நகுலுடன் இணையும் ஆஸ்திரேலியா வாழ் தமிழ் பெண்

நகுலுடன் இணையும் ஆஸ்திரேலியா வாழ் தமிழ் பெண்

90

Nakul Joint with Australian Origin Tamil Model

ராஜ்பாபு இயக்கத்தில் நடிகர் நகுல், பாலிவுட் நடிகை ஆஞ்சல், பிரகாஷ் ராஜ், நாசர் உள்ளிட்ட பலர் நடித்து வெளிவர இருக்கும் படம் “செய்”. மேலும் இப்படத்தில் சந்திரிகா ரவி என்ற அழகிய புதுமுகத்தை செய் படக்குழுவினர் அறிமுகம் செய்துள்ளனர்.

ஆஸ்திரேலிய வாழ் தமிழ் பெண்ணான இவர் மாடலிங் துறையில் இருந்து தமிழ் திரையுலகிற்கு வந்திருக்கிறார். செய் படத்தின் முலம் தமிழ் திரையுலகிற்குள் அடியெடுத்து வைக்கும் சந்திரிகா ரவி, 2014 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா பட்டத்திற்கான முதல் சுற்றில் தகுதி பெற்றவர்.

ராஜ்பாபு இயக்கத்தில், ராஜேஷ் கே.ராமன் கதை, திரைக்கதை, வசனத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஒளிப்பதிவை விஜய் உலகநாதன் செய்துள்ளார். முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் இப்படத்தை அக்டோபர் மாதம் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

NO COMMENTS

LEAVE A REPLY