Home Health Health Tips இயற்கை வைத்தியத்தில் மூல நோய்க்கு ஒரு சிறப்பான மருந்துவம்

இயற்கை வைத்தியத்தில் மூல நோய்க்கு ஒரு சிறப்பான மருந்துவம்

254

moolam

குமட்டி காய் என்றொரு காய் நமதூர்களில் வேலிகளில் படர்ந்து கிடக்கும். அந்த காயை எடுத்து அதை நன்றாக உடைத்து கொள்ள வேண்டும்.

நாம் ஒரு நாற்காலியில் அமர்ந்து அந்த குமட்டி காயை நமது இரண்டு உள்ளங்கால்களின் அடியில் வைத்து கொண்டு உட்கார்ந்துவிட்டால் அதன் கசப்பு நமது தொண்டைகுழியை சிறிது நேரத்தில் அடையும். இதுபோல் தொடர்ந்து செய்துவந்தால் மூல நோயாலால் கடுமையாக அவதிப்படும் சகோதரர்கள் அதில் இருந்து சாதாரண நிலைக்கு திரும்பவதை உணரலாம்.

இது ஆராய்ச்சி செய்து அனுபவ பூர்வமான பலர் சுகம் அடைந்துள்ளனர். எனவே இயற்கை வைத்திய முறைகளை கையாண்டு நமது உடலை இயற்கை கோளாறுகளில் இருந்து காப்பாற்றிக்கொள்ள முயற்சிக்கவும்.

மூல நோய்க்கான காரணம்

1. மலக்குடல் இரத்தக்குழாயில் ஏற்படும் மாறுபாடுகளால் உண்டாகும் ஒரு நோய்தான் மூலநோய்.
2. உணவு மற்றும் வேலைச் சூழல் காரணமாக உடலில் ஏற்படும் மாறுபாடு மலத்தை கெட்டியாக்கி விடுகின்றன.
3. நார்ச்சத்துள்ள பொருட்களைச் சாப்பிடாமல் இருப்பது, குறிப்பிட்ட இடைவெளிகளில் தண்ணீர் அருந்தாமல் இருப்பது ஒரே இடத்தி லேயே நீண்ட நேரம் அமர்ந்திருப்பது போன்ற காரணங்களால் இது ஏற்படும்.
4. மலமானது கெட்டியாகிவிட்டால் அது எளிதாக வெளியேறாது. அதிகமாக முக்குவதால் மலக்குடலில் உள்ள ரத்தக் குழாய்கள் பெரிதாகி வீங்கிவிடும். இது தொடர்ந்தால் ரத்தக்குழாயே வீங்கி வெளியில் வர ஆரம்பிக்கும். அதுதான் மூலநோயின் தொடக்கம்.

5. மூலநோயை நான்கு கட்டங்களாக வகைப் படுத்தலம்.
6. முதல் டிகிரி: மலம் கழிக்கும்போது கூடவே ரத்தம் வரும். ஆனால் வலியே இருக்காது.
7. இரண்டாவது டிகிரி: ரத்தத்துடன் கூடவே மலக்குழாயும் வெளியில் வந்து மலம் கழித்தபின் தானாகவே உள்வாங்கி விடும்.
8. மூன்றாவது டிகிரி: மலக்குழாய் வெளியில் வரும்போது கையினால் தள்ளிவிட்டால் மட்டுமே உள்ளே போகும் நிலை.
9. நான்காவது டிகிரி: கையை வைத்து தள்ளி னாலும் உள்ளே போகாமல் வெளியிலேயே நீட்டிக் கொண்டிருக்கும்..
10. முதல் இரண்டு டிகிரி நிலையில் இருக்கும் நோயாளிகளுக்கு உணவுப் பழக்கத்தின் மூலமே தீர்வு கிடைத்துவிடும். ஆனால் மூன்று மற்றும் நான்காவது டிகிரி நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை, மருந்து மற்றும் உணவு கட்டுப்பாடும் அவசியம்.
11. பொதுவாக வயதானவர்களைத்தான் இந்த நோய் அதிகம் தாக்கும். சர்க்கரை நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிப் பெண் களுக்கும் இந்தப் பிரச்சினை ஏற்பட அதிக வாய்ப்புகள் உண்டு.
12. குழந்தைகளில் தொடங்கி பெரியவர்கள்வரை அனைவரின் வாழ்க்கை முறையே தாறு மாறாக மாறிவிட்டது. இதன் காரணமாக எல்லா வயதினருக்கும் மூலநோய் வர ஆரம்பித்து விட்டது
13. ஆசனவாயில் ரத்தம் வந்தால் உடனே மூல நோய் என நினைக்க கூடாது. மூலநோயாக இருப்பின் ரத்தம் வரும். ஆனால் வலி இருக்காது. மிகவும் சிரமப்பட்டு அதாவது முக்கி முக்கி மலம் கழிப்பதால் இத்தகைய பிரச்சினை ஏற்படும்.
14. ஆசனவாயில் ரத்தம் வந்தால் அது மலக்குடல் புற்றுநோய், ஆசனவாய் புற்றுநோய், பெருங் குடல் புற்றுநோய் ஏதாவது ஒன்றாகவும் இருக்கலாம்.
15. மூலநோய்க்கு சிகிச்சையை ஆரம்பிக்கும் முன்பாக மலக்குடல் ஆசனவாய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் ஏதாவது ஒன்றாக இருக்கலாம்.
16. செரிக்காத முற்றிலும் மாறுபட்ட உணவுப் பழக்கத்தால் மலச்சிக்கல் பிரச்சினை ஏற்படும், அதோடு தொடர்புடைய மூலநோய்க்கு வழி வகுத்துவிடுகிறது. ஆனால் பெருமபாலான நோய்களைப் போலவே இதையும் உணவுப் பழக்கத்தின் மூலமே வராமல் தடுக்கமுடியும்.
17. உணவு மூலமாகவே தடுக்கவேண்டிய, முறியடிக்க வேண்டிய ஒரு நோய்தான் மூலம்.
18. நார்ச்சத்து மிக்க காய்கள், பழங்களை உட்கொள்வது நல்லது.
19. முருங்கைக்காய், முட்டைகோஸ், கேரட், பீன்ஸ், பீட்ரூட், வாழைக்காய், கீரை வகைகளை அதிகம் சேர்த்துக்கொண்டால் மூலநோயைத் தடுக்கலாம்.
20. சரியான நேரத்தில் சாப்பிடுங்கள். முக்கிய மாக பசியெடுத்துச் சாப்பிடுங்கள். அதிக தண்ணீர் அருந்தவேண்டும். இதனால் மலமும் இளகி எளிதில் வெளியேறும். முழுதானிய உணவுகளையும் கீரைகளையும் உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்வது மூலத்துக்கு நல்லது. நார்ச்சத்து, நீர்ச்சத்து நிறைந்த உணவுகளோடு…. உடற்பயிற்சி ஆகியவற் றையும் கடைப்பிடித்தால் மூலம் முற்றிலும் குணப்படுத்திவிடக்கூடிய நோய்தான்.
21. பரோட்டா. ரொட்டி, டின்ஃபுட்ஸ் போன்ற கடின உணவுகளை குறைக்க வேண்டும்.
22. நொறுங்கத் தின்றால் நூறு வயது – பழமொழி
23. போதிய உடற்பயிற்சியின்மை, சுகாதாரமற்ற, தவறான உணவுப் பழக்கம், அதிக மசாலாப் பொருட்களைச் சேர்த்தல், பாதாம், முந்திரி மற்றும் பேக்கரி உணவுகளை உட் கொள்வதால் மலச்சிக்கல் ஏற்படும்.
24. அத்திப்பழம், கொய்யா, வாழைப்பழம், பப்பாளி, ஆரஞ்சு, மாம்பழம், பேரிக்காய் அன்னாச்சி போன்ற பழவகைகளில் தினமும் ஓரிரு பழங்களை மாற்றிமாற்றி எடுத்துக் கொண்டாலே மலசிக்கல் வராது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here