Home Tamil Cinema News விஜய்சேதுபதியின் ‘நானும் ரௌடிதான்’ படத்திற்கு இத்தனை போட்டியா!

விஜய்சேதுபதியின் ‘நானும் ரௌடிதான்’ படத்திற்கு இத்தனை போட்டியா!

103

Naanum-Rowdy

விஜய்சேதுபதி – நயன்தாரா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற நானும் ரவுடிதான் படத்தின் ஒளிபரப்பு உரிமைக்காக சுமார் மூன்றரைகோடி வரை தரத்தயாராக இருக்கிறதாம் சன்தொலைக்காட்சி. அதேஅளவில் கொடுத்துப் படத்தை வாங்க விஜய்தொலைக்காட்சியும் போட்டிப்போடுகிறதாம்.

ஆனால் அவர்கள் தருவதாகச் சொல்லும் விலையை விட அதிகமாக எதிர்பார்க்கிறதாம் தயாரிப்பு நிறுவனம். இதனால் அந்த வியாபாரம் முடியாமல் இழுத்துக்கொண்டு இருக்கிறது என்கிறார்கள்.

தொலைக்காட்சிகளில் விளம்பர நேரத்தைக் குறைத்தபிறகு படங்கள் வாங்குவதை எல்லாத் தொலைக்காட்சிகளும் குறைத்துக்கொண்டன அல்லது விட்டுவிட்டன. இரண்டு கோடி மூன்றுகோடி என்று விலை பேசப்பட்ட படங்களின் தற்போதைய விலை இருபது இலட்சம், முப்பது இலட்சம்தான்.ஓடாத படத்தின் தயாரிப்பாளர்கள் கொஞ்சம் பாவம்தான் போல.

இந்தச் சிக்கல் எல்லாம் சாதாரணப்படங்களுக்குத்தான். ஒரு படம் ஒடிவிட்டால் அதின் நிலை வேறு. அந்த வகையில் தான் நானும் ரவுடிதான் படமும் அதிக விலைக்கு பேசப்பதுவதற்கு காரணமாகும்.