Home Tamil Movie Reviews மிருதன் – விமர்சனம்

மிருதன் – விமர்சனம்

832
TheNeoTV Tamil Movie Rating
  • Our Rating

Summary

இன்றைய சினிமாவில் ரசிகர்கள் எதாவது வித்தியாசமாக எதிர்பார்க்கும் நிலையில் இதுவரை தமிழ் சினிமாவில் சொல்லப்படாத ஒரு விஷயத்தை கையில் எடுத்து இருப்பதுதான் இந்தப் படத்தின் ஹைலைட்.

மொத்தத்தில் மிருதன் - ரசிகர்களை கடிக்காத ஜூம்பி

3
இயக்கம்: ஷக்தி சௌந்தர ராஜன்
ஒளிப்பதிவு: எஸ் வெங்கடேஷ்
இசை: இமான்
தயாரிப்பு: மைக்கேல் ராயப்பன்
நடிகர்கள்: ஜெயம் ரவி, லட்சுமி மேனன், காளி வெங்கட், ஆர் என் ஆர் மனோகர், ஜீவா ரவி, பேபி அனிகா

miruthan-movie-first-look-

வெற்றிப் படங்களில் தொடர்ந்து நடித்துக்கொண்டிருக்கும் ஜெயம் ரவி தற்போது இயக்குனர் சக்தி செளந்தர ராஜனுடன் இணைந்திருக்கும் ‘மிருதன்’ படம் பெரிதும் எதிர்பார்க்கவைத்தது. தமிழின் முதல் ஜூம்பி வகைப் படம் என்ற அறிவிப்பு, படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்தது. மிகக் கடுமையான உழைப்பில் இந்தப் படத்தைத் உருவாக்கி இருக்கிறது ‘மிருதன்’ படக்குழு என்பதை ட்ரைலரிலேயே உணர முடிந்தது.

சட்டம் ஒழுங்கு போலீசுக்கும் போக்குவரத்து போலீசுக்கும் ஒரே சம்பளம்தான் எனும்போது, எதற்காக கஷ்டமான சட்டம் ஒழுங்கு போலீசாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்து, போக்குவரத்து போலீஸ் வேலையை விரும்பி ஏற்றுக்கொண்டு ஊட்டியில் பணியாற்றும் இளைஞரான ஜெயம் ரவி, அப்பா அம்மா இல்லாதவர்.

munnal-kadhali-678x341

அண்ணனுக்கு பெண் பார்க்கும் அளவுக்கு பாசம் நிரம்பிய சிறுமி தங்கை பேபி அனிகாவுடன் ஒருவர் மீது, ஒருவர் உயிரை வைத்தபடி போலீஸ் குடியிருப்பில் சந்தோஷமாக வசிக்கின்றனர்.

இந்த நிலையில் ஜெயம் ரவி யதேச்சையாக சந்திக்கும் இளம் பெண் மருத்துவர் லக்ஷ்மி மேனன் மீது காதல் வருகிறது. ஆனால், அதே நேரம், லட்சுமி மேனனுக்கு ஒரு மருத்துவ காதலன் இருப்பதும் ரவிக்கு தெரிய வருகிறது. எனவே ஜெயம் ரவியின் மனதளவில் அவருக்கு லட்சுமி மேனன் ‘முன்னாள் காதலி’ என்றாகிறார்.

படத்தின் கதைப்படி, மனிதனின் மூளையில் மிருக வெறியை மட்டுமே முழுக்க முழுக்கத் தூண்டி விட்டு உடலை உருக்குலைத்துக் கோரமாக்கி, சக மனிதனையே வெறி பிடித்துக் கடிக்க வைக்கும் அதி தீவிர வைரஸ் அடங்கிய, திரவம் ஒன்றை ஊட்டியில் ஆய்வகத்துக்கு எடுத்துச் செல்லும்போது சாலையில் கொட்டி விடுகிறது.

Miruthan-Zombie-DOg-640x421

அதை ஒரு நாய் ஒன்று குடித்து விட, அந்த நாய் வெறி பிடித்த நாயாகி ஒரு மனிதனைக் கடிக்கிறது. அதனிடம் கடிபட்ட அந்த மனிதன் மிருக வெறியோடு, தன் தாயைக் கடிக்க, அவரும் தன் மருமகளைக் கடிக்க, குடும்பத்திற்கே வெறி பிடிக்கிறது. மொத்த குடும்பமும் வெளியே வந்து, மற்ற மனிதர்களைக் துரத்தி துரத்தி கடிக்கின்றனர். இப்படியே ஊட்டியில் கடி படும் எல்லோரும் மற்றவர்களைக் கடிக்கும் மிருக வெறி மனிதர்களாக அதாவது ‘மிருதன்’ களாக மாறுகின்றனர்.

இதனால் அந்த வைரஸ் ஊர் முழுக்க பரவுகிறது. நிலைமை தீவிரம் அடைய, போலீஸ் அந்த ஊருக்குள் யாரும் வரக்கூடாது என்றும், ஊரை விட்டு யாரும் வெளியே செல்லக்கூடாது என்றும் ஆணை பிறப்பிக்கிறது. மேலும் இந்த வைரஸால் தாக்கப்பட்டவர்களை சுட்டுத் தள்ளவும் ஆணை பிறப்பிக்கப்படுகிறது.

Kotaku_201601_kollywood-zombie-movie-miruthan-trailer

இந்த பிரச்சினைக்கு தீர்வு காண லட்சுமி மேனன் அடங்கிய ஒரு மருத்துவக்குழு ஜெயம் ரவியின் உதவியுடன், கோவையில் இருக்கும் மருத்துவமனையில் வைரஸை அழிக்கக்கூடிய மருந்தை கண்டுபிடிக்க செல்கின்றனர். ஆனால், இவர்களை வைரஸ் தாக்கப்பட்ட மனிதர்கள் செல்லவிடாமல் தடுக்கிறார்கள். இறுதியில், வைரஸ் தாக்கப்பட்டவர்களிடம் இருந்து ஜெயம் ரவி, லட்சுமி மேனன் தப்பித்தார்களா? வைரஸை அழிக்க மருத்து கண்டுபிடித்தார்களா? என்பதே மீதிக்கதை.

படத்தில் ஜெயம் ரவி, டிராபிக் எஸ்.ஐ.யாகவும், பாசமிகு அண்ணனாகவும் திறம்பட நடித்திருக்கிறார். படத்தின் முழு பொறுப்பையும் தன்மேல் ஏற்று நடித்திருக்கிறார். இவரை சுற்றியே படம் நகர்வதால், தனது கதாபாத்திரத்தை உணர்ந்து சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். படத்திற்காக தன்னால் முடிந்த அளவு கடின உழைப்பையும் கொடுத்திருக்கிறார்.

miruthan-movie-still

இந்த படம் இந்த வருடத்தில் இவருக்கு முதல் வெற்றியை தேடிக் கொடுக்கும் என நம்பலாம். ஜெயம் ரவி கதாநாயகியாக நடித்திருக்கும் லட்சுமி மேனனுக்கு, ஜெயம் ரவியுடன் டூயட் பாட வாய்ப்பில்லை. டாக்டர் கதாபாத்திரத்தில் டாக்டராகவே வாழ்ந்திருக்கிறார். ஜெயம் ரவியின் நண்பரான காளி, தங்கை அனிகா ஆகியோர் கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

இமானின் இசையில் முன்னாள் காதலி பாடல் ஒகே. மிருதன் பாடல் மனசுக்குள் பக்காவாககிறது பின்னணி இசை சில பல காட்சிகளில் ஒப்பேற்றலாகவும் சில காட்சிகளில் ஒ.கே என பாராட்டும் படியும் இருக்கிறது.

miruthan_144

வெங்கடேஷின் ஒளிப்பதிவும், கிராபிக்ஸ், சி.ஜி, இத்யாதி, இத்யாதிகளும் சேர்ந்து காட்சிகளின் திகிலுக்கும் பரபரப்பிற்கும் உதவி பலம் சேர்க்கின்றன. கே.ஜெ.வெங்கட் ரமணனின் படத்தொகுப்பு சிறப்பு, கணேஷ் குமாரின் பிரமாண்டசண்டைப்பயிற்சியும் பாரட்டுக்குரியதே.

மனிதர்களுக்கு வைரஸ் பரவும் அந்த அம்மா, பிள்ளை, மருமகளுக்கு வெறி பிடிக்கும் காட்சி, விவரிக்கப்பட்ட விதம் அருமை.

இன்றைய சினிமாவில் ரசிகர்கள் எதாவது வித்தியாசமாக எதிர்பார்க்கும் நிலையில் இதுவரை தமிழ் சினிமாவில் சொல்லப்படாத ஒரு விஷயத்தை கையில் எடுத்து இருப்பதுதான் இந்தப் படத்தின் ஹைலைட். ஆனால், அதை பிரமாண்டமாக சொல்ல முடிந்தது மாதிரி, பிரம்மாதமாக சொல்லாதது தான் மிருதனின் குறை.

மொத்தத்தில் மிருதன் – ரசிகர்களை கடிக்காத ஜூம்பி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here