Home Tamil Cinema News நடிகர் சங்கம் கிரிக்கெட் போட்டி தேதி அறிவிப்பு

நடிகர் சங்கம் கிரிக்கெட் போட்டி தேதி அறிவிப்பு

211

maxresdefault

தமிழ் நாடு நடிகர் சங்க தேர்தலில் விஷால், நாசர், கார்த்தி அணியினர் வெற்றி பெற்ற பிறகு பல அதிரடி மாற்றங்களை செய்து வருகின்றனர். நடிகர் சங்க கடனை அடைக்க விஷால் அணியினர் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி அதன் மூலம் நிதி திரட்டி வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது கிரிக்கெட் போட்டி நடத்தவுள்ளனர். இது குறித்து சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளனர். இந்தப்போட்டி வருகின்ற ஏப்ரல் மாதம் 17ம் தேதி நடக்கவிருக்கின்றதாம்.

ரஜினி, கமல், அஜித், விஜய் என அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் அழைப்பு விடுக்கவுள்ளார்களாம். எந்த நடிகர் எந்த அணியில் விளையாடுவார் என்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படுமென நடிகர் சங்க வட்டாரத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.