Home Tamil Cinema News நமீதா தமிழில் மீண்டும் நீண்ட இடைவெளிக்கு பிறகு வருகிறார்!

நமீதா தமிழில் மீண்டும் நீண்ட இடைவெளிக்கு பிறகு வருகிறார்!

128

namitha-2

தமிழ் படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வந்த நமீதாவுக்கு. தற்போது பிரபு முக்கிய வேடத்தில் நடிக்கும் “மீன் குழம்பும் மண் பானையும்” என்ற படத்தில் நமீதாவுக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இந்த படத்தில் நமீதா கதைக்கு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக பேசப்படுகிறது. படத்தில் வெளிநாட்டு பெண்ணாக வரும் நமீதா பின்னர் தமிழ்நாட்டுக்கு வந்து தமிழ் பாரம்பரியத்தின் பெருமைகளை உணர்ந்து தமிழ் கலாசாரத்தை நேசிப்பது போன்ற வேடத்தில் நடிக்கிறார்.

தமிழ் பட உலகில் முன்னணி நடிகையாக இருந்த நமீதா நீண்ட நாட்களாக தமிழ் பட வாய்ப்பு இல்லாமல் இருந்து வந்தார். சமீபத்தில் உடல் எடையை குறைத்த நமீதா மலையாள படம் ஒன்றில் மம்முட்டியுடன் நடித்து வருகிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் படத்தில் நடிப்பதால் நமீதா மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்.