Home Tamil Cinema News எந்தவொரு பாடலையும் பாடுவது எனது சுதந்திரம் ‘பீப்’ சாங் பாடலை லீக் செய்தவர்கள் மீது நடவடிக்கை...

எந்தவொரு பாடலையும் பாடுவது எனது சுதந்திரம் ‘பீப்’ சாங் பாடலை லீக் செய்தவர்கள் மீது நடவடிக்கை – சிம்பு

320

simbu

அனிருத் இசையமைப்பில் சிம்பு ஒரு சர்ச்சைக்குரிய பாடலை பாடியிருக்கிறார். அதில் சில வரிகள் பீப் என்ற சவுண்டுடன் வருகிறது. அந்த வரிகள் ஆபாசமானவை என்று எல்லாராலும் கணிக்க முடியும் என்ற வகையில் அமைந்துள்ளது. ஆபாச வரிகளுடன் வெளிவந்துள்ள இந்த பாடலுக்கு பல்வேறு அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த பாடல் குறித்து சிம்பு விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது, இந்த பீப் பாடலை நான்தான் பாடினேன். அனிருத்தும், நானும் சேர்ந்துதான் இந்த பாடலை உருவாக்கினோம். இந்த பாடல் எந்த படத்திலும் இடம்பெறவில்லை.

இதை என் மொபைல் போனில் வைத்திருந்தேன். யாரோ ஒருவர் அதை திருடி, இணையதளங்களில் வெளியிட்டுவிட்டார். இதற்கு நான் பொறுப்பு கிடையாது. நான் எந்த பாடலை பாடுவது என்பது எனது தனிப்பட்ட சுதந்திரம். இதில் யாரும் தலையிட முடியாது என்று கூறியுள்ளார்.

மேலும், இந்த பாடலுக்கு இசையமைத்த அனிருத்திடம் இதுகுறித்து விசாரிக்க முயலுகையில், அவர் வெளிநாட்டில் இருப்பதாகவும், அவரை தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் அவர் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் ஆஜராகியிருக்கும் வக்கீல் சி.ராஜசேகரன் இணையத்தில் தற்போது பரவலாக உலவி வரும் ‘பீப்’ சாங் என்ற பாடலின் வரிகள் அதிகாரப்பூர்வமான பாடல் வரிகள் அல்ல. மேலும் இவ்வரிகள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவதை அறிந்து எனது கட்சிக்காரர்கள் சிலம்பரசன் மற்றும் அனிருத் ஆகியோர் அதிர்ந்து போயுள்ளனர்.

இணையத்தில் உலவி வரும் இந்தப் பாடல் பதிவேற்றப்பட்ட மூலத்தையும் அதன் அதிகாரத்தையும் ஆராய்ந்து, கண்டறிந்து, சட்டப்படி அதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு, என் கட்சிக்காரர்கள் என்னிடம் கேட்டுக்கொண்டுள்ளனர் என்று கூறியுள்ளார்.