Home Astrology Monthly Rasi Palan தமிழ் மாத ராசிபலன் – 14/3/2016 முதல் 13/4/2016 வரை

தமிழ் மாத ராசிபலன் – 14/3/2016 முதல் 13/4/2016 வரை

1115

mesahamமேசம்: குடும்பத்தினரை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதில் அதிக கவனம் செலுத்துவீர்கள். வரவில் குறை இருக்காது. பேச்சில் நகைச்சுவையை வெளிப்படுத்தி அனைவரின் கவனத்தையும் கவர்வீர்கள். சோதனைக்குரிய காலத்திலும் மிகுந்த தைரியத்துடன் செயல்பட்டு எதிர்பார்க்கும் வெற்றி அடைவீர்கள். உடன்பிறந்தோரால் ஒரு சில சங்கடத்தினை சந்திக்க நேரலாம். எடுத்த காரியங்களில் இடைஞ்சல்கள் வரும். எளிதாக முடிந்துவிடும் என்று எண்ணிய காரியங்கள் இழுபறி தரும். மன உளைச்சல் அதிகமாகும். வண்டி, வாகனங்களின் பராமரிப்பு செலவு அதிகரிக்கக் கூடும். அவ்வப்போது திடீர்  பிரயாணத்திற்கான வாய்ப்பு உண்டு. பிள்ளைகளால் கூடுதல் செலவினங்கள் உருவாகும். வாழ்க்கைத்துணையின் வார்த்தைகளுக்கு மதிப்பளித்து செயல்படுவீர்கள். சில குடும்பப் பிரச்னைகளுக்கு அவர் மூலமாகத் தீர்வு காண்பீர்கள். முன்பின் பழக்கமில்லாத நபர்களுக்கு உதவி செய்வதால் உபத்திரவங்களுக்கு ஆளாக நேரிடும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற கூடுதல் உழைப்பு அவசியம். தொழில் ரீதியாக அலைச்சலுக்கு ஆளாவீர்கள். உத்யோகஸ்தர்கள் தற்காலிக  இடமாற்றத்தினை சந்திக்க நேரிடும். கலைஞர்கள் தங்கள் விருப்பம் நிறைவேறக் காண்பர். சோதனைகளைத் தாண்டி சாதிக்க வேண்டிய மாதமாக அமைகிறது.

பெண்களுக்கான  சிறப்பு  பலன்கள்

அருகில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய மாதமாகும். உங்கள் பெயரிலேயே  மண், பூமி வாங்கும் சூழ்நிலை ஏற்படலாம். கணவன், மனைவிக்குள் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. குழந்தைகளால் அதிக விரயம் உண்டு. குடியிருக்கும் வீட்டால் சில பிரச்சினை களை சந்திக்க நேரிடும். வாழ்க்கை தேவைகள் பூர்த்தியாக தெய்வ வழிபாட்டில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.

சந்திராஷ்டம நாட்கள்: மார்ச் 28, 29

பரிகாரம்: புன்னைநல்லூர் மாரியம்மனை வணங்கி வாருங்கள்.

பணத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: மார்ச்: 14, 15, 19, 20, 31, ஏப்ரல்: 1, 5, 6, 10, 11

மகிழ்ச்சி தரும் வண்ணம்: பிரவுன்.


rishabamரிஷபம்: சேமிப்புகளில் நாட்டம் அதிகரிக்கும். உடன்பிறந்தோர் மற்றும் உறவினர்களுடன் உண்டாகும் கருத்து வேறுபாட்டினை பெரிதுபடுத்தாமல் இருப்பது நல்லது. வண்டி, வாகனங்களால் செலவுகள் அதிகரிக்கக் கூடும். எடுத்த பணிகள் எளிதாக நடந்தேறும். கடந்த சில மாதங்களாக இழுபறியில் இருந்த விவகாரங்கள் முடிவிற்கு வரும். எதிர்கால நலன் கருதி திட்டமிடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். வரவு நிலை சீராக இருக்கும். அநாவசிய பிரயாணங்களைத் தவிர்ப்பது நல்லது. செல்போன், இன்டர்நெட் போன்ற தகவல் தொடர்பு சாதனங்களால் தொல்லைகளுக்கு ஆளாக நேரிடும். தாயார் வழி சொத்துகளால் ஆதாயம் காண்பீர்கள். பிள்ளைகளால் பெருமைகொள்ளத்தக்க சம்பவங்கள் நிகழும். செலவுகள் கூடி மன வருத்தம் தோன்றும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் நிம்மதி காண்பீர்கள். தொழில்நிலையில் சிறப்பாக செயல்பட்டு வந்தாலும், தனக்குரிய சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் மனதினை ஆட்கொள்ளும். வியாபாரிகள் எதிர்பார்க்கும் தனலாபத்தினை அடைவார்கள். கலைத்துறையினர் வளர்ச்சி காண்பர். பொதுவாக எல்லா விவகாரங்களிலும் நிதானித்து  செயல்படுவது நல்லது. சிறப்பான பலன்களைக் காணும் மாதமாக அமையும்.

பெண்களுக்கான  சிறப்பு  பலன்கள்

இம்மாதம் குடும்ப உறுப்பினர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய மாதமாகும்.பெண்வழிப் பிரச்சினைகள் தலைதூக்கும். கணவன், மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படாமலிருக்க விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. கோபத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள். கொள்கைப் பிடிப்பைத் தளர்த்திக் கொள்ளுங்கள். விலை உயர்ந்த பொருட் களைக் கையாளும் பொழுது கவனம் செலுத்துங்கள். குழந்தைகளால் விரயம் உண்டு. குலதெய்வ வழிபாடு குழப்பங்களைத் தீர்க்கும்.

சந்திராஷ்டம நாட்கள்: மார்ச் 30, 31

பரிகாரம்: பஞ்சமுக நாகாத்தம்மனை வணங்கி வரவும்

பணத்தேவைளைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: மார்ச்: 16, 17, 21, 22 ஏப்ரல்: 3, 4, 6, 7, 12, 13

மகிழ்ச்சி தரும் வண்ணம்: ஆரஞ்ச்


mithunam

மிதுனம்: குடும்பத்தில் சலசலப்புகள் இருந்தாலும் மகிழ்ச்சி நிலவும். முன்பின் தெரியாதவருக்கு உதவப்போய் தர்மசங்கடமான நிலைக்கு ஆளாவீர்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் நன்மை தரும். வண்டி, வாகனங்கள் தொழில்முறையில் மிகுந்த பயனளிக்கும். வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்ளும் முயற்சியில் இறங்குவீர்கள். எதிலும் உரிய கவுரவம் எதிர்பார்ப்பீர்கள். பொருளாதார நிலையில் ஏற்ற இறக்கம் இருக்கும். பண வரவு செலவுகளை சமாளிக்கும் வகையில் இருக்கும். தாயார் வழி உறவினர்களால் ஆதாயம் காண்பீர்கள். பிள்ளைகளால் பெருமிதம் கொள்ளத்தக்க சம்பவங்கள் நிகழும். உங்கள் சிந்தனைகள் மற்றவர்கள் மத்தியில் மிகுந்த மதிப்பினையும், மரியாதையையும் பெற்றுத் தரும். சிறுசிறு கடன்சுமைகளை தீர்க்கும் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். வாழ்க்கைத்துணையின் செயல்களுக்கு உறுதுணையாய் இருந்து செயல்படுவீர்கள். கவுரவச் செலவுகள் அதிகரிக்கக் கூடும். மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் முயற்சி அவசியம்.  உத்யோகஸ்தர்கள் அலுவலக நிர்வாகத்தில் நற்பெயர் காண்பார்கள். சுயதொழில் செய்வோர் கடும் உழைப்பினை வெளிப்படுத்தி அதற்கான பயனை அடைவார்கள். கலைத்துறையினர் திறமைக்கேற்ப வாய்ப்பு பெறுவர். உழைப்பால் உயரவேண்டிய நேரம் இது.

பெண்களுக்கான  சிறப்பு  பலன்கள்

மங்கல நிகழ்ச்சி கள் இல்லத்தில் நடைபெறும் மாதமாகும். வாங்கல்– கொடுக் கல்கள் ஒழுங்காகும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். மண விழா, மணி விழா, பெண்களின் சுபச்சடங்குகள் எதிர்பார்த்தபடி நடைபெறும். கணவன், மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். பக்கத்து வீட்டாரின் பகை மாறும். தாய்வழி ஆதரவோடு தனவரவு திருப்திகரமாக அமையும்.  பொது  நலத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு பொறுப்புகள் மாற்றப்படலாம். ஆபரண சேர்க்கை அதிகரிக்கும்.

சந்திராஷ்டம நாட்கள்: ஏப்ரல் 1, 2, 3

பரிகாரம்: ஞாயிறு தோறும் சரபேஸ்வர ஸ்வாமியை வழிபட்டு வாருங்கள்.

பணத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: மார்ச்: 18, 19, 23, 24 ஏப்ரல்: 5, 6, 8, 9

மகிழ்ச்சி தரும் வண்ணம்: கிளிப்பச்சை


kadakamகடகம்: நண்பர்களுடனான சந்திப்பு நிம்மதி தரும். ஆடம்பர செலவுகள் அதிகரிக்கக் கூடும். மாணவர்கள் கூடுதல் பயிற்சி மற்றும் கூட்டு பயிற்சி மூலம் தேர்வை திருப்திகரமாக எதிர்கொள்ளலாம். சாதக பாதகங்கள் கலந்திருக்கும். எளிதில் முடிய வேண்டிய காரியங்களும் இழுபறி தரும். மிகவும் நெருங்கிய ஒருவர் எதிர்பார்ப்பிற்கு மாறாக செயல்படுவார். அதனால் மன வருத்தம் வரும். விருப்பங்களை உடனுக்குடன் நிறைவேற்றி கொள்ள அவசரம் காட்டாது நிதானத்துடன் செயல்படுவது அவசியம். அவரசத்தால் தேவையற்ற பிரச்னைகளை சந்திக்க நேரிடும். வரவு திருப்தி தரும் வகையில் அமையும். நெடுநாளைய கடன் பிரச்னை ஒன்று முடிவிற்கு வரும். புதிதாக கடன் வாங்குவதை சிறிது காலத்திற்கு ஒத்தி வைப்பது நல்லது. குடும்பத்தில் சலசலப்பு நிலவி வரும். உடன்பிறந்தோர் சாதகமாக செயல்பட்டு வருவார்கள். வண்டி, வாகனங்களால் செலவுகள் அதிகரிக்கும். அநாவசிய பிரயாணங்களை தவிர்க்க வேண்டியது அவசியம். பிள்ளைகளின் செயல்கள் உங்கள் கவுரவத்தை உயர்த்தும். உஷ்ண உபாதையால் அவதிப்படும் வாய்ப்பு உண்டு என்பதால் உடல்நிலையில் கவனம் தேவை. தொழிலில் சிறப்பான முன்னேற்றம்  உண்டு. கலைத்துறையினர் திறமைக்கேற்ப வாய்ப்பு பெறுவர். கனவுத் தொல்லைகளால் நிம்மதியான உறக்கம் கெடலாம். சரிசம பலன்களைக் காணும் மாதமாக அமையும்.

பெண்களுக்கான  சிறப்பு  பலன்கள்

இம்மாதம் பணப்பற்றாக் குறை அகலும். பக்தி அதிகரிக்கும். குழப்பங்கள் அகல குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டுமென்று நினைப்பீர்கள். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த முயற்சிகளில் எதிர்பார்த்த நற்பலன்கள் கிடைக்கும்.  உங்கள் பெயரிலேயே சொத்துக்கள் வாங்க வேண்டுமென்று குடும்ப உறுப்பினர்கள் வலியுறுத்துவர். கணவன்– மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். பிணக்குகளை நீக்கி இணக்கமாக நடந்து கொள்வீர்கள். குழந்தைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்வது நல்லது.

சந்திராஷ்டம நாட்கள்: ஏப்ரல் 4, 5

பரிகாரம்: பவுர்ணமி நாளன்று சத்யநாராயணவிரதம் மேற்கொள்வது நலம்.

பணத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: மார்ச்: 14, 15, 21, 22, 27, 28, ஏப்ரல்: 6, 7, 10, 11

மகிழ்ச்சி தரும் வண்ணம்: மஞ்சள்.


simamசிம்மம்: நினைப்பது ஒன்றும், நடப்பது ஒன்றுமாக இருக்கும். மன உளைச்சல் இருக்கும். திட்டமிட்ட பணிகள் முடியாமல் இழுபறியில் இருக்கும். எந்த ஒரு விஷயத்திலும் உணர்ச்சிவசப்படாது இருப்பது நல்லது. பேச்சில் கூடுதல் கவனம், எச்சரிக்கை அவசியம். பொருளாதார ரீதியாக சற்று சிரமமான சூழல் நிலவும். கையிருப்புகள் கரையத் தொடங்கும். குடும்பத்தில் சிறுசிறு சலசலப்புகள் தோன்றும். தகவல் தொடர்பு சாதனங்கள் அவ்வப்போது பிரச்னை தரும். உடன்பிறந்தோரால் சங்கடங்கள் உருவாகக் கூடும். முன்பின் தெரியாத முற்றிலும் புதிய நபர்களை நம்பி எந்தச் செயலிலும் இறங்கக் கூடாது. தேவையற்ற பிரயாணங்களைத் தவிர்ப்பது நல்லது. எதிர்காலம் பற்றிய சிந்தனைகளால் மனதில் அநாவசிய குழப்பம் இருக்கும். மூட்டு வலி மற்றும் எலும்பு சார்ந்த பிரச்னைகளால் உடல்நிலையில் சிரமத்தினைக் காண நேரும். முன்னோர் சொத்துகளில் பாகப்பிரிவினைக்கான வாய்ப்புகள் உருவாகலாம். மாணவர்களுக்கு தேர்வு நேரத்தில் கடின உழைப்பு அவசியம். உத்யோகஸ்தர்கள் பொறுமை காப்பது அவசியம். தொழிலில் எதிர்பார்த்த தன லாபம் அடைய சிறிது காலம் காத்திருக்க வேண்டியிருக்கும். கலைத்துறையினருக்கு எச்சரிக்கை அவசியம். சிரமங்களை எதிர்கொண்டு வெற்றி காணவேண்டிய நேரம் இது.

பெண்களுக்கான  சிறப்பு  பலன்கள்

ஆரோக்கியத்தில் அக் கறை செலுத்தவேண்டிய மாதம் இது. ஆதாயம் அதிகமாகக் கிடைத்தாலும், மனநிம்மதி குறைவாகவே கிடைக்கும். மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்க வேண்டாம். கணவன், மனைவிக்குள் அனுசரித்துச் செல்வதன் மூலமே அமைதி கிடைக்கும். குழந்தைகளால் நன்மை உண்டு. குறிப்பாக பிள்ளைகளின் கல்யாண வாய்ப்புகளை நிறைவேற்றி வைப்பீர்கள். அவர்கள் கடல் தாண்டிச் சென்று படிக்கும் முயற்சிக்கு ஏற்பாடு செய்திருந்தால் அதிலும் அனுகூலம் கிடைக்கும். உத்தியோகம் பார்க்கும் பெண்களுக்கு உயர்பதவி கிடைக்கும் வாய்ப்பு உண்டு. ஆபரண சேர்க்கை ஏற்படும்.

சந்திராஷ்டம நாட்கள்: ஏப்ரல் 6, 7

பரிகாரம்: விநாயகருக்கு சிதறு தேங்காய் உடைத்துவிட்டு பணியைத் துவக்கவும்.

பணத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: மார்ச்: 16, 17, 24, 25, 27, 28  ஏப்ரல்: 6, 7, 8, 12, 13

மகிழ்ச்சி தரும் வண்ணம்: ரோஸ்.


kanniகன்னி: உங்கள் பணிகளுக்கு அடுத்தவர்களை சார்ந்திருக்க வேண்டியிருக்கும். எதிலும் தனித்து செயல்பட இயலாத சூழல் தோன்றும். நம்பியிருந்த ஒருவர் முக்கியமான நேரத்தில் உங்களுக்கு மாறாக செயல்படுவார். அதனால் மன வருத்தம் வரும். வரவு திருப்தி தரும். குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதில் அதிக கவனம் செலுத்துவீர்கள். உடன்பிறந்தோரால் கூடுதல் செலவுகள் ஏற்படும். தகவல் தொடர்பு சாதனங்கள் முக்கியமான நேரத்தில் செயலிழந்து சிரமம் தரும். முன்பின் தெரியாதவர்களை நம்பி புதிய முயற்சிகளில் ஈடுபடக்கூடாது. குறைந்த விலையுள்ள பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்குவீர்கள். தாயார் வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடு தோன்றும். வாகன பராமரிப்பு செலவு அதிகரிக்கும். பிள்ளைகளால் நிம்மதி கூடும்.  வாழ்க்கைத்துணையின் வார்த்தைகளுக்கு மதிப்பளித்து செயல்படுவீர்கள். நண்பர்களோடு விரோதம் தோன்றும். கவுரவ செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபநிகழ்வுகளுக்கான வாய்ப்புகள் உண்டு. மாணவர்களுக்கு தேர்வில் திருப்தி ஏற்படும். உத்யோகஸ்தர்கள், தொழில்செய்வோருக்கு போட்டியிருந்தாலும் ஏறுமுகம்  உண்டு. கலைத்துறையினர் போட்டியை சமாளித்து வெற்றி பெற வேண்டியிருக்கும். சரிசம பலனைத் தரும் மாதம் இது.

பெண்களுக்கான  சிறப்பு  பலன்கள்

இம்மாதம் உங்களுக்கு இனிய மாதமாகும். எடுத்த காரியத்தை எளிதில் முடித்து வெற்றி காண்பீர்கள். பொன் மனம் படைத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய திருப்பங்கள் ஏற்படும். வாழ்க்கைத் துணையின் முன்னேற்றத்திற்கு உங்கள் அதிர்ஷ்டமும் ஒரு காரணம் என்று குடும்ப உறுப்பினர்கள் எடுத்துரைப்பர். குழந்தைகளின் கல்யாண வாய்ப்புகள் கைகூடும். வங்கிச் சேமிப்பு உயரும். வாகன மாற்றமும் உருவாகும்.

சந்திராஷ்டம நாட்கள்: ஏப்ரல் 8, 9

பரிகாரம்: ஓய்வு நேரத்தில் சிவாலயத்தில் உழவாரப்பணி மேற்கொள்ளவும்.

பணத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: மார்ச்: 14, 15, 19, 20, 25, 26 ஏப்ரல்: 10, 11

மகிழ்ச்சி தரும் வண்ணம்: கிளிப்பச்சை.


thulamதுலாம்: குடும்பத்தில் சலசலப்புகள் தோன்றினாலும் மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது. சாமர்த்தியமான அணுகுமுறை, புத்தி சாதுர்யம் மற்றும் திறமையான வாக்கு சாதுர்யம் பிரச்னைக்குரிய விஷயங்களில் வெற்றி தேடித்தரும். உடன்பிறந்தோர் உதவிகரமாய் செயல்பட்டு வருவார்கள். உங்கள் பணிகளில் தகவல் தொடர்பு சாதனங்கள் முக்கிய இடம் வகிக்கும். புதிய வாகனங்கள் வாங்குவீர்கள். கவலைகள் மறையும். டென்ஷன் குறையும். மனதில் விதவிதமான ஆசைகள் தோன்றினாலும், நல்லது கெட்டது அறிந்து செயல்படுவீர்கள். பொருளாதார நிலை வலுப்படும். பல்வேறு வழிகளில் பொருள்வரவு தொடரும். பிள்ளைகள் பேரில் சேமிப்பில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். வீடு, மனை, நிலம் போன்ற அசையா சொத்துக்கள் சேரும் நேரம் இது. வாழ்க்கைத்துணையின்  ஆலோசனைகளால் உங்கள் கவுரவம் உயரும். செலவை கட்டுப்படுத்தும் சிக்கன முயற்சி வெற்றி தரும். பூர்வீக சொத்துகள் தக்க நேரத்தில் உதவிகரமாய் அமையும். மாணவர்கள் கவனச்சிதறலை தவிர்ப்பது அவசியம். உத்யோகஸ்தர்கள், கலைத்துறையினருக்கு சாதகமான நேரம் இது. தொழிலில் பிறரைச் சார்ந்திருக்க வேண்டியிருந்தாலும் தனித்துவம் வெளிப்படும். சுயதொழில் செய்வோர் எதிர்பார்க்கும் தனலாபம் அடைய சிறிது காலம் காத்திருக்க வேண்டியிருக்கும். சாதகமான பலன்களை சந்திக்கும் மாதம் இது.

பெண்களுக்கான  சிறப்பு  பலன்கள்

உங்களுக்கு எதிலும் கூடுதல் கவனம் செலுத்தும் மாதமாகும். பண வரவு வருவதில் தடைகள் ஏற்படலாம். உடன் இருப்பவர்களால்  குழப்பங்கள் அதிகரிக்கும்.  கணவன்– மனைவிக்குள் மிக்க அன்பு தேவை.  குழந்தைகளின் மனதைப் புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது. ஆபத்துக்கள் அகல கோபத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள். உத்தியோக மாற்றங்களும், ஊர் மாற்றங்களும் உருவாகலாம்.

சந்திராஷ்டம நாட்கள்: மார்ச் 14, 15, ஏப்ரல் 10, 11

பரிகாரம்: உலகளந்த பெருமாளை வணங்கி வாருங்கள்.

பணத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: மார்ச்: 20, 21, 27 28 ஏப்ரல்: 3, 4, 12, 13

மகிழ்ச்சி தரும் வண்ணம்: கிரே.


viruchigamவிருச்சிகம்:  பொருளாதார சிக்கல் இருந்தாலும் செலவுகளை சமாளிக்கும் வகையில் வரவு இருக்கும். பேச்சில் கடுமையை தவிர்க்கவும். சில விஷயங்களுக்கு உடன்பிறந்தோரை சார்ந்திருக்க வேண்டி வரும். திடீர் விருந்தினர் வருகை இருக்கும். தகவல் தொடர்பு சாதனங்கள் உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தும். தொலைதூரப் பிரயாணங்கள் அனுகூலமாக அமையும். உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். எண்ணிய காரியங்களை நடத்தி முடிப்பீர்கள். மதிப்பு, மரியாதை உயரும். பேச்சால் சிக்கலான காரியங்களில் வெற்றி கிடைக்கும். வாழ்க்கை தரம் உயரும். எதிர்கால திட்டங்களை வகுத்து செயல்படுவீர்கள். பிள்ளைகளின் சாதனைகளை பற்றி  பேசி பெருமிதம் கொள்வீர்கள். அவர்களது உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். வாழ்க்கைத்துணை உங்களின் எண்ண ஓட்டத்தைப் புரிந்துகொண்டு செயல்படுவார். மாணவர்களுக்கு தேர்வில் எதிர்பார்த்த கேள்விகள் வந்து கூடுதல் உற்சாகம் தரும். உத்யோகஸ்தர்கள், தொழில் செய்வோர் கடும் போட்டியினை சந்திக்க நேர்ந்தாலும், வெற்றி காண்பார்கள். சுயதொழில் செய்வோர் புதிய முயற்சிகளை சிறிது காலத்திற்கு ஒத்தி வைப்பது நல்லது. கலைத்துறையினரின் எண்ணங்கள் நிறைவேறும். சாதகமான பலன்களை காணும் மாதம் இது.

பெண்களுக்கான  சிறப்பு  பலன்கள்

இம்மாதம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் மாதமாகும். இல்லத்தில் உள்ளவர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். தெள்ளத் தெளிவாக நீங்கள் எடுத்த முடிவு வெற்றி பெறும்.  கணவன்–மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். உதிரி வருமானங்கள் பெருகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு  நினைத்த இடத்திற்கு இடமாறுதல்களும் கிடைக்கும். பயணத்தால் பலன் உண்டு.  ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்டுங்கள்.

சந்திராஷ்டம நாட்கள்: மார்ச் 16, 17, ஏப்ரல் 12, 13

பரிகாரம்: வியாழன் தோறும் நவகிரஹ குருபகவானுக்கு விளக்கேற்றி வழிபடவும்.

பணத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: மார்ச்: 18, 19, 20, 24, 25, 31 ஏப்ரல்: 1, 2, 5, 6

மகிழ்ச்சி தரும் வண்ணம்: வைலட்.


dhanusuதனுசு: சாதகமான பலன்கள் ஏற்படும். கவுரவம் உயரும். வரவுக்கு குறைவிருக்காது. செலவுகள் கூடினாலும் சமாளிப்பீர்கள். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவி வரும். உடன்பிறந்தோருக்கு உதவி செய்ய வேண்டியிருக்கும். தகவல் தொடர்பு சாதனங்கள் தொழிலில் மிகுந்த உதவியாக இருக்கும். உங்கள் எண்ணங்களை பேச்சில் வெளிப்படுத்தாது எழுத்தின் மூலம் வெளிப்படுத்தினால் வெற்றி, நற்பெயர் கிடைக்கும். திடீர் மற்றும் அடிக்கடி பிரயாணம் செய்ய நேரிடலாம். வண்டி, வாகனங்களால் ஆதாயம் உண்டு. தகப்பனார் வழி உறவினர்களின் துணையோடு குடும்பப் பிரச்னைக்கு தீர்வு காண்பீர்கள். பிள்ளைகள் குறித்து பெருமிதம்  கொள்வீர்கள். அவர்களது வாழ்வில் சுபநிகழ்வுகளுக்கான வாய்ப்பு உருவாகும். முன்பின் தெரியாத பெண்களுக்கு உதவி செய்யப்போய் புதிய பிரச்னைகள வரும். சர்க்கரை வியாதிக்காரர்கள் உடல்நிலையில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. வாழ்க்கைத்துணை உங்கள் பணிகளுக்கு பக்கபலமாய்த் துணை நிற்பார். பூர்வீக சொத்துகளில் பாகப்பிரிவினைக்கான வாய்ப்பு உண்டு. மாணவர்கள் தேர்வுகளை உற்சாகத்துடன் எதிர்கொள்வர். உத்யோகஸ்தர்கள், கலைத்துறையினருக்கு சுகமான சூழல் நிலவும். தொழிலில் நிதானமும், அசுர வேகமும் கலந்திருக்கும். கனவுத் தொல்லையால் நிம்மதியான உறக்கம் கெடலாம். மற்றபடி நற்பலன்களை தரும் மாதம்.

பெண்களுக்கான  சிறப்பு  பலன்கள்

யோசித்து செயல்பட வேண்டிய மாதமாகும். வரவைக் காட்டிலும் செலவுகள் கூடலாம். வாய்ப்புகளை உபயோகப்படுத்திக் கொள்ள முடியவில்லையே என்று கவலைப்படுவீர்கள். வீடு வாங்க, விற்க எடுத்த முயற்சியிலும் தாமதம் ஏற்படும். கணவன், மனைவிக்குள் விட்டுக் கொடுத்துச் செல்வதே நல்லது. குழந்மேற்பார்வையில் வைத்துக் கொண்டு வழி நடத்திச் செல்வது நல்லது. தாய்வழி ஆதரவு எதிர்பார்த்த அளவு இருக்காது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திடீர் மாற்றம் ஏற்படும்.

சந்திராஷ்டம நாட்கள்: மார்ச் 18, 19

பரிகாரம்: திருப்பதி பாலாஜியை வணங்கி வர திருப்பம் காண்பீர்கள்.

பணத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: மார்ச்: 21, 22, 23, 25, 26 ஏப்ரல்: 2, 4, 6, 7

மகிழ்ச்சி தரும் வண்ணம்: ஆனந்தா நீலம்.


magaramமகரம்: குடும்ப பொருளாதார நிலை உயரும். சொன்ன சொல்லைக் காப்பாற்றுவதில் மிகுந்த சிரத்தை கொள்வீர்கள். பேச்சால் கவுரவம் உயரும். குடும்ப விசேஷங்களில் அனைவரையும் ஒருங்கிணைத்துச் செல்வதில் உங்களின்  பொறுப்பான பணிகள் மிகுந்த முக்கியத்துவம் பெறும். உடன்பிறந்தோரால் ஒரு சில சங்கடங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். முக்கியமான பணிகளுக்கு அடுத்தவர்களை நம்பாது நீங்களே நேரடியாக செயலில் இறங்க வேண்டிய சூழல் உருவாகலாம். மனதில் மகிழ்ச்சி குடிகொள்ளும். எதிலும் சாதகமான பலன்கள் கிட்டும். எண்ணிய காரியங்கள் சிறப்பாக முடியும். திட்டமிட்ட பணிகள் நடந்தேறும். எந்த ஒரு விஷயத்தையும் தீவிரமாக ஆராய்ந்து செயல்படுவீர்கள். தடைபட்டிருந்த தனலாபம் வரத்துவங்கும். உறவினர்களுடனான சந்திப்பு மன மகிழ்ச்சி தரும். பிள்ளைகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதில் மிகுந்த அக்கறையுடன் செயல்படடுவீர்கள். உங்கள் பணிகளுக்கு வாழ்க்கைத்துணை ஆதரவாக செயல்படுவார். மாணவர்கள் மிக்க மகிழ்ச்சியோடு தேர்வுகளை எதிர்கொள்வர். கூடுதல் பணிசுமை ஏற்படும். உத்யோக ரீதியாக அலுவலகத்தில் நற்பெயரோடு பதவி உயர்விற்கான வாய்ப்பையும் பெறுவீர்கள். தொழிலில் அலைச்சல் அதிகரித்தாலும் சிறப்பான தனலாபம் கிடைக்கும். கலைஞர்கள் முன்னேற்றம் காண்பர். நற்பலன்களைத் தரும் மாதம் இது.

பெண்களுக்கான  சிறப்பு  பலன்கள்

கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டிய மாதமாகும். குடும்பத்தினர் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்களா? என்பது சந்தேகம் தான்.  கடமையில் கண்ணும் கருத்துமாக இருக்கும் உங்களுக்கு குறுக்கீடுகள் வந்து சேரலாம்.   கணவன், மனைவிக்குள்  பிரியம் ஏற்பட வழிபாடுகள் அவசியம் தேவை. தங்கம், வெள்ளி மற்றும் ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டு. குல தெய்வ வழிபாடு குடும்ப முன்னேற்றத்திற்கு வித்திடும்.

சந்திராஷ்டம நாட்கள்: மார்ச் 20, 21, 22

பரிகாரம்: வியாழன்தோறும் சாயிபாபா கோவிலில் அன்னதானம் செய்யவும்.

பணத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: மார்ச்: 24, 25, 27, 28 ஏப்ரல்: 5, 6, 10, 11

மகிழ்ச்சி தரும் வண்ணம்: கரும் பச்சை.


kumbamகும்பம்: மூத்த குடும்ப உறவினர்களுடன் உரையாடி குடும்ப பாரம்பரியத்தை அறிந்து கொள்வீர்கள். வண்டி, வாகனங்களை இயக்கும்போதும், பிரயாணத்தின்போதும் அதிக எச்சரிக்கை அவசியம். பிள்ளைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அவர்களது விருப்பத்திற்காக சுற்றுலா செல்ல திட்டமிட நேரிடும். வீட்டில் செய்ய நினைக்கும் ஆல்ட்ரேஷன்  பணிகளை சிறிது காலத்திற்கு தள்ளி வைப்பது நல்லது. பொறாமை, போட்டிகளை சமாளித்து வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவி வரும். எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்ளும் வகையில் வரவு தடையில்லாமல் இருக்கும். எந்த ஒரு விஷயத்திலும் அதிகம் பேசாது அமைதி காத்து வருவது நல்லது. உடன்பிறந்தோரால் நன்மை  உண்டாகும். பங்காளிகளுக்குள் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். தகவல் தொடர்பு சாதனங்களால் சாதக பாதகங்கள் இருக்கும். வாழ்க்கைத்துணையின் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். பூர்வீக சொத்துக்களால் நன்மை உண்டாகும். மாணவர்கள் தங்கள் உழைப்பை முழுவதுமாக தேர்வில் வெளிப்படுத்தி வெற்றி காண்பர். உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் மதிப்பு உயரும். தொழிலில் உங்களது எண்ணங்களை நடைமுறைப்படுத்த கால நேரம் சாதகமாக அமையும். கலைத்துறையினர் சிறப்பான லாபம் காண்பர். நன்மை தரும்  மாதம் இது.

பெண்களுக்கான  சிறப்பு  பலன்கள்

வாழ்க்கை தேவைகள் பூர்த்தியாகும் மாதமாகும். வளர்ச்சியும், தளர்ச்சியும் மாறி மாறி வரும். புகழ்மிக்கவர்கள் உங்களுக்கு பின்னணியாக இருந்து சில காரியங்களை முடித்துக் கொடுப்பர். பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். புதியவர்களின் சந்திப்பால் பொருளாதார நிலை உயரும். பிள்ளைகளின் கல்யாண காரியங்கள் நல்ல விதமாக முடிவடையும்.  நேசமிக்கவர்கள் உங்களுக்கு நிழலாக இருந்து உதவி செய்வர். தாய்வழி ஆதரவோடு தனவரவும் ஏற்படும் நேரமிது.

சந்திராஷ்டம நாட்கள்: மார்ச் 23, 24

பரிகாரம்: குருவாயூரப்பனை வணங்கி வாருங்கள்.

பணத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: மார்ச்: 14, 15, 25, 29, 31 ஏப்ரல்: 1, 2, 6, 7, 10, 11

மகிழ்ச்சி தரும் வண்ணம்: கருநீலம்.


meenamமீனம்: குடும்பத்தில் சலசலப்பும், கலகலப்பும் மாறி மாறி இடம்பிடிக்கும். பொருளாதார சிக்கல்கள் குறையும். அதே நேரத்தில் புதிதாக கடன் வாங்குவதை சிறிது காலத்திற்குத் தள்ளி வைப்பது நல்லது. உடன்பிறந்தோர் முக்கியமான நேரத்தில் துணை நிற்பார்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் உங்கள் பணிகளுக்கு பக்கபலமாக அமையும். பொழுதுபோக்கு அம்சங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். வண்டி, வாகனங்களால் ஆதாயம் உண்டாகும். எதிர்பாராத பிரயாணம் இருக்கும். பிள்ளைகள் குறித்த ஏக்கம் இருக்கும். சாதகமான பலன்கள் ஏற்படும். கவுரவம், வருமானம் உயரும். விட்டுக் கொடுத்து சென்று உங்கள் தேவைகளை நிறைவேற்றி கொள்வீர்கள். எதிலும் உங்களுக்கு சரியென தோன்றுவதை பேசுவதால் மற்றவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். ரத்தக்கொதிப்பு உள்ளவர்களுக்கு  உடல்நிலையில் கூடுதல் கவனம் அவசியம். வாழ்க்கைத்துணை உங்கள் பணிகளுக்கு பக்கபலமாக துணை நிற்பார். அநாவசிய செலவுகளை குறைக்க வேண்டியது கட்டாயம். பூர்வீக சொத்துகளில் புதிய பிரச்னைகள் வரும். மாணவர்கள் உழைப்புக்கேற்ப தேர்வை எதிர்கொள்வர். உத்யோகஸ்தர்கள் மற்றும் தொழில் செய்வோர் புதிய திருப்பத்திற்கான அறிகுறிகளை காணத் துவங்குவர். சுயதொழில் செய்வோர் சிறப்பான வளர்ச்சியடைவர். கலைத்துறையினருக்கு முன்னேற்றம் ஏற்படும். முன்னேற்றம் தரும் மாதமாக அமையும்.

பெண்களுக்கான  சிறப்பு  பலன்கள்

உடன் இருப்பவர்களையும், உடன் பணிபுரிபவர்களையும் அனுசரித்துச் செல்ல வேண்டிய நேரமாகும். செவ்வாய், சனி சேர்க்கை பெறுவதால் விரயங்கள் அதிகமாகத்தான் இருக்கும். வீடு கட்டும் முயற்சி அல்லது வாங்கும் யோகம் ஏற்படலாம்.  ஆயினும் மனக்கலக்கம் ஏற்படும் விதத்தில் ஒரு சம்பவம் நடைபெறலாம். எல்லாவற்றிற்கும் பரிகாரமாக செவ்வாய்க்கிழமை தோறும் முருகப்பெருமானை வழிபாடு  செய்யுங்கள்.

சந்திராஷ்டம நாட்கள்: மார்ச் 25, 26, 27

பரிகாரம்: தினந்தோறும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்து வரவும்.

பணத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: மார்ச்: 15, 17, 18, 27, 28 ஏப்ரல்: 3, 4, 8, 9

மகிழ்ச்சி தரும் வண்ணம்: ஆரஞ்ச்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here