Home Tamil Breaking News 10 நாட்களில் 4வது விபத்து : நாக்பூர்-மும்பை துரந்தோ எக்ஸ்பிரஸ் தடம்புரண்டது

10 நாட்களில் 4வது விபத்து : நாக்பூர்-மும்பை துரந்தோ எக்ஸ்பிரஸ் தடம்புரண்டது

30

நாக்பூர் மும்பை துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள டிட்வாலா அருகே இன்று காலை 6.30 மணிக்கு தடம் புரண்டது. ரயிலின் 5 பெட்டிகள் மற்றும் என்ஜின் தடம் புரண்டது.

துரந்தோ எக்ஸ்பிரஸ் வாசிந்த் மற்றும் அசான்காவ்ன் ரயில் நிலையங்களுக்கு இடையே தடம் புரண்டது. இந்த சம்பவத்தால் யாரும் உயிர் இழந்ததாக இதுவரை தகவல் எதுவும் இல்லை.

மீட்பு பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. கடந்த 10 நாட்களில் நான்கு ரயில்கள் தடம்புரண்டுள்ளன. கடந்த 25ம் தேதி உள்ளூர் மும்பை ரயிலின் 6 பெட்டிகள் மாஹிம் ரயில் நிலையம் அருகே தடம்புரண்டதில் 5 பயணிகள் காயம் அடைந்தனர்.

முன்னதாக கடந்த 19ம் தேதி உத்கல் எக்ஸ்பிரஸ் உத்தர பிரதேச மாநிலம் கடோலி அருகே தடம்புரண்டதில் 24 பேர் பலியாகினர், 156 பேர் காயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.