Home Tamil Cinema News முருகதாஸ் இவ்வளவு பட்ஜெட்டோடு எடுக்கும் முதல் படம் இதுதானாம்!

முருகதாஸ் இவ்வளவு பட்ஜெட்டோடு எடுக்கும் முதல் படம் இதுதானாம்!

117

AR-Murugadoss

முருகதாஸ் தமிழில் பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் ஆவார். இவர் தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னனி நடிகரான மகேஷ் பாபுவை வைத்து ஒரு புதிய படம் இயக்கவிருக்கிறார்.

இந்தப்படத்த்ற்கான ஆரம்பகட்ட வேலைகளில் முருகதாஸ் தற்போது முலுமூச்சாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் ஏப்ரல் 14ம் தேதியில் இருந்து தொடங்க இருக்கிறது.

அதுமட்டும் இல்லாமல் படத்தை தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் எடுக்கின்றனர். இந்நிலையில் இப்படம் ரூ. 85 கோடி பட்ஜெட்டில் எடுக்க இருப்பதாக திரையுலக வட்டாரங்களில் கூறப்படுகிறது.

முருகதாஸ் இயக்கிய படங்களில் இவ்வளவு பட்ஜெட்டோடு எடுக்கும் முதல் படம் இதுதானாம். இந்தப்படத்தை தீபாவளி அன்று வெளியிட முடிவு செய்திருக்கின்றனர். இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.