Home Tamil Cinema News இறுதிச்சுற்று படத்தை பார்க்க ‘மைக் டைசன்’ விருப்பம்

இறுதிச்சுற்று படத்தை பார்க்க ‘மைக் டைசன்’ விருப்பம்

179

mike-tyson

மாதவன் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்து தமிழகம் முலுவதும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் இறுதிச்சுற்று. இதில் ரித்திகா சிங் கதானாயகியாக நடித்துள்ளார். ரித்திகா சிங் ஒரு நிஜ குத்துச்சண்டை வீராங்கணையும் ஆவார்.

இறுதிச்சுற்று படம் முலுவதும் பாக்சிங்கை மையப்படுத்தியே எடுக்கப்பட்டுளதால் எல்லா தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது. திரையுலக நட்சத்திரங்கள் பலரும் இந்த படத்தை பார்த்து தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் உலகின் புகழ்வாய்ந்த குத்துச்சண்டை வீரரான மைக் டைசன் இறுதிச்சுற்று படத்தை பார்க்க விருப்பம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வலைத்தளத்தில் மைக் டைசன் கூறுகையில், பிரபல ஆங்கில இணையதளத்தில் வெளிவந்த ‘இறுதிச்சுற்று’ படத்தின் விமர்சனத்தை பதிவு செய்து, இந்த பாக்சிங் படத்தை பார்க்க ஆசைப்படுகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

மிகச்சிறந்த குத்துச்சண்டை வீரர்களில் ஒருவரான மைக் டைசனே ‘இறுதிச்சுற்று’ படம் பார்க்க ஆசைப்படுவதனை அறிந்த படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here