Home Tamil Cinema News பிரம்மாண்ட ஃபிரஞ்சு திரையரங்கில் வெளியாகும் விஜய்யின் மெர்சல்!

பிரம்மாண்ட ஃபிரஞ்சு திரையரங்கில் வெளியாகும் விஜய்யின் மெர்சல்!

34

விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் ஆகியோர் நடித்திருக்கும் மெர்சல் வரும் தீபாவளியன்று வெளியாகிறது. அட்லீ இயக்கத்தில் விஜய் டாக்டர், மேஜிக் மேன், கிராமத்தலைவர் என மூன்று கெட்டப்பில் நடித்திருப்பதால் எதிர்பார்ப்புகளும் சூழந்துள்ளன.

ஏற்கனவே டீசர், பாடல்களின் இணையதள சாதனைகள் ஒரு பக்கம். வழக்கம் போல இம்முறையும் சில சிக்கல் இருந்தாலும் தடைகளை தாண்டி வெளியாகிவிடும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.

உலகளாவிய அளவில் மெர்சல் பல திரையரங்குகளில் மெர்சல் வந்தாலும், ஐரோப்பிய நாடுகளின் மிகப்பெரிய தியேட்டரான தி கிராண்ட் ரெக்ஸ் ஆடிட்டோரியத்தில் இப்படத்தை வெளியிடுகிறார்களாம்.

ஃபிரஞ்சு மொழி படங்கள் மட்டுமே வெளியாகும் இந்த தீயேட்டரில் ரஜினி நடித்த கபாலி படத்தை தொடர்ந்து மெர்சல் இடம் பெற்றுள்ளது. 2800 பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய இந்த தியேட்டர், 82 அடி நீளமும், 37 அடி உயரமும் உடைய ஸ்கிரீன் வசதி கொண்டது.