Home Tamil Movie Reviews மேயாத மான்- விமர்சனம்

மேயாத மான்- விமர்சனம்

45
Theneo tv ratings
  • Ratings

Summary

குறும்படத்தை பெரிய படமாக மாற்றும்போது ஏற்படும் திரைக்கதை தொய்வு இதிலும் தொடர்கிறது. வைபவ் - ப்ரியா பவானி சங்கர் ஜோடியை விட விவேக் பிரசன்னா - இந்துஜா ஜோடி தான் படத்தைக் காப்பாற்றுகிறது.ஒரு முறை குடும்பத்துடன் பார்த்து ரசிக்கலாம்..

2
நடிகர்கள்: வைபவ், பிரியா பவானி ஷங்கர்
இயக்குனர்: ரத்ன குமார்
தயாரிப்பாளர்: கார்த்திக் சுப்புராஜ்

தாடியுடனும் டாஸ்மாக் குடி உடனும் என்றாலே வட சென்னைதானா? அப்படித்தான் இதிலும் நாயகனைக் காட்டுகிறார்கள். வடசென்னையில் வாழும் ஒரு கானா பாடகன்தான் வைபவ். இவருக்கு பெயரே இதயம் முரளிதான். அதாவது மூன்று ஆண்டுகளாக ஒருதலையாக காதலித்து அதனை வெளிப்படுத்த முடியாமல் நண்பர்களை போட்டு படுத்தும் கேரக்டர். வைபவ் மற்றும் அவரது தங்கை இருவரது காதலும் காதல் நிமித்தமுமான படம்தான் இந்த மேயாத மான்.

அலசல் : குறும்பட இயக்குநர் ரத்ன குமார் இயக்கத்தில் குறும்படமாக வெளியாகி இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் வெளியான பென்ச் டாக்கீஸ் குறும்பட தொகுப்பில் இடம்பெற்று வரவேற்பை பெற்ற படம் மது. அந்த மதுதான் மேயாத மானாக உருவெடுத்திருக்கிறது.

ப்ரியா பவானி சங்கர் கோலிவுட்டுக்கு இன்னொரு நல்வரவு. சமந்தா இடத்தை நிரப்பலாம். படத்தில் ஒரிஜினல் இதயம் முரளி விவேக் பிரசன்னாதான். முதல் பாதியில் கரடுமுரடாகவும் இரண்டாம் பாதியில் காதலைச் சொல்லத் தயங்கும் அப்பாவியாகவும் அசரடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியான இந்துஜா அக்மார்க் சென்னைப் பொண்ணாகவே வாழ்ந்திருக்கிறார்.

குறும்படத்தை பெரிய படமாக மாற்றும்போது ஏற்படும் திரைக்கதை தொய்வு இதிலும் தொடர்கிறது. வைபவ் – ப்ரியா பவானி சங்கர் ஜோடியை விட விவேக் பிரசன்னா – இந்துஜா ஜோடி தான் படத்தைக் காப்பாற்றுகிறது.