Home Astrology Monthly Rasi Palan தமிழ் மாத ராசிபலன் – 14/5/2016 முதல் 14/6/2016 வரை

தமிழ் மாத ராசிபலன் – 14/5/2016 முதல் 14/6/2016 வரை

1463

வைகாசி மாத ராசி பலன்கள்:

mesahamமேசம்: குடும்ப விவகாரங்களில் அமைதி காத்தால் அநாவசிய சச்சரவுகளை தவிர்க்கலாம். வரவு சிறக்கும். சேமிப்புகள் உயர்வடையும். நெடுநாளாக நிலுவையில் இருந்த பாக்கித்தொகை ஒன்று வசூலாகும். உடன்பிறந்தோர் உதவிகரமாகச் செயல்படுவார்கள். மாற்று மதத்தினரால் நன்மை உண்டாகும். தகவல் தொடர்பு சாதனங்கள் உங்கள் பணிகளுக்கு மிகுந்த பயன் தரும். திடீர் தொலைதூர பிரயாணம் இருக்கும். மாணவர்கள் கல்லூரியில் விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைக்க சிறிது போராட்டம் இருக்கும். பிள்ளைகளின் செயல்கள் பெருமிதம் கொள்ளத்தக்க வகையில் அமையும். வயிறு சார்ந்த உபாதைகளால் உடல்நிலையில் சிரமம் தோன்றும். வாழ்க்கைத்துணையோடு கருத்து வேறுபாடு தோன்றி மறையும். நெருங்கிய நண்பர் ஒருவர் உங்களுக்கு எதிராகத் திரும்பக்கூடும். கொடுக்கல், வாங்கலைத் தவிர்க்க வேண்டியது அவசியம். கூட்டுத்தொழில் லாபகரமாகச் செல்லும். கலைத்துறையினருக்கு லாபம் கிட்டும். தனலாபம் தரும் மாதம் இது.

பெண்களுக்கான சிறப்பு பலன்கள்

உங்களின் வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும் மாதம் இது. குடும்ப ஒற்றுமை பலப்படும். சென்ற மாதம் நடை பெறாத சில காரியங்கள் இப்பொழுது நடைபெறும். குரு பார்வையால் மனக்குழப்பம் அகலும். பணப்புழக்கம் அதிகரிக்கும். இல்லத்தினரின் ஒத்துழைப்போடு நல்ல காரியங்களை செய்து முடிப்பீர்கள். கணவன்–மனைவி இடையே கனிவு கூடும். குழந்தைகளின் பாச மழையில் நனைவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளால் நன்மை உண்டு. ஆடை, ஆபரண சேர்க்கை அதிகரிக்கும்.

சந்திராஷ்டம நாட்கள்: மே 21, 22, 23

பரிகாரம்: ஐஸ்வர்யேஸ்வரரை வணங்கவும். பிரதோஷ நாளில் சிவாலயத்தில் அன்னதானம் செய்யலாம்.

பணத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: மே: 14,24,25,29,30 ஜூன்: 4,5,9,10

மகிழ்ச்சி தரும் வண்ணம்: மஞ்சள்.


rishabamரிஷபம்: குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஆனந்தமான சூழல் திரும்பும். குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்றுவதில் தனி கவனம் செலுத்துவீர்கள். பேச்சில் நகைச்சுவை வெளிப்படும். கேளிக்கை, கொண்டாட்டங்கள், விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். பொருளாதார ரீதியாக சிறப்பான முன்னேற்றம் ஏற்படும். சேமிப்புகள் உயரும். திடீர் தொலைதூரப் பிரயாணத்திற்கான வாய்ப்பு உண்டு. உறவினர்களுக்கிடையே சமரசம் செய்து வைக்க வேண்டிய சூழல் உருவாகலாம். மாணவர்கள் விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைக்கும். பிள்ளைகளின் வாழ்வில் சுபநிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை செய்ய நேரிடும். வாழ்க்கைத்துணையின் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். நெருங்கிய நண்பர் ஒருவருக்கு உதவப் போய் தர்மசங்கடமான சூழலுக்கு ஆளாகலாம். தொழில்முறையில் உங்களின் செயல்திட்டங்கள் வெற்றி காணும். வியாபாரிகளுக்கு தனலாபம் கிடைக்கும். நற்பலன்களை அனுபவிக்கும் மாதமாக அமையும்.

பெண்களுக்கான சிறப்பு பலன்கள்

புதிய பாதை புலப்படும் மாதம் இது. ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன்–மனைவிக்குள் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. குழந்தைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வதன் மூலம் பிரச்சினைகளில் இருந்து விடுபட இயலும். குடும்பப் பெரியவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கேட்ட இடத்தில் இடமாறுதல் கிடைக்கும். விலகிச் சென்ற உறவினர்கள் விரும்பி வந்து சேருவர். எலும்பு, நரம்பு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் அகல, மாற்று மருத்துவத்தை மேற்கொள்ளுங்கள்.

சந்திராஷ்டம நாட்கள்: மே 24, 25

பரிகாரம்: பவுர்ணமியன்று வீட்டில் சத்யநாராயண பூஜை செய்து அன்னதானம் செய்யவும்.

பணத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: மே: 14,15,27,28,31 ஜூன்: 6,7,11,12

மகிழ்ச்சி தரும் வண்ணம்: ரோஸ்.


mithunamமிதுனம்: குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். வரவை விட செலவு அதிகரித்து சேமிப்புகள் கரைவதற்கான வாய்ப்புகள் உண்டு. விவேகமான பேச்சால் மதிப்பு உயரும். உடன்பிறந்தோர் சாதகமாக செயல்படுவார்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தும். உறவினர்கள் உங்கள் உதவியை எதிர்பார்த்து வரக்கூடும். மாணவர்கள் கல்லூரியில் விரும்பியப் பாடப் பிரிவில் இடம் கிடைக்கும். பிள்ளைகளின் செயல்களால் மகிழ்ச்சி கூடும். சிரமமான சூழலிலும் கூட எதிர்காலம் பற்றிய கற்பனை, எண்ணம் மனதை ஆக்கிரமிக்கும். தைரியமும், தன்னம்பிக்கையும் உங்களின் வெற்றிக்கு உறுதுணையாய் இருக்கும். வாழ்க்கைத்துணையுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். கலைத்துறையினர் தொழில்முறையில் கடுமையான அலைச்சலைக் காண நேரிடும். உத்யோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றத்திற்கான வாய்ப்பு உண்டு. தடைகளையும், இடைஞ்சல்களையும் மன உறுதியோடு எதிர்கொள்ளும் மாதம் இது.

பெண்களுக்கான சிறப்பு பலன்கள்

இம்மாதம் எடுத்த காரியங்களை எளிதில் முடித்து வெற்றி காண்பீர்கள். இல்லத்தில் சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். பழைய பணியாளர்களை மாற்றி, புதியவர்களை சேர்த்துக் கொள்வீர்கள். வாகனம் வாங்கும் முயற்சியில் வெற்றி கிட்டும். கணவன்–மனைவிக்குள் பாசமும், நேசமும் அதிகரிக்கும். குழந்தைகளால் உதிரி வருமானம் உண்டு. பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு புகழ்கூடும். பொறுப்புகள் வந்து சேரும்.

சந்திராஷ்டம நாட்கள்: மே 26, 27

பரிகாரம்: புதன்கிழமை தோறும் பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபட்டு வரவும்.

பணத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: மே: 17,18,29,30 ஜூன்: 2,3,8,9,10

மகிழ்ச்சி தரும் வண்ணம்: வெளிர்நீலம்


kadakamகடகம்: குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை நிலவும். அசாத்தியமான தைரியத்துடன் செயல்பட்டு நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பிரச்னை ஒன்றிற்கு தீர்வு காண்பீர்கள். உடன் பிறந்தோர் உதவிகரமாக செயல்படுவார்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் லாபம் தரும் வகையில் அமையும். உறவினர்களின் வருகை குடும்பத்தில் உற்சாகம் தரும். அரசாங்க உதவியினை எதிர்பார்த்துக் காத்திருப்போருக்கு முதலிரண்டு வாரங்களில் பயன் கிடைக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகள் பெருமிதம் கொள்ளத்தக்க வகையில் அமையும். காது, மூக்கு, தொண்டைப் பகுதியில் புதிய பிரச்னைகள் தோன்றக்கூடும். வாழ்க்கைத்துணை உங்கள் எண்ணத்திற்கேற்ப செயல்பட்டு வருவார். தொழிலில் தனித்துவத்தை நிலைநாட்டுவீர்கள். மாணவர்கள் எதிர்பார்த்த பிரிவில் உயர்கல்வியில் இடம்கிடைக்கும். கலைத்துறையினர் உழைப்பிற்கேற்ற ஊதியம் பெறுவர். நற்பலன்களை காணும் மாதம் இது.

பெண்களுக்கான சிறப்பு பலன்கள்

ஏற்றமும், இறக்கமும் இணைந்து வரும் மாதம் இது. மாதத் தொடக்கத்தில் வருமானம் திருப்தி தரும். கொடுக்கல்– வாங்கல்கள் ஒழுங்காகும். கணவன்– மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். சொத்துக்கள் வாங்குவதில் உங்கள் பெயர் பரிசீலிக்கப் படும். சொந்த பந்தங்களின் ஒத்துழைப்போடு நல்ல காரியமொன்று இல்லத்தில் நடைபெறும். குழந்தைகளின் படிப்பிற்காக எடுத்த முயற்சி வெற்றி பெறும். தாய்வழி ஆதரவு உண்டு. சகோதரர்களின் ஆதரவு குறைந்தாலும் மீண்டும் சரியாகிவிடும்.

சந்திராஷ்டம நாட்கள்: மே 28, 29

பரிகாரம்: வியாழன் தோறும் சாயிபாபா ஆலயத்தில் அன்னதானம் செய்து வாருங்கள்.

பணத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: மே: 14,15,20,21,31, ஜூன்: 1,4,5,11,12

மகிழ்ச்சி தரும் வண்ணம்: பச்சை


simamசிம்மம்: பொறுப்புகள் அதிகரிக்கும். தொடர்ந்து ஒரு செயலைச் செய்து முடித்தவுடன் புதிதாக மற்றொரு பொறுப்பு வந்து சேரும். செயல்வேகம் கூடும். உங்களைச் சுற்றியுள்ளவர்கள் உங்களின் செயல்வேகத்தோடு ஈடுகொடுக்க இயலாது தடுமாறுவார்கள். உழைப்புக்கான பலனை உடனடியாக அறுவடை செய்ய உள்ளீர்கள். பேச்சில் நிதானத்தோடு விவேகம் வெளிப்படும். குடும்பத்தில் அமைதி நிலவும். வரவு சிறப்பாக இருக்கும். சேமிப்புகள் உயர்வடைய துவங்கும். தகவல் தொடர்பு சாதனங்கள் அலைச்சலை தவிர்க்கும். உடன்பிறந்தோர் உதவிகரமாய் செயல்படுவார்கள். பிள்ளைகளின் செயல்பாடுகள் அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும். தொழிலில் பிள்ளைகளின் ஆலோசனைகள் உங்களுக்கு பயன்தரும். உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் அடுத்தவர்களின் பணிகளையும் சேர்த்து செய்ய வேண்டியிருக்கும். வியாபாரிகள் சிறப்பான தனலாபம் காண்பார்கள். கலைத்துறையினர் நிறைய வாய்ப்புகள் பெறுவார்கள். பொறுமையை கடைபிடித்து உண்மையான உழைப்பின் பலனை அடையும் மாதமாக இருக்கும்.

 

பெண்களுக்கான சிறப்பு பலன்கள்

புதிய பாதை புலப்படும் இனிய மாதம் இது. புகழ் கூடும். பொருளாதார நிலை உயரும். தகராறு செய்தவர்கள் தானாக விலகுவர். தன்னம்பிக்கை அதிகரிக்கும். கணவன் – மனைவிக்குள் ஆதரவும், ஆதாயமும் உண்டு. பிள்ளைகள் பெருமைக்குரிய தகவல்களைக் கொண்டுவந்து சேர்ப்பார்கள். மதிப்பும், மரியாதையும் பெருகும். மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். உடன்பிறப்புகளிடம் பகையை வளர்த்துக் கொள்ள வேண்டாம்.

சந்திராஷ்டம நாட்கள்: மே 30, 31, ஜூன் 1

பரிகாரம்: வெள்ளிதோறும் மாரியம்மனை வழிபட்டு வாருங்கள்.

பணத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: மே: 16,17,21,22,23 ஜூன்: 2,3,7,8

மகிழ்ச்சி தரும் வண்ணம்: வைலட்.


kanniகன்னி: குடும்பத்தினர் ஒத்துழைப்பும் அவர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிலவும். பேச்சில் நகைச்சுவை வெளிப்படும். உடன்பிறந்தோருடன் கருத்து வேறுபாடு தோன்றுவதற்கான வாய்ப்பு உண்டு. தகவல் தொடர்பு சாதனங்கள் தொழில் சார்ந்த விவகாரங்களில் துணை நிற்கும். முன்பின் தெரியாத நபர்களை நம்பி ஏமாறும் வாய்ப்பு உண்டு என்பதால் எச்சரிக்கையுடன் பழகுவது அவசியம். மாணவர்கள் தாங்கள் விரும்பிய பாடப்பிரிவில் கடும் முயற்சியின் பேரில் இடம் கிடைக்கும். அவர்களால் நன்மை உண்டாகும். திட்டமிடாத திடீர் தொலைதூர ஆன்மிகப் பிரயாணத்திற்கான வாய்ப்பு உண்டு. பூர்வீக சொத்துகள் ஆதாயம் தரும். உத்யோகஸ்தர்கள் தங்கள் பொறுப்புகளை செவ்வனே நிறைவேற்றி உயரதிகாரிகளிடம் நற்பெயர் வாங்குவர். சுயதொழில் செய்வோர் ஓய்வின்றி உழைக்க நேர்ந்தாலும் எதிர்பார்த்த தனலாபம் கிடைக்கும். கலைத்துறையினர் பெயரும், புகழும் பெறுவர். நற்பலன்களை அனுபவிக்கும் மாதம் இது.

பெண்களுக்கான சிறப்பு பலன்கள்

எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும் மாதமாகும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். கணவன்–மனைவிக்குள் கனிவும், பாசமும் கூடும். குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் வாய்ப்பு கைகூடும். வீடு மாற்றங்கள் விரும்பும் விதத்தில் அமையும். குருவின் வக்ர நிவர்த்திக்குப் பிறகு உத்தியோக மாற்றங்களும் உறுதியாகலாம். பெற்றோர்கள் வழியில் இருந்த பிரச்சினைகள் அகலும்.

சந்திராஷ்டம நாட்கள்: ஜூன் 2, 3

பரிகாரம்: குருபகவானுக்கு வியாழன் தோறும் விளக்கேற்றி வழிபட்டு வாருங்கள்.

பணத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: மே: 19,20,24,25 ஜூன்: 4,5,6,9,10

மகிழ்ச்சி தரும் வண்ணம்: பச்சை


thulam

துலாம்: குடும்பத்தில் சலசலப்பான சூழல் நிலவும். செலவுகளை சமாளிக்கின்ற வகையில் வரவுகள் தொடரும். உடன்பிறந்தோருடன் கருத்து வேறுபாடு தோன்றும். தகவல் தொடர்பு சாதனங்கள சமயத்திற்கு பயன்தராது போகும். முன்பின் தெரியாத நபர்களுக்கு உதவி செய்யப்போய் அநாவசிய செலவுகளுக்கு ஆளாவீர்கள். எதிர்பாராத திடீர் பிரயாணம் செய்ய நேரிடும். வாகனங்களால் செலவுகள் அதிகரிக்கும். மாணவர்கள் உயர்கல்வியில் விரும்பிய பாடப்பிரிவில் சற்று சிரமப்பட்டு இடம் கிடைக்கும். உறவினர்களின் வருகை குடும்பத்தில் கலகத்தை தோற்றுவிக்கும். பிள்ளைகளின் செயல்கள் எதிர்பார்ப்பிற்கு மாறாக அமையும். மன உளைச்சல், வேலை பளுவால் உடல்நிலை களைப்படையும். வாழ்க்கைத்துணை உங்கள் பணிகளுக்கு பக்கபலமாகத் துணை நிற்பார். தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். இரவில் நிம்மதியான உறக்கம் கெடும். கலைத்துறையினர் எதிர்பாராத தடைகளை காண்பர். சுயமுயற்சியால் வெற்றி காண வேண்டிய மாதம் இது.

பெண்களுக்கான சிறப்பு பலன்கள்

வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும் மாதமிது. வருமானம் திருப்திகரமாக இருக்கும். வரன்கள் வாசல் கதவைத் தட்டும். இடம், பூமி போன்றவற்றை, உங்கள் பெயரில் வாங்க இல்லத்தில் உள்ளவர்கள் ஒத்துழைப்பார்கள். கடன் சுமை குறையும். கணவன்–மனைவிக்கு இடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். ஆக்கப்பூர்வமான உங்கள் சிந்தனைகளை குடும்பத்தினர் ஏற்று செயல்படுத்துவார்கள். குழந்தைகளின் லட்சியங்கள் நிறைவேறும். வெளிநாடு சென்று படிக்க வேண்டுமென்று விரும்பியவர்களுக்கு, நீங்கள் செய்த ஏற்பாடு பலன் தரும். தாய்வழி ஆதரவும் கிடைக்கும். உடன்பிறப்புகளினால் தொல்லை உண்டு.

சந்திராஷ்டம நாட்கள்: ஜூன் 4, 5

பரிகாரம்: வியாழன் தோறும் கருடாழ்வார் சந்நதியில் விளக்கேற்றி வழிபட்டு வரவும்.

பணத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: மே: 14,15,21,22,27,28 ஜூன்: 7,8

மகிழ்ச்சி தரும் வண்ணம்: வெளிர்நீலம்.


viruchigamவிருச்சிகம்: முக்கியமான பணிகளில் அடுத்தவர்களின் உதவி தேவைப்படும். நீங்கள் முன்பு செய்த உதவிக்கு பதிலாக சிலர் உங்கள் பணிகள் எளிதில் முடிய உதவி செய்வார்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் நேரத்தினை மிச்சப்படுத்தி பயன் தரும். உடன்பிறந்தோர் உங்கள் உதவி நாடி வரக்கூடும். புதிய நண்பர்கள் சேர்க்கையால் நட்பு வட்டம் விரிவடையும். வாகன பராமரிப்பு செலவு அதிகரிக்கும். அடிக்கடி பயணம் செய்ய நேரும். மாணவர்கள் விரும்பிய பாடப்பிரிவில் கடுமையாக போராட வேண்டியிருக்கும். அவர்களின் வாழ்வில் சுபநிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை செய்ய நேரிடும். இதுநாள் வரை திருமணத் தடை கண்டவர்களுக்கு வரன் தேடி வரும். குழந்தைப் பேறு இன்றி அவதிப்பட்டவர்கள் சந்தான ப்ராப்திக்கான அறிகுறிகளை காண்பார்கள். நண்பர்களால் நன்மை உண்டாகும் அதே நேரத்தில் செலவுகளும் அதிகரிக்கும். உத்யோகஸ்தர்கள் கடமையை சரிவர செய்தால் நற்பெயர் கிடைக்கும். கூட்டுத்தொழில் செய்வோர் சிறப்பான தனலாபம் காண்பர். கலைத்துறையினர் நண்பர்களின் துணையுடன் தங்கள் முயற்சியில் வெற்றி காண்பர். நற்பலன்கள் காணும் மாதம் இது.

பெண்களுக்கான சிறப்பு பலன்கள்

இம்மாதம் வளர்ச்சி கூடும். வாய்ப்புகளை உபயோகப்படுத்திக் கொள்ள முன்வருவீர்கள். கணவன்– மனைவி உறவில் நெருக்கமும், பாசப்பிணைப்பும் ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள். தாய்வழி ஆதரவு உண்டு. குழந்தைகளின் கல்விக்காக எடுத்த முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வரும் வாய்ப்புகளை உபயோகப்படுத்திக் கொள்வது நல்லது.

சந்திராஷ்டம நாட்கள்: ஜூன் 6, 7

பரிகாரம்: நாகாத்தம்மன் வழிபாடு நன்மையைத் தரும்.

பணத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: மே: 16,17,18,24,25,26,30 ஜூன்: 4,5,8,9,10

மகிழ்ச்சி தரும் வண்ணம்: சிவப்பு.


dhanusuதனுசு: குடும்பத்தில் சலசலப்பு நிலவும். பொருளாதார முன்னேற்றத்தில் தடை இருக்கும். கடன் சுமையால் சிரமம் காண நேரிடும். உடன்பிறந்தோர் உதவிகரமாக செயல்படுவார்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் உங்கள் பணிகளை, நேரத்தை மிச்சப்படுத்தும். புதிய நண்பர்களின் அறிமுகத்தால் நட்பு வட்டம் விரிவடையும். மாணவர்கள் உயர்கல்வியில் விரும்பிய பாடத்தில் இடம்பிடிப்பதில் இழுபறி உண்டாகலாம். வாகனங்கள் பயனுள்ள வகையில் இருக்கும். பிள்ளைகளின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக புதிய திட்டம் ஒன்றினை வகுத்து செயல்படுவீர்கள். ரத்தக் கொதிப்பு நோய் உள்ளவர்கள் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். வாழ்க்கைத்துணை உங்கள் பணிகளுக்கு பக்கபலமாய் துணை நிற்பார். தொழிலில் அலைச்சல் கூடும். உத்யோகஸ்தர்களுக்கு பணி இடமாற்றத்திற்கான வாய்ப்பு உண்டு. கலைத்துறையினர் போராட்டமான சூழலை எதிர்கொள்வர். தைரியத்துடன் செயல்பட்டு காரியமாற்ற வேண்டிய மாதம் இது.

பெண்களுக்கான சிறப்பு பலன்கள்

வளர்ச்சியும், தளர்ச்சியும் மாறி மாறி வரும் மாதமாகும். மாதத்தின் முதல் வாரம் ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். இரண்டாம் வாரத்தில் எடுத்த காரியம் எளிதில் முடிவடையும். எதிர்பார்த்தபடியே வருமானம் வந்து சேரும். மாதத்தின் பிற்பகுதியில் இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான வழிபிறக்கும். பிரிந்து சென்ற உறவினர்கள் வந்திணைவார்கள். கணவன்– மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்படாமல் இருக்க, விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. குழந்தைகளால் உதிரி வருமானம் உண்டு.

சந்திராஷ்டம நாட்கள்: ஜூன் 8, 9

பரிகாரம்: ஸ்ரீகிருஷ்ணரை வணங்கி வருவதோடு பகவத் கீதைபடித்து வாருங்கள்.

பணத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: மே: 14,15,20,21,27,28 ஜூன்: 1,11,12

மகிழ்ச்சி தரும் வண்ணம்: ரோஸ்


magaramமகரம்: குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். வரவு சீராக இருக்கும். பேச்சால் காரிய சாதனை உண்டு. உடன்பிறந்தோர் உதவிகரமாய் செயல்படுவார்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் உங்கள் பணிகளுக்குத் துணைநிற்கும். வாகன பராமரிப்பு செலவு அதிகரிக்கும். திடீர் தொலைதூர பிரயாணம் உண்டு. மாணவர்கள் விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைக்கும். தாயார் வழி உறவினர் ஒருவர் உதவி கேட்டு உங்களை நாடி வருவார். பிள்ளைகளால் உங்கள் கவுரவம் உயரும். அவர்களது வாழ்வில் சுபநிகழ்வுகளுக்கான வாய்ப்புகள் கூடி வரும். கேளிக்கை, கொண்டாட்டங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள், விளையாட்டு நிகழ்ச்சிகளில் ஆர்வம் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலை முற்றிலும் தவிர்க்கவும். அந்நியப் பெண்களுக்கு உதவப்போய் தர்மசங்கடமான சூழலுக்கு ஆளாக நேரிடலாம். வாழ்க்கைத்துணையின் நெடுநாளைய விருப்பத்தினை நிறைவேற்றுவீர்கள். தொழிலில் போட்டிகளை லாவகமாக சமாளிப்பீர்கள். கலைத்துறையினர் கற்பனையில் உள்ளதை செயல்படுத்த முயற்சிக்கலாம். நற்பலன்களைக் காணும் மாதம் இது.

பெண்களுக்கான சிறப்பு பலன்கள்

அமைதியை கடைப்பிடித்து ஆனந்தம் காண வேண்டிய மாதம் இது. வரவைக் காட்டிலும் செலவு கூடும். வாய்ப்புகள் கைநழுவிச் செல்லலாம். அஷ்டமத்து குருவின் ஆதிக்கம் இருக்கும் வரை, எதிலும் கூடுதல் கவனம் தேவை. கணவன்–மனைவிக்குள் பிணக்குகள் ஏற்படாமல் இருக்க, விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. குழந்தைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்ளுங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திடீர் மாற்றங்கள் உருவாகும். குடும்ப பிரச்சினைகளை வெளியில் சொல்வதைத் தவிர்ப்பது நல்லது.

சந்திராஷ்டம நாட்கள்: மே 14, 15, ஜூன் 10, 11, 12

பரிகாரம்: செவ்வாய் தோறும் கந்த சஷ்டி கவசம் படித்து சுப்ரமணியரை வணங்கி வாருங்கள்.

பணத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: மே: 16,17,21,22,23,29,30 ஜூன்: 2,3,4,13,14

மகிழ்ச்சி தரும் வண்ணம்: கிரே.


kumbamகும்பம்: குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பேச்சால் கவுரவம், மதிப்பு உயரும். உடன்பிறந்தோரால் உபத்திரவங்கள் வரும். தகவல் தொடர்பு சாதனங்கள் சிரமம் தரும். முன்பின் தெரியாத நபர்களால் ஏமாற்றப்படும் வாய்ப்பு உண்டு. வாகனங்களை புதிதாக மாற்றுவீர்கள். புதிய வீடு கட்டும் முயற்சியில் உள்ளோருக்கு நேரம் சாதகமாக அமையும். புது ஃபர்னிச்சர்கள் வாங்குவீர்கள். அவ்வப்போது பிரயாணம் செய்ய நேரும். பிள்ளைகளின் விவேகமான செயல்களை எண்ணி பெருமிதம் கொள்வீர்கள். விளையாட்டு, பொழுதுபோக்கு அம்சங்கள், கேளிக்கை, கொண்டாட்டத்தில் மனம் லயிக்கும். குடும்பத்தினருடன் சுற்றுலா செல்வதற்கான வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத்துணையின் நெடுநாளைய விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். தொழில் போட்டிகள் விலகி வெற்றிநடை போடுவீர்கள். சுயதொழில் செய்வோர் சிறப்பான தனலாபம் காண்பர். மாணவர்கள் ஆசிரியர்களின் வழிகாட்டுதல்படி புதியதொரு பாதையில் அடியெடுத்து வைப்பர். கலைத்துறையினர் எதிர்பார்த்த வாய்ப்பு பெறுவர். நற்பலன்களை அனுபவிக்கும் மாதம் இது.

பெண்களுக்கான சிறப்பு பலன்கள்

எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும் மாதம் இது. இல்லம் தேடி நல்ல தகவல் வந்து சேரும். கணவன்–மனைவிக்குள் அன்னியோன்யம் அதிகரிக்கும். குழந்தைகளின் நன்மை கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி உண்டு. சுபகாரிய நிகழ்வுகள் இல்லத்தில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். தாய்வழி ஆதரவு பெருகும். அரசியலில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். அடகுவைத்த நகைகளை மீட்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நினைத்த இடத்திற்கு மாறுதல் கிடைக்கும்.

சந்திராஷ்டம நாட்கள்: மே 16, 17, 18, ஜூன் 13, 14

பரிகாரம்: அருணாச்சலேஸ்வரரை வழிபட்டு வாருங்கள்.

பணத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: மே: 19,20,24,25,26,31 ஜூன்: 1,4,5,6

மகிழ்ச்சி தரும் வண்ணம்: ஆரஞ்ச்.


meenamமீனம்: குடும்பத்தில் அமைதி நிலவும். வரவு சீராக இருக்கும். எதிலும் அதிகம் பேசாமல் அமைதி காப்பது நல்லது. உடன்பிறந்தோர் உங்கள் உதவியை நாடி வரக்கூடும். தகவல் தொடர்பு சாதனங்கள் பகலில் செயலற்றும், இரவில் பயனுள்ளதாகவும் அமையும். மாணவர்கள் விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைக்க மிகுந்த சிரமத்திற்குள்ளாவார்கள். நெருங்கிய உறவினர் ஒருவருடன் மனக்கசப்பு ஏற்படும். வாகனங்களை இயக்கும்போது அதிக கவனம் அவசியம். அநாவசிய பிரயாணத்தை தவிர்ப்பது நல்லது. வீட்டில் மாற்றம் செய்ய முயற்சிப்போர் சிறிது காலம் காத்திருப்பது அவசியம். இக்கட்டான சூழலில் வாழ்க்கைத்துணை உங்களுக்கு துணை நிற்பார். நண்பர்கள் உதவி செய்வார்கள். டென்ஷனால் உடல்நிலையில் சிரமம் தோன்றும். பெற்றோர் உடல்நிலையில் கவனம் அவசியம். தொழிலில் பணியாளர்களை சார்ந்திருக்க வேண்டிய சூழல் உருவாகலாம். உத்யோகஸ்தர்கள் உடன் பணி செய்வோரை அனுசரித்துச் செல்வது நல்லது. பயத்தால் இரவில் நிம்மதியான உறக்கம் கெடும். கலைத்துறையினர் சொந்த முயற்சியில் வெற்றி காண்பர். தன்னம்பிக்கையோடு காரியமாற்ற வேண்டிய மாதம் இது.

பெண்களுக்கான சிறப்பு பலன்கள்

இந்த மாதம் ஆரோக்கியத் தொல்லைகள் அகலும். மருத்துவச் செலவுகள் குறையும். வருமானம் எதிர்பார்த்தபடியே வந்து சேரும். மேற்படிப்பிற்காக எடுத்த முயற்சிகள் அனுகூலமாகும். தாய்வழி ஆதரவு கிடைக்கும். சகோதரர்களிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன் – மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். தெய்வீகப் பயணங்களை திடீர் திடீரென மேற்கொள்வீர்கள். மாதக் கடைசியில் குடும்பத்தில் மங்கல காரியங்கள் நடைபெறும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கேட்ட இடத்தில் இடமாறுதல் கிடைக்கும்.

சந்திராஷ்டம நாட்கள்: மே 19, 20

பரிகாரம்: தந்வந்திரி பகவானை வழிபட்டு வாருங்கள்.

பணத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: மே: 21,22,23,27,28 ஜூன்: 2,3,6,7,8

மகிழ்ச்சி தரும் வண்ணம்: பொன்னிற மஞ்சள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here