Home Astrology Monthly Rasi Palan தமிழ் மாத ராசிபலன் – 15/6/2016 முதல் 15/7/2016 வரை

தமிழ் மாத ராசிபலன் – 15/6/2016 முதல் 15/7/2016 வரை

1000

mesahamமேசம்: 

உறவினர்களால் குடும்பத்தில் சிறுசிறு கலகங்களை சந்திக்க நேரிடும். பேசும் வார்த்தைகளில் வெளிப்படும் கடுமையான கருத்துகள் அடுத்தவர் மனதினை புண்படுத்தக்கூடும். உடன்பிறந்தோரால் ஒரு சில இடையூறுகளைச் சந்திக்க நேரிடும். முக்கியமான பணிகளுக்கு அடுத்தவர்களை நம்பியிராது தாமே நேரடியாகச் செயலில் இறங்குவது அவசியம். பிரயாணத்தின்போது சக பயணியிடம் அதிக எச்சரிக்கையுடன் நடந்துகொள்வது அவசியம்.

வண்டி, வாகனங்களின் பராமரிப்பு செலவு அதிகரிக்கும். மாணவர்கள் கல்வி நிலையில் முன்னேற்றம் காண கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகள் உங்களின் எதிர்பார்ப்பிற்கு மாறாக அமைவதைக் கண்டு மன வருத்தம் உண்டாகும். அவர்களது நலனுக்காக கூடுதலாக செலவழித்து வருவீர்கள். வாழ்க்கைத்துணையுடன் கருத்து வேறுபாடு தோன்றி மறையும். நண்பர்களை நம்பி ஒப்படைத்த காரியங்களில் சுணக்கத்தினைக் காண்பீர்கள். பூர்வீக சொத்துகளில் புதிய பிரச்னைகள் தோன்றக்கூடும். சிரமமான கிரக நிலையிலும் தொழில்முறையில் கொண்டிருக்கும் ஈடுபாடு காரணமாக வெற்றி கண்டு வருவீர்கள். உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் நற்பெயர் பெறுவார்கள். சுயதொழில் செய்வோர் ஓய்வின்றி செயல்படுவதன் மூலம் முன்னேற்றத்திற்கான பாதையைக் கண்டு கொள்வார்கள். மொத்தத்தில் இந்த மாதம் அதிகப்படியான இடையூறுகளைக் கடந்து செல்ல வேண்டிய மாதமாக அமையும்.

பெண்களுக்கான சிறப்பு பலன்கள்

ராசிநாதன் செவ்வாய் தொடக்கத்தில் வக்ர இயக்கத்தில் இருப்பதால், எதையும் யோசித்துச் செய்வது நல்லது. திடீர் முடிவுகளை எடுக்க வேண்டாம். தேவைக்கேற்ற பணம் வந்து கொண்டே இருக்கும். செவ்வாய் வக்ர நிவர்த்திக்குப் பிறகு, உங்கள் செயல்பாடுகளில் வெற்றி கிடைக்கும். ஆரோக்கியத் தொல்லை அகலும். கூட்டுக் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை நீங்கும். உடன்பிறப்புகளின் பகை மாறும். பஞ்சம ஸ்தானத்தில் குரு சஞ்சரித்து, அதன் பார்வை உங்கள் ராசியில் பதிவதால் குழந்தைகள் எதிர்பார்த்த கல்வி கற்க வழி கிடைக்கும். கணவன்–மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். வரன்கள் வந்து கல்யாணக் கனவுகளை நனவாக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மாதத்தின் மையப் பகுதியில் சலுகைகள் கிடைத்து சந்தோஷம் காண்பர்.

சந்திராஷ்டம நாட்கள்: ஜூன் 18, 19, ஜூலை 15.

பரிகாரம்: ஸ்வர்ணாகர்ஷண பைரவரை வணங்கி வாருங்கள்.

பணத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: ஜூன்: 21,22,26,27 ஜூலை: 1,2,6,7,14,15.

மகிழ்ச்சி தரும் வண்ணம்: சிவப்பு.


rishabamரிஷபம்: 

எதிர்கால வளர்ச்சி பற்றிய சிந்தனை சதா மனதினில் இடம்பிடித்து வரும். ஒவ்வொரு செயலையும் ஆதாயம் பெறுகின்ற வகையில் திட்டமிட்டு செயல்படுவீர்கள். ஆயினும் மறுபுறம் தான தர்ம சிந்தனைகளும் மனதில் இடம்பெறக் காண்பீர்கள். தன்முயற்சியின் மூலம் முன்னுக்கு வரமுடியும் என்ற தன்னம்பிக்கையை வளர்த்துக்கொண்டு செயல்பட்டு வருவீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடு தோன்றினாலும் கலகலப்பிற்குக் குறைவிருக்காது. உடன்பிறந்தோர் சாதகமாக செயல்பட்டு வருவார்கள். முக்கியமான நேரத்தில் பெண்களால் உதவி கிடைக்கக் காண்பீர்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் பணிச்சுமையைக் குறைக்கும் வகையில் துணைநிற்கும். மாணவர்கள் கல்வி நிலையில் சிறப்பான முன்னேற்றம் கண்டு வருவார்கள்.

புதிய வீடு கட்டும் முயற்சியில் உள்ளோருக்கு நேரம் சாதகமாக உள்ளது. ஆடம்பரம் நிறைந்த ஃபர்னிச்சர் சாமான்கள் சேரும். எந்த ஒரு விஷயத்திலும் அகலக்கால் வைக்கலாகாது என்பதை நினைவில் கொண்டு தனக்குரிய வரையறைக்குள் செலவு செய்ய முற்படுவது நல்லது. பிள்ளைகளின் செயல்கள் உங்கள் கௌரவத்தினை உயர்த்தும் வகையில் அமையும். உங்களுடைய சிறுபிராயத்து விருப்பம் ஒன்றினை நிறைவேற்றிக் கொள்ள கால நேரம் சாதகமாக அமையும். வாழ்க்கைத்துணை உங்கள் பணிகளுக்கு பக்கபலமாகத் துணை நின்று வருவார். தொழில்முறையில் புதிய போட்டியினை சந்திக்க நேரிடும். உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் மேலதிகாரிகளிடம் நற்பெயர் காண அதிகம் உழைக்க வேண்டியிருக்கும். அலுவலகத்தில் அதிகம் பேசுவதை விட உங்கள் திறமைகளை நிரூபித்துக் காட்டுவது நல்லது. இந்த மாதம் ஆதாயம் காணும் மாதமாக அமையும்.

பெண்களுக்கான சிறப்பு பலன்கள்

இந்த மாதம் உங்களுக்கொரு இனிய மாதமாக அமையப்போகிறது. செல்வநிலை உயரும். கல்விக்காக எடுத்த முயற்சி கைகூடும். கடின உழைப்பின்றி எளிமையாக பொருளீட்டுவீர்கள். புதன், சுக்ரன் பரிவர்த்தனை யோகம் பெற்றிருப்பதால், குடும்பத்தில் உங்களது சொல்லுக்கு மதிப்பு ஏற்படும். உங்கள் பெயரிலேயே தொழில் தொடங்கும் வாய்ப்பு கள் அமையும். கணவன்–மனைவிக்குள் இருந்த பிணக்கு கள் மாறி இணக்கம் ஏற்படும். வாழ்க்கைத் துணைக்கு உத்தியோகம் கிடைத்து வருமானம் பெருகும். பிள்ளைகளுக்கு எதிர்பார்த்த கல்வி கிடைக்க ஏற்பாடுகள் செய்து கொடுப்பீர்கள். பெற்றோர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

சந்திராஷ்டம நாட்கள்: ஜூன் 20, 21.

பரிகாரம்: வெள்ளிதோறும் கோபூஜை செய்து வழிபடுங்கள்.

பணத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: ஜூன்: 15,24,25,27,28 ஜூலை: 3,4,5,8,9,10

மகிழ்ச்சி தரும் வண்ணம்: வெளிர்நீலம்.


mithunamமிதுனம்: 

குடும்பத்தில் சலசலப்புகள் தோன்றினாலும் மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது. பொருள்வரவு தொடர்ந்து கொண்டிருப்பதால் சேமிப்பில் ஈடுபடுவது நல்லது. ஒரு சிலருக்கு வீடு, மனை வாங்கும் வாய்ப்பு உண்டு. உடன்பிறந்தோர் உங்கள் உதவியை நாடி வரக்கூடும். ஜூன் மாதத்தின் இறுதியில் எதிர்பாராத பிரயாணத்திற்கான வாய்ப்பு உண்டு. தகவல் தொடர்பு சாதனங்கள் உங்கள் பணிச்சுமையைக் குறைக்கின்ற வகையில் மிகுந்த பயனைத் தரும். வீட்டிற்குத் தேவையான மரச்சாமான்கள் வாங்க முற்படுவீர்கள்.

மாணவர்களின் கல்வித்தரம் உயர்வடையும். உறவினர்களுக்கு இடையே தோன்றும் பிரச்னைக்கு மத்யஸ்தம் செய்து வைக்க வேண்டிய நிலை உண்டாகக் கூடும். தரகு, கமிஷன் போன்ற தொழிலில் உள்ளோருக்கு கால நேரம் சிறப்பாக இருந்து வரும். தொழில்முறையில் போட்டியான சூழலைச் சந்திக்க நேர்ந்தாலும் உங்களது முகராசியினைக் கொண்டு ஜெயித்து வருவீர்கள். உத்யோகஸ்தர்கள் தங்களுக்குக் கீழ் பணிபுரிவோரின் ஆதரவுடன் முன்னேற்றம் காண வேண்டியிருக்கும். சுயதொழில் செய்வோர் சிறப்பான தனலாபத்தினைக் கண்டு வருவார்கள். நண்பர்கள் இக்கட்டான சூழலில் துணை நிற்பார்கள். பிள்ளைகளின் செயல்கள் எதிர்பார்ப்பிற்கு ஏற்றாற்போல் அமையும். வாழ்க்கைத்துணை உங்களின் தேவையறிந்து செயல்பட்டு வருவார். சர்க்கரை வியாதிக்காரர்கள் உடல்நிலையில் சிறப்பு கவனம் கொள்ள வேண்டியது அவசியம். இம்மாதம் நற்பலன்களை அனுபவிக்கும் மாதமாக அமையும்.

பெண்களுக்கான சிறப்பு பலன்கள்

மாதத் தொடக்கத்தில் விரயங்கள் கூடுதலாகவே இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வீடு மாற்றம், இடமாற்றம் தொடர்பான முடிவுகளை ஏற்று குடும்பத்தினருடன் சேர்ந்து செயல்படுவீர்கள். பிள்ளைகளின் கல்விக்காக, ஒரு தொகையைச் செலவிடுவீர்கள். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து சேருவர். வீடு வாங்கும் முயற்சி நடைபெறவில்லையே என்ற கவலை இனி அகலும். கணவன்– மனைவிக்குள் இருந்த மனக்கஷ்டம் விலகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்தபடியே இலாகா மாற்றங்கள் வந்து சேரலாம். உடன்பிறப்புகளால் நன்மை கிடைக்கும்.

சந்திராஷ்டம நாட்கள்: ஜூன் 22, 23, 24.

பரிகாரம்: பௌர்ணமி நாளில் சிவாலய பிரதட்சிணம் செய்வது நல்லது.

பணத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: ஜூன்: 15,26,27,29,30 ஜூலை: 1,6,7,11,12

மகிழ்ச்சி தரும் வண்ணம்: பச்சை.


kadakamகடகம்:

எந்த ஒரு காரியத்தையும் தன்னால் செய்ய இயலும் என்ற தன்னம்பிக்கை மனதில் உறுதியாக இடம்பிடிக்கும். அடுத்தவர்கள் செய்யத் தயங்கும் காரியத்தினையும் விவேகத்துடன் அணுகி வெற்றி காண்பீர்கள். ஆளுக்குத் தகுந்தாற்போல் வார்த்தைகளை வெளிப்படுத்தி எல்லோரிடமும் நன்மதிப்பினைப் பெற்று வருவீர்கள். குடும்பத்தில் சலசலப்புகள் இருந்தாலும் மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது. செலவுகள் அதிகரித்தாலும் அவற்றை சமாளிக்கின்ற வகையில் ஏதேனும் ஒரு வழியில் பொருள்வரவு தொடர்ந்து கொண்டிருக்கும். தகவல் தொடர்பு சாதனங்கள் உங்கள் பணிச்சுமையைக் குறைக்கும் வகையில் பயன் தரும்.

உடன்பிறந்தோர் உங்கள் உதவியை நாடி வரக்கூடும். வண்டி, வாகனங்கள் ஆதாயம் தரும் வகையில் அமையும். மாணவர்களின் கல்வித்தரம் உயர்வு காணும். உறவினர்களின் வருகை குடும்பத்தில் கலகலப்பை அதிகரிக்கச் செய்யும். தொழில்முறையில் கூடுதல் அலைச்சலை சந்திக்க நேரிடும். உத்யோகஸ்தர்கள் தற்காலிக இடமாற்றத்தினை சந்திக்க நேரிடும். அலுவல் பணியில் மேலதிகாரிகளிடம் நற்பெயர் காண சற்று சிரமப்பட வேண்டியிருக்கும். சுயதொழில் செய்வோர் அடுத்தவர்களின் உதவிக்காகக் காத்திருக்க வேண்டியிருக்கும். வியாபாரிகள் அதிக லாபம் காண இயலாது. உடல்நிலையில் வயிறு சார்ந்த உபாதைகளை உடனுக்குடன் கவனித்துக் கொள்வது நல்லது. பிள்ளைகளின் நல்வாழ்விற்காக கூடுதலாக செலவழிக்க வேண்டியிருக்கும். முன்பின் தெரியாதவர்களுக்கு உதவப்போய் பொருளிழப்பிற்கு ஆளாகும் வாய்ப்பு உண்டு. செலவினங்கள் அதிகரிக்கும் மாதம் இது.

பெண்களுக்கான சிறப்பு பலன்கள்

விரயங்கள் அதிகரிக்கும் மாதம் இது. பொன்னால் ஆன ஆபரணங்களை வாங்கி மகிழும் வாய்ப்பு கிடைக்கும். உற்றார், உறவினர் உங்கள் முன்னேற்றம் கண்டு ஆச்சரியப்படுவார்கள். படித்த கல்வியைக் காட்டிலும், பெற்ற அனுபவத்தின் வாயிலாக உங்களுக்கு பெருமைகள் வந்து சேரும். கணவன் – மனைவிக்குள் பாச உணர்ச்சியும், பகை உணர்ச்சியும் அடிக்கடி வந்து அலை மோதும். விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. குழந்தைகள் உங்கள் சொற்படி கேட்டு நடக்க முன்வருவர். அவர்களின் கல்வி முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். மாதக் கடைசியில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

சந்திராஷ்டம நாட்கள்: ஜூன் 25, 26.

பரிகாரம்: வெள்ளி தோறும் தனலட்சுமி பூஜை செய்து வாருங்கள்.

பணத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: ஜூன்: 16,17,27,28 ஜூலை: 1,2,3,8,9

மகிழ்ச்சி தரும் வண்ணம்: மஞ்சள்.


simamசிம்மம்:

அவசியம் செய்து முடித்துவிட வேண்டும் என்று திட்டமிட்டிருந்த பணிகளை இந்த மாதத்திலேயே காலதாமதம் செய்யாது நடத்தி முடித்துக் கொள்வது நல்லது. குடும்ப உறுப்பினர்களுக்கிடையே ஒரு சில பிரச்னைகள் புதிதாகத் தோன்றக்கூடும். குடியிருக்கும் வீட்டினில் ஆல்ட்ரேஷன் பணிகள் செய்தல், பர்னிச்சர் சாமான்கள் வாங்குதல் ஆகியவற்றால் கையிருப்பு கரையும். உறவினர்கள் வழியில் கலகத்தினை சந்திக்க நேரிடலாம். முக்கியமான பிரச்னைகளில் உடன்பிறந்தோருடன் இணைந்து செயல்பட வேண்டியிருக்கும்.

மாணவர்கள் கல்வி நிலையில் முன்னேற்றம் காண கூடுதலாக உழைக்க வேண்டியது அவசியம். வண்டி, வாகனங்களை இயக்கும்போது நிதானமும் அதிகப்படியான கவனமும் கட்டாயமாகிறது. பிள்ளைகளின் செயல்பாடுகள் உங்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்றாற்போல் அமையும். உத்யோகஸ்தர்கள் அலுவல் பணியில் மேலதிகாரிகளிடம் நற்பெயர் காண்பார்கள். ஒருசிலர் தற்காலிக இடமாற்றத்தினை சந்திக்க நேரிடலாம். சுயதொழில் செய்வோர் சிறப்பான தனலாபத்தினைக் காணும். அதே நேரத்தில் அடையும் லாபத்தினை அனுபவிக்க இயலாது. மீண்டும் தொழிலிலேயே முதலீடு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாவார்கள். வாழ்க்கைத்துணை உங்கள் பணிகளுக்குத் துணை நிற்பார். அலைச்சல் அதிகமாய் இருந்தாலும் எண்ணங்கள் நிறைவேறும் மாதமிது.

பெண்களுக்கான சிறப்பு பலன்கள்

குரு வக்ர நிவர்த்தியாகி, சூரிய பலத்தோடு பிறப்பதால், இந்த மாதம் வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். பற்றாக்குறை மாறி பணவரவு பலமடங்காக உயரும். அரசியல் மற்றும் பொது நலத்தில் இருப்பவர்கள் அதிக நன்மைகளைக் காண்பார்கள். கணவன்–மனைவிக்குள் பாசமும், நேசமும் அதிகரிக்கும். உடன் இருப்பவர்களும், குடும்ப உறுப்பினர்களும் உங்கள் செல்வாக்கைக் கண்டு ஆச்சரியப்படுவார்கள். குழந்தைகள் உதிரி வருமானங்களைக் கொண்டுவந்து சேர்ப்பர். அவர்களின் எதிர்கால நலன் கருதி, தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் பதவிகள் கிடைக்க வாய்ப்பு உண்டு.

சந்திராஷ்டம நாட்கள்: ஜூன் 27, 28.

பரிகாரம்: விஷ்ணு துர்கைக்கு எலுமிச்சை விளக்கேற்றி வழிபட்டு வாருங்கள்.

பணத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: ஜூன்: 15,16,18,19,29,30 ஜூலை: 3,4,10,11.

மகிழ்ச்சி தரும் வண்ணம்: வைலட்.


kanniகன்னி: 

நினைத்த காரியத்தை தங்களின் உழைப்பின் மூலம் சாதித்துக் கொள்ளும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கும். ராசிநாதனோடு இணைவினைப் பெற்றிருக்கும் சூரியன் உங்கள் பணிகளில் சுறுசுறுப்பினை வெளிப்படுத்தச் செய்வார். மேற்கொண்ட பணியினை காலதாமதம் செய்யாது விரைவாகச் செய்து முடிப்பதில் கவனம் செலுத்தி வருவீர்கள். பொருள் வரவு சீராக இருந்து வரும். சிறுசேமிப்பில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் அமைதி நிலவி வரும். உடன்பிறந்தோர் உதவிகரமாகச் செயல்பட்டு வருவார்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் சிறந்த பொழுதுபோக்கு அம்சங்களாகப் பயன்படும். வண்டி, வாகனங்கள் ஆதாயம் தரும் வகையில் அமையும். இந்த மாதத்தில் தொலைதூரப் பிரயாணத்திற்கான வாய்ப்பு உண்டு. மாணவர்கள் கல்வி நிலையில் நல்லதொரு முன்னேற்றம் காண்பார்கள்.

புதிய வீடு கட்டும் முயற்சியில் உள்ளோருக்கு வங்கி சார்ந்த கடனுதவிகள் கிட்டும். தொழில்முறையில் உங்களது செயல்திட்டங்கள் சிறப்பான வெற்றி காணும் நேரம் இது. உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் பதவி உயர்விற்கான வாய்ப்பினைத் தக்க வைத்துக்கொள்வார்கள். சுயதொழில் செய்வோர் தங்கள் எண்ணங்களை நடைமுறைப்படுத்தி வெற்றி காண வாய்ப்புகள் கூடி வரும். உணவுப் பொருட்களை வியாபாரம் செய்வோர் சிறப்பான தனலாபத்தினைக் காண்பார்கள். பிள்ளைகளின் செயல்கள் மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும் வகையில் அமையும். குடும்பத்தினருடன் உல்லாசப் பயணம் செல்வதற்கான வாய்ப்பு உண்டு. கேளிக்கைகள், கொண்டாட்டங்கள், விருந்து உபசாரங்கள் ஆகியவற்றில் பங்கேற்க அழைப்பு தேடி வரும். சிறப்பான நற்பலன்களை அனுபவிக்கும் மாதமாக அமையும்.

பெண்களுக்கான சிறப்பு பலன்கள்

யோகமான மாதம் இது. மாமன் வழியில் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். சேமிப்பு உயரும். செயல்பாடுகளில் வெற்றி கிடைக்க, உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர். வீடு மாற்றங்கள் விரும்பும் விதத்தில் அமையும். கணவன்–மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். உங்கள் முன்னேற்றத்திற்கு தடையாக இருந்தவர்கள் விலகுவார்கள். குழந்தைகளின் கல்விக்காகச் செய்த ஏற்பாடுகள் கைகூடும். குடியிருக்கும் வீட்டை விலைக்கு வாங்க எடுத்த முயற்சி வெற்றி பெறும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இலாகா மாற்றங்கள் ஏற்படலாம். பயணங்களால் பலன் கிடைக்கும்.

சந்திராஷ்டம நாட்கள்: ஜூன் 29, 30.

பரிகாரம்: ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்தி வழிபடுங்கள்.

பணத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: ஜூன் 16,17,21,22 ஜூலை: 1,2,6,7,12,13

மகிழ்ச்சி தரும் வண்ணம்: கிளிப்பச்சை.


thulamதுலாம்:

நினைத்த காரியங்கள் நடைபெறும் நேரம் இது என்பதால் இந்த நேரத்தினை உங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கவும். தனிப்பட்ட முறையில் உங்கள் செயல் வேகம் அதிகரித்திருப்பதோடு, செய்யும் காரியங்களில் விவேகத்தினையும் வெளிப்படுத்தி நற்பெயர் காண்பீர்கள். பொருள் வரவு நிலை தொடர்வதால் சேமிப்பு உயர்வதற்கான வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவி வரும். மனதில் இருக்கும் மகிழ்ச்சி பேசும் வார்த்தைகளில் வெளிப்பட்டு வரும். உடன்பிறந்தோர் உங்கள் பணிகளுக்கு சாதகமாகத் துணை நிற்பார்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் பணிச்சுமையைக் குறைக்கும் வகையில் பயன் தரும். இந்த மாதத்தில் எதிர்பாராத தொலைதூரப் பிரயாணத்திற்கான வாய்ப்பு உண்டு.

புதிய வீடு வாங்கும் முயற்சியில் உள்ளோருக்கு வங்கி மூலமான கடனுதவி கிட்டுவதில் தடையேதும் இருக்காது. வண்டி, வாகனங்கள் ஆதாயம் தரும் வகையில் அமையும். மாணவர்கள் கல்வி நிலையில் சிறப்பான முன்னேற்றம் கண்டு வருவார்கள். தகப்பனார் வழி உறவினர்களைச் சந்திக்கும் வாய்ப்பு உருவாகும். பூர்வீக சொத்துகளில் இருந்து வந்த பிரச்னைகள் விலகும். பிள்ளைகள் உங்கள் எதிர்பார்ப்பினை நிறைவேற்றும் வகையில் செயல்பட்டு வருவார்கள். கடன்பிரச்னைகள் முற்றிலுமாகக் கட்டுக்குள் இருக்கும். தொழில்முறையில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும் நேரம் இது. உத்யோகஸ்தர்கள் பதவி உயர்விற்கான வாய்ப்பினை வலுப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு கிட்டும். சுயதொழில் செய்வோர் சிறப்பான தனலாபத்தினைக் காண்பார்கள். சிறப்பான நற்பலன்களை அனுபவிக்கும் மாதமாக அமையும்.

பெண்களுக்கான சிறப்பு பலன்கள்

வளர்ச்சி கூடும் மாதம் இது. வரன்கள் வாசல் கதவைத் தட்டும். ஆடை, ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். உத்தியோக மாற்றங்களையும், ஊர் மாற்றங்களையும் எதிர்பார்த்திருப்பவர்களுக்கு அவர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறப்புகளின் வழியே வந்த பகை மாறும். கணவன்–மனைவிக்குள் அன்னியோன்யம் அதிகரிக்கும். இடம், வீடு வாங்குவது சம்பந்தமாக எடுத்த முயற்சிகளில் அனுகூலம் உண்டு. வாக்கு ஸ்தானத்தில் செவ்வாயும், சனியும் இணைந்திருப்பதால், கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது.கொள்கைப் பிடிப்பைத் தளர்த்திக் கொள்ளுங்கள். குழந்தைகள் படிப்பில் தேர்ச்சி பெற்று பாராட்டுகளைப் பெறுவர்.

சந்திராஷ்டம நாட்கள்: ஜூலை 1, 2.

பரிகாரம்: வெள்ளிதோறும் மாரியம்மன் ஆலயத்தில் அன்னதானம் செய்து வரவும்.

பணத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: ஜூன்: 17,18,24,25 ஜூலை: 3,4,5,8,9

மகிழ்ச்சி தரும் வண்ணம்: கிரே.


viruchigam

விருச்சிகம்: 

ஒவ்வொரு காரியத்தையும் செய்து முடிக்க சிறிது போராட்டத்தினை சந்திக்க நேரிடும். ஒரு சில காரியங்களில் உடனிருப்போராலேயே தடைகள் உண்டாகக் காண்பீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்யப்போய் தர்மசங்கடமான நிலைக்கு ஆளாகலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவி வரும். பொருள் வரவும் சேமிப்பு நிலையும் தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வரும். நெடுநாளாக விருப்பம் கொண்டிருந்த ஆடம்பரப் பொருள் ஒன்றினை இந்த மாதத்தில் என்ன விலை கொடுத்தேனும் வாங்கி விடுவீர்கள். பேச்சுக்களில் கலகலப்பான வார்த்தைகள் இடம்பெறும். உடன்பிறந்தோரின் விருப்பத்தினை நிறைவேற்ற முயற்சிப்பீர்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் பகல் நேரத்தில் சரிவர இயங்காமலும், இரவு நேரத்தில் சாதகமாகவும் செயல்பட்டு வரும்.

அவ்வப்போது சிறிது தூரப் பிரயாணங்களைச் செய்ய வேண்டியிருக்கும். மாணவர்கள் கல்வி நிலையில் தங்கள் எழுத்துத் திறனின் மூலம் நல்ல முன்னேற்றம் கண்டு வருவார்கள். உறவினர்களின் சந்திப்பின் மூலம் மனமகிழ்ச்சி காண்பீர்கள். பிள்ளைகள் உங்கள் எதிர்பார்ப்பிற்கு ஏற்றவாறு செயல்பட்டு வருவார்கள். ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் உடல்நிலையில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். கடன் கொடுக்கல் வாங்கலை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. வாழ்க்கைத்துணையின் பெயரில் புதிய சொத்துகள் வாங்குவதற்கு கால நேரம் சாதகமாக அமையும். குடும்பப் பெரியோர்களின் வார்த்தைகளுக்கு மிகுந்த மதிப்பளித்து செயல்பட்டு வருவீர்கள். தொழில்முறையில் மற்றவர்களை சார்ந்திருக்க வேண்டிய சூழல் நிலவும். உத்யோகஸ்தர்கள் உடன் பணிபுரிவோரை அனுசரித்துச் செல்ல வேண்டியது அவசியம். அடுத்தவர்களுடன் எச்சரிக்கையுடன் பழக வேண்டிய மாதம் இது.

பெண்களுக்கான சிறப்பு பலன்கள்

உங்களுக்கு வசதி, வாய்ப்புகள் அதிகரிக்கும் மாதம் இது. பொன், பொருட்கள் வாங்கப் போட்ட திட்டம் நிறை வேறும். ஆரோக்கியத் தொல்லை அகலும். சுப விரயங்கள் அதிகரிக்கும் நேரம் என்பதால், சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். கணவன் – மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். குழந்தைகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். செவ்வாய் வக்ர நிவர்த்தியாவதால் செல்வாக்கு மேலோங்கும். பொதுநலத்தில் உள்ளவர்களுக்கு புதிய பதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள், உயர் அதிகாரிகளின் பாராட்டுக்கு ஆளாவார்கள்.

சந்திராஷ்டம நாட்கள்: ஜூலை 3, 4.

பரிகாரம்: நாகசுப்ரமணிய ஸ்வாமியை வழிபட்டு வாருங்கள்.

பணத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: ஜூன்: 15,20,21,22,24,25 ஜூலை: 5,6,7,10,12

மகிழ்ச்சி தரும் வண்ணம்: ரோஸ்.


dhanusuதனுசு:

பலனை உடனடியாக எதிர்பாராது தொடர்ந்து கடமையச் சரிவர செய்து வாருங்கள். ராசிநாதன் குரு பகவானோடு இணைவினைப் பெற்றிருக்கும் ராகுவினால் தைரியமும், மன உறுதியும் அதிகரிக்கக் காண்பீர்கள். அடுத்தவர்கள் செய்யத் தயங்கும் காரியத்தினையும் மிகுந்த தைரியத்துடன் செய்து முடிப்பீர்கள். புதிய சொத்துகளை வாங்க எண்ணும் வகையில் பொருள் வரவு நிலை உயரத் துவங்கும். புதிய வீடு, வாகனம் வாங்க முயற்சிப்போருக்கு வங்கி ரீதியாக கடனுதவி கிடைப்பதில் தடையேதும் இராது. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவி வரும். பேசும் வார்த்தைகளில் நகைச்சுவை உணர்வு அதிகமாக வெளிப்படும். கௌரவம் கருதி செய்ய வேண்டிய செலவுகள் அதிகரிக்கக் கூடும்.

ஏ.சி., ஃப்ரிட்ஜ் போன்ற குளிர்சாதனப் பொருட்கள் வாங்கும் வாய்ப்பு உண்டு. உடன்பிறந்தோரால் ஒரு சில உபத்திரவத்தினை சந்திக்க நேரிடும். தகவல் தொடர்பு சாதனங்கள் சமயத்தில் செயலிழந்து ஒரு சில இழப்புகளைத் தோற்றுவிக்கலாம். முன்பின் தெரியாத நபர்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பது கூடாது. வண்டி, வாகனங்கள், பிரயாணங்கள் ஆகிய இனங்களில் ஆதாயம் காண்பீர்கள். பிள்ளைகளின் செயல்கள் உங்கள் கௌரவத்தினை உயர்த்தும் வகையில் அமையும். உஷ்ண உபாதையால் உடல்நிலையில் பிரச்னைகள் தோன்றலாம். தொழில்முறையில் ஒரு சில இடையூறுகளை எதிர்கொள்ள நேரிடும். உத்யோகஸ்தர்கள் கீழ்நிலைப் பணியாளர்களிடம் அளவோடு பழகுவது நல்லது. அலைச்சலைக் கண்டாலும் வெற்றி காணும் மாதம் இது.

பெண்களுக்கான சிறப்பு பலன்கள்

சுப விரயங்கள் அதிகரிக்கும் மாதம் இது. துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். குரு பார்வையால் குழப்பங்களில் இருந்து விடுபடுவீர்கள். கணவன் – மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். மூன்றாம் நபர் குடும்ப விஷயத்தில் குறுக்கிடுவதைத் தவிர்ப்பது நல்லது. உடன்பிறப்பு களோடு பகை பாராட்டாமல் நடந்து கொள்ளுங்கள். வீடுமாற்றம் ஒருசிலருக்கு எளிதில் அமையும். பிள்ளைகளின் கல்யாணக் கனவுகளை நனவாக்குவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்போடு முன்னேற்றம் காண்பீர்கள். சுப பலத்தால் பதவிகள் கிடைக்கலாம்.

சந்திராஷ்டம நாட்கள்: ஜூலை 5, 6, 7.

பரிகாரம்: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரரை மானசீகமாக வணங்கி வாருங்கள்.

பணத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: ஜூன்: 16,17,24,25,28,29 ஜூலை: 8,9,12,13

மகிழ்ச்சி தரும் வண்ணம்: மஞ்சள்.


magaramமகரம்: 

தேவையற்ற விரயத்தினைத் தவிர்க்க அணுகுமுறையில் பொறுமையை அவசியம் கடைபிடித்து வரவும். உங்களது ஆலோசனையை எதிர்பார்த்துக் காத்திருப்போரின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதிகப்படியான செலவினங்களால் கையிருப்பு கரையக் கூடும். குடும்பத்தில் அமைதி நிலவி வரும். உங்களது திட்டங்கள் செயல்வடிவம் பெறுவதில் காலதாமதம் உண்டாகும். அடுத்தவர்களின் ஒத்துழைப்பின்றி நீங்களே தனித்துச் செயல்பட வேண்டிய சூழல் உருவாகலாம். முக்கியமான பணிகளுக்கு இடைத்தரகர்களை நம்பாது நேரடியாகச் செயலில் இறங்குவது நல்லது. தகவல் தொடர்பு சாதனங்கள் முக்கியமான நேரத்தில் செயலிழந்து உங்களுக்கு சிரமத்தினைத் தரலாம்.

மாணவர்கள் கல்விநிலையில் நல்லதொரு முன்னேற்றத்தினைக் காண்பார்கள். வண்டி, வாகனங்கள், பிரயாணங்கள் ஆகியவற்றால் ஆதாயம் உண்டாகும். தொழில்முறையில் புதிய முயற்சிகளைப் புகுத்த முற்படுவீர்கள். உத்யோகஸ்தர்கள் அலுவல் பணியில் கீழ்நிலைப் பணியாளர்களை அனுசரித்துச் செல்ல வேண்டியது அவசியம். உயர்பதவியில் உள்ளோர் அடுத்தவர்களின் பணியையும் சேர்த்துச் செய்ய வேண்டியிருக்கும். சுயதொழில் செய்வோர் அதிகப்படியான அலைச்சலை சந்திக்க நேர்ந்தாலும் சிறப்பான தனலாபத்தினைக் கண்டு வருவார்கள். உங்களுக்குத் தெரிந்த நபர் ஒருவருக்கு மருத்துவச் செலவிற்காக நிதியுதவி செய்ய வேண்டியிருக்கும். நண்பர் என நினைத்திருந்த ஒரு நபர் உங்களுக்கு எதிராகச் செயல்படும் வாய்ப்பு உண்டு. நிதானத்துடன் செயல்பட்டு வெற்றி காண வேண்டிய மாதம் இது.

பெண்களுக்கான சிறப்பு பலன்கள்

தனாதிபதி வக்ர இயக்கத்தில் இருப்பதால், இந்த மாதம் பற்றாக்குறை அதிகரிக்கும். கொடுத்த கடனை வாங்க முடிய வில்லையே, வாங்கிய கடனைக் கொடுக்க முடியவில்லையே என்று அங்கலாய்த்துக் கொள்வீர்கள். புத, சுக்ர பரிவர்த்தனையால் பிள்ளைகளின் முன்னேற்றம் கூடுதலாக இருக்கும். உதிரி வருமானங்கள் வந்து சேரும். கணவன்–மனைவிக்குள் அனுசரித்துச் சென்றால் தான் அன்னியோன்யம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். அஷ்டமத்து குரு மாறும் வரை அமைதியையும், பொறுமையையும் கடைப்பிடிப்பது நல்லது.

சந்திராஷ்டம நாட்கள்: ஜூலை 8, 9.

பரிகாரம்: விநாயகப்பெருமானுக்கு சிதறு தேங்காய் உடைத்து செயலைத் துவக்குங்கள்.

பணத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: ஜூன்: 18,19,26,27,29,30 ஜூலை: 10,11,15

மகிழ்ச்சி தரும் வண்ணம்: கருநீலம்.


kumbamகும்பம்: 

பலருக்கும் பலவிதமாக இதுநாள் வரை உதவி செய்து வந்ததற்கான பிரதிபலனைக் காண உள்ளீர்கள். ஒரு சில செயல்களில் பிடிவாதத்தினைத் தவிர்த்து ஆளுக்குத் தகுந்தாற்போல் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. வரவிற்கு முன்னதாக செலவினங்கள் வரிசையில் காத்து நிற்கும். தனாதிபதி குரு ராகுவோடு இணைந்திருப்பதால் பொருளாதார நிலையில் இறக்கம் உண்டாகாது. குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவி வரும். உறவினர்களுடனான சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். உடன்பிறந்தோர் உதவிகரமாகச் செயல்பட்டு வருவார்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் பொழுதுபோக்கு அம்சமாகப் பயன் தரும்.

மாணவர்கள் கல்வி நிலையில் சிறப்பான முன்னேற்றத்தைக் கண்டு வருவார்கள். வண்டி, வாகனங்கள், பிரயாணங்கள் ஆகியவற்றால் ஆதாயம் உண்டாகும். முக்கியமான பிரச்சினைகளில் பிள்ளைகளின் ஆலோசனைகள் பயன் தரும். அவர்களது செயல்கள் உங்கள் கௌரவத்தினை உயர்த்தும் வகையில் அமையும். வாழ்க்கைத்துணை உங்கள் எண்ண ஓட்டத்தினைப் புரிந்து கொண்டு செயல்பட்டு வருவார். குடும்பத்தினரோடு உல்லாசப் பயணம் செல்வதற்கான வாய்ப்பு உண்டு. பெற்றோரின் உடல்நிலையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. தொழில் முறையில் ஒரு சில தடைகளை சந்திக்க நேரிடும். உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் கருத்து வேறுபாடு கொள்ளும் வாய்ப்பு உண்டு. சுயதொழில் செய்வோர் நல்ல லாபம் கண்டு வருவார்கள். நற்பலன்களைக் காணும் மாதம் இது.

பெண்களுக்கான சிறப்பு பலன்கள்

கல்யாண வாய்ப்புகள் கைகூடும் மாதம் இது. குரு பார்வையால் குழப்பங்கள் தீரும். குடியிருக்கும் வீட்டால் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். பணவரவு திருப்திகரமாக அமையும். தன்னம்பிக்கையோடு செயல்படுவீர்கள். தாய் வர்க்கத்தினராலும், கூடப் பிறந்தவர்களாலும் கூடுதல் நன்மை கிடைக்கும். கணவன்–மனைவிக்குள் பாசம் கூடும். அன்னியோன்யம் அதிகரிக்கும். புத்திர விருத்திக்கான அறிகுறிகள் தென்படும். புதன், சுக்ரன் பரிவர்த்தனை யோகத்தால் உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சலுகைகள் அதிகம் கிடைக்கும். வீடு வாங்கும் யோகம் உண்டு.

சந்திராஷ்டம நாட்கள்: ஜூலை 10, 11, 12.

பரிகாரம்: சனிக்கிழமையன்று பெருமாளை வழிபட்டு வாருங்கள்.

பணத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: ஜூன்: 16,17,21,22,27,28 ஜூலை: 2,3,12,13

மகிழ்ச்சி தரும் வண்ணம்: ஆரஞ்சு.


meenamமீனம்: 

எந்த ஒரு விஷயத்திலும் பதறாது செயல்படுவதன் மூலம் வெற்றி காண இயலும் என்பதை அனுபவ பூர்வமாக உணர்ந்து வருவீர்கள். அதிகமாகப் பேசுவதை விட அளவாகப் பேசுவதே நல்லது என்பதை நடைமுறை வாழ்க்கையில் கடைப்பிடித்து மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக நிற்பீர்கள். உங்கள் கருத்துகளை எழுத்துக்களாக வெளிப்படுத்துவதன் மூலம் நற்பெயர் காண்பீர்கள். குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை நிலவி வரும். பொருள் வரவு நிலை ஏற்றத்தாழ்வு இன்றி சீராக இருந்து வரும். தகவல் தொடர்பு சாதனங்கள் தொழில்முறையில் துணை நிற்கும். வண்டி, வாகனங்களை இயக்கும்போது கூடுதல் கவனம் தேவை.

பிரயாணத்தின்போது பொருளிழப்பு உண்டாவதற்கான வாய்ப்பிருப்பதால் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். பண விவகாரங்களில் மிகுந்த கவனம் தேவை. அடுத்தவர்களை நம்பி கடன் கொடுப்பதை சிறிது காலத்திற்குத் தவிர்ப்பது நல்லது. வாழ்க்கைத்துணையோடு சிறுசிறு கருத்து வேறுபாடு தோன்றி மறையும். மருத்துவச் செலவுகள் தோன்றும் வாய்ப்பு உண்டென்பதால் உடல்நிலையில் கவனம் தேவை. முக்கியமான பணிகளில் நண்பர்களின் உதவியை சார்ந்திருக்க வேண்டியிருக்கும். கௌரவம் கருதி செய்ய வேண்டிய செலவுகள் அதிகரிக்கக் கூடும். தொழில்முறையில் புதிய நண்பர்களின் இணைவு பல புதிய பாடங்களைக் கற்றுத் தரும். சுறுசுறுப்பான செயல்பாடுகளின் மூலம் அலுவலகத்தில் நற்பெயர் கண்டு வருவீர்கள். சரிசம பலன்களைக் காணும் நேரம் இது.

பெண்களுக்கான சிறப்பு பலன்கள்

விட்டுக் கொடுத்துச் செல்வதன் மூலமே விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ள இயலும். செவ்வாய், சனி சேர்க்கையால் கோபம் அதிகரிக்கலாம். உடன் பிறந்தவர்களின் பிரச்சினைகளை சமாளிக்க வேண்டியதிருக்கும். கணவன்– மனைவிக்குள் அனுசரித்துச் செல்வதன் மூலமே அமைதி காண முடியும். வீடுமாற்றங்கள் வந்து சேரலாம். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. உடன்பிறப்புகள் உதட்டளவில் பேசிச்சிரிப்பார்கள். உஷ்ண நோய் உடலை ஆக்கிரமிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள், இடமாறுதல் கேட்டு விண்ணப்பிக்க முன்வருவர். சகிப்புத் தன்மையின் மூலமே சந்தோஷத்தை வரவழைத்துக் கொள்ள இயலும்.

சந்திராஷ்டம நாட்கள்: ஜூன் 15, 16, 17, ஜூலை 13, 14.

பரிகாரம்: லக்ஷ்மி நரசிம்மரை வழிபட்டு வாருங்கள்.

பணத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: ஜூன்: 18,19,24,25,29,30 ஜூலை: 4,5,15

மகிழ்ச்சி தரும் வண்ணம்: மஞ்சள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here