தான் படத்தின் உயிர் என்று கூறுவேன் என்று அவர் கூறியுள்ளார்.