Home Astrology Monthly Rasi Palan தமிழ் மாத ராசிபலன் – 15-01-2016 முதல் 12-02-2016 வரை

தமிழ் மாத ராசிபலன் – 15-01-2016 முதல் 12-02-2016 வரை

1261

mesahamமேசம்: எதிர்பாராத வகையில் பெரிய மனிதர்களுடனான சந்திப்பு நிகழும். புதிய நண்பர்கள் சேர்க்கை உண்டு. மாணவர்கள் தங்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பர். வாகனங்களால் ஆதாயம் உண்டாகும். பிள்ளைகளின் பிடிவாதமான செயல்கள் மன வருத்தம் தரும். அவர்களது செயல்வெற்றி உங்களை பெருமிதம் கொள்ள செய்யும். கடன்பிரச்னைகள் குறையும். தம்பதியரின் கருத்தொற்றுமையால் எடுத்த செயல்கள் வெற்றி பெறும்.

எதிலும் நிதானம் அவசியம். ஆடம்பர செலவுகளை குறைக்க ஆசைகளை கட்டுப்படுத்துவது அவசியம். சாதக பாதகங்கள் இருந்தாலும் நற்பலன்கள் ஏற்படும். வரவு சிறக்கும். நேரத்தை பயன்படுத்திகொண்டு சேமிப்பில் ஈடுபடுவது நல்லது. திடீர் விருந்தினர் வருகை இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். சொன்ன சொல்லைக் காப்பாற்ற முனைப்புடன் செயல்படுவீர்கள். உடன்பிறந்தோரால் உங்கள் கவுரவம் உயரும். குறைந்த விலை பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்குவீர்கள். உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் உடன் பணிபுரிவோரை சார்ந்திருக்க வேண்டியிருக்கும். கலைத்துறையினருக்கு தடைகள் நீங்கும். சுயதொழில் செய்வோர் சிறப்பான தனலாபம் காண்பார்கள். நற்பலன்களைக் காணும் மாதம் இது.

பெண்களுக்கான சிறப்பு பலன்கள்:

இம்மாதம் குழப்பங்கள் தீரும். உடன் இருப்பவர்களாலும், குடியிருக்கும் வீட்டாலும், சக பணியாளர்களாலும் ஏற்பட்ட சங்கடங்கள் அகலும். மாதத்தொடக்கத்தில் செவ்வாய் பலம் கூடுதலாக இருப்பதால் கோபத்தைக் குறைத்துக் கொண்டு செயல்படுவது நல்லது.  வீடு, வாங்க எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். கணவன்–மனைவிக்குள் பாசமும், நேசமும் அதிகரிக்கும். குரு சிம்மத்தில் சஞ்சரித்த பின்னால் குழந்தைகளின் கல்யாணக் கனவுகளை நனவாக்க எடுத்த முயற்சி வெற்றி தரும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு.தாய்வழி ஆதரவு கூடும். குரு வழிபாடு குதூகலம் தரும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த மின்சாதனப் பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

சந்திராஷ்டம நாட்கள்: பிப்ரவரி 2, 3

பரிகாரம்: ஆதித்ய ஹ்ருதயம் படித்து சூரிய நமஸ்காரம் செய்து வாருங்கள்.

பணத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: ஜனவரி: 19, 20, 23, 24, 25 பிப்ரவரி: 5, 6, 7, 10, 11

மகிழ்ச்சி தரும் வண்ணம்: சிவப்பு.


rishabamரிஷபம்: குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். அடுத்தவர்களுக்கு நீங்கள் கூறும் ஆலோசனைகள் வெற்றி தரும். அதே நேரம் அடுத்தவர்களை நம்பி ஜாமீன் பொறுப்புகளை ஏற்பது கூடாது. சம்பந்தமில்லாத விவகாரங்களில் தலையிடுவதை தவிர்க்கவும். உடன்பிறந்தோரால் இழப்புகள் ஏற்படும். தகவல் தொடர்பு சாதனங்கள் அவ்வப்போது பழுதாகி எரிச்சலூட்டும். அநாவசிய பிரயாணங்களை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளின் பெயரில் சேமிப்பில் ஈடுபடும் வாய்ப்பு உருவாகும்.

சாதக பாதகங்கள் கலந்திருக்கும். போராட்டமான சூழலை எதிர்கொள்ள நேரிடும். நினைத்த காரியங்கள் இழுபறி தரும். ஒவ்வொரு காரியத்திலும் நீங்களே நேரடியாக பணியாற்ற வேண்டியிருக்கும். சுறுசுறுப்புடன் காரியமாற்ற வேண்டிய நேரம் இது. உழைப்பிற்கான பலன் உடனடியாக கிடைக்கும். லாபம் கூடும். நரம்புத்தளர்ச்சியால் உடல் நலம் பாதிக்கப்படும். கலைத்துறையினருக்கு உடனிருப்போரால் இடைஞ்சல்கள் ஏற்படும். உத்யோகஸ்தர்கள் மற்றும் தொழிலில் உடன் பணிபுரிவோரை அனுசரித்துச் செல்ல வேண்டியது அவசியம். முன்னோர்கள் பற்றிய சிந்தனை அவ்வப்போது மனதினை ஆக்கிரமிக்கும். சுறுசுறுப்புடன் செயல்பட்டு நன்மை காண வேண்டிய மாதம் இது.

பெண்களுக்கான சிறப்பு பலன்கள்:

பஞ்சமாதிபதி பரிவர்த்தனை யோகம் பெற்றதன் விளைவாக பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகள் அகலும். ஆர்வத்துடன் ஈடுபட்ட அனைத்துக் காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்வது நல்லது. அவர்களால் சில விரயங்கள் ஏற்படலாம். விலகிச்சென்ற மாமன் வழியினர் மீண்டும் வந்திணைவர். வீடு மற்றும் இடம் வாங்க, குடும்ப உறுப்பினர்கள் உங்கள் பெயரிலேயே வாங்கலாம் என்று வலியுறுத்துவர். கணவன்–மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். அதுமட்டுமல்ல, பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரலாம். திருமால் வழிபாடு திருப்தி தரும்.

சந்திராஷ்டம நாட்கள்: பிப்ரவரி 4, 5, 6

பரிகாரம்: செவ்வாய்தோறும் சுப்ரமணிய ஸ்வாமி வழிபாடு சுறுசுறுப்பைத் தரும்.

பணத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: ஜனவரி: 15, 16, 22, 23, 26, 27 பிப்ரவரி: 8, 9, 12

மகிழ்ச்சி தரும் வண்ணம்: வெளிர் நீலம்.


mithunamமிதுனம்: குடும்பத்தில் சலசலப்பு இருக்கும். உடன்பிறந்தோருக்கு உதவி செய்யப்போய் சங்கடங்கள் வரும். முன்பின் தெரியாதவர்களிடம் கூடுதல் எச்சரிக்கை தேவை. அவர்களை நம்பி புதிய முயற்சிகளில் இறங்க வேண்டாம். நெடுநாட்களாக இழுபறியில் உள்ள சொத்துப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். பிள்ளைகளின் பிடிவாதமான செயல்கள் மன வருத்தம் தரும் அதேநேரம் அவர்களது பெருமை பேசுவதில் மகிழ்ச்சி கொள்வீர்கள்.

நற்பலன்கள் ஏற்படும். இருப்பினும் எடுத்த காரியங்களை சிரமப்பட்டு சாதிக்க வேண்டியிருக்கும். எந்த ஒரு காரியத்தையும் செய்து முடிக்க அடுத்தவர்கள் துணையை நாட வேண்டிய சூழல் உருவாகும். முக்கியமான பணிகளுக்கு இடைத்தரகர்களை நம்பாது நேரடியாக செல்வது நல்லது. மன வருத்தம் இருக்கும். இயலாமையால் பேச்சில் கடுமை வெளிப்பட்டு அடுத்தவர் மனதைப் புண்படுத்தக்கூடும் என்பதால் பேச்சில் கவனம் அவசியம். மனதில் தோன்றுவதை அப்படியே வெளிப்படையாக பேசிவிடுவதால் ஒரு சில நேரத்தில் அவப்பெயரை சந்திக்க நேரிடலாம். தம்பதியருக்குள் பரஸ்பரம் கருத்தொற்றுமை அதிகரிக்கும். தொழிலில் அதிகாரமான பேச்சால் உங்கள் செல்வாக்கை நிலைநாட்டுவீர்கள். கலைத்துறையினர் போட்டியான சூழலை சந்திப்பர். சுகமும், சுமையும் கலந்த மாதம் இது.

பெண்களுக்கான சிறப்பு பலன்கள்:

பொருளாதார நிலை உயரும். புதிய திருப்பங்கள் ஏற்படும். கணவன்–மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். உன்னத வாழ்விற்கு அடிக்கல் நாட்டப் போகிறீர்கள். பொது நலத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகளும், பதவிகளும் வந்து சேரலாம். கேது பலத்தால் பெற்றோர் வழியில் கருத்து வேறுபாடுகள் உருவாகத்தான் செய்யும். கற்றோர்களின் ஆலாசனைகளைக் கேட்டு நடப்பது நல்லது. தாய் மற்றும் சகோதர வழி ஆதரவு ஓரளவு தான் கிடைக்கும். பிறரை விமர்சிப்பதன் மூலம் பிரச்சினைகள் உருவாகலாம். குழந்தைகளைக் கண்காணித்துக் கொள்வதன் மூலம் குழப்பங்களில் இருந்து விடுபட இயலும். ஆனைமுகன் வழிபாடு ஆனந்தம் வழங்கும். வெளிமாநிலம் அல்லது வெளிநாட்டில் வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைக்கும் அறிகுறிகள் தென்படும்.

சந்திராஷ்டம நாட்கள்: பிப்ரவரி 7, 8.

பரிகாரம்: புதன்தோறும் சண்டிகேஸ்வரர் சந்நதியில் விளக்கேற்றி வழிபடுங்கள்.

பணத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: ஜனவரி: 17, 18, 23, 24, 28, 29 பிப்ரவரி: 10, 11

மகிழ்ச்சி தரும் வண்ணம்: பச்சை.


kadakamகடகம்: குடும்பத்தில் கலகலப்பும், சலசலப்பும் மாறி மாறி இருக்கும். நிலுவையில் உள்ள பாக்கிகள் வசூலாகும். எதிர்பார்க்கும் வரவு கிடைக்கும். புதிய பெண் நண்பர்களால் நன்மை உண்டாகும். தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் பொழுதுபோக்குக் கருவிகளாகப் பயன்தரும். உடன்பிறந்த சகோதரருக்கு உதவி செய்ய நேரும். பிள்ளைகளால் கூடுதல் செலவுகள் ஏற்படும். அவர்களோடு கருத்து வேறுபாடு தோன்றும்.

தொட்டது துலங்கி நற்பலன்கள் ஏற்படும். அடுத்தவர்களுக்கு உதவி செய்ய எண்ணுவீர்கள். பொதுப் பிரச்னைகளில் முன்நின்று செயல்படுவீர்கள். கவுரவம், புகழ் உயரும். இக்கட்டான சூழலில் விவேகமான செயல்பாடுகள் வெற்றி தரும். எங்கே எப்படிப் பேச வேண்டும் என்பதை அறிந்து நேரத்திற்குத் தக்கவாறு பேசி காரியத்தை சாதிப்பீர்கள். வாகனங்களை இயக்கும்போது அதிக எச்சரிக்கை, நிதானம் தேவை. குடும்பப் பெரியவர்களின் வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் அளித்து செயல்படுவீர்கள். கூட்டுத்தொழில் செய்வோருக்கு கணக்கு வழக்குகளில் கூடுதல் கவனம் அவசியம். உத்யோகஸ்தர்கள் அலுவலக கோப்புகளை பொறுமையுடன் கையாள்வது நல்லது. கலைஞர்கள் பொறுமை காத்தால் முன்னேற்றம் இருக்கும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும் மாதம் இது.

பெண்களுக்கான சிறப்பு பலன்கள்:

அருகில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய மாதமாகும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். என்றாலும் மனநிம்மதி குறைவாகவே இருக்கும். உடன்பிறப்புகள் கோபப்படலாம். கணவன்–மனைவிக்குள் விட்டுக்கொடுத்துச் செல்வதன் மூலம் ஒற்றுமை பலப்படும். கட்டிய வீடு கையை விட்டுப் போய்விட்டதே என்ற கவலைப்பட்டவர்கள் இப்பொழுது மகிழ்ச்சியடைவர். புதிய சொத்துக்கள் வாங்கும்பொழுது உங்கள் பெயர் பரிசீலிக் கப்படும். பெண் வழிப்பிரச்சினைகள் அகலும். குழந்தைகளின் எதிர்காலத் திட்டங்களுக்காக பெரும் தொகையைச் செலவழிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். சதுர்த்தி விரதமிருந்து ஆனைமுகப்பெருமானை வழிபடுவதோடு சர்ப்ப சாந்திப்பரிகாரமும் செய்து கொள்வது நல்லது.

சந்திராஷ்டம நாட்கள்: பிப்ரவரி 9, 10

பரிகாரம்: முருகரை வணங்கி தைப்பூச நாளன்று அருகில் உள்ள ஆலயத்தில் அன்னதானம் செய்யவும்.

பணத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: ஜனவரி: 15, 16, 19, 20, 26, 27, 31 பிப்ரவரி: 1, 2, 11, 12

மகிழ்ச்சி தரும் வண்ணம்: வைலட்.


simamசிம்மம்: இழுபறியான சூழலிலும் கஷ்டத்தை வெளிப்படுத்தாமல் எடுத்த செயல்களை முடிக்க முயற்சிப்பீர்கள். தேவையற்ற பிரச்னைகளை தவிர்க்க பேச்சில் கூடுதல் கவனம் அவசியம். உங்கள் ஆலோசனைகள் அடுத்தவர்களுக்கு பயன்தரும். உடன்பிறந்தோருக்கு உதவி செய்யப்போய் உபத்திரவம் ஏற்படும். தகவல் தொடர்பு சாதனங்கள் உங்கள் பணிகளுக்கு பக்கபலமாக அமையும்.

சங்கடங்கள் படிப்படியாக குறையத் துவங்கும். செயல்வேகம் அதிகரிக்கும். நினைப்பது ஒன்றும் நடப்பது ஒன்றுமாக இருக்கும். அண்டை அயலாருடன் பழகும் போது எச்சரிக்கை தேவை. குடும்ப விவகாரங்களை வெளியில் பேசுவதை தவிர்க்கவும். வாகனங்களால் செலவுகள் ஏற்படும். முடிந்தவரை அநாவசிய பிரயாணங்களைத் தவிர்ப்பது நல்லது. ரத்தக் கொதிப்பு நோய் உள்ளவர்கள் உடல்நிலையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். வழக்கு விவகாரங்களில் தீவிரத்தை தவிர்ப்பது நல்லது. தம்பதியருக்கிடையே கருத்து வேறுபாடு தோன்றும் வாய்ப்பு உண்டு. உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் கூடுதல் கவனத்துடன் பணியாற்றுவது தேவையற்ற சிக்கலை தடுக்கும். அதிக அலைச்சலை சந்திக்கும் மாதம் இது.

பெண்களுக்கான சிறப்பு பலன்கள்:

இம்மாதம் பொறுப்புகள் கூடும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்கள் குறைகளை நிவர்த்தி செய்ய முன்வருவர். கூடுதல் அன்பு செலுத்தி உடன் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன்–மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை குறையும். பணச்சுமை கூடும். உடன்பிறப்புகள் உங்கள் முன்னேற்றத்திற்கு ஒத்துழைப்புச் செய்வர். மாதக்கடைசியில் குருப்பெயர்ச்சிக்குப் பிறகு பிள்ளைகளால் பெருமை சேரும். நந்தி வழிபாடு நலம் சேர்க்கும். பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு புகழ்கூடும். மதி யூகத்தால் வெற்றிக் கனியை எட்டிப்பிடிப்பர்.

சந்திராஷ்டம நாட்கள்: ஜனவரி 15, 16, பிப்ரவரி 11, 12

பரிகாரம்: தை அமாவாசை நாளில் கிருஷ்ணரை வணங்கி ஆதரவற்ற முதியோர்க்கு அன்னதானம் செய்யுங்கள்.

பணத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: ஜனவரி: 17, 18, 22, 23, 28, 29, பிப்ரவரி: 2, 3, 4, 10

மகிழ்ச்சி தரும் வண்ணம்: ரோஸ்.


kanniகன்னி: குடும்பத்தில் நிலவும் சலசலப்பை போக்கி கலகலப்பான சூழலாக்க முயற்சிப்பீர்கள். நிலுவையில் இருந்த பாக்கிகள் வசூலாகும். பேச்சில் அதிகாரம் இருக்கும். அவப்பெயரை தவிர்க்க கூடுதல் கவனம் அவசியம். உறவினர்கள் உங்கள் உதவி நாடி வருவர். எதிலும் அகலக்கால் வைக்கலாகாது. புதிய வீடு கட்டும் முயற்சியில் உள்ளோருக்கு கால நேரம் சாதகமாக அமையும். வண்டி, வாகனங்களால் ஆதாயம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் சிறப்பான முன்னேற்றம் உண்டு. தொலைதூரப் பிரயாணத்திற்கான வாய்ப்பு உண்டு.

நெடுநாளைய எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குடும்ப பிரச்னைகள் முடிவிற்கு வரும். சுகமான சூழல் நிலவினாலும் ஓய்வின்றி செயலாற்ற வேண்டியிருக்கும். எதிர்ப்புகளை மீறி செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். பிள்ளைகளின் செயல்கள் உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும். அவர்களால் உங்கள் கவுரவம் உயரும். சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு உடல்நிலையில் கூடுதல் கவனம் அவசியம். முக்கியமான பிரச்னையில் நண்பர்களின் ஆலோசனை கைகொடுக்கும். ஆன்மிகச் செலவுகள் அதிகரிக்கும். தொழிலில் கூடுதல் உழைப்பை வெளிப்படுத்த வேண்டியிருக்கும். ஆயினும் அதற்குரிய தனலாபம் கிடைக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். கலைஞர்கள் மனம் தளராது செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். சாதகமான மாதம் இது.

பெண்களுக்கான சிறப்பு பலன்கள்:

சொல்லைச்செயலாக்கி காட்டும் மாதமாகும். சுற்றத்தார் போற்றுமளவிற்கு வாழ்க்கை தரம் உயரும். கற்ற கல்விக்கேற்ற வேலையும் கிடைக்கும். கணவன், மனைவிக்குள் இருந்த பிரச்சினைகளும் தீரும். குழந்தைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிக்கு உடன் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வரன் தேடும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். கரம் குளிர பொருட்களை கணவர் தரும்போது அதில் ஒரு பகுதியை எடுத்து சேமித்து வைத்திருந்த நீங்கள் இப்பொழுது அந்த தொகையிலிருந்து விலை உயர்ந்த பொருளை வாங்கும் அமைப்பு உருவாகும். குலதெய்வ வழிபாடு குடும்ப முன்னேற்றத்திற்கு வித்திடும்.

சந்திராஷ்டம நாட்கள்: ஜனவரி 17, 18

பரிகாரம்: புதன்தோறும் சக்கரத்தாழ்வார் சந்நதியில் விளக்கேற்றி வழிபடவும்.

பணத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: ஜனவரி: 19, 20, 25, 26, 31 பிப்ரவரி: 1, 5, 6, 7

மகிழ்ச்சி தரும் வண்ணம்: ஆரஞ்சு


thulamதுலாம்: குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பல்வேறு வழிகளிலிருந்தும் வரவு வரும். பேச்சால் கவுரவம் உயரும். உடன்பிறந்தோருக்கு உதவி செய்வீர்கள். பிரயாணத்தின்போது புதிய நட்பு உண்டாகும். தகவல் தொடர்பு சாதனங்கள் மிகுந்த பயன்தரும். புதிய வீடு கட்டும் முயற்சியில் உள்ளோருக்கு கால நேரம் சாதகமாக அமையும். வாகனங்களால் ஆதாயம் உண்டு. உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். வீட்டுக்கு தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். பிள்ளைகளின் செயல்களில் முன்னோர்களின் சாயல் வெளிப்படும்.

வாழ்க்கை தரம் முன்னேற்றம் அடையும். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி கொள்வதற்கான சந்தர்ப்பம் அமையும். அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களில் முதலீடு செய்யும் வாய்ப்பு உருவாகும். நெடுநாளைய விருப்பங்கள் நிறைவேறும். நிலுவையில் இருந்த பாக்கிகள் வசூலாகும். தம்பதியருக்கிடையே கருத்து வேறுபாடு தோன்றி மறையும். அநாவசிய செலவுகள் கட்டுக்குள் வரும். அயல்நாட்டுப் பணிக்காக காத்திருப்போருக்கு நல்லதகவல் வந்து சேரும். தொழிலில் போட்டியான சூழலை சந்திக்க நேர்ந்தாலும் சமாளித்து வெற்றி காண்பீர்கள். சுயதொழில் செய்வோர் எதிர்பார்க்கும் தனலாபம் உடனுக்குடன் கிடைக்கும். சாதகமான பலன்களை தரும் மாதம் இது.

பெண்களுக்கான சிறப்பு பலன்கள்:

இம்மாதம் பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். கொடிகட்டி பறந்த குடும்ப பிரச்சினைகள் அகலும். கூடுதல் லாபம் தொழிலில் கிடைப்பதோடு உங்கள் பெயரிலேயே புதிய தொழில் தொடங்க உறவினர்கள் கூட்டு சேர முன் வருவர். கணவன்– மனைவிக்குள் பாசமும், நேசமும் கூடும். பெற்றோர்களின் மணிவிழா, முத்து விழா போன்ற விழாக் களும், பெண் குழந்தைகளின் சுப சடங்குகளும் நடைபெறும். உத்தியோகத்தில் உள்ள பெண்கள் மேலதிகாரிகளின் ஆதரவோடு நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். வெற்றிக்குரிய தகவல்கள் அதிகம் வரும் மாதமிது. சர்ப்ப சாந்தி பரிகாரம் செய்வதன் மூலம் தன விருத்தி அதிகரிக்கும்.

சந்திராஷ்டம நாட்கள்: ஜனவரி 19, 20

பரிகாரம்: திங்கள்தோறும் 11 முறை சிவாலய பிரதட்சிணம் செய்து வாருங்கள்.

பணத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: ஜனவரி: 21, 22, 27, 28 பிப்ரவரி: 2, 3, 4, 8, 9

மகிழ்ச்சி தரும் வண்ணம்: கருநீலம்


viruchigamவிருச்சிகம்: குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். வரவிற்கும் செலவிற்கும் சரியாக இருக்கும். கையிருப்பில் காசு ஏதும் மிஞ்சாது. பேச்சால் நற்பெயர் கிடைக்கும். மூத்த சகோதர, சகோதரிகளால் நன்மை உண்டு. மாணவர்களின் கல்வி நிலை சிறப்பான முன்னேற்றம் காணும். பிள்ளைகளின் செயல்களில் மந்தத்தன்மை இருக்கும். குடும்பத்தினருடன் கேளிக்கை, கொண்டாட்டங்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு உண்டு. கவுரவ செலவுகள் அதிகரிக்கும்.

துவக்கம் மந்தமாக இருந்தாலும் படிப்படியாக சீராகும். அலைச்சல் அதிகரித்தாலும் இறங்கிய பணியில் வெற்றி காண்பீர்கள். அடுத்தவர்கள் பணிகளை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வீர்கள். மிகவும் நெருங்கிய நபர் ஒருவர் உங்களுக்கு எதிராக செயல்படுவதை கண்டு வருத்தம் உண்டாகும். அடுத்தவர்களின் உதவியை எதிர்பாராது நேரடியாக இறங்கும் செயல்கள் நன்மை தரும். பண விவகாரங்களில் கட்டுப்பாடு தேவை. தொழிலில் கூடுதல் அலைச்சலை சந்திக்க நேர்ந்தாலும் அதற்கேற்ற லாபம் காண்பீர்கள். தொழில் முன்னேற்றம் உண்டு. கலைத்துறையினர் எதிர்பார்த்த வாயப்பு கிடைக்கும். அலைச்சல் அதிகரித்தாலும் வெற்றி காணும் மாதம் இது.

பெண்களுக்கான சிறப்பு பலன்கள்:

இம்மாதம் தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொகை வரவு திருப்தி தரும். குடும்பத்தில் உங்கள் குணமறிந்து நடந்துக் கொள்வர். தாய்வழி ஆதரவு கிடைக்கும். சகோதர குடும்ப விழாக்களில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். கணவன்–மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. மகர புதனின் சஞ்சாரத்திற்கு பிறகு அதாவது பிப்ரவரி 6–ம் தேதிக்கு மேல் சிகரத்தை தொடும் அளவிற்கு உங்கள் முன்னேற்றம் இருக்கும். உங்கள் பெயரிலேயே சொத்துக்கள் வாங்குவது பற்றி குடும்ப உறுப்பினர்கள் முடிவெடுப்பர். குழந்தைகளின் நலன் கருதி எடுத்த முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும்.

சந்திராஷ்டம நாட்கள்: ஜனவரி 21, 22

பரிகாரம்: முருகனை நினைத்து சரவணபவ எனும் ஆறெழுத்து மந்திரத்தை தினந்தோறும் ஜபித்து வரவும்.

பணத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: ஜனவரி: 1, 16, 23, 24, 25, 28, 29, பிப்ரவரி: 5, 6, 7, 10, 11

மகிழ்ச்சி தரும் வண்ணம்: பச்சை


dhanusuதனுசு: குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். பேச்சில் விவேகம் இருக்கும். மதிப்பு உயரும். உழைப்பிற்கேற்ற ஊதியம் உடனுக்குடன் கிடைக்கும். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். நெருங்கிய நண்பர் ஒருவர் உங்களுக்கு விரோதமாக செயல்படுவதை கண்டு வருத்தம் ஏற்படும். உறவினர்களுடன் பண விவகாரங்களில் கருத்து வேறுபாடு தோன்றும். முக்கியமான காரியங்களில் இடைத்தரகர்களை தவிர்த்து நேரடியாக செயல்படுவது நல்லது. மாணவர்களின் கல்வித்தரம் உயரும். வண்டி, வாகனங்களால் பராமரிப்பு செலவுகள் கூடும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக முக்கியமான திட்டங்களை செயல்படுத்த கால நேரம் சாதகமாக அமையும்.

துவக்கமே சிறப்பான நற்பலன்களை தரும் வகையில் அமையும். நினைத்த காரியங்களை எளிதில் நடத்தி முடிக்கும் திறன் கூடும். நீங்கள் சந்திக்க நினைக்கும் நபர் உங்களை நாடி வந்து உதவி செய்வார். சோம்பலால் இழப்புகள் ஏற்படும். பெற்றோர் உடல்நிலையில் கவனம் அவசியம். தொழிலில் சிறப்பான முன்னேற்றம் காணும் நேரம் இது. உத்யோகஸ்தர்களுக்கு உயரதிகாரிகளிடம் மதிப்பு கூடும். சுயதொழில் செய்வோர் சிறப்பான தனலாபம் காண்பார்கள். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் தேடி வரும். நினைத்தது நடக்கும் மாதம் இது.

பெண்களுக்கான சிறப்பு பலன்கள்:

இம்மாதம் வளர்ச்சி கூடும் மாதமாகவே அமையும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பொருளாதார நிலை உயரும். கணவன், மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். பிள்ளைகள் உங்கள் சொற்படி கேட்டு நடப்பர். இட மாற்றம், வீடு மாற்றம் எதிர்பார்த்தபடி வந்து சேரும். விலகிச்சென்ற உறவினர்கள் விரும்பிவந்து சேருவர். சிம்ம குருவின் சஞ்சாரத்தை முன்னிட்டு மாதக்கடைசியில் மங்கல ஓசையும், மழலையின் ஓசையும் கேட்க வழி பிறக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கூடுதல் பொறுப்பும், கூடுதல் சம்பளமும் கிடைக்கும். மகாலட்சுமி வழிபாடு மகிழ்ச்சியை வழங்கும்.

சந்திராஷ்டம நாட்கள்: ஜனவரி 23, 24, 25

பரிகாரம்: வெள்ளி தோறும் மகாலட்சுமி பூஜை செய்து வரவும்.

பணத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: ஜனவரி: 15, 16, 26, 27, 31 பிப்ரவரி: 1, 8, 9

மகிழ்ச்சி தரும் வண்ணம்: மஞ்சள்


magaramமகரம்: குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். பேச்சில் நிதானம் வெளிப்படும். பல்வேறு வழிகளில் வரவு வரும். முன்பின் தெரியாத புதிய நபர்களின் பேச்சை நம்பி எந்த ஒரு விஷயத்திலும் தலையிடுவதை தவிர்க்கவும். உடன்பிறந்தோரிடம் இருந்து உதவிகள் கிடைக்கும். வண்டி, வாகனங்களால் செலவுகள் அதிகரிக்கும். உறவினர்களின் வருகையால்க கூடுதல் செலவுகள் ஏற்படும் அதே நேரம் அவர்கள் துணை உங்களுக்கு அவசியமாகும். மாணவர்களின் கல்வித் தரம் மேன்மையடையும். பிள்ளைகளின் வாழ்வில் சுபநிகழ்வுகளுக்கான வாய்ப்புகள் உருவாகும்.

அயராத உழைப்பும், தளராத முயற்சியும் உங்களை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும். உத்வேகம் செயலில் வெளிப்படும். எதிர்காலம் குறித்த எண்ணங்கள் மனதை அதிகம் ஆக்கிரமிக்கும். புதிய செயல்திட்டங்களை வகுப்பதில் குழப்பம் உண்டாகும். சிறிது காலத்திற்கு புதிய முதலீடுகள், புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடாமல் அமைதி காப்பது நன்மை தரும். குடும்பத்தினரோடு சுற்றுலா, கேளிக்கை, கொண்டாட்டங்கள், பொழுதுபோக்கு நிகழ்வுகளில் பங்குபெறுவீர்கள். பெண் நண்பர்களால் நன்மை உண்டாகும். தொழிலில் உழைப்பிற்கேற்ற லாபம் கிடைக்கும். உத்யோகஸ்தர்கள் பதவி உயர்விற்கான வாய்ப்பு உண்டு. கலைத்துறையினருக்கு கூடுதல் அலைச்சல் இருக்கும். அயராத உழைப்பால் நன்மை காணும் மாதம் இது.

பெண்களுக்கான சிறப்பு பலன்கள்:

இம்மாதம் விழிப்புணர்ச்சியோடு செயல்பட வேண்டிய மாதமாகும். பக்கத்து வீட்டாரின் பகையை முன்னிட்டு வீடு மாற்றங்கள் உருவாகலாம். தக்க தருணத்தில் உறவினர்கள் உதவிக்கரம் நீட்ட மறுப்பர். தடுமாற்றங்கள் அதிகரிக்கும். பிறருக்கு பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகையால் பிரச்சினைகள் உருவாகலாம். குழந்தை களால் விரயம் கூடும். குடும்பச்சுமை கூடுகிறதே என்று கவலைப்படுவீர்கள். திசாபுத்திக்கேற்ற தெய்வ வழிபாடும், சர்ப்ப சாந்தி வழிபாடும் திருப்தியான வாழ்க்கையை அமைத்துக்கொடுக்கும். குரு சிம்மத்தில் சஞ்சரிக்கும் போது குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனைகளைக் கேட்டு முடிவெடுத்தால் குழப்பங்கள் ஏற்படாது.

சந்திராஷ்டம நாட்கள்: ஜனவரி 26, 27

பரிகாரம்: செவ்வாய்தோறும் மாரியம்மன் ஆலயத்தில் ஏழைகளுக்கு அன்னதானம் செய்யுங்கள்.

பணத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: ஜனவரி: 17, 18, 28, 29 பிப்ரவரி: 2, 3, 4, 10, 11

மகிழ்ச்சி தரும் வண்ணம்: பிரவுன்.


kumbamகும்பம்: குடும்பத்தில் லேசான சலசலப்பு தோன்றும். அவ்வப்போது மனம் சஞ்சலப்படும். எதிர்பார்த்த வரவு வந்து சேரும். பேச்சில் விவேகம் இருக்கும். கவுரவம் உயரும். உடன்பிறந்தோரால் கூடுதல் செலவுகள் ஏற்படும். ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதில் அதிக நாட்டம் உண்டாகும். பிறந்த வீட்டுக்கு பெருமை சேர்க்கும் விதமான நிகழ்வுகள் நடக்கும். திடீர் விருந்தினர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். அந்நியப் பெண்களை நம்பி புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நல்லது. வண்டி, வாகனங்களை மாற்றும் முயற்சியில் உள்ளோருக்கு கால நேரம் சாதகமாக அமையும். உறவினர்கள் வழியில் கலகங்கள் தோன்றும். மாணவர்களின் கல்வி நிலை மேன்மை அடையும்.

தடையேதுமின்றி உங்கள் வெற்றிப் பயணத்தைத் தொடர்வீர்கள். பொறுப்புகளை பங்கிட்டு வேலை வாங்குவதில் தனித்துவம் காண்பீர்கள். பொதுப்பணிகளில் அதிகம் பங்கேற்க வேண்டிய சூழல் உருவாகும். முக்கியமான நேரத்தில் பிள்ளைகளின் ஆலோசனைகள் கைகொடுக்கும். கடன் பிரச்னைகள் தலைதூக்கும். தம்பதியருக்கிடையே கருத்து வேறுபாடு தோன்றி மறையும். திட்டமிட்டிருந்த ஆன்மிகப் பயணம் தள்ளிப்போவதற்கான வாய்ப்பு உண்டு. தொழிலில் அதிக அலைச்சலுக்கு ஆளாக நேரிடும். தடைக்கற்களை வெற்றிப்படிகளாக மாற்றிக்கொள்ளும் நேரம் இது.

பெண்களுக்கான சிறப்பு பலன்கள்:

குடும்பச்சுமை கூடும் மாதமாகும். கொடுக்கல்– வாங்கல் களில் கவனம் செலுத்துவது நல்லது. உடன் இருப்பவர் களால் ஏமாற்றங்களையும், விரயங்களையும் சந்திக்க நேரிடும். உத்தியோக மாற்றம், வீடு மாற்றம் போன்றவற்றை உபயோகப்படுத்திக் கொள்வது நல்லது. கணவன்– மனைவிக்குள் அனுசரித்துச் செல்வதன் மூலம் அமைதி கூடும். குரு மாற்றத்திற்குப் பிறகு கொடுக்கல்–வாங்கல்கள் ஒழுங்காகும். கூடுதல் லாபம் கிடைக்கும். குழந்தைகளாலும், உதிரி வருமானங்கள் வந்து சேரும். பாம்பு கிரகங் களின் வழிபாடு ஆனந்தமான வாழ்க்கையைத் தரும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சகபணியாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

சந்திராஷ்டம நாட்கள்: ஜனவரி 28, 29, 30

பரிகாரம்: காஞ்சி காமாக்ஷியை வழிபட்டு வாருங்கள்.

பணத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: ஜனவரி: 15, 16, 19, 20, 30, 31 பிப்ரவரி: 5, 6, 12

மகிழ்ச்சி தரும் வண்ணம்: கிரே.


meenamமீனம்: குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பேச்சில் நகைச்சுவை வெளிப்படும். நண்பர்களின் ஆலோசனைகள் தக்க நேரத்தில் பயன் தரும். தகவல் தொடர்பு சாதனங்கள் உங்கள் பணிகளுக்கு துணை நிற்கும். பெரிய மனிதர்களுடனான சந்திப்பு உங்கள் கவுரவத்தை உயர்த்துவதோடு எதிர்காலத் திட்டங்களுக்குப் பயன் தரும் வகையில் அமையும். வீடு, மனை போன்ற அசையாச் சொத்துக்களில் முதலீடு செய்வதற்குக் காலநேரம் சாதகமாக அமையும். வண்டி, வாகனங்கள், பிரயாணங்களால் ஆதாயம் உண்டாகும். உறவினர்களின் வருகை குடும்பத்தில் கலகலப்பை அதிகரிக்கும். மாணவர்கள் தங்கள் கல்வியில் மேன்மை காண்பார்கள்.

சாதக பாதகங்கள் கலந்திருக்கும். செயல்திறன் கூடும். திட்டமிட்ட செயல்களில் வெற்றி பெறுவீர்கள். சிறப்பான வரவு உண்டு. கடன்பிரச்னைகள் முற்றிலும் குறையும். விளையாட்டுத்துறையைச் சார்ந்த மாணவர்கள் முன்னேற்றம் அடைவார்கள். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், கேளிக்கை, கொண்டாட்டங்களில் நாட்டம் கூடும். தம்பதியருக்குள் கருத்து வேறுபாடு தோன்றி மறையும். அன்யோன்யம் அதிகரிக்கும். தான தரும காரியங்களுக்காக அதிகம் செலவழிப்பீர்கள். தொழிலில் உங்கள் செயல்திட்டங்கள் தனித்துவம் பெறும். கலைத்துறையினருக்கு திருப்திதரும் வகையில் வாய்ப்புகள் வரும். சாதகமான பலன்களைத் தரும் மாதம் இது.

பெண்களுக்கான சிறப்பு பலன்கள்:

ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டிய மாதமாகும். வரவு திருப்தி தரும். இருந்தாலும் செலவுகளும் கூடுதலாகவே இருக்கும். கணவன்–மனைவிக்குள் விட்டுக் கொடுத்துச் செல்வதன் மூலம் விருப்பங்கள் நிறைவேறும். உடன்பிறப்புகள் உங்களைவிட்டு விலகிச்செல்லாமல் பார்த்துக்கொள்வது நல்லது. பிள்ளைகளின் கல்யாணக் கனவுகளை நனவாக்க எடுத்த முயற்சி வெற்றி பெறும். மாதக்கடைசியில் குரு பார்வையால் குடும்ப பிரச்சினைகள் அகலும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். ஊர் மாற்றங்கள் விரும்பும் விதத்தில் அமையும். முருகப்பெருமான் வழிபாடும், சர்ப்ப சாந்தியும் வளர்ச்சியைக் கூட்டும்.

சந்திராஷ்டம நாட்கள்: ஜனவரி 31, பிப்ரவரி 1

பரிகாரம்: தினந்தோறும் 18 முறை ஸ்ரீராமஜெயம் எழுதி வரவும்.

பணத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: ஜனவரி: 17, 18, 22, 23 பிப்ரவரி: 2, 3, 4, 8, 9

மகிழ்ச்சி தரும் வண்ணம்: ஆனந்தா நீலம்.