Home Tamil Cinema News செப்-21 ம் தேதி மெர்சல் டீஸர் வெளியீடு

செப்-21 ம் தேதி மெர்சல் டீஸர் வெளியீடு

11

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ‘மெர்சல்’ படத்தின் டீஸர், செப்டம்பர் 21-ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

‘மெர்சல்’ படத்தின் டீஸருக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை மற்றும் தணிக்கைப் பணிகள் முடிக்கப்பட்டு இருக்கிறது. அதனைத் தொடர்ந்து டீஸர் எப்போது வெளியீடு என்பதை தேனாண்டாள் பிலிம்ஸ் ஹேமா ருக்மணி தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று (செப்டம்பர் 16) மாலை 6 மணிக்கு அறிவிப்பார் என்று படக்குழு தெரிவித்தது.

அதன்படி, “செப்டம்பர் 21-ம் தேதி மாலை 6 மணிக்கு ‘மெர்சல்’ டீஸர் வெளியீடு” என்று ஹேமா ருக்மணி அறிவித்துள்ளார். இதன் மூலம், பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ‘மெர்சல்’ படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகளை படக்குழு துவங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here