விஜய் படத்தில் மீண்டும் போலீசாக நடிக்கும் மொட்டை ராஜேந்திரன்!

விஜய் படத்தில் மீண்டும் போலீசாக நடிக்கும் மொட்டை ராஜேந்திரன்!

71

Mottai Rajendran plays a cop in Vijay 60

விஜய் தற்போது நடித்து வரும் படம் ‘விஜய் 60’. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை பரதன் இயக்கிவருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ், அபர்ணா வினோத் நடித்து வருகின்றனர். படத்தின் முக்கிய வேடங்களில் சதீஷ், ஒய்.ஜி.மகேந்திரன், ஸ்ரீமன், மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இதில் மொட்டை ராஜேந்திரனின் கதாபாத்திரம் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தில் அவர் போக்குவரத்து காவல்துறை அதிகாரியாக நடிக்கிறாராம். விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த தெறி படத்திலும், மொட்டை ராஜேந்திரன் போலீசாக நடித்திருந்தார்.

படத்தில் விஜய்க்கு சமமாக மொட்டை ராஜேந்திரனின் கதாபாத்திரமும் பேசப்பட்டது. மேலும், இவர்களுடைய கூட்டணி ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்திருந்தது.

இந்த நிலையில் விஜய் 60 படத்திலும் மொட்டை ராஜேந்திரன் போலீஸ் செண்டிமெண்ட்டை தொடருவதால், இப்படத்திலும் விஜய்-மொட்டை ராஜேந்திரன் காமெடி ரசிகர்களைக் கவரும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY