Home Astrology Monthly Rasi Palan தமிழ் மாத ராசிபலன் – 13-2-2016 முதல் 13-3-2016 வரை

தமிழ் மாத ராசிபலன் – 13-2-2016 முதல் 13-3-2016 வரை

1418

mesahamமேசம்: வாழ்க்கைத்துணையின் வார்த்தைகளுக்கு மதிப்பளித்து செயல்படுவீர்கள்.  நண்பர்களால் நன்மை உண்டாகும். தொழில் மேன்மையடையும். வரவு கூடும். ஆயினும் தினமும் பல்வேறு விதமான பிரச்னைகளை சமாளிக்க வேண்டியிருக்கும். நிதி நெருக்கடிகள் குறைய தொடங்கும். மற்றவர்களின் பொறாமையால் இடைஞ்சல்களை சமாளிக்க வேண்டியிருக்கும். அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். பிரச்னைகளை துணிவுடன் எதிர்கொண்டு சமாளிப்பீர்கள். உடன்பிறந்தோர் உதவிகரமாக இருப்பர். திடீர் விருந்தினர் வருகையால் வீட்டில் கலகலப்பு கூடும். புதிய நண்பர்கள் சேர்க்கை இருக்கும்.

மாணவர்களின் கல்வி நிலை சிறக்கும். வாகன ஆதாயம் உண்டு. பிள்ளைகளின் வேகமான செயல்பாடுகளால் செலவுகள் கூடும். போட்டியாளர்களிடம் மிகுந்த கவனம் நல்லது. உடல்நிலைக்கு முக்கியத்துவம் தர வேண்டிய நேரம் இது. அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களுடன் கருத்து வேறுபாடு தோன்றும் வாய்ப்பு உள்ளது. ஆயினும் அனுசரித்து சென்றால் நினைத்ததை சாதித்து முடிக்கலாம். வியாபாரிகள் புதிய முயற்சிகளின் மூலம் வெற்றி காண்பார்கள். கலைத்துறையினர் வெளியூர் பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். மற்ற விவகாரங்களில் சராசரியான பலனைக் கண்டாலும் தொழில்முறையில் சிறப்பான பலனைக் காணும் மாதம் இது.

பெண்களுக்கான சிறப்பு பலன்கள்

கூடுதல் கவனமுடன் செயல்பட வேண்டிய மாதமாகும். குருவின் பார்வை இருப்பதால் கவலைப்படத் தேவையில்லை. உறவினர் பகை உருவாகாமல் பார்த்துக் கொள்வது நல்லது. பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். மாதத்தின் முதல் பாதியில் வரவு திருப்திகரமாக இருக்கும். பிற்பாதியில் சுபவிரயங்கள் அதிகரிக்கும். வீடு, இடம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். குழந்தைகளின் எதிர்கால நலன்கருதி தீட்டிய திட்டத்திற்கு செலவிடுவீர்கள். கணவன்–மனைவிக்குள் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. தாய்வழி ஆதரவு உண்டு.

சந்திராஷ்டம தினங்கள்: பிப்ரவரி 29ம் தேதி மாலை 3 மணி முதல் மார்ச் 1 மற்றும் 2.

பரிகாரம்: நாமக்கல் ஆஞ்சநேயரை தரிசித்து வணங்கி வாருங்கள். ஏழைகளின் கல்விச் செலவை ஏற்றுக் கொள்ளுங்கள்.

பணத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: பிப்ரவரி: 14, 17, 20, 21 மார்ச்: 3, 4, 5, 7, 8, 9

மகிழ்ச்சி தரும் வண்ணம்: சிவப்பு.


rishabamரிஷபம்: கவுரவத்திற்காகச் செய்ய வேண்டிய ஆடம்பர செலவுகள் அதிகரிக்கக் கூடும். தொலைதூரப் பிரயாணங்களின் போது கவனம் அவசியம். அதிக உழைப்பை வெளிப்படுத்த வேண்டிய சூழ்நிலை உண்டாகும். உங்கள் உண்மையான உழைப்பின் பெருமையை மற்றவர்கள் உணர்வார்கள். பொருளாதார நிலையில் ஏற்ற இறக்கத்தினை காண நேரிடும். குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்ற முயற்சிப்பீர்கள். உணவில் கவனம் உடல்நிலைக்கு நல்லது.

தகவல் தொடர்பு சாதனங்களால் நன்மை உண்டாகும். மாணவர்களின் கல்வித் தரம் உயரும். வாகனங்கள், பிரயாணங்களால் நன்மை உண்டாகும். அலைச்சல் அதிகரித்தாலும் அதற்கான பலன் உடனுக்குடன் கிடைக்கும். உடல்நிலையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. தான தருமங்களால் செலவுகள் அதிகரிக்கும். உங்களது உண்மையான உழைப்பும், அர்ப்பணிப்பும் தொழில் ரீதியாக மிகுந்த நற்பெயரையும், புகழையும் பெற்றுத் தரும். வியாபாரிகளுக்கு தனலாபம் உண்டு. கூட்டுத் தொழில் சிறப்பான லாபம் தரும். இரவில் கனவுத்தொல்லையால் உறக்கம் கெடலாம். கலைத்துறையினர் தொழில் முறையில் வெளியூர் பயணம் மேற்கொள்ள நேரிடும். உழைப்பின் பலனைக் காணும் மாதம் இது.

பெண்களுக்கான சிறப்பு பலன்கள்

மாதத் தொடக்கத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தபால் மூலம் நல்ல தகவல் வந்து சேரும். வக்ர குருவின் இயக்கத்தால் நகை நட்டு வாங்குவது முதல், நாடு மாற்றங்களும், வீடு மாற்றங்களும் விரும்பிய படியே வந்து அமையும். தொகை வருவதில் எந்த தடையும் ஏற்படாது. பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். பொதுநலத்தில் இருப்பவர்களுக்குப் புதிய பொறுப்புகள் வந்து சேரும்.

சந்திராஷ்டம தினங்கள்: மார்ச் 3, 4 மற்றும் 5ம் தேதி காலை 8 மணி வரை.

பரிகாரம்: கும்பகோணம், சுவாமிமலைக்கு அருகேயே ஆடுதுறை பெருமாள் கோவில் எனும் தலத்தில் அருளும் ஜகத்ரட்சகப் பெருமாளை தரிசித்து வாருங்கள். பசுவிற்கு அகத்திக்கீரை கொடுங்கள்.

பணத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: பிப்ரவரி: 13, 18, 19, 23, 24 மார்ச்: 5, 6, 7, 10, 11

மகிழ்ச்சி தரும் வண்ணம்: கிளிப்பச்சை.


mithunamமிதுனம்: வாழ்க்கைத்துணையின் கருத்துகளுக்கு மிகுந்த மதிப்பளித்து செயல்படுவீர்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். எந்த ஒரு விஷயத்திலும் விட்டுக் கொடுத்து சென்றால் காரிய சாதனை உண்டு. செயல்திறன் கூடும். நண்பர்களின் துணையுடன் எடுத்த காரியத்தில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். நேரத்தை உணர்ந்து நேரடியாக இறங்காமல் மற்றவர்களை திறம்பட இயக்கி நினைத்த காரியத்தை நடத்தி முடிப்பீர்கள். ஆடம்பர செலவுகள் அதிகரிக்கும். சாதுர்யமான பேச்சுத்திறனால் இக்கட்டான சூழலை சமாளிப்பீர்கள். மன உறுதி அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் மிகுந்த ஆதாயம் தரும்.

மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். வண்டி, வாகனங்களால் செலவுகள் உண்டாகும். செலவுகளைக் கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் எடுத்தாலும் திடீர் செலவுகள் தோன்றுவதை கண்டு மன வருத்தம் ஏற்படும். முன்னோர் சொத்துகளில் இருந்த பிரச்னைகள் அகலும். உத்யோக ரீதியாக மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்படுவீர்கள். பணியாட்கள் ஒத்துழைப்பு கிட்டும். வியாபாரிகள் தங்கள் உழைப்பிற்கான லாபத்தினை உடனுக்குடன் காண்பார்கள். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் சற்று குறையும். சரிசம பலன்களை காணும் மாதம் இது.

 

பெண்களுக்கான சிறப்பு பலன்கள்

இம்மாதம் மனக்கவலை மாறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பகை மாறி பாசம் கூடும். குருவின் பார்வை சப்தம ஸ்தானத்தில் பதிவதால் குழந்தைகளின் சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும். கணவன்–மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஊர் மாற்றத்தோடு கூடிய உத்தியோக உயர்வு கிடைக்கும். பெற்றோர்களின் ஆதரவு திருப்தி தரும். புதிய பொறுப்புகளும், பதவிகளும் பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு வந்து சேரும். கடல் கடந்து செல்லும் யோகத்தை யோசிக்காது ஏற்றுக் கொள்வது நல்லது.

சந்திராஷ்டம தினங்கள்: மார்ச் 5ம் தேதி காலை 8 மணி முதல் 6 மற்றும் 7ம் தேதி மதியம் 1 மணி வரை.

பரிகாரம்: நாகப்பட்டினத்தில் அருளும் காயாரோகணேஸ்வரரையும், நீலாயாதாட்சி அம்மனையும் தரிசித்து வாருங்கள். அன்னதானம் செய்யுங்கள்.

பணத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: பிப்ரவரி: 14, 15, 20, 21, 25, 26 மார்ச்: 8, 9, 12, 13

மகிழ்ச்சி தரும் வண்ணம்: பச்சை.


kadakamகடகம்: செலவுகளை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஓரளவிற்கு வெற்றி காண்பீர்கள். உண்மையான உழைப்பிற்கான பலனை அனுபவிப்பீர்கள். வெளிநாட்டு வேலைக்காக காத்திருப்போருக்கு சாதகமான நேரம் இது. மன மகிழ்ச்சி அதிகரிக்கும். நெடுநாளைய கற்பனைகளும், கனவுகளும் சிந்தனையில் இடம்பிடிக்கும். ரம்மியமான சூழலை அனுபவிக்க உள்ளீர்கள். குடும்ப சலசலப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். பொருளாதார நிலை திருப்தி தரும். கூடுதல் தைரியத்தால் சிறப்பாக செயல்படுவீர்கள். உடன்பிறந்தோருக்கு உதவும் சூழல் உருவாகும். தகவல் தொடர்பு சாதனங்கள் ஆதாயம் தரும்.

மாணவர்களின் அறிவுத்திறன் கூடும். வீட்டில் மாற்றங்கள் செய்வீர்கள். நெடுநாளைய ஆசைகள் நிறைவேறும் காலம் இது. பிள்ளைகள் வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும். நரம்புத்தளர்ச்சி நோய் உள்ளவர்களுக்கு உடல்நிலையில் கூடுதல் கவனம் நல்லது. நொறுக்குத்தீனி மற்றும் இதர திண்பண்டங்களுக்காக அதிகம் செலவழிக்க நேரிடும். தொழில் ரீதியாக சிறப்பான நிலையை காண்பீர்கள். உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்விற்கான வாய்ப்புகள் உருவாகும். தனிப்பட்ட முறையில் உங்களது சிறப்பான செயல்பாடுகள் அலுவலகத்தில் மிகுந்த நற்பெயரை உருவாக்கித் தரும். கலைத்துறையினர் எதிர்பார்த்துக் காத்திருந்த உதவி சரியான நேரத்திற்கு வந்து சேரும். நற்பலன்களை அனுபவித்து வரும் நேரமிது.

பெண்களுக்கான சிறப்பு பலன்கள்

வழிபாட்டின் மூலமே வளர்ச்சியைக் கூட்டிக் கொள்ள வேண்டிய மாதமாகும். எட்டில் கேது இருப்பதால் எதையும் ஒரு முறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வதே நல்லது. விரயங்கள் கூடும். வீடு மாற்றச் சிந்தனை மேலோங்கும். அரைகுறையாக நின்ற பணிகளை தொடர முடியவில்லையே என்று கவலைப்படுவீர்கள். கணவன்–மனைவிக்குள் ஒற்றுமை பலப்பட விட்டுக் கொடுத்துச் செல்லவும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்வது நல்லது. சனி–செவ்வாய் சேர்க்கை காலத்தில் உறவினர் பகை அதிகரிக்கலாம். மனநிம்மதி குறையாதிருக்க சிறப்பு வழிபாடுகளை தேர்ந்தெடுத்துச் செய்வது நல்லது. உங்கள் பெயரில் சொத்துக்கள் வாங்கும் சூழ்நிலை ஏற்படும். துணிவும், தன்னம்பிக்கையும் உங்களுக்கு கைகொடுக்கும்.

சந்திராஷ்டம தினங்கள்: மார்ச் 7ம் தேதி மதியம் 1 மணி முதல் 8 மற்றும் 9ம் தேதி மாலை 4.30 மணி வரை.

பரிகாரம்: திருநெல்வேலி நெல்லையப்பரை தரிசித்து விட்டு வாருங்கள். ஏழைகளின் மருத்துவச் செலவுக்கு உதவுங்கள்.

பணத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: பிப்ரவரி: 13, 16, 17, 22, 23, 27, 28 மார்ச்: 10, 11

மகிழ்ச்சி தரும் வண்ணம்: மஞ்சள்.


simamசிம்மம்: பொதுக்காரியங்களில் ஈடுபடுவதன் மூலம் கூடுதல் பொறுப்புகளை சுமக்க நேரிடும். உங்கள் முயற்சிகளில் வெற்றி பெற மற்றவர்களை சார்ந்திருக்க வேண்டியிருக்கும். அடுத்தவர்களுடன் இணைந்து செய்யும் கூட்டுமுயற்சிகள் வெற்றி பெறும். கூடுதல் செலவுகள் ஏற்படும். பொருளாதார நிலை தேக்கமடையும். கொடுத்த வாக்கினைக் காப்பாற்றுவதில் தடைகள் உண்டாகும் என்பதால் கவனத்துடன் பேசுவது நல்லது. தகவல்தொடர்பு சாதனங்களால் சாதக பாதகங்கள் இருக்கும். வாகனங்கள், பிரயாணங்கள் பயன் தரும் வகையில் அமையும். குழப்பத்தால் மனதில் அநாவசிய பயம் உருவாகும். பிள்ளைகளால் கூடுதல் செலவுகள் ஏற்படும்.

அந்நியப் பெண்களிடம் கூடுதல் எச்சரிக்கையுடன் பழகுவது நல்லது. கடன்சுமைகள் குறையும். போட்டியாளர்கள் வலுவிழந்து போவார்கள். நண்பர்களை நம்பி ஒப்படைத்த காரியங்கள் வெற்றி பெறும். புதிய நண்பர்களுடனான சந்திப்பு புதிய விஷயங்களைக் கற்றுத் தரும். கவுரவ செலவுகள் அதிகரிக்கும். தொழில் முறையில் இருந்த சிரமங்கள் குறையும். கலைத்துறையினர் புதிய முயற்சிகளை செயல்படுத்த சிறிது காலம் காத்திருக்க வேண்டியது அவசியம். வியாபாரிகள் அடையும் லாபத்தினை மீண்டும் தொழிலிலேயே முதலீடு செய்ய வேண்டியிருக்கும். சரிசம பலன்களைத் தரும் மாதம் இது.

பெண்களுக்கான சிறப்பு பலன்கள்

இம்மாதம் உங்களுக்கு எதிர்பார்த்த நற்பலன்கள் நடைபெறும். திட்டமிட்ட காரியங்களை திட்டமிட்டபடியே செய்து முடிப்பீர்கள். செல்வநிலை சிறப்பாக இருக்கும். சூரிய பலம் நன்றாக இருப்பதால் பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு புகழ், செல்வாக்கு நன்றாக இருக்கும். புதிய பொறுப்புகளும், பதவிகளும் வந்து சேரும். வீண் விவாதம் செய்தவர்கள் விலகிச் செல்வர். தன்னம்பிக்கைக்கு தக்க வெற்றி கிடைக்கும். ஆரோக்கியத்தில் மட்டும் அக்கறை செலுத்துவது நல்லது. கணவன்–மனைவிக்குள் அன்னியோன்யம் அதிகரிக்கும். குழந்தைகளால் வருமானம் உண்டு.

சந்திராஷ்டம தினங்கள்: பிப்ரவரி 13ம் தேதி காலை 11 மணி வரை மற்றும் மார்ச் 9ம் தேதி மாலை 4.30 மணி முதல் 10 மற்றும் 11ம் தேதி இரவு 7 மணி வரை

பரிகாரம்: கும்பகோணத்தை அடுத்துள்ள கோவிந்தபுரத்திலுள்ள போதேந்திராள் ஜீவசமாதியை தரிசித்து விட்டு வாருங்கள். சாலையோரம் வாழும் சிறார்களுக்கு ஆடைகள் கொடுத்து உதவுங்கள்.

பணத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: பிப்ரவரி: 14, 15, 18, 19, 25, 26, 29 மார்ச்: 2, 12, 13

மகிழ்ச்சி தரும் வண்ணம்: வைலட்.


kanniகன்னி: குடும்பத்தினருடன் சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள். நினைத்ததை உடனடியாக செய்து முடிக்கும் எண்ணம் உருவாகும். எதிலும் நிதானித்து செயல்பட்டால் முழுமையான வெற்றி கிடைக்கும். தொடர்ந்து பொருளாதார நிலை உயர்ந்து வரும். சேமிப்புகள் உயரும் நேரம் என்பதால் சாதகமாக பயன்படுத்தி கொள்வது நல்லது.

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பேச்சில் கடுமையை தவிர்த்து கவனத்துடன் பேச வேண்டியது அவசியம். புதிய நண்பர்கள் சேருவார்கள். தொலைதொடர்பு சாதனங்களால் இழப்புகள் ஏற்படும். வாகன பயணத்தின் போது கூடுதல் கவனம் தேவை. வீட்டை விரிவுபடுத்துவீர்கள். குடும்பத்தினருடன் சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள். உடல்நிலையை பராமரிக்க அதிக அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. சில விஷயங்களில் வாழ்க்கைத்துணை உங்களோடு கருத்து வேறுபாடு கொள்வார். நண்பர்களால் தர்மசங்கடங்களை சந்திக்க நேரிடும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்ற கூடுதல் செலவு செய்ய வேண்டி இருக்கும். உத்யோக ரீதியாக சிறப்பான நிலையைக் காண்பீர்கள். வியாபாரிகளின் தொழில் நிலை சிறக்கும். தனலாபம் அதிகரித்து வரும் அதே நேரத்தில் லாபத்தில் நஷ்டம் உண்டாகும் வாய்ப்பும் உண்டு. கலைத்துறையினர் கற்பனையில் உள்ளவற்றை நிஜத்தில் நடத்திக்கொள்ள நேரம் துணை புரியும். கனவுத் தொல்லையால் இரவில் நிம்மதியான உறக்கம் கெடலாம். சராசரி பலன்களைக் காணும் மாதம் இது.

பெண்களுக்கான சிறப்பு பலன்கள்

இம்மாதம் விரயத்திற்கு ஏற்ற வரவு வந்துகொண்டே இருக்கும். வீடு மாற்றச் சிந்தனைகள் அதிகரிக்கும். சிலருக்கு நாடு மாற்றம் செய்ய நல்ல இடத்திலிருந்து அழைப்புகள் வந்து சேரலாம். கணவன்–மனைவிக்குள் பாசமும், நேசமும் அதிகரிக்கும். சகோதர ஒற்றுமை குறையலாம். உடன் பிறப்புகள் உங்களைவிட்டு விலகிச் செல்வர்.
பிள்ளைகளின் நலன் கருதி எடுத்த முயற்சிகள் மாதக் கடைசியில் வெற்றிபெறும். பணியாளர்களை மாற்றம் செய்ய விரும்புவீர்கள். பொதுவாழ்வில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கலாம்.

சந்திராஷ்டம தினங்கள்: பிப்ரவரி 13ம் தேதி காலை 11 மணி முதல் 14, 15ம் தேதி மதியம் 1.15 மணி வரை மற்றும் மார்ச் 11ம் தேதி இரவு 7 மணி முதல் 12, 13ம் தேதி வரை.

பரிகாரம்: வேதாரண்யத்தில் அருளும் வேதாரண்யஸ்வரரையும் அங்குள்ள பிரசித்தி பெற்ற துர்க்கையையும் தரிசித்து வாருங்கள். தந்தையிழந்த பிள்ளைக்கு உதவுங்கள்.

பணத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: பிப்ரவரி: 15, 16, 20, 21, 27, 28 மார்ச்: 3,4

மகிழ்ச்சி தரும் வண்ணம்: வெளிர்நீலம்.


thulamதுலாம்: வீட்டில் மாற்றங்கள் செய்வீர்கள். வாகனங்களை புதிதாக மாற்ற விரும்புவோர்க்கு ஏற்ற காலமாக அமையும். மன மகிழ்ச்சி கூடும். எல்லோருடனும் இனிமையாகப் பழகுவீர்கள். செய்யும் உதவிக்கு பிரதிபலனை எதிர்பார்ப்பீர்கள். வரவிற்கு குறைவிருக்காது. குடும்ப பொருளாதார நிலை உயரும். குடும்ப உறுப்பினர்களின் விருப்பத்தினை நிறைவேற்ற முயலுவீர்கள். மனதில் உறுதி கூடும். தொலைதொடர்பு சாதனங்கள் தகுந்த நேரத்தில் கைகொடுக்கும். உடன்பிறந்தோர் உதவிகரமாய் செயல்படுவார்கள்.

உறவினர்களுடனான சந்திப்பு குடும்பத்தில் கலகலப்பான சூழலை உருவாக்கும். பிள்ளைகளின் வேகமான செயல்கள் பெருமைகொள்ளத்தக்க வகையில் அமையும். அவசரப்பட்டு பேசினால் அவப்பெயர் வரும். உஷ்ண உபாதையால் அவதிப்படும் வாய்ப்பு உண்டென்பதால் உடல்நிலையில் கவனம் அவசியம். மாணவர்கள் கூட்டுப்பயிற்சியால் கல்வியில் முன்னேறலாம். வாழ்க்கைத்துணை உங்கள் பணிகளுக்கு பக்கபலமாக நின்று துணை புரிவார். ஆடம்பர செலவுகள் மட்டுமல்லாது ஆன்மிக செலவுகளும் அதிகரிக்கும். தொலைதூரப் பிரயாணத்தில் பொருளிழப்பு உண்டாகும் வாய்ப்பு உள்ளதால் எச்சரிக்கையுடன் இருப்பது நன்று. தொழில் ரீதியாக சிறப்பான நிலையைக் காண்பீர்கள். உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் நற்பெயர் அடைவார்கள். கலைத்துறையினர் எதிர்பார்த்த வாய்ப்பினைப் பெறுவர். நற்பலன்களை விளைவிக்கும் மாதம் இது.

பெண்களுக்கான சிறப்பு பலன்கள்

கொள்கைப் பிடிப்பைத் தளர்த்திக் கொள்வதோடு மட்டுமல்லாமல் கோபத்தையும் குறைத்துக் கொள்ள வேண்டிய மாதமாகும். பிள்ளைகளால் பிரச்சினைகள் உருவாகாமல் பார்த்துக் கொள்வது நல்லது. கணவன்–மனைவிக்குள் ஒற்றுமை பலப்பட விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். வரவைக்காட்டிலும் செலவு கூடும். பெற்றோர்களின் உடல்நலத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட தூரத்திற்கான மாறுதல் கிடைக்கப்போகின்றது.

சந்திராஷ்டம தினங்கள்: பிப்ரவரி 15ம் தேதி மதியம் 1.15 மணி முதல் 16, 17ம் தேதி மாலை 4.30 மணி வரை.

பரிகாரம்: திருச்சி சமயபுரம் மாரியம்மனை தரிசித்து வணங்கி வாருங்கள். வயதானவர்களுக்கு கம்பளி, போர்வையை கொடுங்கள்.

பணத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: பிப்ரவரி: 17, 18, 22, 23, 29 மார்ச்: 1, 2, 6, 7

மகிழ்ச்சி தரும் வண்ணம்: பிரவுன்.


viruchigamவிருச்சிகம்: பிள்ளைகளின் வாழ்வில் சுப நிகழ்வுகளும், முன்னேற்றமும் உண்டாகும். எந்த ஒரு விஷயத்திலும் நேரடியாக இறங்காது அடுத்தவர்களின் துணையுடன் செயல்பட்டு வெற்றி காண வேண்டி இருக்கும். பொருளாதார நிலை திருப்தி தரும். ஏதோ ஒரு வழியில் வரவு தொடர்ந்து இருக்கும். சேமிப்பை உயர்த்தி கொள்ளும் முயற்சி தடைபடும். குடும்பத்தில் சலசலப்பு தோன்றி மறையும். உடன்பிறந்தோரால் மனவருத்தம் ஏற்படும். அஞ்சல் மற்றும் தகவல் தொடர்பில் உண்டாகும் தாமதத்தால் இழப்புகள் உண்டாகும். வாகன செலவுகள் அதிகரிக்கும்.

மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண அதிகம் உழைக்க வேண்டியிருக்கும். உடல் உஷ்ண உபாதைகளால் அவதிப்படும். அநாவசிய வம்பு வழக்குகளை தவிர்க்க சம்பந்தமில்லாத விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. உங்களால் செய்ய இயலாத காரியங்களை அவரது துணையுடன் செய்து முடிப்பீர்கள். நண்பர்களுடன் கருத்து வேறுபாடு தோன்றக்கூடும். அநாவசிய செலவுகள் அதிகரித்து மன வருத்தம் ஏற்படும். ஆன்மிகப் பிரயாணங்கள் செல்ல திட்டமிடுவீர்கள். தொழில் ரீதியான முன்னேற்றத்திற்கு மற்றவர்களை சார்ந்திருக்க வேண்டிய சூழல் உருவாகும். கலைஞர்களுக்கு புதிய முயற்சிகள் வெற்றி தரும். கனவுத் தொல்லைகள் உங்கள் உறக்கத்திற்கு இடைஞ்சலாக அமையும். சரிசம பலன்களைத் தரும் மாதம் இது.

பெண்களுக்கான சிறப்பு பலன்கள்

இம்மாதம் வரவும், செலவும் சமமாகும். வாரிசுகளின் எதிர்கால நலன் கருதி தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும். குரு பார்வை தன ஸ்தானத்தில் பதிவதால் பொருளாதார நிலை சீராகும். வாங்கல், கொடுக்கல் களை ஒழுங்கு செய்து கொள்வீர்கள். கணவன்–மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். தாய்வழி ஆதரவு உண்டு. தக்க சமயத்தில் உறவினர்கள் கைகொடுத்து உதவ முன்வருவர். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை சேரும். கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. உங்கள் பெயரிலேயே வீடு, இடம் வாங்குவது பற்றி குடும்ப உறுப்பினர்கள் சிந்திப்பர்.

சந்திராஷ்டம தினங்கள்: பிப்ரவரி 17ம் தேதி மாலை 4.30 மணி முதல் 18, 19ம் தேதி வரை.

பரிகாரம்: திருச்சி, பெரம்பலூருக்கு அருகேயுள்ள சிறுவாச்சூர் அம்மனை தரிசித்துவிட்டு வாருங்கள். ரத்ததானம் செய்யுங்கள்.

பணத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: பிப்ரவரி: 13, 19, 20, 21, 25, 26, 27 மார்ச்: 3, 4, 5, 8, 9, 10

மகிழ்ச்சி தரும் வண்ணம்: ரோஸ்.


dhanusuதனுசு: பிள்ளைகளின் வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பீர்கள். விருந்தினர் வருகை குடும்பத்தில் கலகலப்பை கூட்டும். கவுரவம், புகழ் உயரும். எந்த விஷயத்திலும் அலைச்சல் அதிகரிக்கும். குடும்பப் பெரியோர்கள், சாதுக்கள், சந்யாசிகள் மீது அளவு கடந்த மரியாதை உண்டாகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குடும்பத்தினரின் விருப்பங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து செயல்படுவீர்கள்.

பேச்சில் வெளிப்படும் மகிழ்ச்சி மன ஓட்டத்தை வெளிப்படுத்தும். மாணவர்களின் கல்வி நிலை மிகச் சிறப்பாக இருக்கும். வாகனங்கள் லாபம் தரும். உடல்நிலை சீராக இருந்து வரும். முன்பின் தெரியாத நபர்களுக்கு பொருளுதவி செய்வதைத் தவிர்க்க வேண்டியது அவசியம். நண்பர்கள் மற்றும் கூட்டு முயற்சி விவகாரங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்குமாதலால் உங்களது திட்டத்தினை மாற்றிக் கொள்ள எண்ணுவீர்கள். தர்ம காரியங்களுக்கு நிறைய செலவழிக்க வேண்டி இருக்கும். தொழில் ரீதியாக கடும் போட்டி இருந்தாலும் வெற்றி நிச்சயம் உண்டாகும். கலைத்துறையினருக்கு எதிர்காலம் பற்றிய சிந்தனையால் நிம்மதியான உறக்கம் கெடலாம். சுப விரயங்களுக்கான வாய்ப்பு உண்டு. அலைச்சலை சந்தித்தாலும் நற்பலன்களைத் தரும் மாதம் இது.

பெண்களுக்கான  சிறப்பு  பலன்கள்

விரயங்கள் அதிகரிக்கும் மாதமாக இம்மாதம் அமையப் போகின்றது. வீடு மாற்றச்சிந்தனைகள் மேலோங்கும். அடிப்படை வசதிகளைப் பெருக்கிக்கொள்ள அதிகப் பிரயாசை எடுக்கும் சூழ்நிலை உண்டு. கணவன்–மனைவிக்குள் விட்டுக் கொடுத்துச் செல்வதன் மூலமே விருப்பங்கள் நிறைவேறும். குழந்தைகளாலும் விரயம் உண்டு. அவர்களை உங்கள் கண்காணிப்பில் வைத்துக் கொள்வது நல்லது. உங்கள் பெயரில் வாங்கிய சொத்துகள் விற்பனையாகி லாபம் கிடைக்கும்.  மாதக்கடைசியில் வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

சந்திராஷ்டம தினங்கள்: பிப்ரவரி 20, 21.

பரிகாரம்: திருவொற்றியூர் வடிவுடையம்மனை தரிசித்து விட்டு வாருங்கள். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுங்கள்.

பணத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: பிப்ரவரி: 13, 22, 23, 24, 27, 28 மார்ச்: 6, 7, 8

மகிழ்ச்சி தரும் வண்ணம்: ஆனந்தா.


magaramமகரம்: வாழ்க்கைத்துணையின் செயல்கள் உங்கள் வெற்றிக்கு மிகுந்த துணை புரியும். எடுத்த காரியங்களில் எதிர்பார்த்த வெற்றி காண்பீர்கள். வாழ்க்கை தரம் மேம்படும். பொருளாதார நிலை குறைவில்லாமல் சீராக இருக்கும். சேமிப்புகள் உயர தொடங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குடும்ப உறுப்பினர்களின் மகிழ்ச்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து செயல்படுவீர்கள். பிறர் செய்யத் தயங்கும் செயல்களைக் கூட சவாலாக ஏற்று மிகுந்த தைரியத்துடன் செய்து முடிப்பீர்கள். உடன்பிறந்தோர் உதவிகரமாய் செயல்படுவார்கள். வாகனங்கள் ஆதாயம் தரும்.

மாணவர்களின் கல்வி நிலை சிறப்பாக இருக்கும். உறவினர்களுடனான சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தைத் தரும். புதிய வீடு கட்டும் முயற்சியில் உள்ளோருக்கு சாதகமான நேரம் இது. பிள்ளைகளின் எதிர்கால நல்வாழ்விற்காக புதிய திட்டங்களை வகுத்து செயல்படுத்த கால நேரம் கூடி வரும். அயராத பணிகளுக்கு மத்தியில் அவ்வப்போது உடல்நிலையையும் கவனித்துக் கொள்வது நல்லது.  ஆடம்பர செலவுகள் கூடும். முன்னோர்களின் சொத்துகளில் பாகப்பிரிவினைக்கான வாய்ப்பு உருவாகும். தொழில் நிலை வலுப்பெறும். உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்விற்கான வாய்ப்புகள் வரும். வியாபாரிகள் சிறப்பான தன லாபம் கிடைக்கும். கலைத்துறையினர் வீண் கற்பனைகளால் அவதிப்பட நேரிடலாம். மற்றபடி சிறப்பான நற்பலன்களை தரும் மாதமாக அமையும்.

பெண்களுக்கான சிறப்பு பலன்கள்

இம்மாதம் குடும்ப ஸ்தானத்தை குரு பார்ப்பதால் குழப்பங்கள் தீரும். உடன் பிறந்தவர்களால் நன்மை கிடைக்கும். அடிப்படை வசதிகள் பெருகவும், அன்றாட வாழ்க்கை நன்றாக அமையவும் வழிபிறக்கும். கணவன்–மனைவிக்குள் கனிவு கூடும். சுக்ரப் பெயர்ச்சியின் விளைவாக தங்கம், வெள்ளி வாங்கிச் சேர்க்க வாய்ப்பு கிட்டும். பிள்ளைகளின் கல்வி வளர்ச்சி சிறப்பாகவே அமையும். அரசியலில் இருப்பவர்களுக்கு தலைமைப் பதவிகள் தானாக வந்து சேரும். முருகன் வழிபாடு முன்னேற்றம் வழங்கும்.

சந்திராஷ்டம தினங்கள்: பிப்ரவரி 22, 23 மற்றும் 24ம் தேதி மாலை 4 மணி வரை.

பரிகாரம்: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரரை தரிசித்து வாருங்கள். ஆரம்பக் கல்வி போதித்த ஆசிரியருக்கு இயன்ற அளவு உதவுங்கள்.

பணத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: பிப்ரவரி: 14, 15, 25, 26 மார்ச்: 1, 2, 3, 8, 9

மகிழ்ச்சி தரும் வண்ணம்: மஞ்சள்


kumbamகும்பம்: குடும்ப பொருளாதார நிலை, மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. சிந்தனையை செயல்படுத்துவதில் அவசரத்தை தவிர்க்கவும். கவுரவத்திற்காக சில விஷயங்களை உடனடியாக செய்து முடித்துவிட வேண்டிய கட்டாயம் தோன்றும். சொன்ன சொல்லைக் காப்பாற்ற போராட்டம் இருக்கும். மனதில் இனம் புரியாத பயம் தோன்றும். செல்போன் போன்ற தொலைதொடர்பு சாதனங்களின் கோளாறினாலும், அஞ்சல் வழி தொடர்புகளில் தாமதமும் இழப்புகளை ஏற்படுத்தும்.

மாணவர்களின் கல்வி நிலை நன்றாக இருக்கும். உடன்பிறந்தோருடன் கருத்து வேறுபாடு தோன்றும் வாய்ப்பு உண்டு. உடல்நிலையில் உணரும் மாற்றங்களுக்கு உடனுக்குடன் மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது நல்லது. உங்கள் செயல்களுக்கு எதிர்பாராத செலவுகள் உண்டானாலும் வீட்டில் புதிய பொருட்கள் சேரும். பிரயாணங்களின் போது கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. கூட்டுத்தொழில் சிறப்பான லாபம் தரும் அதே நேரத்தில் ஒரு சில விஷயங்களில் போட்டி, பொறாமைகளை சந்திக்க நேரிடும். நண்பர்களோடு விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. எந்த ஒரு விஷயத்தையும் நடத்தி முடிக்க நினைத்ததை விட கூடுதலான அலைச்சலை சந்திக்க வேண்டியிருக்கும். கலைத்துறையினருக்கு மன உளைச்சல் இருக்கும். இதனால் நிம்மதியான உறக்கம் கெடும். சமபலனைத் தரும் மாதம் இது.

பெண்களுக்கான சிறப்பு பலன்கள்

தெய்வ வழிபாட்டால் வளர்ச்சியைக் கூட்டிக் கொள்ள வேண்டிய மாதமாகும். வாய்ப்புகள் வந்தும், அதை உபயோகப்படுத்திக் கொள்ள முடியவில்லையே என்று நினைப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் உதவி குறைவாகவே கிடைக்கும். கணவன், மனைவிக்குள் அமைதி கிடைக்க அனுசரித்துச் செல்வது நல்லது. குழந்தைகளால் பிரச்சினைகள் ஏற்பட்டு அகலும். சொத்துகள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் மாற்றச் சிந்தனை உருவாகும். செவ்வாய்– சனி சேர்க்கை காலத்தில் விரயங்கள் அதிகரிக்கும். குடும்பச்சுமை கூடும்.

சந்திராஷ்டம தினங்கள்: பிப்ரவரி 24ம் தேதி மாலை 4 மணி முதல் 25, 26ம் தேதி வரை.

பரிகாரம்: திருச்சியிலுள்ள உச்சிப் பிள்ளையாரை தரிசித்து வாருங்கள். மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுங்கள்.

பணத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: பிப்ரவரி: 13, 15, 16, 25, 26, மார்ச்: 3, 4, 10, 11

மகிழ்ச்சி தரும் வண்ணம்: கருநீலம்.


meenamமீனம்: வாழ்க்கைத்துணையின் செயல்களுக்கு பக்கபலமாக இருந்து செயல்படுவீர்கள். நண்பர்களால் நன்மை உண்டாகும். எதையும் யோசிக்காது உடனடியாக செயல்பட நினைப்பீர்கள். இதனால் ஆடம்பர செலவுகள் அதிகரிக்கும். பண விவகாரங்களில் கூடுதல் கவனம் தேவை. செலவுகள் அதிகரித்து சிரமத்திற்கு ஆளானாலும், ஏதேனும் ஒரு வழியில் பொருள் வரவு தொடரும். முந்தைய சேமிப்பும் உங்களைக் காக்கும். அதிகரிக்கும் செலவுகளால் மன வருத்தம் ஏற்படும். குடும்பத்தில் லேசான சலசலப்புகள் தோன்றும். உடன்பிறந்தோரால் கலகம் உண்டாகும் வாய்ப்பு உண்டு. தகவல் தொடர்பு சாதனங்களை நம்பி பணி செய்ய இயலாத சூழல் உருவாகும்.

மாணவர்களின் கல்வித் தரம் உயரும். வண்டி, வாகனங்கள் ஆதாயம் தரும். புதிய வீடு கட்டும் முயற்சியை சிறிது காலத்திற்குத் தள்ளி வைப்பது நல்லது. பிள்ளைகளின் வாழ்க்கை தரம் உயரும். கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுவதை தவிர்க்கவும். உடல்நிலையில் கூடுதல் கவனம் தேவை. முன்னோர்களின் சொத்துகளில் பிரச்னைகள் தோன்றும். தொழில் ரீதியாக கடும் உழைப்பை வெளிப்படுத்தி நற்பெயர் காண்பீர்கள். ஒரு சிலருக்கு பதவி உயர்விற்கான வாய்ப்பும் உண்டு. வியாபாரிகள் லாப நஷ்ட கணக்குகளில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். மனதில் உள்ள இனம் புரியாத கலக்கம் நிம்மதியான உறக்கத்தை கெடுக்கும். கலைத்துறையினர் நினைத்தது நடக்கும். சராசரி பலன்களை தரும் மாதம் இது.

பெண்களுக்கான சிறப்பு பலன்கள்

இம்மாத ம் உடல்நலத்தில் அக்கறை காட்ட வேண்டும். உறவினர் பகை உருவாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். எந்தக் காரியமும் ஆரம்பத்தில் தடை ஏற்பட்டாலும் முடிவில் வெற்றிகரமாக முடியும். குடும்பத்தில் அனுசரித்துச் செல்வதன் மூலம் குதூகலத்தை வர வழைத்துக் கொள்ள இயலும். மார்ச் 8–ந்தேதிக்கு மேல் தனவரவு தாராளமாக வந்து சேரும். கணவன் –மனைவிக்குள் அனுசரித்துச் செல்வதன் மூலமே அமைதி காண இயலும். பிள்ளைகளின் முன்னேற்றம் பெருமை தருவதாக இருக்கும்.

சந்திராஷ்டம தினங்கள்: பிப்ரவரி 27, 28, 29ம் தேதி மதியம் 3 மணி வரை

பரிகாரம்: திருத்தணி சுப்ரமணிய சுவாமியை தரிசித்து வாருங்கள். தாயை இழந்தை பிள்ளைக்கு உதவுங்கள்.

பணத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: பிப்ரவரி: 14, 15, 18, 19, 28, 29 மார்ச்: 1, 6, 7, 12, 14

மகிழ்ச்சி தரும் வண்ணம்: ஆரஞ்ச்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here