Home Tamil Cinema News இசையமைப்பாளர் ‘தேவிஸ்ரீ பிரசாத்’ ஹீரோ ஆகிறார்

இசையமைப்பாளர் ‘தேவிஸ்ரீ பிரசாத்’ ஹீரோ ஆகிறார்

147

devbi

தமிழ் திரையுலகிள் காமெடியர்கள் ஹீரோவாக அவதாரம் எடுத்த சீசன் முடிந்து, தற்பொழுது இசையமைப்பாளர்கள் ஹீரோவாக அவதாரம் எடுத்து வருகின்றனர் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த வரிசையில் இசை அமைப்பாளரான “தேவிஸ்ரீ பிரசாத்” ஹீரோவாக அறிமுகமாகும் படம் தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரியில் இதன் ஷூட்டிங் தொடங்குகிறது.

தெலுங்கு பட இயக்குனர் சுகுமார் இயக்க, தில் ராஜு தயாரிக்கிறார். இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தப் படம் உருவாக்கப்படுகிறது.

இதுபற்றி தேவிஸ்ரீ பிரசாத் கூறும்போது, ‘தமிழில் ‘இனிது இனிது காதல் இனிது’ படத்தில் இசை அமைப்பாளராக அறிமுகமானேன். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில், 70 படங்களுக்கு இசை அமைத்துள்ளேன். இப்போது ஹீரோவாக அறிமுகமாகிறேன்’ என்றார்.