தமிழ் மாத ராசிபலன் – 16.7.2016 முதல் 16.8.2016 வரை

தமிழ் மாத ராசிபலன் – 16.7.2016 முதல் 16.8.2016 வரை

1045

mesahamமேசம்: குடும்பத்தில் சலசலப்பான சூழல் நிலவி வரும். பொருள் வரவு நிலையில் சிறிது சுணக்கம் உண்டாகலாம். உடன்பிறந்தோருக்கு பொருளாதார ரீதியாக உதவி செய்ய வேண்டியிருக்கும். அடுத்தவர் மனம் கவரும் வகையிலான பேச்சுக்களை வெளிப்படுத்தி நற்பெயர் காண்பீர்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் பகல் பொழுதினில் சிரமத்தினையும், மாலை நேரத்தில் பயனுள்ள வகையிலும் அமையும். வண்டி, வாகனங்களால் ஆதாயம் காண்பீர்கள். இந்த மாதத்தில் பயன்தரும் பிரயாணத்திற்கான வாய்ப்பு உண்டு. மாணவர்கள் கல்வி நிலையில் சிறப்பான முன்னேற்றம் கண்டு வருவார்கள்.

தகப்பனார் வழி உறவினர்களுடனான சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். வண்டி வாகனங்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். பிள்ளைகளின் செயல்கள் உங்கள் கௌரவத்தினை உயர்த்தும் வகையில் அமையும். முன்னோர்கள் பற்றிய சிந்தனை அவ்வப்போது மனதினில் இடம்பிடிக்கும். எதிர்கால நலன் கருதி புதியதொரு சேமிப்பில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு உண்டு. அலர்ஜியின் காரணமாக உண்டாகும் தோல் சம்பந்தப்பட்ட வியாதிகளால் உடல்நிலையில் சிரமம் தோன்றக்கூடும். வாழ்க்கைத்துணையோடு கருத்து வேறுபாடு தோன்றி மறையும்.

புதிய நட்புறவு ஒன்றினால் அதிக செலவு களுக்கு ஆளாவீர்கள். கலைத்துறையினரின் கற்பனைகள் செயல்வடிவம் பெறும். தொழில்முறையில் இருந்து போட்டியான சூழலை சமாளித்து வெற்றி காண்பீர்கள். உத்யோகஸ்தர்கள் உடன் பணிபுரிவோருடன் எச்சரிக்கையுடன் பழக வேண்டியது அவசியம். போராட்டத்தினைக் கண்டாலும், வெற்றி பெறும் மாதம் இது.

பெண்களுக்கான சிறப்பு பலன்கள்

உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும் மாதம் இது. குடும்பத்தில் ஏற்பட்ட மனக்கசப்புகள் அகலும். லட்சியங்களை நிறைவேற்றிக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். ஆரோக்கியத் தொல்லைகள் அகல, மாற்று மருத்துவம் கைகொடுக்கும். கணவன்– மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். பிள்ளைகள் மீது அதிக அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்க முன்வருவீர்கள். புதிதாக உங்கள் பெயரில் நிலம் வாங்க முயற்சிப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்தபடி ஊர்மாற்றம் வந்து சேரும்.

சந்திராஷ்டம நாட்கள்: ஜூலை 16, ஆகஸ்டு 11, 12, 13

பரிகாரம்: பஞ்சமுக ஆஞ்சநேயரை வணங்கி வாருங்கள்.

பணத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: ஜூலை: 18,19,20,23,24,30,31 ஆகஸ்டு: 2,3,14,15,16

மகிழ்ச்சி தரும் வண்ணம்: ஆரஞ்சு.


rishabamரிஷபம்: நினைத்த காரியங்கள் ஏதேனும் ஒரு வகையில் நடந்தேறி வருவதால் மனநிம்மதிக்குக் குறைவிருக்காது. பேசும் வார்த்தைகளில் நகைச்சுவை உணர்வு வெளிப்படும்படியான வார்த்தைகள் நிறைந்திருக்கும். எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்ளும் வகையில் பொருள் வரவு சிறப்பாக இருந்து வரும். உடன்பிறந்தோரால் கௌரவம் உயரும்படியான சம்பவங்கள் நிகழும். தகவல் தொடர்பு சாதனங்கள் இரவினில் பயன் தரும் வகையில் அமையும். அவ்வப்போது சிறு சிறு பிரயாணங்களுக்கான வாய்ப்பு உண்டு. ஆகஸ்டு மாதத்தின் துவக்கத்தில் எதிர்பாராத வகையில் உண்டாகும் தொலைதூரப் பிரயாணத்தின் மூலம் எதிர்காலத்தில் சிறப்பான பலனைக் காண்பீர்கள்.

உறவினர்களின் வழியில் ஆதாயம் தரும் தகவல் வந்து சேரும். மாணவர்கள் கல்வி நிலையில் சிறப்பான முன்னேற்றம் கண்டு வருவார்கள். பிள்ளைகளின் செயல்களில் சிறிது மந்தத்தன்மையை உணரலாம். அவர்களின் செயல்கள் ஒரு சில இழப்புகளைத் தோற்றுவிப்பதோடு அதிகப்படியான செலவினையும் தரக்கூடும். ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். வாழ்க்கைத்துணை உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் செயல்பட்டு வருவார். நெருங்கிய நண்பர் ஒருவருக்கு கடனுதவி செய்ய வேண்டியிருக்கும். தொழில்முறையில் தரகு, கமிஷன் ஆகியவற்றால் அதிக லாபம் காண்பீர்கள். உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் நேரடியான அணுகுமுறையை கடைபிடித்து வருவது நல்லது. சுயதொழில் செய்வோர் நல்ல லாபத்தினைக் கண்டு வருவார்கள். கலைத்துறையினர் புதிய வாய்ப்பினைப் பெறுவர். நற்பலனைக் காணும் மாதம் இது.

பெண்களுக்கான சிறப்பு பலன்கள்

உங்களுக்கு இனிய மாதம் இது. கொடுக்கல்–வாங்கல் ஒழுங்காகும். வளர்ச்சி கூடும். தடைபட்ட காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும். தெய்வீக நாட்டம் அதிகரிக்கும். கணவன் – மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடு அகலும். ஒற்றுமை பலப்படும். உரிய விதத்தில் சகோதரர்கள் பாகம் பிரித்துக் கொடுப்பர். பெண் குழந்தைகளின் சுபச் சடங்குகள் எதிர்பார்த்த படி அமையும். அலுவலகப் பணியாளர்களுக்கு அதிகாரிகளால் நன்மை கிடைக்கும். புதிய திருப்பங்களும், ஒப்பந்தங்களும் வந்து சேரும்.

சந்திராஷ்டம நாட்கள் : ஜூலை 17, 18, 19, ஆகஸ்டு 14, 15

பரிகாரம்: வரலட்சுமி விரத நாளன்று சுமங்கலி பூஜை செய்வது நல்லது.

பணத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: ஜூலை: 20,21,22,25,26,31 ஆகஸ்டு: 1,4,5

மகிழ்ச்சி தரும் வண்ணம்: வெளிர்நீலம்.


mithunamமிதுனம்: குடும்ப உறுப்பினர்களின் விருப்பத்திற்கிணங்க புதிய சொத்து ஒன்றினை வாங்குவதற்கான வாய்ப்பு உண்டு. தேர்ந்தெடுத்துப் பிரயோகிக்கும் வார்த்தைகளால் உங்கள் கௌரவம் உயரக் காண்பீர்கள். உடன்பிறந்தோர் உதவிகரமாகச் செயல்பட்டு வருவார்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் இரவு நேரத்தில் மிகுந்த பயனுள்ள வகையில் அமையும். ஜூலை மாதத்தின் கடைசி வாரத்தில் செயற்கரிய செயல் ஒன்றினைச் செய்து தனிப்பட்ட முறையில் பெயரும், புகழும் அடைவதற்கான வாய்ப்பு உண்டு. வண்டி, வாகனங்களை இயக்கும்போது கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.

மாணவர்கள் தங்கள் கல்வி நிலையில் முன்னேற்றம் காண கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். உறவினர்களுக்கு உதவி செய்யப்போய் ஒரு சில தர்மசங்கடங்களை எதிர்கொள்ள நேரிடலாம். பிள்ளைகளின் செயல்கள் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும் வகையில் அமையும். நரம்பியல் சார்ந்த பிரச்சினைகளால் உடல்நிலையில் சிரமத்தினைக் காண நேரிடலாம். வாழ்க்கைத்துணையோடு அவ்வப்போது கருத்து வேறுபாடு தோன்றி மறையும். நண்பர்களின் வழியில் கூடுதல் செலவினங்களுக்கு ஆளாக நேரிடும். அரசுத் தரப்பு காரியங்களில் இழுபறியினை சந்திக்க நேரிடும். கலைத்துறையினர் புதிய முயற்சியில் வெற்றி காண்பர். தொழில் முறையில் இருந்து வரும் அலைச்சல் நிலை தொடர்ந்து கொண்டிருக்கும். உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளோடு நேரடித் தொடர்பில் இருந்து வருவது நல்லது. நற்பலன்களைத் தரும் மாதம் இது.

பெண்களுக்கான சிறப்பு பலன்கள்

பணப்புழக்கம் அதிகமாகும் மாதம் இது. பக்கத்து வீடு, எதிர்வீட்டில் உள்ள பகை மாறும். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் பெறுவீர்கள். கணவன்–மனைவிக்குள் கனிவு கூடும். கடல் தாண்டிச் செல்லும் முயற்சியில் அனுகூலம் உண்டு. பிள்ளைகள் வழியில் சுபவிரயம் ஏற்படும். அவர்கள் உங்கள் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடப்பர். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. உத்தியோக வாய்ப்புகள் கைகூடும். கந்தப்பெருமான் வழிபாடு கவலையைப் போக்கும். குருப்பெயர்ச்சிக்குப் பிறகு அதன் பார்வை பலத்தால் உடல் நலம் சீராகும். உத்தியோகத்தில் இடமாறுதல் கிடைக்கலாம். ஒரு சிலர் விருப்ப ஓய்வில் வந்து, தனியாக தொழில் செய்ய எண்ணுவார்கள்.

சந்திராஷ்டம நாட்கள்: ஜூலை 20, 21, ஆகஸ்டு 16

பரிகாரம்: புதன்தோறும் பெருமாளுக்கு துளசிமாலை சாற்றி வழிபடுங்கள்.

பணத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: ஜூலை: 23,24,28,29 ஆகஸ்டு: 2,3,16

மகிழ்ச்சி தரும் வண்ணம்: கிளிப்பச்சை.


kadakamகடகம்: குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவி வரும். ஆகஸ்டு 1ம் தேதி முதல் வரவு நிலை உயரும். புதிதாக சொத்து ஒன்று வந்து சேர்வதற்கான வாய்ப்பும் உண்டு. உடன்பிறந்தோரின் முன்னேற்றத்திற்காக உதவி செய்ய வேண்டியிருக்கும். தகவல் தொடர்பு சாதனங்கள் அவ்வப்போது பழுதாகி சற்று சிரமத்தினைத் தரக்கூடும். முன்பின் தெரியாத நபர்களை நம்பி புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நல்லது. வண்டி, வாகனங்கள் சார்ந்த செலவினங்கள் அதிகரிக்கலாம். ஜூலை மாதத்தின் இறுதியில் எதிர்பாராத தொலைதூரப் பிரயாணத்திற்கான வாய்ப்பு உண்டு.

மாணவர்கள் தங்கள் கல்வி நிலையில் உயர்வினைக் காண கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். பிள்ளைகளின் வழியில் ஒரு சில செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். ஆயினும் அவர்களது செயல்கள் உங்கள் எதிர்பார்ப்பிற்கு ஏற்றாற் போல் அமைவது கண்டு மன நிம்மதி காண்பீர்கள். நினைத்த காரியத்தில் ஏதேனும் ஒரு வகையில் வெற்றி கண்டு வரும்போதும் மனதின் மூலையில் ஒருவித குழப்பம் இடம்பிடித்திருப்பதைத் தவிர்க்க இயலாது. வாழ்க்கைத்துணையோடு சிறு கருத்து வேறுபாடு தோன்றி மறையும். குடும்பப் பெரியவர் ஒருவருடனான சந்திப்பு புதிய உற்சாகத்தைத் தரும். தொழில்முறையில் தங்கள் திட்டங்கள் வெற்றி பெற்று வருவதை கண்கூடாகக் காண்பீர்கள். கலைத்துறையினருக்கு ஆடிமாதத்தின் முற்பாதியில் திட்டமிடுதலுக்கும், பிற்பாதியில் செயலில் இறங்குவதற்கும் காலநேரம் சாதகமாக அமையும். நற்பலன்களைத் தரும் மாதம் இது.

பெண்களுக்கான சிறப்பு பலன்கள்

இந்த மாதம் சகோதரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தனிப்பட்ட முறையில் வளர்த்துக்கொண்ட பகை மாறும். சனி வக்ர இயக்கத்தில் இருப்பதால் வாழ்க்கைத் துணையோடு அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகள் வழியில் பெருமைக்குரிய சம்பவங்கள் நடைபெறும். 8–ல் கேது இருப்பதால் சந்தர்ப்பங்கள் சாதகமாக அமைந்தாலும், அதை உபயோகப்படுத்திக் கொள்ள இயலுமா? என்பது சந்தேகம் தான். விரதங்களும், வழிபாடுகளும் நீங்கள் விரும்பும் பலனைக் கொடுக்கும். செவ்வாய் மற்றும் சனி சேர்க்கையாகி இருப்பதால் பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினை அதிகரிக்கலாம்.

சந்திராஷ்டம நாட்கள்: ஜூலை 22, 23

பரிகாரம்: திங்கள்தோறும் சிவாலயத்தில் அன்னதானம் செய்து வாருங்கள்.

பணத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: ஜூலை: 18,24,25,26,30,31 ஆகஸ்டு: 4,5,8,9

மகிழ்ச்சி தரும் வண்ணம்: மஞ்சள்.


simamசிம்மம்: குடும்பத்தில் சலசலப்பு நிலவி வரும். பொருள் வரவு நிலையில் ஒரு சில தடைகளைக் காண நேரிடும். உடன் பிறந்தோர் உதவிகரமாக செயல்படுவார்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் உங்கள் பணி நேரத்தினை மிச்சப்படுத்தும் வகையில் உதவிகரமாய் அமையும்.

பெண் நண்பர்களால் சாதகமான பலன்களைக் கண்டு வருவீர்கள். வண்டி, வாகனங்கள் ஆதாயம் தரும் வகையில் அமையும். மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளில் நடக்கும் போட்டிகளில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி முன்னிலை பெறுவார்கள். பிள்ளைகளின் செயல்கள் உங்கள் கௌரவத்தினை உயர்த்தும் வகையில் அமையும். ஆன்மிகம் பற்றிய சிந்தனைகள் மனதினை அதிகமாக ஆக்கிரமித்திருக்கும். வாழ்க்கைத்துணை உங்கள் பணிகளுக்குத் துணை நிற்பார். கௌரவம் கருதி செய்ய வேண்டிய செலவுகள் அதிகரிக்கும் நேரம் இது. கலைத்துறையினர் ஆகஸ்டு முதல் சிறப்பான ஆதாயம் காண்பர். சுயதொழில் செய்வோர், மற்றும் வியாபாரிகள் சிறப்பான தனலாபத்தினைக் கண்டு வருவார்கள். உத்யோகஸ்தர்கள் தங்களது உண்மையான உழைப்பிற்கான ஆதாயத்தினை அடைவர். துவக்கத்தில் சிரமத்தினையும், போகப்போக ஆதாயத்தினையும் காணும் மாதம் இது.

பெண்களுக்கான சிறப்பு பலன்கள்

மாதத் தொடக்கத்திலேயே விரயங்கள் ஏற்படலாம். பிற்பாதியில் வருமானம் திருப்திகரமாக இருக்கும். வளர்ச்சி கூடும். பெருமைக்குரிய சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகளால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். கணவன்–மனைவிக்குள் ஒற்றுமை பலப்பட, விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த பதவிகள் கிடைக்கலாம். செவ்வாய், சனி சேர்க்கை இருப்பதால் பத்திரப்பதிவில் கவனம் தேவை. வீடுமாற்றங்களும், இடமாற்றங்களும் திருப்தியளிக்கும். உடன்பிறப்புகளை அனுசரித்துச் செல்லுங்கள்.

சந்திராஷ்டம நாட்கள்: ஜூலை 24, 25

பரிகாரம்: ஆடி அமாவாசை நாளில் முதியோர் இல்லத்தில் அன்னதானம் செய்யுங்கள்.

பணத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: ஜூலை: 16,17,27,28,31 ஆகஸ்டு: 7,8,11,12,13

மகிழ்ச்சி தரும் வண்ணம்: இளஞ்சிவப்பு.


kanniகன்னி: குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவி வரும். குடும்ப உறுப்பினர்களின் நீண்ட நாள் விருப்பத்திற்கேற்ப ஆடம்பரப் பொருள் ஒன்றினை வாங்கும் வாய்ப்பு வந்து சேரும். பேசும் வார்த்தைகளில் நகைச்சுவை உணர்வு வெளிப்படும். உடன்பிறந்தோர் உங்கள் உதவியை நாடி வரக்கூடும். தகவல் தொடர்பு சாதனங்கள் பகல் பொழுதினில் தடையாகவும், இரவு நேரங்களில் சாதகமாகவும் அமைந்திருக்கும்.

உறவினர்களுடனான சந்திப்பின் மூலம் குடும்பப் பாரம்பரிய சம்பிரதாயங்களை தெரிந்துகொள்ளும் வாய்ப்பு உருவாகும். மாணவர்கள் கல்வி நிலையில் சிறப்பான முன்னேற்றம் காண்பார்கள். ஜூலை மாதத்தின் கடைசி வாரத்தில் எதிர்பாராத விதமாக தொலைதூரப் பிரயாணத்திற்கான வாய்ப்பு வந்து சேரும். வண்டி, வாகனங்கள் ஆதாயம் தரும் விதமாக அமையும். பூர்வீக சொத்துக்களில் புதிய பிரச்சனைகள் தோன்றலாம். வழக்கு விவகாரங்கள் இழுபறியைத் தரும். கடன் பிரச்சனைகள் மீண்டும் தலையெடுக்கும். வாழ்க்கைத்துணை உங்கள் பணிகளுக்கு பக்கபலமாகத் துணைநிற்பார். பிள்ளைகளின் செயல்களில் ஒருவித மந்தத்தன்மையை உணர்வீர்கள். தொழில்முறையில் கூடுதல் அலைச்சலைக் காண்பீர்கள். கலைத்துறையினர் ஜூலை இறுதிவரை தனலாபம் காண்பர். சுயதொழில் செய்வோர் சற்று நிதானித்துச் செயல்படுவது நல்லது. முயற்சியால் முன்னேறும் மாதமாக அமையும்.

பெண்களுக்கான சிறப்பு பலன்கள்

எதிர்பார்த்த மாற்றங்கள் வந்து சேரும் மாதம் இது. இல்லத்தில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கோபத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள். கணவன்– மனைவிக்குள் பாசமும், நேசமும் அதிகரிக்கும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி தீட்டிய திட்டங்களை செயல்படுத்துவீர்கள். ஆரோக்கியம் சீராக இருக்க ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் திடீர் மாற்றம் காண்பார்கள். விவாகப் பேச்சுக்கள் தாமதமாகலாம். செவ்வாய் பலம் பெற்று விட்டதால், உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர்.

சந்திராஷ்டம நாட்கள்: ஜூலை 26, 27, 28

பரிகாரம்: குலதெய்வ வழிபாடு குடும்பத்திற்கு நன்மை சேர்க்கும்.

பணத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: ஜூலை: 18,19,20,29,30 ஆகஸ்டு: 2,3,8,9,14,15

மகிழ்ச்சி தரும் வண்ணம்: கரும்பச்சை.


thulamதுலாம்: குடும்பத்தில் இருந்து வரும் சலசலப்புகள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் துவங்கும். செலவுகள் கூடினாலும் சமாளிப்பீர்கள். உங்கள் பேச்சினில் வெளிப்படும் வார்த்தைகள் அடுத்தவர்களால் தவறாகப் பொருள் காணப்பட்டு சிறிது சிரமத்திற்கு ஆளாகலாம். உடன்பிறந்தவர்களோடு லேசான கருத்து வேறுபாடு உருவாகக் கூடும். தகவல் தொடர்பு சாதனங்கள் அவ்வப்போது செயலிழந்து காரியத்தடையை உருவாக்கக்கூடும். எந்த ஒரு காரியத்திலும் இடைத்தரகர்களை நம்பாது நேரடியாக செயலில் இறங்குவது நல்லது. அந்நியப் பெண்களிடம் எச்சரிக்கையோடு பழக வேண்டியது அவசியம்.

குடும்ப விவகாரங்களை அடுத்தவர்களோடு பகிர்ந்து கொள்வது நல்லதல்ல. மாணவர்கள் தங்கள் கல்வி நிலையில் முன்னேற்றம் காண கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். பிள்ளைகளின் செயல்கள் உங்களின் எதிர்பார்ப்பிற்கு மாறாக அமையக்கூடும். அவர்களது வழியில் கூடுதல் செலவினத்தை சந்திக்க நேரிடலாம். மருத்துவ செலவுகள் உண்டாகும் வாய்ப்பு உள்ளதால் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். வாழ்க்கைத்துணை உங்கள் பணிகளுக்கு பக்கபலமாய்த் துணை நிற்பார். சொத்து விவகாரங்களில் புதிய பிரச்னைகள் முளைக்கலாம். தான தர்ம காரியங்களுக்காக கூடுதலாக செலவழித்து வருவீர்கள். உத்யோகஸ்தர்கள் அலுவல் பணியில் சிறப்பாக செயல்பட்டு நற்பெயர் காண்பார்கள். சுயதொழில் செய்வோர் சிறப்பான தனலாபத்தினைக் காணும் நேரம் இது. கலைத்துறையினர் தொழில்முறையில் தனலாபம் காண்பர். நற்பலன்களைத் தரும் மாதமாக அமையும்.

பெண்களுக்கான சிறப்பு பலன்கள்

முற்பாதியில் விரயமும், பிற்பாதியில் வருமானமும் வந்து சேரும் மாதம் இது. விலகிச் சென்ற உறவினர்கள் விரும்பி வந்து சேருவர். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் மாறும். கணவன்–மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் அகலும். ஒற்றுமை பலப்படும். உங்கள் பெயரிலேயே தொழில் தொடங்க முடிவு செய்வீர்கள். வீடு மாற்றங்கள் விரும்பும் விதத்தில் அமையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சம்பள உயர்வு பற்றிய சந்தோஷ தகவல் வந்து சேரலாம். இடம், வீடு வாங்குவதற்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். நல்ல திருப்பங்களும் உருவாகும். பிள்ளைகள் நலன் கருதி எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும்.

சந்திராஷ்டம நாட்கள்: ஜூலை 29, 30

பரிகாரம்: சனிதோறும் எள்ளுப்பொடி சாதம் நைவேத்யம் செய்து தானம் செய்திடுங்கள்.

பணத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: ஜூலை: 16,17,21,22,31 ஆகஸ்டு: 1,4,5,11,12,13

மகிழ்ச்சி தரும் வண்ணம்: நீலம்.


viruchigamவிருச்சிகம்: குடும்பத்தில் அமைதி நிலவும். சுபகாரியங்கள் நிகழ்வதற்கான வாய்ப்பு உண்டு. பேசும் வார்த்தைகளில் அவ்வப்போது தத்துவம் நிறைந்த கருத்துக்கள் வெளிப்படக்கூடும். உடன்பிறந்தோரால் கூடுதல் செலவுகளுக்கு ஆளாக நேரிடும். தகவல் தொடர்பு சாதனங்கள் உரிய நேரத்தில் செயலிழந்து சற்று சிரமத்தினைத் தரக்கூடும். எந்த ஒரு காரியத்திலும் இடைத்தரகர்களை நம்பாது நேரடியாக செயலில் இறங்க வேண்டியிருக்கும். புதிய உறவு ஒன்றினால் நம்பிக்கை துரோகத்தினை சந்திக்க நேரலாம்.

வண்டி, வாகனங்களால் ஆதாயம் காண்பீர்கள். பிரயாண சுகம் உண்டு. ஆன்மிகப் பயணம் ஒன்றிற்கான வாய்ப்பு உருவாகும். நல்லோர்களின் சந்திப்பின் மூலம் மனமகிழ்ச்சி காண்பீர்கள். மாணவர்கள் தங்கள் கல்வி நிலையில் சிறப்பான முன்னேற்றத்தினைக் கண்டு வருவார்கள். பிள்ளைகளின் செயல்கள் மனமகிழ்ச்சியைத் தரும் வகையில் அமையும், அவர்களது உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். கொடுக்கல், வாங்கல் விவகாரங்களில் கவனம் தேவை. பொதுக்காரியங்களில் ஈடுபடும்போது வீண் வம்பு விவகாரங்களில் சிக்க நேரிடலாம். தம்பதியருக்குள் அன்யோன்யம் கூடும். சம்பந்தமில்லாத, அர்த்தமற்ற செலவுகளால் சற்று பொருளிழப்பினை சந்திக்க நேரிடும். தொழில்முறையில் கடும் அலைச்சலை சந்திக்க நேர்ந்தாலும் அதற்குரிய தனலாபத்தினை உடனுக்குடன் காண்பீர்கள். கலைத்துறையினர் தங்கள் வாய்ப்பினைப் பயன்படுத்தி சாதிப்பர். உண்மையான உழைப்பினால் வெற்றியைக் காணும் மாதம் இது.

பெண்களுக்கான சிறப்பு பலன்கள்

இந்த மாதத்தில் பணப்புழக்கம் அதிகரிக்கும். பக்கபலமாக இருக்கும் நண்பர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். மாமன், மைத்துனர் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். சேமிப்பு உயரும். கணவன்–மனைவிக்குள் அன்னியோன்யம் பிறக்கும். அதன் விளைவாக புதிய திருப்பங்கள் ஏற்படலாம். உங்கள் பெயரிலேயே இடம் வாங்குவது பற்றி சிந்திப்பீர்கள். பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள், மேலதிகாரிகளிடம் சலுகைகளைப் பெற்று உன்னத உயர்வைக் காண்பார்கள். கல்வி மற்றும் உத்தியோகம் தொடர்பாக வெளிநாட்டு யோகமும் வாய்க்கும். உடன்பிறப்புகளின் ஒத்துழைப்போடு உயர்வு காணும் மாதம் இது.

சந்திராஷ்டம நாட்கள்: ஜூலை 31, ஆகஸ்டு 1

பரிகாரம்: கருமாரியம்மனை வணங்கி வாருங்கள். வெள்ளிதோறும் மாரியம்மன் ஆலயத்தில் எலுமிச்சை சாதம் தானம் செய்யுங்கள்.

பணத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: ஜூலை: 18,19,20,23,24 ஆகஸ்டு: 1,2,3,7,8,9,13,14,15

மகிழ்ச்சி தரும் வண்ணம்: சிவப்பு.


dhanusuதனுசு: குடும்பப் பெரியோர்களின் கருத்துக்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து செயல்பட்டு வருவீர்கள். செயல்களில் சுறுசுறுப்பு இடம்பிடிக்கும். அதே நேரத்தில் படபடப்பின்றி செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். சீரான பொருள் வரவு நிலை தொடர்ந்து கொண்டிருக்கும். மனதில் இருந்து வரும் விடை தெரியாத வினாக்கள் அவ்வப்போது வார்த்தைகளாக வெளிப்படும். உடன்பிறந்தோர் உங்கள் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் செயல்படுவார்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் உங்கள் பொது அறிவினை வளர்த்துக் கொள்ளும் வகையில் மிகுந்த பயனளிக்கும். தொலைதூரப் பிரயாணத்திற்கான வாய்ப்பு உண்டு. வண்டி, வாகனங்கள் தொழில் முறையில் உதவிகரமாக அமையும். உயர்கல்வி பயிலும் மாணவர்கள் சிறப்பான முன்னேற்றம் கண்டு வருவார்கள்.

தகப்பனார் வழியில் உறவினர் ஒருவருடன் இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கும். பிள்ளைகளின் வாழ்வினில் சுபநிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை செய்ய நேரிடும். கேளிக்கை, கொண்டாட்டங்கள், உல்லாசப் பயணம் சார்ந்த விவகாரங்களுக்காக அதிகமாக செலவழிக்க வேண்டியிருக்கும். கடன் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். முன்பின் தெரியாத பெண்களுக்கு உதவப்போய் தர்மசங்கடமான சூழலை எதிர்கொள்வதற்கான வாய்ப்பு உண்டு. பூர்வீக சொத்துக்களில் புதிய பிரச்சினைகள் தலையெடுக்கலாம். தொழில்முறையில் ஜூலை 24ம் தேதிக்குப் பிறகு சிறப்பான முன்னேற்றம் கண்டு வருவீர்கள். கலைத்துறையினர் ஆகஸ்டு 1 முதல் புதிய பாதையைத் தேர்ந்தெடுப்பர். சுயதொழில் செய்வோர் எதிர்பார்த்த லாபத்தினை அடைவார்கள். நற்பலன்களைத் தரும் மாதம் இது.

பெண்களுக்கான சிறப்பு பலன்கள்

இந்த மாதம் நன்மை தரும் மாற்றங்களைச் சந்திக்கப் போகிறீர்கள். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர். வீடு மாற்றங்கள் விருப்பம்போல் நடைபெறும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் நீண்ட தூரப் பயணங்களை விரும்பாமல், வேலையை விடும் முயற்சியில் ஆர்வம் காட்டுவர். கணவன்–மனைவிக்குள் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்ளுங்கள். வரவேண்டிய நேரத்தில் பணம் வந்தாலும், செலவுகள் கட்டுக்கடங்காமல் போகலாம். எனவே ஒரு சில சமயங்களில் கடன் வாங்கும் சூழ்நிலை கூட ஏற்படும். விரயச் சனி முடியும் வரை பொறுமை தேவை.

சந்திராஷ்டம நாட்கள்: ஆகஸ்டு 2, 3

பரிகாரம்: ஞாயிறுதோறும் சரபேஸ்வரரை வழிபட்டு வாருங்கள்.

பணத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: ஜூலை: 20,21,22,25,26 ஆகஸ்டு: 4,5,10,11

மகிழ்ச்சி தரும் வண்ணம்:பொன்னிற மஞ்சள்.


magaramமகரம்: குடும்பத்தில் அமைதி நிலவும். வாழ்க்கைத் துணையின் விருப்பங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து செயல்பட்டு வருவீர்கள். பொருள் வரவு நிலையில் அடுத்தவர்களை சார்ந்து இருக்க வேண்டிய சூழல் தோன்றக்கூடும். பேசும் வார்த்தைகளில் தத்துவம் நிறைந்த கருத்துக்கள் அதிகமாக வெளிப்படும். உடன்பிறந்தோர் சாதகமாக செயல்பட்டு வருவார்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் ஆதாயம் தரும் வகையில் இருந்து வரும். பிரயாணத்தின்போது உங்கள் உடமைகளில் கவனம் கொள்ள வேண்டியது அவசியம்.

வண்டி, வாகனங்கள் சார்ந்த செலவினங்கள் கூடும். உறவினர்களுக்கு மத்தியில் இருந்து வரும் மனக்கசப்பினை போக்க முயன்று வருவீர்கள். குடும்ப விவகாரங்களில் பிள்ளைகளின் பங்களிப்பு முக்கியத்துவம் பெறும். மாணவர்கள் தங்கள் கல்வி நிலையில் முன்னேற்றம் காண கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். ஆடம்பர செலவுகள் சற்று அதிகரிக்கக் கூடும். பெற்றோரின் உடல்நிலையில் கவனம் தேவை. உத்யோகஸ்தர்கள் தற்காலிக இடமாற்றத்தினை சந்திக்க நேரிடும். சுயதொழில் செய்வோர் ஓய்வில்லாமல் உழைக்க வேண்டியிருக்கும். கலைத்துறையினர் எதிர்பார்க்கும் தனலாபத்தினை அடைய சிறிது காலம் காத்திருக்க நேரலாம். நெடுநாளைய விருப்பம் ஒன்று நிறைவேறும் நேரம் இது. சரிசம பலன்களைத் தரும் மாதமாக அமையும்.

பெண்களுக்கான சிறப்பு பலன்கள்

மாதத் தொடக்கத்தில் விரயங்கள் ஏற்பட்டாலும், மாதத்தின் பிற்பகுதியில் வருமானம் திருப்திகரமாக இருக்கும். கணவன்–மனைவிக்குள் பாசமும், நேசமும் கூடும். பிள்ளை களால் ஏற்பட்ட தொல்லை அகலும். பக்கத்து வீட்டாருடன் ஏற்பட்ட மோதல் அகலும். மாமன் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். குருப்பெயர்ச்சிக்குப் பிறகு உங்கள் எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும். வீடு கட்டும் அல்லது வாங்கும் முயற்சி கைகூடும். உத்தியோகஸ்தர்களில் சிலரின் பேச்சுக்கு, மேலதிகாரிகள் செவிசாய்ப்பர். குடும்பத்திற்கான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள்.

சந்திராஷ்டம நாட்கள்: ஆகஸ்டு 4, 5

பரிகாரம்: பௌர்ணமி நாளில் அம்பிகையை சிறப்பு ஆராதனை செய்து வழிபடுவது நல்லது.

பணத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: ஜூலை: 16,17,23,24,27,28 ஆகஸ்டு: 7,8,11,12,13

மகிழ்ச்சி தரும் வண்ணம்: ரோஸ்


kumbamகும்பம்: குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்குப் பக்கபலமாகத் துணை நின்று வருவார்கள். உடன்பிறந்தோரோடு இணைந்து செயல்படும் விவகாரங்களில் நல்ல வெற்றியினைக் காண்பீர்கள். பொருள் வரவு நிலை சீராக இருந்து வரும். நிலுவையில் இருந்து வரும் வரவேண்டிய பாக்கித்தொகைகள் வசூலாகும். பேச்சினில் வெளிப்படும் வார்த்தைகள் அடுத்தவர்களால் தவறாகப் பொருள் காணப்படலாம். தகவல் தொடர்பு சாதனங்கள் பயன் தரும் வகையில் அமையும். முக்கியமான பணிகளுக்கு அடுத்தவர்களை சார்ந்திருக்க வேண்டிய சூழல் உருவாகும்.

வீட்டு உபயோகம் சார்ந்த ஆடம்பரப் பொருட்களை வாங்க கால நேரம் சாதகமாக அமையும். சிரமமமான சூழலிலும் வாழ்வியல் சுகத்திற்குக் குறைவிருக்காது. மாதத்தின் முற்பாதியில் உறவினர்களுடன் இணைந்து குலதெய்வ வழிபாடு செய்வதற்கான வாய்ப்பு உண்டு. மாணவர்களின் கல்வித்தரம் சிறப்பாக இருந்து வரும். வண்டி, வாகனங்களை புதிதாக வாங்கும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கும். ஆடி மாதத்தின் பிற்பாதியில் வண்டி, வாகனங்களை இயக்கும்போது அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். பிள்ளைகளின் செயல்கள் உங்கள் விருப்பத்திற்கு எதிராக அமைந்திருப்பது போல் தோன்றினாலும் அவர்களால் உங்கள் கௌரவம் உயரக் காண்பீர்கள். ஆகஸ்டு மாதத்தின் இரண்டாம் வாரத்தில் உடல்நிலையில் சிறிது சிரமத்தினைக் காண நேரிடலாம். கலைத்துறையினர் தொழில்முறையில் போட்டியான சூழலைக் காண்பர். உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் கூடுதல் பணிச்சுமையை எதிர்கொள்வர். சரிசம பலன்களைக் காணும் மாதம் இது.

பெண்களுக்கான சிறப்பு பலன்கள்

இம்மாதம் ஆகஸ்டு 1–ந் தேதி வரை தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொல்லைகள் அகலும். கட்டிடப் பணிகள் பூர்த்தியாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். கணவன்–மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். உடன்பிறப்புகளும் உங்கள் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பார்கள். பிள்ளைகளுக்கும் வேலை கிடைத்து உதிரி வருமானங்களைக் கொண்டுவந்து சேர்ப்பர். ஆன்மிகப் பயணங்கள் அதிகரிக்கும். குருப்பெயர்ச்சிக்குப் பிறகு விரயங்கள் அதிகரிக்கும். எதிலும் கூடுதல் கவனம் தேவைப்படும்.

சந்திராஷ்டம நாட்கள்: ஆகஸ்டு 6, 7, 8

பரிகாரம்: வியாழன்தோறும் சாயிபாபா ஆலயத்தில் அன்னதானம் செய்யுங்கள்.

பணத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: ஜூலை: 18,19,25,26,30,31 ஆகஸ்டு: 8,9,15,16

மகிழ்ச்சி தரும் வண்ணம்: வைலட்.


meenamமீனம்: குடும்பத்தில் அமைதி நிலவி வரும். பொருள் வரவு சீராக இருந்து வரும். அவசரப்பட்டு வாக்குறுதி அளித்து பின்பு சிரமப்படுவதைத் தவிர்க்க நிதானித்துப் பேசுவது நல்லது. உடன்பிறந்தோர் சாதகமாக செயல்பட்டு வருவார்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் உங்கள் பணி நேரத்தினை மிச்சப்படுத்தும் வகையில் பயன் தரும்.

ஒரு சில விவகாரங்களில் இடைத்தரகர்களின் பங்களிப்பு முக்கியத்துவம் பெறக்கூடும். மாணவர்கள் கல்வி நிலையில் முன்னேற்றம் காண சிரமப்பட்டு உழைக்க வேண்டியிருக்கும். வண்டி, வாகனங்களின் பராமரிப்பு செலவு அதிகரிக்கும். அதே நேரத்தில் வாகனங்களை இயக்கும்போது அதிக எச்சரிக்கை தேவை. வாழ்க்கைத்துணையோடு கருத்து வேறுபாடு தோன்றி மறையும். கௌரவம் கருதி செய்ய வேண்டிய ஆடம்பரச் செலவுகள் அதிகரித்திருப்பதாக எண்ணி மனம் வருந்துவீர்கள். குடும்பப் பெரியவர் ஒருவருடனான சந்திப்பு மனதிற்கு நிம்மதியைத் தரும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் கண்டு வருவீர்கள். உத்யோகஸ்தர்கள் கீழ்நிலைப் பணியாளர்களை அனுசரித்துச் செல்ல வேண்டியது அவசியம். கலைத்துறையினர் போட்டியான சூழலை சமாளிக்க வேண்டியிருக்கும். துவக்கத்தில் சற்று சிரமத்தினைக் கண்டாலும் இறுதியில் நன்மை தரும் மாதமே.

பெண்களுக்கான சிறப்பு பலன்கள்

இந்த மாதம் தாய்வழி ஆதரவு உண்டு. உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். மாறுதலாகி வந்த வீட்டில் மனநிம்மதி கூடும். கணவன்–மனைவிக்குள் கனிவும், பாசமும் அதிகரிக்கும். ஒற்றுமை பலப்படும். உங்கள் பெயரிலேயே தொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். வருமானம் திருப்தி தரும். பிள்ளைகளின் வளர்ச்சி பெருமைக்குரியதாக இருக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். குடும்பத்தில் இருந்த சச்சரவுகள் குறையும். தங்கம், வெள்ளி ஆபரணங்கள் வாங்கி அணியும் ஆவல் பூர்த்தியாகும். உத்தியோகஸ்தர்களுக்கு நினைத்த இடத்திற்கு மாறுதல் கிடைக்கும்.

சந்திராஷ்டம நாட்கள்: ஆகஸ்டு 9, 10

பரிகாரம்: குருப்பெயர்ச்சி நாளன்று அருகிலுள்ள ஆலயத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யுங்கள்.

பணத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: ஜூலை: 16,17,21,22,27,28,30,31 ஆகஸ்டு: 11,12,13

மகிழ்ச்சி தரும் வண்ணம்: கிரே.

NO COMMENTS

LEAVE A REPLY