Home Astrology Monthly Rasi Palan தமிழ் மாத ராசிபலன் – 14/4/2016 முதல் 13/5/2016 வரை

தமிழ் மாத ராசிபலன் – 14/4/2016 முதல் 13/5/2016 வரை

1397

சித்திரை மாத ராசி பலன்கள்:

mesaham

மேசம்: குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை நிலவும். சேமிப்புகளை உயர்த்திக் கொள்ள நேரம் சாதகமாக அமையும். தங்க, வெள்ளி பொருட்கள் வாங்கும் வாய்ப்பு உண்டு. புதிய சொத்து வாங்கும் முயற்சியில் வெற்றி கிட்டும். உடன்பிறந்தோர் உங்கள் உதவி நாடி வருவர். தகவல் தொடர்பு சாதனங்களால் ஆதாயம் மிகும். நட்பு வட்டம் விரிவடையும். வாகனங்களை இயக்கும்போது அதிக கவனம் அவசியம். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அவர்களால் உங்கள் கவுரவம் உயரும்.

கன்னிப்பெண்களின் கனவு நிறைவேறும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். உஷ்ண உபாதையால் உடல்நிலை பாதிப்படையும். சிலருக்கு கண், காது, மூக்கு, பல் பகுதிகளில் பிரச்னைகள் தோன்றக்கூடும். வாழ்க்கைத்துணையோடு கருத்து வேறுபாடு தோன்றும். நண்பர்கள் உங்களுக்கு எதிராக செயல்படுவர். மாணவர்கள் விடுமுறையை பயன்படுத்திக்கொண்டு தொழில் கல்வி கற்பது நல்லது. கலைத்துறையினர் புதிய வாய்ப்புகளை பெறுவர். தொழிலில் இழப்புகளை தவிர்க்க பிடிவாதத்தை தளர்த்திக் கொள்வது நல்லது. உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் அனுசரணை அவசியம். மொத்தத்தில் பலனடையும் மாதமாக அமையும்.

பெண்களுக்கான சிறப்பு பலன்கள்

இம்மாதம் உங்களுக்கு இனிய மாதமாகும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். குடும்ப ஒற்றுமை பலப்படும். கணவன்- மனைவிக்குள் கனிவு கூடும். குழந்தைகளின் சுபகாரியப் பேச்சுக்களைத் தொடங்குவீர்கள். குடும்ப உறுப்பினர்களுக்கும் வேலை வாய்ப்புக் கிடைத்து உதிரி வருமானம் வந்து சேரும். உறவினர் பகை விலகும். சென்ற ஆண்டில் ஏற்பட்ட பிரச்சினைகள் துன்முகியில் தொடராது இருக்க திசாபுத்திக்கேற்ற தெய்வ வழிபாடுகளை மேற்கொள்ளுங்கள். உத்தியோகத்தில் உள்ளவர் களுக்கு நினைத்த இடத்திற்கு மாறுதல் கிடைக்கும். வருமானம் திருப்தி தரும். ஆபரண சேர்க்கை உண்டு.

 

பணத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: ஏப்ரல்: 15, 16, 27, 28 மே: 2, 3, 7, 8, 13

மகிழ்ச்சி தரும் வண்ணம்: மஞ்சள்.

சந்திராஷ்டம நாட்கள்: ஏப்ரல் 24, 25

பரிகாரம்: பெருமாள் கோயிலில் உள்ள தாயார் சந்நதியில் விளக்கேற்றி வழிபடவும்.


rishabamரிஷபம்: குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குடும்பத்திற்குத் தேவையான புதிய ஃபர்னிச்சர்கள் வாங்குவீர்கள். திடீர் விருந்தினர்கள் வருகையால் வீடு களை கட்டும். வெளிநாட்டு வேலை எதிர்பார்த்தவர்களுக்கு வாய்ப்பில் முன்னேற்றம் ஏற்படும். உடன்பிறந்தோரால் அனுகூலம் உண்டு. வாகனங்களால் செலவுகள் அதிகரிக்கும். எதிர்பாராத பிரயாணம் இருக்கும். உறவினர்களோடு மனஸ்தாபம் உண்டாகும். புதிய நண்பர்களிடம் கவனம் அவசியம். மனம் பொழுதுபோக்கு அம்சங்களை நாடும். குடும்பத்தினருடன் திடீர் பயணம் உண்டு. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் நடைபெறத் துவங்கும். பிள்ளைகளின் செயல்களில் மந்தத்தன்மை நிலவும். வாழ்க்கைத்துணை உங்களுக்குப் பக்கபலமாய் இருப்பார். உடல் நலனை பேண ஆரோக்கியமான உணவில் கூடுதல் கவனம் கட்டாயம். உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் சாதகமான காற்று வீசும். தொழிலில் போட்டியாளர்களை சமாளித்து முன்னேறினால் லாபம் கொழிக்கும். மாணவர்கள் நேரத்தை வீணடிக்காமல் எதிர்காலம் குறித்து சிந்திப்பது அவசியம். கலைத்துறையினர் தடைகளை சமாளிக்க வேண்டியிருக்கும். சரிசம பலன்களைத் தரும் மாதம் இது.

பெண்களுக்கான சிறப்பு பலன்கள்

இம்மாதம் பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். குடும்ப முன்னேற்றம் கூடும். குழந்தைகள் நலன் கருதி படிப்பு சம்பந்தமாக எடுத்த முயற்சி அனுகூலம் தரும். கணவன்-மனைவிக்குள் அன்பும் பாசமும் பொங்கும். சென்ற மாதம் எதிர்பாராத பிரச்சினையை தந்த காரியம் நல்ல விதமாக முடியும். மாதத்தின் பிற்பகுதியில் உங்கள் பெயரில் சொத்துக்கள் வாங்கும் சூழ்நிலையுண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சம்பளம் கூடும்.

பணத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: ஏப்ரல்: 17, 18, 30 மே: 1, 4, 5

மகிழ்ச்சி தரும் வண்ணம்: நீலம்.

சந்திராஷ்டம நாட்கள்: ஏப்ரல் 26, 27, 28

பரிகாரம்: வெள்ளி தோறும் காமதேனு பூஜை செய்து வழிபடவும்.


mithunamமிதுனம்: குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழலை தக்கவைத்துக் கொள்வதில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். புதிய கடன்சுமையை தவிர்க்க எச்சரிக்கை அவசியம். எதையும் தைரியத்துடன் எதிர்கொள்வீர்கள். வண்டி, வாகனங்களை புதிதாக மாற்றுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிதாக வீடு கட்டி வருபவர்களும், அதற்கான முயற்சியில் உள்ளோரும் காரியம் சற்று நிதானமாக நடப்பதாக உணர்வார்கள். உறவினர்களால் கலகம் உண்டாவதற்கான வாய்ப்பு உண்டு. பிள்ளைகள் உங்கள் எதிர்பார்ப்பினை நிறைவேற்றும் வகையில் செயல்பட்டு வருவார்கள். குடும்பத்தினருடன் திடீர் பயணம் செல்வதற்கான வாய்ப்பு உண்டு. உடல்நிலையிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் தொல்லை தரலாம். வீண் விவாதம் காரணமாக வாழ்க்கைத்துணையுடன் கருத்து வேறுபாடு தோன்றக்கூடும். உத்யோகஸ்தர்கள், தொழில் செய்வோர் கூடுதல் அலைச்சலை சந்தித்தாலும் தனலாபம் கூடும். மாணவர்கள் விடுமுறைகால பயிற்சி வகுப்புகளில் ஈடுபாடு கொள்வர். கலைத்துறையினர் தொழில்முறை முன்னேற்றம் காண்பர். உழைப்பால் உயர்வு காணும் மாதம் இது.

பெண்களுக்கான சிறப்பு பலன்கள்

எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் மாதம் இது. எதிர்பாராத பயணங்கள் அதிகரிக்கும். இடம், பூமி வாங்குவது பற்றி ஆலோசிப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். குழந்தைகளின் பாசப்பிணைப்பில் மகிழ்ச்சி கூடும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரலாம். பழைய வாகனங்களைக் கொடுத்து விட்டு, புதிய வாகனங்கள் வாங்குவதில் சில பிரச்சினைகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த நற்பலன்கள் கிடைக்கும். இலாகா மாற்றங்கள் எதிர்பார்த்தபடி அமையும். தாயின் அன்பிற்கு பாத்திரம் ஆவீர்கள்.

பணத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: ஏப்ரல்: 15,16,19,20 மே: 2,3,6,7,11,12

மகிழ்ச்சி தரும் வண்ணம்: பச்சை.

சந்திராஷ்டம நாட்கள்: ஏப்ரல் 29, 30

பரிகாரம்: செவ்வாய், சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு விளக்கேற்றி வழிபடவும்.


kadakamகடகம்: குடும்ப உறுப்பினர்களை ஒருங்கிணைத்து விசேஷங்களில் முக்கியப் பங்காற்றுவீர்கள். பேச்சில் கறாராக இருப்பீர்கள். உடன்பிறந்தோருக்கு உதவி செய்வீர்கள். எதிர்பாராத தொலைதூர பிரயாணம் உண்டு. ஆன்மிகப் பெரியவர்களுடனான சந்திப்பு மனதிற்கு சந்தோஷம் தரும். வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். வீட்டில் புதிய மாற்றங்கள் செய்வீர்கள். ஏ.சி. ஃபிரிட்ஜ் போன்ற பொருட்கள் வாங்குவீர்கள். பிள்ளைகளின் பிடிவாதமான செயல்கள் மன வருத்தம் தரும். ஆயினும் அவர்களது பெருமை பேசுவீர்கள். அவர்கள் பெயரில் புதிய சொத்துகள் வாங்கும் எண்ணம் உருவாகும். கடன்பிரச்னைகள் முடிவிற்கு வரும். வாழ்க்கைத்துணையின் பணிகளுக்குத் துணையாக செயல்படுவீர்கள். பூர்வீக சொத்துகளில் இருந்த பிரச்னைகள் அகலும். உத்யோகஸ்தர்கள் பதவி உயர்விற்கான வாய்ப்பு பெறுவர். சுயதொழில் செய்வோருக்கு சாதகமான நேரம் இது. மாணவர்கள் பொதுஅறிவினை வளர்த்துக் கொள்வதில் ஈடுபாடு கொள்வர். கலைத்துறையினர் முன்னேற்றம் காண்பர். வாழ்க்கைத்தரம் உயருகின்ற மாதமாக அமையும்.

பெண்களுக்கான சிறப்பு பலன்கள்

செலவிற்கேற்ற வரவு வந்து சேரும் மாதம் இது. செயல்பாடுகளில் வெற்றி கிடைக்கும். மாதத் தொடக்கத்தில் விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மேற்படிப்பிற்காக எடுத்த முயற்சி அனுகூலம் தரும். செவ்வாய்- சனி சேர்க்கை இருப்பதால், வயதிற்கேற்ப விளக்கேற்றி முருகப்பெருமானை வழிபாடு செய்யுங்கள். சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொள்வது நல்லது. குழந்தைகளின் சுபகாரியப் பேச்சுக்கள் மாதக் கடைசியில் உருவாகலாம். ஆபரணங்களை வாங்கும் யோகமுண்டு. இடம், பூமி வாங்கும் போது பத்திரம் சரிபார்த்து வாங்குவதன் மூலம் பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம்.

பணத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: ஏப்ரல்: 17,18,22,23, மே: 3,4,5,9,10

மகிழ்ச்சி தரும் வண்ணம்: ரோஸ்.

சந்திராஷ்டம நாட்கள்: மே 1, 2

பரிகாரம்: சங்கடஹரசதுர்த்தி நாளன்று விரதமிருந்து விநாயகரை வணங்குவது நலம்.


simamசிம்மம்: குடும்ப உறுப்பினர்களை அரவணைத்துச் செல்வதில் கவனம் செலுத்துவீர்கள். சமயோஜிதமாக பேசி காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். உடன்பிறந்தோர் உதவி செய்வார்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் உங்கள் பணிச்சுமையை குறைக்கும். காலத்திற்கும் தொடரும் புதிய நட்பு ஏற்படும். வரவு கூடும். வாகனங்களில் பயணிக்கும் போது அதிக கவனம் அவசியம். புதிதாக மனை, நிலம் வாங்க முயற்சிப்போருக்கு நேரம் சாதகமாக அமையும். உறவினர்களோடு மனஸ்தாபம் தோன்றும். பிள்ளைகளின் செயல்கள் உங்கள் கவுரவத்தை உயர்த்தும். வாழ்க்கைத்துணையின் வார்த்தைகளுக்கு மிகுந்த மதிப்பளித்து செயல்பட்டு வருவீர்கள். பரம்பரைச் சொத்துகளால் ஆதாயம் உண்டாகும். பெற்றோர்களுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கும். மாணவர்கள் தொழில்முறைக் கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது. உத்யோகஸ்தர்கள் பதவி உயர்வு காண்பார்கள். அரசுப் பணியாளர்கள் விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். கலைத்துறையினருக்கு கூடுதல் அலைச்சல் ஏற்படும். சுயதொழில் செய்வோருக்கு லாபம் கூடி தொழில் சிறக்கும். முன்னேற்றம் தரும் மாதம் இது.

பெண்களுக்கான சிறப்பு பலன்கள்

பொருளாதார நிலை உயரும் மாதம் இது. புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். செய்யும் காரியத்தைச் செவ்வனே செய்து முடிப்பீர்கள். உடன் இருப்பவர் களின் ஆதரவு கூடும். தாய்வழி ஆதரவு உண்டு. கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. குழந்தைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். சுக்ரப்பெயர்ச்சிக்குப் பிறகு, மனையில் மங்கல ஓசை கேட்க வழி பிறக்கும். அடகு வைத்த நகைகளை மீட்டுக் கொண்டு வரும் வாய்ப்பும் உண்டு. விலை உயர்ந்த மின்சாதனப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிரிகளின் பலம் குறையவும்,

பணத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: ஏப்ரல்: 16,20,21,24,25, மே: 6,7,10,11

மகிழ்ச்சி தரும் வண்ணம்: வைலட்.

சந்திராஷ்டம நாட்கள்: மே 3, 4

பரிகாரம்: அதிகாலையில் சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது.


kanniகன்னி: செலவிற்கு ஏற்ப வரவும் இருக்கும். பிரச்னைக்குரிய நேரத்தில் அமைதி காப்பது நல்லது. புதிய முயற்சிகளில் உடனடியாக ஈடுபடாமல் இருப்பது நன்மை. பொறுமையால் முன்னேற்றம் உண்டாகும். பயம், தயக்கம் இருந்தாலும் தைரியத்தை இழக்காமல் இருப்பது அவசியம். உடன்பிறந்தோர் வகையில் புதிய பிரச்னைகள் தோன்றும். தகவல் தொடர்பு சாதனங்கள் பகல் பொழுதினில் சிரமத்தினையும், இரவு நேரத்தில் சாதகமாகவும் இருக்கும். திடீர் தொலைதூரப் பிரயாணத்திற்கான வாய்ப்பு உண்டு. குடும்பத்தினருடன் சுற்றுலா செல்வோர் சிறு பிள்ளைகளை கவனத்துடன் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். பூர்வீக சொத்துக்களில் இருந்து வந்த பிரச்னைகள் அகலும். உத்யோகஸ்தர்கள் உயரதிகாரிகளிடம் நற்பெயர் வாங்க சிரமப்பட வேண்டியிருக்கும். சுயதொழில் செய்வோருக்கு சற்றே சோதனைக் காலமாக அமையும். கனவுத் தொல்லையால் இரவு நேரத்தில் நிம்மதியான உறக்கமின்றி சிரமப்பட நேரிடும். கலைத்துறையினருக்கு எதிர்பாராத தடைகள் ஏற்படும். மாணவர்கள் கவனச்சிதறலை தவிர்த்தால் எதிர்காலம் பிரகாசிக்கும். சோதனைகளை தாண்டி வெற்றி காண வேண்டிய மாதம் இது.

பெண்களுக்கான சிறப்பு பலன்கள்

பற்றாக்குறைகள் குறைந்து பணவரவு திருப்தியளிக்கும் மாதம் இது. கற்ற கல்விக்கேற்ற வேலை கிடைக்கும். உற்றார், உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். பெற்றோர்களின் பாசமழையில் நனைவீர் கள். பிள்ளைகளின் முன்னேற்றம் பெருமை சேர்க் கும். கணவன்-மனைவிக்குள் அன்பும், பாசமும் கூடும். மறைந்த குருவால் நிறைந்த தனலாபம் கிடைக்கும். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும்.

பணத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: ஏப்ரல்: 14,15,22,23,27,28, மே: 8,9,10,12,13

மகிழ்ச்சி தரும் வண்ணம்: ஆரஞ்சு

சந்திராஷ்டம நாட்கள்: மே 5, 6

பரிகாரம்: தினசரி 108 முறை ஸ்ரீராமஜெயம் எழுதி வரவும்.


thulamதுலாம்: நண்பர்களின் துணையோடு இழுபறியில் இருந்த பணிகளை முடிப்பீர்கள். நினைத்த காரியங்களை சாதிப்பீர்கள். எதிர்பாராத செலவுகளும் அதற்கேற்ற வரவும் இருக்கும். குடும்பத்தில் குழப்பமான சூழலால் அமைதி கெடும். பேச்சில் விரக்தி வெளிப்படும். உடன்பிறந்தோருக்கு உதவி செய்யப்போய் தர்மசங்கடம் உருவாகும். முக்கியமான பணிகளுக்கு இடைத்தரகர்களை நம்பாது நேரடியாகச் செயலில் இறங்குவது நல்லது. வண்டி, வாகனங்களை புதிதாக மாற்ற நேரிடலாம். பிரயாண செலவுகள் அதிகரிக்கும். உறவினர்களின் வழியில் பிரச்னைகளை சந்திக்க நேரிடும். பிள்ளைகளின் செயல்களால் வருத்தம் உண்டாகும். வெளிநாட்டில் வேலை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு சாதகமான சூழல் ஏற்படும். இக்கட்டான சூழலில் வாழ்க்கைத்துணையின் வார்த்தைகளுக்கு மதிப்பளித்துச் செயல்படுவது நல்லது. தொழில்முறையில் கூடுதல் அலைச்சல் ஏற்படும். கூட்டுத்தொழில் சிறக்கும். பெண்கள் பிரச்னைக்குரிய நேரத்தில் வாதம் செய்யாமல் அமைதியாக இருப்பது நல்லது. மாணவர்கள் பொது அறிவை வளர்த்துக் கொண்டால் எதிர்கால கனவுகள் நனவாகும். கலைத்துறையினர் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கூட்டு முயற்சியில் வெற்றி காணும் மாதம் இது. 

பெண்களுக்கான சிறப்பு பலன்கள்

யோசித்து செயல்பட வேண்டிய மாதம் இது. யோக வாய்ப்புகள் இருந்தாலும் கூட, தேக நலன்கள் பாதிக்கப்படலாம். தெய்வ தரிசனங்களால் திருப்தி காண்பது நல்லது. குடும்பத்தில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு வைத்தியச் செலவு ஏற்படுகின்றதே என்று கவலைப்படுவீர்கள். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துச் செல்வது நன்மை தரும். குழந்தைகளின் நலன் கருதி எடுக்கும் முயற்சிகள், சுக்ரப்பெயர்ச்சிக்குப் பிறகு நடைபெறும். பழைய கடன் களைக் கொடுத்துப் புதிய நகைகளை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். மாற்று மருத்துவத்தால் உடல்நலத்தை சீராக்கிக் கொள்ளுங்கள்.

பணத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: ஏப்ரல்: 14,17,18,24,25,30 மே: 1,10,11

மகிழ்ச்சி தரும் வண்ணம்: கிரே.

சந்திராஷ்டம நாட்கள்: மே 7, 8

பரிகாரம்: சோமாஸ்கந்தரை வழிபட்டு வரவும்.


viruchigamவிருச்சிகம்: குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுபகாரியங்கள் நடைபெறும். திருமணத் தடை கண்டு வந்தோருக்கு எதிர்பார்த்த வரன் அமையும். செலவிற்கேற்ற வரவு இருக்கும். உடன்பிறந்தோர் சாதகமாக செயல்படுவார்கள். புதிய நண்பர்கள் சேர்க்கை அனுபவ பாடங்களை கற்றுத்தரும். வண்டி, வாகனங்கள் பயன் தரும். புதிய வீடு கட்டும் முயற்சியில் உள்ளோருக்கு நேரம் சாதகமாக அமையும். வீட்டிற்குத் தேவையான பர்னிச்சர்கள் வாங்குவீர்கள். ஆடம்பர செலவுகள் அதிகரிக்கும். பிள்ளைகள் உங்கள் எதிர்பார்ப்பிற்கு ஏற்றவாறு செயல்படுவார்கள். கலைத்துறையினருக்கு வெளிவட்டாரத் தொடர்பு எதிர்காலத்திற்கு பயனுள்ள வகையில் அமையும். மாணவர்கள் புதிய தொழில்நுட்பத்தினைக் கற்றுக்கொள்வதில் ஈடுபாடு கொள்வர். உத்யோகஸ்தர்கள் உடன் பணிபுரிவோரை அனுசரித்துச் செல்வது அவசியம். சுயதொழில் செய்வோருக்கு தனலாபம் கூடும். சற்றே போராடினாலும் நற்பலன்களை அனுபவிக்கும் மாதமாக அமையும்.

பெண்களுக்கான சிறப்பு பலன்கள்

மகிழ்ச்சி அதிகரிக்கும் மாதம் இது. நீண்டநாள் ஆசை நிறைவேறும். நிகழ்காலத் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். தாய்வழி ஆதரவு தக்க விதத்தில் கிடைக்கும். உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். ஊர்மாற்றம், இடமாற்றம், உத்தியோக மாற்றங்கள் விரும்பும் விதத்தில் அமையும். கணவன்- மனைவிக்குள் கனிவு கூடும். பாசம் பொங்கும். மனதில் நினைத்தபடியே மங்கல நிகழ்ச்சிகள் இல்லத்தில் நடைபெறும். குடும்ப வருமானத்தை உயர்த்த புதிய யுக்திகளைக் கையாள்வீர்கள்.

பணத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: ஏப்ரல்: 14,15,16,20,21,27,28,29 மே: 2,3,4,8,9,12,13

மகிழ்ச்சி தரும் வண்ணம்: ரோஸ்

சந்திராஷ்டம நாட்கள்: மே 9, 10, 11

பரிகாரம்: பைரவர் வழிபாடு தடைகளை போக்கும்.


dhanusuதனுசு: குடும்பத்தில் அமைதி நிலவும். நான்கு பேர் மத்தியில் அதிகம் பேசாது அடுத்தவர்களை பேசவிட்டு மனதிற்குள் உள்வாங்கி பதிலளித்து நற்பெயர் காண்பீர்கள். உடன்பிறந்தோரின் விருப்பங்களுக்கு அனுசரித்து செல்வீர்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் பயன் தரும். தொலைதூரப் பிரயாணத்திற்கான வாய்ப்பு உண்டு. வண்டி, வாகனங்களால் ஆதாயம் உண்டாகும். உறவினர்களுடனான சந்திப்பால் கலகலப்பு கூடும். புதிய மரச்சாமான்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். ருசியான உணவுகளில் நாட்டம் அதிகரிக்கும். பிள்ளைகளின் செயல்கள் உங்கள் விருப்பத்திற்கு எதிராக அமைந்தாலும், அவர்களால் உங்கள் கவுரவம் உயரும். அனுபவ பாடங்களின் மூலம் மனப்பக்குவம் கூடும். சூரியன், புதன், சுக்ரன் இணைவு உங்களுக்கு நிறைவான நற்பலன்களைத் தரும். எண்ணிய காரியங்களை நிறைவேற்றிக் கொள்ள கால நேரம் சாதகமாக அமையும். பயணங்கள் மன நிறைவு தரும். தொழிலில் உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். மாணவர்கள் எதிர்காலம் பற்றிய ஆக்கப்பூர்வமான முயற்சியில் தங்கள் சிந்தனையை செலுத்துவர். கலைத்துறையினரின் எண்ணங்கள் ஈடேறும். நற்பலன்களை அனுபவிக்கும் மாதம் இது.

பெண்களுக்கான சிறப்பு பலன்கள்

இந்த மாதத்தின் முற்பாதியில் வரவும், பிற்பாதியில் விரயங்களும் ஏற்படலாம். அருகில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வதன் மூலமே அமைதி கிடைக் கும். ஆதாயமும் வந்து சேரும். விரயச் சனியின் ஆதிக்கம் மேலோங்கி இருப்பதால், ஒரு சிலருக்கு இடமாற்றம், வீடு மாற்றங்கள் வந்து சேரலாம். குரு பார்ப்பதால் கடைசி நேரத்தில் காரியங்கள் கைகூடும். பார்க்கும் குருவைப் பலப்படுத்த வியாழக்கிழமை விரதமும், குரு வழிபாடும் நல்லது. பிள்ளைகளின் கல்யாண வாய்ப்புகள் கைகூடும். பக்கத்து வீட்டாரின் பகை மாறும். உங்கள் பெயரிலேயே தொழில் தொடங்கும் முயற்சியில், குடும்ப உறுப்பினர்கள் ஆதரவுக்கரம் நீட்டுவர்.

பணத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: ஏப்ரல்: 17,18,19,22,23,30, மே: 1,2,4,5,10

மகிழ்ச்சி தரும் வண்ணம்: வெளிர்நீலம்.

சந்திராஷ்டம நாட்கள்: ஏப்ரல் 14, 15, 16, மே 12, 13

பரிகாரம்: சமயபுரம் மாரியம்மனை வணங்கி வாருங்கள்.


magaramமகரம்: குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். பொருளாதார முன்னேற்றம் சீராக இருக்கும். தகவல் தொடர்பு சாதனங்கள் தொழில்முறையில் மிகுந்த பயன் அளிக்கும். உடன்பிறந்தோருக்கு உதவி செய்வீர்கள். விருந்து, விசேஷங்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். உறவினர்களுடனான சந்திப்பு மகிழ்ச்சி தரும். உங்கள் சிந்தனைகளும், கருத்துக்களும் பிறர் மத்தியில் நன்மதிப்பு பெற்று தரும். வண்டி, வாகனங்கள் நன்மை தரும். புதிய வீடு கட்டும் முயற்சியில் உள்ளோர் சற்று நிதானித்துச் செயல்படுவது நல்லது. பிள்ளைகளின் செயல்கள் உங்கள் கவுரவத்தை உயர்த்தும். அவர்களது வாழ்க்கை தரம் உயரும். மருத்துவ செலவுகளை தவிர்க்க உடல்நிலையில் கவனம் அவசியம். முன்பின் தெரியாத நபர்களுக்கு உதவி செய்வதை தவிர்ப்பது அவசியம். வீண்வம்பில் மாட்டிக் கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டு. கொடுக்கல், வாங்கலில் எச்சரிக்கை நல்லது. வாழ்க்கைத்துணையோடு கருத்து வேறுபாடு தோன்றி மறையும். தொழில்முறையில் நிதானத்துடன் செயல்படவும். மாணவர்கள் தங்கள் சிறப்பான எதிர்காலம் கருதி மொழி இலக்கணத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். கலைத்துறையினர் புதிய முயற்சியில் வெற்றி காண்பர். சுகத்தினைத் தரும் மாதம் இது.

பெண்களுக்கான சிறப்பு பலன்கள்

அஷ்டமத்தில் ராகுவும், 2-ல் கேதுவும் இருப்பதால் வரவும், செலவும் சமமாகும் என்றே சொல்லலாம். காரியங்கள் கடைசி நேரத்தில் கைகூடிவிடும். இருப்பினும் மனநிம்மதிக் குறைவும் ஏற்படும். பற்றாக் குறை ஏற்படுவதை முன்னிட்டு கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக பணியாளர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும். அலைச்சலைத் தவிர்ப்பதன் மூலம் ஆரோக்கியத்தை சீராக்கிக் கொள்ளலாம். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது.

பணத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: ஏப்ரல்: 19,20,24,25,26 மே: 2,3,4,6,7

மகிழ்ச்சி தரும் வண்ணம்: பிரவுன்.

சந்திராஷ்டம நாட்கள்: ஏப்ரல் 17, 18

பரிகாரம்: ஏகாதசி விரதம் இருந்து பெருமாளை வழிபட்டு வருவது நல்லது.


kumbamகும்பம்: குடும்பத்தில் சலசலப்பும், கலகலப்பும் மாறி மாறி இடம் பிடிக்கும். எதிர்பார்க்கும் பணவரவு வந்து சேரும். அதிரடியான பேச்சுகள் உங்களை தனித்துக் காட்டும். உடன்பிறந்தோரால் சங்கடங்களை சந்திக்க நேரிடும். செல்போன் போன்ற தகவல் தொடர்பு சாதனங்கள் தக்க சமயத்தில் செயலிழந்து சிரமம் தரக்கூடும். உடன்பிறந்தோரின் குடும்ப விவகாரங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும். அவ்வப்போது பிரயாணம் செய்ய வேண்டியிருக்கும். வண்டி, வாகனங்களை இயக்கும்போது கூடுதல் எச்சரிக்கை அவசியம். வீட்டில் ஆல்ட்ரேஷன் பணிகளை மேற்கொள்ள கால நேரம் சாதகமாக அமையும். பிள்ளைகளின் செயல்கள் உங்களை உற்சாகப்படுத்தும். வாழ்க்கைத்துணை உங்கள் பணிகளுக்கு பக்கபலமாக இருப்பார். அநாவசிய செலவுகளைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். உத்யோகஸ்தர்கள் பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றத்தை எதிர்பார்க்கலாம். சுயதொழில் செய்வோர் கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். மாணவர்கள் விடுமுறை கொண்டாட்டத்தை முழுமையாக அனுபவிப்பர். கலைத்துறையினர் முயற்சியில் வெற்றி காண்பர். ஓய்வின்றி சுறுசுறுப்புடன் செயல்பட வேண்டிய மாதம் இது.

பெண்களுக்கான சிறப்பு பலன்கள்

அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாகும் மாதம் இது. வருமானப் பற்றாக்குறையைச் சமாளிப்பீர்கள். மற்றவர்களின் குடும்ப நிர்வாகத்தில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. பொறுமையும், நிதானமும் உங்களது புதிய முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கும். சுக்ர பலத்தால் தாய்வழி ஆதரவு உண்டு. சர்ப்பக் கிரகத்தின் ஆதிக்கம் இருப்பதால், கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. குழந்தைகளின் வழியில் சுபவிரயம் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணிகளில் இருந்த தடை அகலும். செவ்வாய் பலத்தால் சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு.

பணத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: ஏப்ரல்: 14,22,23,27,28 மே: 3,4,5,8,9

மகிழ்ச்சி தரும் வண்ணம்: கரும்பச்சை.

சந்திராஷ்டம நாட்கள்: ஏப்ரல் 19, 20

பரிகாரம்: கிருத்திகை விரதமும் ஷண்முக வழிபாடும் முன்னேற்றம் தரும்.


meenamமீனம்: குடும்பத்தில் கலகலப்பும் சலசலப்பும் மாறி மாறி இருந்து வரும். குடும்பப் பொறுப்புகளினால் சுமை அதிகரிக்கும். பேச்சு உங்கள் மனநிலையை வெளிப்படுத்தும். அவ்வப்போது நீங்களும் டென்ஷனாகி உடனிருப்பவர்களையும் டென்ஷனாக்கி விடுவீர்கள். இடம், பொருள், ஏவல் அறிந்து பேசுவது அவசியம். சேமிப்புகள் கரையும். போராட்டமான சூழல் இருந்தாலும் தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். சோதனைகளால் மனப்பக்குவம் அதிகரிக்கும். இடைத்தரகர்களால் பிரச்னைகளை சந்திக்க நேரிடும் என்பதால் முக்கியமான பணிகளில் நேரடியாக செயல்படுவது நல்லது. ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். பிள்ளைகளின் செயல்கள் உங்கள் எதிர்பார்ப்பிற்கு மாறாக அமையும். ரத்த அழுத்த நோய் உள்ளவர்களுக்கு உடல்நிலையில் கவனம் அவசியம். வாழ்க்கைத்துணையோடு கருத்து வேறுபாடு தோன்றி மறையும். பூர்வீக சொத்துகளில் புதிய பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடும். தொழில்முறையில் இடையூறுகளை சந்திக்க நேரிடும். உத்யோகஸ்தர்கள் அடுத்தவர்களின் பணியையும் சேர்த்து செய்ய வேண்டிய சூழலுக்கு ஆளாவார்கள். மாணவர்கள் சிறப்பு பயிற்சி வகுப்புகள் மூலம் தங்கள் திறமையை வளர்த்துக் கொள்வது எதிர்காலத்திற்கு நல்லது. கலைத்துறையினர் முன்னேற்றம் காண்பர். சுயமுயற்சியால் வெற்றி காண வேண்டிய மாதம் இது.

பெண்களுக்கான சிறப்பு பலன்கள்

வசதி வாய்ப்புகள் பெருகும் இனிய மாதம் இது. கல்யாணக் கனவுகள் நனவாகும். குடும்ப உறவுகளில் இருந்த குழப்பங்கள் அகலும். ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். தாய் வழி உறவில் ஆதரவு உண்டு. அண்டை வீட்டாருடன் இருந்த மனக்கசப்பு மாறும். கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. சொத்துக்கள் உங்கள் பெயரிலேயே வாங்கும் யோகம் உருவாகலாம். கணவன்- மனைவிக்குள் கனிவு கூடும். குழந்தைகளால் பெருமை சேரும். செவ்வாய் தோறும் விரதம் இருந்து துர்க்கையை வழிபட்டால் துயரங்களில் இருந்து விடுபட இயலும்.

பணத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: ஏப்ரல்: 14,24,25,30 மே: 1,2,6,7,10,11 மகிழ்ச்சி தரும்

வண்ணம்:- பொன்னிற மஞ்சள்.

சந்திராஷ்டம நாட்கள்: ஏப்ரல் 22, 23

பரிகாரம்: துர்கையை வழிபட்டு வாருங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here