Home Health Health Tips இஞ்சியின் மருத்துவ பயன்கள்!

இஞ்சியின் மருத்துவ பயன்கள்!

613

ginger

இஞ்சியின் குடும்ப வகை:

திணை: தாவரம்
பிரிவு: பூக்குந்தாவரம்
வகுப்பு: Liliopsida
வரிசை: இஞ்சிவரிசை
குடும்பம்: இஞ்சிக் குடும்பம்
பேரினம்: Zingiber
இனம்: Z. officinale

சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமும் இல்லை, சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை என்பது ஒரு பழைய பழமொழி.

இஞ்சி காய்ந்தால் சுக்கு (வேர்க்கொம்பு) ஆகும். இது பல மருத்துவப் பயன்களைக் கொண்டிருக்கிறது. இது மஞ்சள் போலவே இருக்கும் ஒரு விவசாய பயிராகும். வேரில் மஞ்சள் போலவே இருக்கும். பொங்கலின் பொது இஞ்சி கொத்தும், மஞ்சள் கொத்தையுமே புது பொங்கல் பானையில் கட்டுவார்கள்.

இஞ்சியையும் சுக்கையும் உபயோகிக்கும் போது சுத்தி செய்தல் மிக முக்கியமானது. இல்லையெனில் மாறாக வயிற்றுக் கடுப்பு முதலியவை ஏற்ப்படும்.

இஞ்சியை சுத்தம் செய்ய அதன் மேல்தோலை நன்றாக நீக்க வேண்டும் அதன் மேல்தோல் நஞ்சாகும். அதேபோல் சுக்கை சுத்தம் செய்ய அதன்மேல் சுண்ணாம்பை தடவி காயவைத்தபின் அதை நெருப்பில் சுட்டு பின் அதன் தோலை நன்கு சீவி எடுக்க வேண்டும். இது மிக முக்கியமானது சுத்தம் செய்யாமல் உபயோகிக்க வேண்டாம்.

இஞ்சியை சுத்தம் செய்து மேல்தோலை நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கி 150 கிராம் எடுத்து, அத்துடன் சுத்தமான தேனையும் அதே அளவிற்கு சேர்த்து நான்கு நாள் கழித்து தினமும் ஒன்றிரண்டு துண்டுகளாக ஒரு மண்டலத்திற்கு சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் அடைந்து, பித்தம் முழுவதுமாக நீக்கப்பட்டுவிடும். ஆயுள் அதிகரிப்பதுடன் முகப்பொலிவும், அழகும் கூடும். வேம்பு காயகல்பம் போன்று இதுவும் ஒரு காயகல்ப முறையே.

சுக்கு, மிளகு, திப்பிலி என்பது திரிகடுகம் எனும் கூட்டு மருந்தாகும். சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு மிகவும் நன்மை செய்பவை ஆகும்

மருத்துவ குணங்கள்

தடிமன் நோய்க்காரணியான வைரஸைத் தாக்கி அழிக்கிறது. தலைவலியைப் போக்குகிறது.

இரத்தஓட்டம் சீராக இருக்க உதவுகிறது.

கொழுப்புச்சத்தைக் குறைக்கிறது.

மத்திய நரம்பு மண்டலத்தைத் தூண்டி இருதய, சுவாசத் தசைகள் சீராக இயங்க உதவுகிறது.

மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கிறது.

சமிபாட்டைச் சீராக்கி வயிற்றுவலி ஏற்படுவதைத் தடுக்கிறது.

மகளிரின் கருப்பைவலிக்கும் மாதவிலக்கு நேரங்களில் அடிவயிற்றில் உண்டாகும் வலிகளுக்கும் நன்மருந்தாக உள்ளது.

தோலில் உண்டாகும் உலர்சருமம், காயங்கள், சிரங்குகள் போன்றவற்றிக்கும் இது நல்ல மருந்தாகும்.

இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிற்று நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.

இஞ்சி சாறில், தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர நோய்தடுப்பு திறன் கூடும். உற்சாகம் ஏற்படும். இளமை பெருகும்.

இஞ்சிசாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக்கோளாறு நீங்கி பலம் ஏற்படும்

இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.

இஞ்சியை கொத்தமல்லி இலையுடன் சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீரணம், வாய் நாற்றம் தீரும். சுறுசுறுப்பு ஏற்படும்.

இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்.

காலையில் இஞ்சிசாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.

பத்துகிராம் இஞ்சி, பூண்டு(உள்ளி) இரண்டையும் அரைத்து, ஒருகப் வெந்நீரில் கலந்து காலை, மாலை இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி தீரும்.

இஞ்சியானது பசியைத் தூண்டுவதுடன், தேவையற்ற கழிவுகளை வெளிக்கொணர பேருதவி புரிகிறது. உடலின் ஜீரண உறுப்புகள், சிறுகுடல், பெருங்குடல் உள்ளிட்டவை இஞ்சி சாறு மூலம் சுத்தப்படுத்தப் படுகிறது.

இஞ்சியின் மருத்துவ குணங்களில் முக்கியமான ஒன்று உடலின் சமிபாட்டை துரிதப்படுத்துதல் ஆகும். பெரும்பாலான நோய்களுக்கு காரணமாக இருக்கும் மலச்சிக்கலை அறவே அகற்றி உடலுக்கு புத்துணர்ச்சியை தருகிறது. பொதுவாக அசைவ உணவு வகைகளை சமைக்கும்போது, வெள்ளைப்பூண்டும், இஞ்சியும் அதிக அளவில் சேர்த்து சமைப்பார்கள்.

வேர்க்கொம்புடன் கொத்தமல்லி பொடியை சேர்த்து தண்ணீரில் கொதிக்க வைத்து அதனுடன் வெல்லம் கலந்து சாப்பிட வாதக்கோளாறு நீங்கி பலம் ஏற்படும். வயிற்றில் சேரும் கொழுப்பு கரையும். தொப்பை குறையும். சமிபாட்டு பிரச்சினை நீங்கும். மலச்சிக்கல் தீரும். நன்றாக பசி எடுக்கும். இந்த பானத்தை காலை மாலை இருவேளையும் அருந்தலாம். ஆக முன்று தோஷத்தையும் (பித்தம்- கபம் -வாதம்) நீக்கும் ஆற்றல் இஞ்சிக்கு உண்டு.

இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர தொப்பை எனும் பெருவயிறு கரைந்து விடும்.

இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து ஒரு வாரம், காலையில் ஒரு கரண்டி வீதம் குடித்துவர நீரிழிவு குறையும்.

இதய நோயாளிகளுக்காக இந்திய மருத்துவக் கழகம் சமீபத்தில் ஒரு ஆய்வுச் செய்தியை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் உணவில் ஐந்து கிராம் இஞ்சியைச் சேர்த்துக் கொள்வது, இதய நோயாளிகளுக்கு மாரடைப்பை வராமல் காக்கும் என்கிறது அந்தச் செய்தி.

பொதுவாக நாம் அரிசியையே பிரதான உணவாக தினமும் உண்டு வருகிறோம். இப்படிப் பல ஆண்டு காலம் அரிசியை தினசரி உணவாகக் கொள்பவர்களுக்கு, “பைப்ரினோலிடிக்” செயற்பாடு குன்றி, இரத்தக் குழாய் அடைப்பைக் கரைக்கும் நடவடிக்கையில் தாமதம் ஏற்படுவதாகவும், இதனை இஞ்சி சரிசெய்வதாகவும் இந்த ஆய்வுச்செய்தி தெரிவிக்கிறது.

இஞ்சியானது இதய இரத்தக்குழாய்கள் எதிலும் அடைப்பை உண்டாகாமல் தடுத்தும், மேலும் உண்டாவதைக் கரைத்தும் உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

அது என்ன இஞ்சி இடுப்பழகி என ஒரு குரல் கேட்கிறது. தினம் ஒரு துண்டு இஞ்சியை அரைத்து ஒரு குவளை மோரில் கரைத்துக் குடித்தால் இடுப்புப் பகுதியில் கொழுப்பு சேராமல் பார்த்துக்கொள்ளும். சேர்த்த கொழுப்பையும் கரைக்கும். அதன்பிறகு எந்த வயதிலும் நீங்கள் இடுப்பழகியாகவே இருக்கலாம்.

எந்த பானம் குடித்தாலும், அதில் ஒரு கரண்டி இஞ்சி சாறை கலந்து குடியுங்கள். 40 வயதுக்கு பின் மூச்சை பிடித்துக்கொண்டு அவஸ்தைப்பட வேண்டாம்.

இஞ்சி- சுக்கு இவை உடம்பில் உள்ள அனைத்து நோய் கிருமிகளையும் போக்கும் ஆற்றல் படைத்த ஒரு சர்வ ரோக நிவாரிணி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here