Home Tamil Cinema News ‘மெர்சல்’ படத்தை எதிர்த்து வரவில்லை: இயக்குநர் சுசீந்திரன்

‘மெர்சல்’ படத்தை எதிர்த்து வரவில்லை: இயக்குநர் சுசீந்திரன்

38

‘மெர்சல்’ படத்தை எதிர்த்து ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தை வெளியிடவில்லை என்று இயக்குநர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.

விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘மெர்சல்’ தீபாவளி தினத்தன்று வெளியாகும் என அறிவித்திருக்கிறார்கள். தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படமும் தீபாவளி வெளியீட்டை உறுதிப்படுத்தி இருக்கிறது.

இது தொடர்பாக இயக்குநர் சுசீந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

எங்களுடைய இத்திரைப்படத்தை தீபாவளி அன்று வெளியிட திட்டமிட்டுள்ளோம். அனைவரும் மெர்சலை எதிர்த்து வருகிறீர்களா என்று கேட்கிறார்கள். நாங்கள் மெர்சலை எதிர்த்து வரவில்லை. ‘மெர்சல்’ உடன் வருகிறோம். 2013-ம் ஆண்டு ‘பாண்டியநாடு’ திரைப்படத்தை அஜித் சார் படமான ‘ஆரம்பம்’ படத்தோடு வெளியிட்டோம். ‘ஆரம்பம்’ படமும் வெற்றி பெற்றது. எங்கள் படமும் வெற்றி பெற்றது.

இவ்வாறு சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.

சந்தீப் கிஷன், விக்ராந்த், மெஹ்ரீன், ஹரீஷ் உத்தமன், அப்புக்குட்டி, அருள்தாஸ், துளசி, சாதிகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்துக்கு இமான் இசையமைத்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் உருவாகும் இப்படத்தை அன்னை பிலிம் ஃபாக்டரி சார்பில் ஆண்டனி தயாரித்துள்ளார்.