Home Tamil Cinema News நடிகை சமந்தாவின் காதலர் நடிகர் நாகசைதன்யாவா!

நடிகை சமந்தாவின் காதலர் நடிகர் நாகசைதன்யாவா!

161

Actress Samantha in love with actor Naga Chaitanya

நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். இவர் இளம் கதாநாயகன் ஒருவரை காதலிப்பதாகவும் விரைவில் அவரை திருமணம் செய்து கொள்ளபோவதாகவும் அறிவிப்பு வெளியிட்டார். இதனால் தமிழ், தெலுங்கு பட உலகில் பரபரப்பு ஏற்பட்டது.

இதை தொடர்ந்து அவர் காதலிப்பவர் யார் என்பதை அறிய ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் ஏற்பட்டது. பேஸ்புக், டுவிட்டரில் பல்வேறு நடிகர்களின் பெயர்கள் யூகங்களாக பரவியது. சமந்தா காதலிக்கும் நடிகர் நாகசைதன்யா என்று தெலுங்கு பட உலகினர் தற்போது உறுதிபடுத்தி உள்ளனர்.

நாகசைதன்யா பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் ஆவார். தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகராக இருக்கிறார். தமிழில் வெற்றிகரமாக ஓடிய விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை கவுதம் மேனன் தெலுங்கில் எடுத்த போது அதில் நாகசைதன்யாவும் சமந்தாவும் ஜோடியாக நடித்தனர்.

படப்பிடிப்பில் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டது. அடிக்கடி ரகசியமாக சந்தித்து காதலை வளர்த்து வந்தனர். நட்சத்திர ஓட்டல்களில் ஜோடியாக விருந்து சாப்பிட்டார்கள். திருமண தகவலை சமந்தா வெளியிட்டதும் நாகசைதன்யாவுக்கு சமூக வலைதளங்களில் ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here