Home Tamil Movie Reviews மெட்ரோ – விமர்சனம்

மெட்ரோ – விமர்சனம்

361
TheNeoTV Tamil Movie Rating
  • Our Rating

Summary

புதுமுக நாயகர் சிரீஷ், நாயகி ரம்யா, சென்ராயன், சத்யா, யோகி பாபு, துளசி, நிஷாந்த் உள்ளிட்டவர்களுடன் பாபி சிம்ஹா வில்லனிக் ஹீரோவாக நடிக்க, அனந்தகிருஷ்ணா தனது எழுத்து, இயக்கத்தின் மூலம் இதுவரைக்கும் யாரும் காட்டாத சென்னையின் இன்னோரு முகத்தை காட்டியிருகிறார். வழிப்பறியாக நடக்கும் சங்கிலிபறிப்பு திருடர்கள் எந்தளவுக்கு வேரூன்றி செயல்பட்டு வருகிறார்கள் என்பதை திகிலுடன் விவரிக்கிறது "மெட்ரோ".

2.8
இயக்கம்: அனந்தகிருஷ்ணன்
ஒளிப்பதிவு: N.S.உதயகுமாரின்
இசை: ஜான்
தயாரிப்பு: J.ஜெயகிருஷ்ணன் மற்றும் அனந்தகிருஷ்ணன்
நடிகர்கள்: சிரீஷ், நாயகி ரம்யா, சென்ராயன், சத்யா, யோகி பாபு, துளசி, நிஷாந்த், பாபி சிம்ஹா, சென்ராயன்

புதுமுக நாயகர் சிரீஷ், நாயகி ரம்யா, சென்ராயன், சத்யா, யோகி பாபு, துளசி, நிஷாந்த் உள்ளிட்டவர்களுடன் பாபி சிம்ஹா வில்லனிக் ஹீரோவாக நடிக்க, அனந்தகிருஷ்ணா தனது எழுத்து, இயக்கத்தின் மூலம் இதுவரைக்கும் யாரும் காட்டாத சென்னையின் இன்னோரு முகத்தை காட்டியிருகிறார். வழிப்பறியாக நடக்கும் சங்கிலிபறிப்பு திருடர்கள் எந்தளவுக்கு வேரூன்றி செயல்பட்டு வருகிறார்கள் என்பதை திகிலுடன் விவரிக்கிறது “மெட்ரோ”.

metro

ரிட்டையர்டு அப்பா, பாசக்கார அம்மா, செல்லதம்பி, உடன் வேலை பார்க்கும் அழகிய காதலி, தோள் கொடுக்கும் தோழன் என சந்தோஷமாக வாழ்க்கை பயணம் செய்து கொண்டிருக்கும் பரிவு பத்திரிகை நிருபர் அறிவழகன் எனும் ஹீரோ சிரீஷின் வாழ்க்கையில் செயின் திருடர்களால் எதிர்பாராத திருப்பம் ஏற்படுகிறது.

தனது தம்பியின் பைக் மற்றும் ஐ போன் ஆசைக்காக அலுவலகத்தில் கடன் வாங்க நினைக்கிறார். ஆனால் அது நடக்காமல் போகிறது. இதனால் தம்பி தன்னோடு படிக்கும் கல்லூரி தோழன் உதவியோடு செலவுக்காக செயின் பறிக்கும் கூட்டத்தில் சேருகிறார்.

நாயகனின் தம்பி, செயின் பறித்து அதை உருக்கி விற்கும் பெரிய கும்பலின் தலைவனாக இருக்கும் பாபி சிம்ஹா அவருக்கு கீழே திருட்டில் ஈடுபடும் கல்லூரி இளைஞர்கள் அவர்கள் உருக்கும் தங்கத்தை கள்ள மார்க்கெட்டில் விற்கும் கும்பல் இப்படி எல்லாவற்றையும் தெரிந்து கொள்கிறான். இதை தானே செய்தால் பெரிய அ1ளவில் பணம் சம்பாதிக்கலாம் என்று கனவு கண்டு ஒரு செயின் பறிப்பில் ஈடுபடுகிறான்.

Metro-movie-01

இதை மறைத்து வைக்கும் முயற்சியில் அம்மா தடையாக இருப்பதை பார்த்து பெற்ற தாயையே கொலை செய்து விடுகிறான். இதை கண்டுபிடிக்க களத்தில் இறங்கும் நாயகன் பல அதிர்ச்சியான தொடர்புகளை சந்திக்கிறார். தன் தம்பியை எப்படி கண்டு பிடிக்கிறார் என்பதை கொஞ்சம் திகிலுடன் சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஆனந்த் கிருஷ்ணா. இதுவரைக்கும் யாரும் சொல்லாத ஒரு கதைக்களத்தை தேர்ந்தெடுத்தற்கு இயக்குனருக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கலாம்.

புதுமுகம் நாயகன் சிரிஷ் இயல்பாக நடித்திருக்கிறார். நடுத்தர குடும்பத்தின் அண்ணனாக வந்து தாயை பறிக்கொடுத்து கதறும் காட்சியில் நல்ல நடிப்பு. தம்பிக்கு அவர் கொடுக்கும் தண்டனை திக்.

பாபிசிம்ஹா மிரட்டல் போதை கண்களும் கட் பனியனுமாக வந்து திருட்டுத் தொழிலுக்கு தலைமை தாங்குகிறார். எப்படி திருட்டில் இரண்டு வகை இருக்கிறது என்பதை நடித்துக் காட்டும்போது அப்ளாஸ் பெறுகிறார். புதிய களம் காட்சிகளால் தியேட்டரில் திகில் அமைதி நிலவுகிறது.

bg4

பெண் நிருபர் மாயாவாக ரம்யா, தானும் இருக்கிறேன்.. இந்த ஆக்ஷன் படத்தில் என கிடைத்த கேப்பில்வந்து நன்றாகவே நான் கைந்து சீன்களில் நடித்துப் போகிறார். ரசிகனுக்கும் அவர்களது லவ் எபிசோட் பிடித்து போகிறது.

நாயகரின் நண்பன் குமாராக சென்ராயன், திருட்டு மூஞ்சி தம்பிகணேஷாக ‘யமுனா’நிஷாந்த், மதியழகனாக சத்யா, அப்பாவி காதலா ராக ஒரு சீனே வந்து போகும் யோகி பாபு, அம்மா துளசி, பத்திரிகை ஆசிரியர் – ஈ.ராமதாஸ் உள்ளிட்ட எல்லோரும் கனகச்சிதமாக நடித்துள்ளனர்.

N.S.உதயகுமாரின் ஒளிப்பதிவு ஒவ்வொரு காட்சியிலும் ஓவியப்பதிவு. ரமேஷ் பாரதியின் படத்தொகுப்பு அருமை, ஜானின் இசையில் ‘பூமி யாருக்கும் சொந்தம் இல்லடா’, ‘மெட்ரோ ரைஸ்’, ‘நான் யார் முகமா’ உள்ளிட்ட பாடல்கள் அருமை. அதை தாண்டிய பின்னணி இசையும் மிரட்டல்.

மொத்தத்தில் “மெட்ரோ” – மிரட்டல்.