தமிழ் மாத ராசிபலன் – 16.11.2016 முதல் 15.12.2016 வரை

தமிழ் மாத ராசிபலன் – 16.11.2016 முதல் 15.12.2016 வரை

275

mesahamமேசம்: எடுத்த காரியத்தினை வெற்றிகரமாகச் செயல்படுத்த பல்வேறு விதமான தடைகளைச் சந்திக்க நேர்ந்தாலும், மனம் தளராது கடமையைச் செய்து வருவதால் காரிய வெற்றி சாத்தியமாகும். 11ல் அமர்ந்திருக்கும் கேது விரக்தியான எண்ணங்களைத் தருவார். தனாதிபதி சுக்கிரனின் நிலை சிறப்பான பொருள் வரவினைத் தந்தாலும், ஆடம்பர செலவுகளையும் உண்டாக்கும். உடன்பிறந்தோரால் ஒரு சில இன்னல்களை சந்திக்க நேரலாம். தகவல் தொடர்பு சாதனங்கள் உரிய நேரத்தில் பழுதாகி சிரமத்தைத் தரும்.

முன்பின் தெரியாத நபர்களால் ஏமாற்றத்திற்கு உள்ளாகும் வாய்ப்பு உண்டு என்பதால் புதிய மனிதர்களிடம் எச்சரிக்கை தேவை. இந்த மாதத்தில் அநாவசியமான பிரயாணங்களை அவசியம் தவிர்க்க வேண்டும். வண்டி, வாகனங்களின் பராமரிப்பு செலவு அதிகரிக்கும். மாணவர்கள் அயராது உழைக்க வேண்டியது அவசியம். பிள்ளைகளால் சற்று கூடுதல் செலவுகளை சந்திக்க நேர்ந்தாலும் அவர்களின் செயல்வேகத்தினைக் கண்டு பெருமிதம் கொள்வீர்கள். தத்துவ சிந்தனைகள் மனதை ஆக்கிரமிக்கும். மாதத்தின் இறுதியில் ஆன்மிகப் பணிகளுக்காக அதிகம் செலவழிக்க நேரிடலாம்.

சுயதொழில் செய்வோர் 15ம் தேதிக்குப் பிறகு திருப்புமுனையைக் காண்பார்கள். கலைத்துறையினர் டிசம்பர் 4ம் தேதி முதல் வாய்ப்புகள் வரக் காண்பர். சரிசம பலன்களை அனுபவிக்கும் மாதம் இது.

பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்:

குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மனநிறைவு ஏற்படும். நீண்ட நாட்களாக நடைபெறாத சில சுபகாரிங்கள் இப்பொழுது படிப்படியாக நடபெறத் தொடங்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்தபடியே சலுகைகள் கிடைக்கும். திசாபுத்தி பலமிழந்தவர்களுக்கு ஊர் மாற்றங்கள், இடமாற்றங்கள் வந்து சேரும். கணவன்–மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். இருவர் முயற்சியிலும் வரும் பணத்தைக் கொண்டு உங்கள் லட்சியங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையிலேயே வைத்துக் கொள்வது நல்லது. புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று தெய்வங்களை தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: நவம்பர்: 16, 17, 20, 21, டிசம்பர்: 1, 2, 3, 7, 8, 13, 14

மகிழ்ச்சி தரும் வண்ணம்: சிவப்பு.

சந்திராஷ்டம நாட்கள்: நவம்பர் 28, 29, 30.

பரிகாரம்: கார்த்திகைச் செவ்வாயில் முருகப் பெருமானுக்கு விளக்கேற்றி வழிபடுங்கள். 


rishabamரிஷபம்: நீங்கள் செய்ய நினைக்கும் காரியத்தினில் நேரடியாக ஈடுபடாமல் அடுத்தவர்களின் துணையோடு பின்னால் இருந்து செயல்பட வேண்டியிருக்கும். தனாதிபதியின் சாதகமான சஞ்சார நிலை நவம்பர் 25ம் தேதி வரை நல்ல பண வரவினைத் தரும். அதன் பின் செலவுகளை சமாளிக்கும் வகையில் வரவு நிலை தொடரும். குடும்பத்தில் சலசலப்புகளுக்கிடையே கலகலப்பும் இருந்து வரும். பேச்சினில் வெளிப்படும் விவேக சிந்தனைகள் உங்கள் கௌரவத்தினை உயர்த்தும். மனதில் அவ்வப்போது தோன்றும் சஞ்சலங்கள் குரு பார்வையால் காணாமல் போகும்.

உடன்பிறந்தோருக்கு முக்கியமான நேரத்தில் உதவி செய்ய வேண்டிய சூழல் உருவாகும். தகவல் தொடர்பு சாதனங்கள் பகல் பொழுதினில் சற்று சிரமத்தினையும், இரவினில் சாதகமான பலன்களைத் தரும் வகையிலும் அமையும். பிரயாணத்தின்போது உண்டாகும் புதிய நட்புறவுகள் நெடுநாளைக்குத் தொடரும் வாய்ப்பு உண்டு. எனினும் அநாவசிய பிரயாணத்தைத் தவிர்ப்பது நல்லது. மாணவர்களின் கல்வி நிலை கூட்டுப்பயிற்சியின் மூலம் உயர்வடையும். பிள்ளைகளின் விவேகமான செயல்களைக் கண்டு பெருமிதம் கொள்வீர்கள். வாழ்க்கைத்துணையின் விருப்பத்தினை நிறைவேற்றித் தருவதற்கான வாய்ப்பு மாதத்தின் பிற்பாதியில் உருவாகும். நண்பர்களால் ஒரு சில சங்கடங்களை சந்திக்கும் வாய்ப்பு உண்டு. பூர்வீக சொத்துகளில் பாகப்பிரிவினை பற்றிய புதிய பிரச்னைகள் முளைக்கக்கூடும். கலைத்துறையினர் தங்கள் முயற்சிக்காக கூடுதலாக செலவழிக்க வேண்டி வரும். கூட்டுத்தொழில் பிற்பாதியில் லாபத்தினைத் தரும். மருத்துவச் செலவுகள் தோன்றும் வாய்ப்பு உண்டென்பதால் உடல்நிலையில் கவனம் தேவை. சரிசம பலன்களைக் காணும் மாதம் இது.

பெண்களுக்கான சிறப்பான பலன்கள்:

இம்மாதம் புதிய வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். புகழ்மிக்கவர்களின் தொடர்பால் பணப்பிரச்சினைகள் அகலும். மாமன் வழியில் இருந்த மனக்கசப்புகள் மாறும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். கணவன்–மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். கடந்த காலத்தில் நடைபெறாத சில காரியங்கள் இம்மாதத்தில் துரிதமாக நடைபெறும். அலுவலகப் பணியில் இருந்த அல்லல்கள் அகலும். கடன் அட்டைகள் மற்றும் காசோலைகளைக் கையாளும் பொழுது கவனமுடன் செயல்படுவது நல்லது. குழந்தைகளின் கல்விக்காகவும், உத்தியோக நலன் கருதியும் எடுத்த முயற்சிகள் அனுகூலமாக நடைபெறும். மாதத்தின் மையப் பகுதியில் ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. 

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: நவம்பர்: 17, 18, 22, 23 டிசம்பர்: 5, 6, 8, 9, 14, 15

மகிழ்ச்சி தரும் வண்ணம்: ரோஸ்.

சந்திராஷ்டம நாட்கள்: டிசம்பர் 1, 2.

பரிகாரம்: தந்வந்திரி பகவானை வணங்கி வர ஆரோக்யம் சீராக இருக்கும். 


mithunamமிதுனம்: குடும்பத்தில் சலசலப்பும், கலகலப்பும் கலந்திருக்கும். கடன் பிரச்னைகள் தலைதூக்கும் நேரமிது என்பதால் பொருளாதார ரீதியாக சிறிது சிரமத்தினைக் காண்பீர்கள். மூத்த சகோதரரின் வழியில் ஆதாயம் உண்டாகும். தகவல் தொடர்பு சாதனங்கள் உங்கள் பணிகளுக்கு பக்கபலமாய் இருந்து வரும்.

நண்பர்களின் வழியில் ஆதாயம் காணும் நீங்கள் மாதத்தின் இறுதியில் அவர்களால் ஒரு சில சங்கடத்திற்கும் ஆளாவீர்கள். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றத் தினைக் காண சற்று சிரமப்பட வேண்டியிருக்கும். தாயார் வழி உறவினர்களால் குடும்பத்தில் கலகங்கள் தோன்றும் வாய்ப்பு உண்டு. வண்டி, வாகனங்களை இயக்கும்போது கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். ஆறாம் இடத்தின் வலிமையால் உடல்நிலையில் சிரமத்தினைக் காண நேரிடலாம். சாதாரண காய்ச்சல் போன்றவற்றையும் அலட்சியப்படுத்தாது உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. வாழ்க்கைத்துணையோடு கருத்து வேறுபாடு தோன்றி மறையும். தொழில்முறையில் அலைச்சல் அதிகரிக்கும். கலைத்துறையினரின் மனதில் எழும் சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும். சொத்து விவகாரங்கள் முடிவிற்கு வரும். விடாமுயற்சியின் மூலம் வெற்றி காண வேண்டிய மாதம் இது.

பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்:

இம்மாதம் ஆடை, ஆபரண சேர்க்கை அதிகரிக்கும் மாதமாகும். பக்கத்து வீட்டாரின் பகை மாறும். தக்க சமயத்தில் தோழிகள் கைகொடுத்து உதவுவார்கள். கணவன்–மனைவிக்குள் பாசமும், நேசமும் அன்யோன்ய உறவும் ஏற்படும். குழந்தைகள் குடும்பப் பொறுப்புணர்ந்து நடந்து கொள்வர். சேமிப்பின் மூலம் தங்க நகைகளை வாங்க முன்வருவீர்கள். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் பெயரிலேயே சொத்துக்கள் வாங்கச் சம்மதிப்பர். தாய்வழி உறவிலும், சகோதர உறவிலும் பகை பாராட்டாமல் நடந்து கொள்வது நல்லது. 

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: நவம்பர்: 19, 20, 21, 24, 25 டிசம்பர்: 7, 8, 10, 11

மகிழ்ச்சி தரும் வண்ணம்: கிளிப்பச்சை.

சந்திராஷ்டம நாட்கள்: டிசம்பர் 3, 4, 5.

பரிகாரம்: ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதானம் செய்துவர மனக்கவலை தீரும்.


kadakamகடகம்: ஒரே நேரத்தில் பல கேள்விகள் எழுந்தாலும் ஒன்றோடொன்று குழப்பிக் கொள்ளாமல் எல்லாவற்றிற்கும் தெளிவான பதிலைத் தேர்ந்தெடுத்துச் சொல்வதில் வல்லவராக திகழ்வீர்கள். அடுத்தவர்களுக்கு நீங்கள் சொல்லும் ஆலோசனைகள் அற்புதமான நன்மையை ஏற்படுத்தித் தரும். பேசும் வார்த்தைகளில் வெளிப்படும் கறார்தன்மை உங்களின் நேர்மையையும், ஒழுக்கத்தையும் பறைசாற்றும். குடும்பத்தில் சலசலப்பபும் கலகலப்பும் இணைந்திருக்கும். தனாதிபதியின் சாதகமான அமர்வு நிலை பல்வேறு வழிகளில் பொருள்வரவினைப் பெற்றுத் தரும். எனினும் மாதத்தின் இறுதியில் கடன் பிரச்னைகள்தலையெடுக்கலாம். உடன்பிறந்தோருடன் இணைந்து செய்யும் செயல்களில் வெற்றி காண்பீர்கள்.

பிள்ளைகளின் செயல்கள் எதிர்பார்ப்பிற்கு மாறாக அமைவதைக் கண்டு வருத்தம் உண்டாகும். சதா டென்ஷனாக இருப்பதால் உடல்நிலையில் சிரமம் காண்பீர்கள். சளி, இருமல் சார்ந்த பிரச்னைகளால் அவதிப்பட நேரும். தகவல் தொடர்பு சாதனங்களின் மூலம் குறிப்பிடத்தகுந்த நன்மை கண்டு வருவீர்கள். வண்டி, வாகனங்கள், பிரயாணங்கள் போன்ற இனங்களால் மனமகிழ்ச்சி உண்டாகும். மாணவர்களின் கல்வி நிலை சிறப்பான முன்னேற்றத்தினைக் காணும். புதிய சொத்துக்கள் வாங்குவதற்கான வாய்ப்பு உண்டு. அதே நேரத்தில் ஏற்கெனவே இருந்து வரும் அசையாச் சொத்துக்களில் புதிய பிரச்னைகளை சந்திக்க நேரலாம். தொழில்முறையில் போட்டியாளர்களை எதிர்கொள்ளும் நேரம் இது. உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் உடன்பணிபுரிவோரை அனுசரித்துச் செல்வது நல்லது. கூட்டுத்தொழில் செய்வோர் கணக்கு வழக்குகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். கலைத்துறையினருக்கு டிசம்பர் 4ம் தேதி முதல் தடைகள் நீங்கும். நற்பலன்களைக் காணும் மாதம் இது.

பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்:

இம்மாதம் எதிர்பார்த்த காரியங்கள் எதிர்பார்த்தபடியே நடைபெறும். நெஞ்சம் மகிழும் சம்பவங்கள் நிறையவே நடைபெறும். மாதத் தொடக்கத்தில் உத்தியோகம், தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றம் காண்பீர்கள். எந்தக் காரியத்தையும் எடுத்தோம், கவிழ்த்தோம் என்று செய்துமுடிப்பீர்கள். கணவன்–மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். வாழ்க்கைத் துணையின் வேலை சம்பந்தமாக எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை வந்து சேரும். அவர்களுக்கு விருதுகள் மற்றும் பாராட்டுக்கள் கிடைக்கலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். மாதக் கடைசியில் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. 

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: நவம்பர்: 16, 17, 22, 23, 26, 27, டிசம்பர்: 8, 9, 13, 14

மகிழ்ச்சி தரும் வண்ணம்: ஆனந்தாநீலம்.

சந்திராஷ்டம நாட்கள்: டிசம்பர் 6, 7.

பரிகாரம்: அபிராமி அந்தாதி பாடல்களைக் கொண்டு அம்பிகையை வழிபட மனச்சஞ்சலம் நீங்கும்.


simamசிம்மம்: ஒவ்வொரு விஷயத்திலும் திட்டமிட்டுச் செயல்பட்டு வருவதால் தோல்வி என்ற வார்த்தைக்கு இடமிருக்காது. ஆயினும் நீங்கள் மிகவும் நம்பிக்கை வைத்துள்ள நபர் ஒருவர் உங்களின் எதிர்பார்ப்பிற்கு மாறாக நடக்கலாம். குடும்பத்தில் கலகலப்பும், சலசலப்பும் கலந்திருக்கும். கவனக்குறைவாக நீங்கள் பேசும் வார்த்தைகள் சங்கடத்தினைத் தரலாம். சனி-சூரியனின் இணைவு சிந்தனையில் தேவையற்ற குழப்பத்தினைத் தரக்கூடும். இந்த மாதத்தில் அவ்வப்போது சிறிதுதூர பிரயாணங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். மாணவர்களின் கல்வி நிலை சிறப்பாக இருந்து வரும்.

புதிய சொத்துகள் வாங்குதல், வீடு கட்டுதல் போன்ற முயற்சியில் உள்ளோருக்கு வங்கி சார்ந்த உதவிகள் கிட்டும். வண்டி, வாகனத்தை புதிதாக மாற்றிக்கொள்ள எண்ணுவோருக்கு நேரம் சாதகமாக அமையும். பிள்ளைகளின் வாழ்க்கை முறையை உயர்த்த முயற்சிப்பீர்கள். நெருங்கிய நண்பர் ஒருவருக்கு கடன் பிரச்னையில் உதவி செய்ய வேண்டியிருக்கும். வாழ்க்கைத்துணையின் வார்த்தைகள் ஆதாயம் தரும் ஆலோசனையாக அமையும். தொழில்முறையில் புதிய முயற்சிகள் வெற்றி தரும். உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் பொறுப்பு உயரக் காண்பர். கனவுத்தொல்லைகளால் நிம்மதியான உறக்கம் கெடலாம். மாதத்தின் பிற்பாதியில் வீண்வம்பு, வழக்குகளால் தொல்லைகளை சந்திக்க நேரிடும். கலைத்துறையினர் புதிய வாய்ப்பினைப் பெறுவர். இடம், பொருள் அறிந்து பேச வேண்டியது அவசியம். வேகத்தினைத் தவிர்த்து விவேகத்தோடு செயல்பட்டால் வெற்றி நிச்சயம். நற்பலன்களை எதிர்கொள்ளும் வாரம் இது.

பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்:

இம்மாதம் உங்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். மாதமாகும். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். கருத்து வேறுபாடுகள் அகலும். குடும்ப ஒற்றுமைக்கு பாதிப்பு ஏற்படுத்தியவர்கள் விலகுவர். உங்கள் பெயரிலேயே சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. உறவினர்களின் உதவி கிடைத்து மகிழ்ச்சியடைவீர்கள். கணவன்–மனைவிக்குள் பாசமும், நேசமும் கூடும். பிள்ளைகளின் நீண்ட நாள் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். திருமண முயற்சிகளில் இருந்த தடை அகலும். பவுர்ணமி வழிபாட்டில் கவனம் செலுத்துவதன் மூலம் பலவித நன்மைகளைப் பெற இயலும். உத்தியோகத்தில் உள்ள பெண்கள் விருப்ப ஓய்வில் வெளிவந்து, சுயதொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவர். வீட்டிலிருந்தபடியே விரும்பும் தொழில் தொடங்கும் முயற்சி கைகூடும். 

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: நவம்பர்: 18, 19, 24, 25, 28, 29, 30 டிசம்பர்: 10, 11, 14, 15

மகிழ்ச்சி தரும் வண்ணம்: பச்சை.

சந்திராஷ்டம நாட்கள்: டிசம்பர் 8, 9.

பரிகாரம்: பிரதி வெள்ளி தோறும் பசுமாட்டிற்கு பூஜை செய்து வழிபடுங்கள். 


kanniகன்னி: பேசும் வார்த்தைகளில் முற்றிலும் புதிய கருத்துக்களைச் சொல்லி அடுத்தவர்களை சிந்தனைக்கு உள்ளாக்குவீர்கள். குடும்பத்தில் சலசலப்பும் கலகலப்பும் இணைந்திருக்கும். பொருளாதார முன்னேற்றத்தினைக் குறிக்கோளாகக் கொண்டு முழு முயற்சியுடன் செயல்பட்டு வருவீர்கள். அதீதமான சிக்கன நடவடிக்கைகளின் மூலம் அநாவசிய செலவுகளை முற்றிலும் குறைப்பீர்கள்.

அதே நேரத்தில் போலியான பொருட்களை வாங்கி பொருளிழப்பினை சந்திக்கும் வாய்ப்பு உண்டு. தகவல் தொடர்பு சாதனங்கள் பொழுதுபோக்கு அம்சங்களில் உதவியாக அமையும். உடன்பிறந்தோருடன் இணைந்து செயல்பட்டு நெடுநாளாக நிலுவையில் இருந்து வரும் குடும்பப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். மாணவர்கள் அடிக்கடி ஞாபகமறதித் தொந்தரவிற்கு ஆளாகும் வாய்ப்பு உண்டென்பதால் எழுத்துப் பயிற்சியில் ஈடுபட வேண்டியது அவசியமாகிறது. உடல்நிலையில் அவ்வப்போது கண்டு வரும் அசதியினைப் போக்க உடற்பயிற்சியை மேற்கொள்வது நல்லது. குடியிருக்கும் வீட்டினை அலங்கரிப்பதில் ஈடுபாடு உருவாகும். வாழ்க்கைத்துணையின் கருத்துக்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருவீர்கள். ஆன்மிக விவகாரங்களில் ஏமாற்றப்படுவதற்கான வாய்ப்பு உண்டு. ‘மெய்ப்பொருள் காண்பதறிவு’ என்பதை நினைவில் கொள்ளவும். தொழில்முறையில் புதிய செயல்திட்டங்களை வகுக்கும் நேரமாக இருக்கும். உத்யோகஸ்தர்கள் சகபணியாளர்களை அனுசரித்துச் செல்ல வேண்டியது அவசியம். சரிசம பலன்களைக் காணும் மாதம் இது.

பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்:

இம்மாதம் பயணங்களால் பலன் கிடைக்கும். மாதத் தொடக்கத்திலேயே வரும் தொலைபேசி வழித்தகவல் ஆதாயம் தருவதாக இருக்கும். தாய்வழி ஆதரவும் தக்கவிதம் கிடைக்கும். கூடப்பிறந்தவர்கள் உங்களுக்கு நன்மையை வழங்கக் காத்திருப்பர். கணவன்–மனைவிக்குள் விட்டுக்கொடுத்துச் செல்வதன் மூலம் போராட்டங்கள் அகலும். பிள்ளைகளின் முன்னேற்றத்திற்கு பக்கபலமாக இருப்பவர்கள் கைகொடுத்து உதவுவர். 

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: நவம்பர்: 16, 17, 20, 21, 27, 28 டிசம்பர்: 12, 13

மகிழ்ச்சி தரும் வண்ணம்: ஆரஞ்ச்.

சந்திராஷ்டம நாட்கள்: டிசம்பர் 10, 11.

பரிகாரம்: புதன் தோறும் பெருமாள் கோயிலில் தயிர்சாதம் தானம் செய்து வரவும்.


thulamதுலாம்: உலக விஷயங்களை அனுபவ பூர்வமாக உணர்ந்திருப்பதால் பலர் உங்களை உதவி கேட்டு நாடி வரக்கூடும். உங்களின் ஆலோசனைகள் அடுத்தவர்களுக்கு பயனுள்ள வகையில் அமையும். இரண்டாம் இடமாகிய தன ஸ்தானம் வலிமை பெறுவதால் பொருளாதார நிலையில் சிறப்பான முன்னேற்றம் கண்டு வருவீர்கள். குடும்பத்தில் சலசலப்புகளுக்கிடையே கலகலப்பான சூழ்நிலை இருந்து வரும்.

உடன்பிறந்தோருக்கு உதவி செய்ய நேரிடும். தகவல் தொடர்பு சாதனங்கள் பயனுள்ள வகையில் அமையும். நண்பர்களோடு மாதத்தின் இறுதியில் ஆன்மிகப் பிரயாணத்திற்கான வாய்ப்பு உண்டு. தொலைதூரப் பிரயாணத்தின்போது பொருளிழப்பு உண்டாகும் வாய்ப்பு உள்ளதால் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். மாணவர்கள் கல்வி நிலையில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். பிள்ளைகளின் முன்னேற்றத்திற்காக புதிய செயல்திட்டத்தில் இறங்குவீர்கள். கடன் பிரச்னைகள் கொஞ்சம், கொஞ்சமாக முடிவிற்கு வரும். வாழ்க்கைத்துணையின் செயல்களுக்கு பக்கபலமாக துணை நிற்பீர்கள். கலைத்துறையினருக்கு ஆடம்பர செலவுகள் அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கலில் அதிக கவனம் தேவை. தான, தர்ம காரியங்களுக்காக அதிகம் செலவழிக்க நேரிடும். தொழில்முறையில் சாமர்த்தியமிக்க செயல்பாடுகளால் ஆதாயம் காண்பீர்கள். நற்பலன்களை அனுபவிக்கும் மாதம் இது.

பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்:

இம்மாதம் உறவினர்கள் ஒத்துழைப்பு கூடுதலாக கிடைக்கும். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். ஆரோக்கியத் தொல்லை அகலும். வீடு மாற்றங்கள் விரும்பும் விதத்தில் அமையும். கணவன்–மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். உங்கள் சேமிப்பு கணவரது முன்னேற்றத்திற்கு கைகொடுக்கும். பிள்ளைகளின் முன்னேற்றம் கூடுதலாக இருக்கும். அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவீர் கள். மாதக் கடைசியில் சுபச்செலவுகள் அதிகரிக்கும். பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: நவம்பர்: 18, 19, 22, 23, 28, 29, 30 டிசம்பர்: 6, 7, 14, 15,

மகிழ்ச்சி தரும் வண்ணம்: கிரே.

சந்திராஷ்டம நாட்கள்: நவம்பர் 16, டிசம்பர் 12, 13.

பரிகாரம்: சுவாதி நட்சத்திர நாளில் நரசிம்மரை வழிபட நன்மை உண்டாகும். 


viruchigamவிருச்சிகம்: அடுத்தவர்களின் விமர்சனங்களைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் மனதில் தோன்றுவதை உடனுக்குடன் செயல்படுத்தி வருகிறீர்கள். எனினும் ஆழம் தெரியாமல் காலைவிடுவது நல்லதல்ல என்பதை நினைவில் கொள்ளவும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் கண்டு வரும் அதே நேரத்தில் பண விவகாரத்தில் முன்பின் தெரியாத புதிய நபர்களால் ஏமாற்றப்படும் சூழலுக்கு ஆளாக நேரிடலாம். குடும்பத்தில் அமைதியான சூழலுக்கு பங்கம் உண்டாகலாம். பணிச்சுமை அதிகரிக்கும் நேரம் என்பதால் குடும்பப் பொறுப்புகளை கவனிக்க இயலாது போகக்கூடும்.

உடன்பிறந்தோருடன் கருத்து வேறுபாடு உண்டாகும். தகவல் தொடர்பு சாதனங்கள் தக்க சமயத்தில் செயலிழந்து சிரமத்தினைத் தரும். கார்த்திகை மாதத்தின் இறுதியில் தொலைதூரப் பிரயாணத்திற்கான வாய்ப்பு உண்டு. இதுநாள் வரை விரோதம் பாராட்டி வந்த உறவுமுறை ஒன்று உங்களின் நட்புறவை நாடி வரக்கூடும். பிள்ளைகளின் ஆலோசனைகள் குடும்பப் பிரச்னைகளுக்குத் தீர்வாக அமையும். வாழ்க்கைத்துணையோடு தனிமையில் கலந்து ஆலோசிக்கும் நேரம் குறையலாம். பொழுதுபோக்கு அம்சங்களான கேளிக்கை, கொண்டாட்டங்களில் பங்குபெற இயலாமல் போகும். கலைத்துறையினர் பேச்சுத் திறமையின் மூலம் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். உத்யோகஸ்தர்கள் கடமை தவறாத செயல்பாட்டின் மூலம் பதவி உயர்விற்கான வாய்ப்பினைப் பெறுவார்கள். நற்பலன்களைக் காணும் மாதம் இது.

பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்:

இம்மாதம் வெற்றிப்படிக்கட்டின் விளிம்பில் ஏறும் மாதமாகும். கற்ற கல்விக்கேற்ற வேலை கிடைக்கும். கனிவாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். உற்றார், உறவினர் உதவிக்கரம் நீட்டுவர். உடல் ஆரோக்கியம் சீராகும். உடன்பிறப்புகள் உங்கள் எண்ணங்கள் பூர்த்தியாக வழிவகுப்பர். கணவன்–மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். குடும்பப் பெரியவர்கள் உங்கள் பெயரிலேயே வீடு வாகனம், வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவர். பிள்ளைகளின் முன்னேற்றம் கண்டு பெருமைப்படுவீர்கள். பிறந்த வீடும், புகுந்த வீடும் உங்களுக்கு பெருமை சேர்க்கும் மாதமிது. 

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: நவம்பர்: 19, 20, 21, 24, 25, 26 டிசம்பர்: 1, 2, 3, 6, 7, 8

மகிழ்ச்சி தரும் வண்ணம்: ரோஸ்.

சந்திராஷ்டம நாட்கள்: நவம்பர் 17, 18, டிசம்பர் 14, 15.

பரிகாரம்: அமாவாசை நாளில் ஆதரவற்றோருக்கு அன்னதானம் செய்யுங்கள்.


dhanusuதனுசு: வார்த்தைகளில் வலிமை நிறைந்த கருத்துக்கள் இடம்பெறும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தன ஸ்தானத்தின் வலிமையினால் சிறப்பான பொருள் வரவு தொடரும். அதே நேரத்தில் ஆடம்பர செலவுகளும் அதிகரிக்கும். நெடுநாட்களாக நிலுவையில் இருந்து வரும் கடன்பிரச்னைகள்கொஞ்சம், கொஞ்சமாக முடிவிற்கு வரும். புதிய மனிதர்களுடனான தொடர்பு எதிர்கால வளர்ச்சிக்கு துணைபுரியும். வண்டி, வாகனங்களை இயக்கும்போது கவனம் தேவை.

புதிய வீடு கட்டும் முயற்சியில் உள்ளோர் ஒரு சில தடைகளை சந்திக்க நேரிடும். உறவினர்களோடு மனஸ்தாபம் கொள்ளும் வாய்ப்பு உண்டு. மாணவர்கள் கவனச் சிதறலைத் தவிர்த்து ஈடுபாட்டோடு படிக்க வேண்டியது அவசியம். பிள்ளைகளின் செயல்களில் வேகத்தோடு விவேகத்தினையும் காண்பீர்கள். சர்க்கரை நோய் உள்ளவர்கள் ரத்த அழுத்தத்தினை அவ்வப்போது பரிசோதித்துக் கொள்வது நலம் தரும். நண்பர்களை நம்பி ஒப்படைத்த காரியங்கள் நவம்பர் மாதத்தின் இறுதி வாரத்தில் முடிவிற்கு வரும். பூர்வீக சொத்துக்களில் புதிய பிரச்னைகள் தோன்றும். தொழில்முறையில் அதிக அலைச்சலுக்கு ஆளானாலும் அதற்குரிய தனலாபம் வந்து சேரும். கலைத்துறையினர் இந்த மாதத்தில் புதியதொரு திருப்புமுனையை சந்திப்பார்கள். மனதில் நற்சிந்தனைகளும், நல்லெண்ணங்களும் நிறைந்திருக்கும். சாஸ்திர சம்பிரதாயங்களில் அதிக ஈடுபாடு கொள்வீர்கள். நற்பலனைத் தரும் மாதம் இது.

பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்:

இம்மாதம் போராடும் நிலைமாறி புதிய திருப்பம் ஏற்படும். புதிய பொறுப்புகளும், பதவிகளும் வந்து சேரும். யாரோடும் பகை பாராட்டாமல் இருப்பது நல்லது.கணவன்– மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர் களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். பிள்ளைகளுக்குரிய கடமைகளைச் செய்ய முன்வருவீர்கள். ஆனால் வாரிசுகளால் சிலருக்கு சஞ்சலங்கள் ஏற்படலாம். குழந்தைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் பிரச்சினைகள் ஏற்படலாம். குடும்பச்சுமை கூடுதலாக இருக்கிறதே என்று கவலைப்படுவீர்கள். ஏழரைச் சனி நடைபெறுவதால் எதிலும் கவனம் தேவை. குறிப்பாக குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்லாதிருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சம்பள உயர்வு பற்றிய தகவல் வந்து சேரலாம். 

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: நவம்பர்: 22, 23, 24, 26, 27, டிசம்பர்: 5, 6, 8, 9

மகிழ்ச்சி தரும் வண்ணம்: மஞ்சள்.

சந்திராஷ்டம நாட்கள்: நவம்பர் 19, 20.

பரிகாரம்: அண்ணாமலையாரை மனதார நினைத்து வழிபட மன அமைதி கிட்டும். 


magaramமகரம்: எடுத்த காரியத்தை செய்து முடிக்கும்வரை ஓய்வில்லாமல் பணியாற்றுவீர்கள். பேசும் வார்த்தைகளிலும் செய்ய வேண்டிய பணி குறித்த கருத்துக்களையே அதிகமாக வெளிப்படுத்துவீர்கள். அநாவசிய பேச்சுக்களைத் தவிர்த்து ஆதாயம் தரும் வகையிலான வார்த்தைகளை பயன்படுத்தும் கலையினை அறிந்துகொள்வீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவி வரும். இந்த மாதத்தில் லாப ஸ்தானத்தின் வலிமை சிறப்பான பொருள் வரவினைத் தரும். அதே நேரத்தில் செலவினங்களும் வரிசையில் காத்து நிற்கும். குடும்பத்தினரின் நெடுநாளைய விருப்பங்களை நிறை வேற்றுவதிலும், தொலைதூரப் பிரயாணங் களிலும் அதிக செலவுகள் உண்டாகக் காண்பீர்கள்.

உடன்பிறந்தோருக்கு உதவி செய்ய நேரிடும். தகவல் தொடர்பு சாதனங்கள் சிறந்த பொழுதுபோக்கு அம்சங்களாகப் பயன்படும். உறவினர்களால் உண்டான கலகங்களை முடிவிற்குக் கொண்டு வருவதில் வெற்றி கிட்டும். மாணவர்கள் வினாக்களைப் புரிந்துகொண்டு விடையளிக்கும் கலையை அறிந்துகொள்வார்கள். சமுதாயத்தால் விரும்பத்தகாத மனிதர்களின் சேர்க்கை ஆபத்தினைத் தரும் என்பதை உணர வேண்டியது அவசியம். துஷ்டரைக் கண்டால் தூர விலகுவது நல்லது. ரத்தப்போக்கு, வயிற்றுவலி சார்ந்த உபாதைகளால் உடல்நிலையில் சிரமம் உண்டாகலாம். வாழ்க்கைத்துணை உங்கள் பணிகளுக்கு பக்கபலமாய் துணைநிற்பார். உத்யோகஸ் தர்கள் ஓய்வில்லாமல் செயல்பட்டு நற்பெயரை தக்கவைத்துக் கொள்வார்கள். கலைத்துறையினர் டிசம்பர் 4ம் தேதி முதல் நல்ல லாபத்தினைக் காண்பார்கள். கனவுத்தொல்லையால் உறக்கம் கெடலாம். பொறுப்புகள் கூடினாலும் நற்பலன்களைத் தரும் மாதம் இது.

பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்:

இம்மாதம் உடன்பிறப்புகளாலும், உடன்இருப்பவர்களாலும் அனுகூலம் கிடைக்கும் மாதமாகும். ஆரோக்கியத் தொல்லைகள் அகலும். பாதியில் நின்ற காரியங்கள் மீதியும் தொடரும். பிள்ளைகளின் வளர்ச்சி கண்டு ஆச்சர்யப்படுவீர்கள். கணவன்–மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு பெருகும். பொதுநலத்தில் உள்ளவர்கள் புதிய பொறுப்பு கிடைத்து மகிழ்ச்சி காண்பர். ஆஞ்சநேயர் வழிபாடு அல்லல் தீர்க்கும். யோகமான நாளில் அனுமனுக்கு வடைமாலை சாற்றினால் தடைகள் அகலும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய திருப்பம் ஏற்படும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவுடன் பணிபுரியும் வாய்ப்பு உண்டு.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: நவம்பர்: 16, 24, 25, 26, 28, 29, டிசம்பர்: 7, 8, 9, 11, 12

மகிழ்ச்சி தரும் வண்ணம்: பிரவுன்

சந்திராஷ்டம நாட்கள்: நவம்பர் 21, 22, 23.

பரிகாரம்: சனியன்று ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றி வழிபடுங்கள்.


kumbamகும்பம்: மாதத்தின் துவக்கத்தில் செவ்வாயால் அதிக அலைச்சலுக்கு ஆளானாலும் டிசம்பர் 7ம் தேதிக்குப் பிறகு தடைகளைத் தாண்டி வெற்றி காண்பீர்கள். கார்த்திகையின் கடைசி வாரத்தில் எல்லா விவகாரங்களிலும் இதுநாள் வரை கண்டு வந்த தடைகள் விலகி பணிகள் வேகமாக நடைபெறக் காண்பீர்கள். அரசாங்கக் காரியங்களில் இருந்து வந்த சுணக்கம் அகன்று எதிர்பார்த்துக் காத்திருந்த விஷயங்கள் எளிதில் நடைபெறும். தனாதிபதியின் நிலை வரவில் தடையை உண்டாக்கினாலும் சமாளிக்கும் திறனைத் தரும். பேச்சுக்களின் வலிமையை விட எழுத்து மூலம் தெரிவிக்கும் கருத்துக்களினால் நற்பெயர் காண்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவி வரும்.

உடன்பிறந்தோருக்கு சரியான சமயத்தில் ஆலோசனை வழங்கி உதவி செய்வீர்கள். உறவினர்களின் சந்திப்பால் நிலுவையில் இருந்து வரும் குடும்பப் பிரச்னைகள்முடிவிற்கு வரும். வண்டி, வாகனங்கள், பிரயாணங்கள் ஆகிய இனங்களில் ஆதாயம் உண்டாகும். மாணவர்களின் கல்வித் தரம் உயர்வடையும். பிள்ளைகளின் வாழ்வியல் தரத்தினில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்தினை காண்பீர்கள். குடும்பப் பெரியவர்களின் மன விருப்பத்தினை நிறைவேற்றுவீர்கள். வாழ்க்கைத்துணையின் செயல்கள் உங்கள் கௌரவத்தினை உயர்த்தும் வகையில் அமையும். பூர்வீக சொத்துக்களில் பாகப்பிரிவினைக்கான வாய்ப்பு உருவாகலாம். கலைத்துறையினர் கூடவே இருந்து குழி பறிக்கும் மனிதர்களை அடையாளம் காண வேண்டியது அவசியம். வாழ்வியல் தரம் உயர்வடைவதோடு சிறப்பான கௌரவத்தினை அடையும் மாதம் இது.

பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்:

இம்மாதம் ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். ஆதாயம் எதிர்பார்த்தபடியே கிடைக்கும். தனாதிபதி குரு தன ஸ்தானத்தைப் பார்ப்பதால் பணப்புழக்கத்திற்கு குறைவு ஏற்படாது. வாங்கிய கடனைக் கொடுத்து மகிழ்வீர்கள். கணவன்–மனைவிக்குள் அன்பும், அரவணைப்பும் கூடுதலாக இருக்கும். தாய்வழி ஆதரவு உண்டு. பிள்ளைகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு நல்ல மாற்றங்கள் வந்து சேரும். அஷ்டமத்தில் குரு சஞ்சரித்தாலும் அது பார்க்குமிடம் பலன் தரும் இடம் என்பதால் பயப்படத் தேவையில்லை. 

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: நவம்பர்: 16, 17, 26, 27, டிசம்பர்: 1, 2, 8, 9, 13, 14

மகிழ்ச்சி தரும் வண்ணம்: வெளிர்நீலம்.

சந்திராஷ்டம நாட்கள்: நவம்பர் 24, 25.

பரிகாரம்: விநாயகப்பெருமானுக்கு அறுகம்புல் மாலை சாற்றி வழிபடுங்கள்.


meenamமீனம்: நீங்கள் கற்றுக்கொண்ட விஷயங்களை அடுத்தவர்களோடு பங்கிட்டுக் கொள்வதில் மனமகிழ்ச்சி காண்பீர்கள். மனதில் இருந்த குழப்பங்கள் அகலும். உங்களின் பேச்சுக்களில் நீதி, நேர்மை, நாணயம் பற்றிய கருத்துக்கள் அதிகம் இடம்பெறும். அதே நேரத்தில் வீண் வார்த்தைகளால் விவகாரம் முடிவிற்கு வராது என்பதை உணர்வீர்கள். புதிய மனிதர்களின் தொடர்பு வாழ்வியல் தரத்தினை உயர்த்தும். “கடமையைச் செய், பலனை எதிர்பாராதே” என்ற கருத்தினைப் பின்பற்றி உங்களின் நடவடிக்கைகள் அமையும்.

தத்துவார்த்த சிந்தனைகள் மனதினில் அதிகம் இடம்பெறும். குடும்ப சலசலப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சித்து வருவீர்கள். அதிகரித்து வரும் செலவினங்களை சமாளிக்கும் வகையில் வரவு நிலை சிறப்பாக இருக்கும். உடன்பிறந்தோருடன் கருத்து வேறுபாடு தோன்றலாம். தகவல் தொடர்பு சாதனங்கள் பகல் பொழுதினில் பழுதாகி சிரமத்தினைத் தரும் வகையிலும், இரவினில் ஆதாயம் தரும் வகையிலும் அமையும். உயர்கல்வி மாணவர்கள் நல்ல முன்னேற்றத்தினைக் காண்பார்கள். பிள்ளைகளோடு இணைந்து செய்யும் காரியங்களில் எதிர்பார்த்த வெற்றி கிட்டும். வாழ்க்கைத்துணையின் விருப்பத்தினை நிறைவேற்றி மனமகிழ்ச்சி கொள்வீர்கள். குடும்பப் பெரியவர்களின் உடல்நிலையில் கவனம் கொள்ள வேண்டியது அவசியம். அயல்நாட்டில் பணிபுரிவோர் சிறப்பான ஆதாயம் காண்பார்கள். கலைத்துறையினர் நினைத்ததை நடத்தி முடிப்பார்கள். நிதானித்துச் செயல்பட வேண்டிய மாதம் இது.

பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்:

இம்மாதம் குரு பார்வையால் குழப்பங்கள் அகலும். குடியிருக்கும் வீட்டால் ஏற்பட்ட பிரச்சினைகள் தீரும். அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் கூடும். கணவன்–மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். தடைப்பட்ட கல்வி முயற்சி தொடரவேண்டுமென்று விரும்புவீர்கள். எதிர்பாராத தனலாபம் உண்டு. குழந்தைகளின் எதிர்கால முன்னேற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிநிரந்தரமாகும். 

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: நவம்பர்: 17, 18, 27, 28, 29, டிசம்பர்: 5, 6, 10, 11,

மகிழ்ச்சி தரும் வண்ணம்: பொன்னிற மஞ்சள்.

சந்திராஷ்டம நாட்கள்: நவம்பர் 26, 27.

பரிகாரம்: கார்த்திகை தீபத் திருநாள் அன்று ஏழை எளியோர்க்கு அன்னதானம் செய்யுங்கள்.


NO COMMENTS

LEAVE A REPLY