Home Tamil Cinema News முதலமைச்சர் ஜெயலலிதாவை வாழ்த்தி நமீதா வெளியிட்ட அறிக்கை

முதலமைச்சர் ஜெயலலிதாவை வாழ்த்தி நமீதா வெளியிட்ட அறிக்கை

140

namitha-aiadmk

தமிழ் நாட்டில் மே 16ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. இதன் வாக்கு எண்ணிக்கை முடிவு நேற்று வெளிவந்தது. அதன்படி மீண்டும் ஜெயலலிதாவே முதலமைச்சர் ஆனார். இதற்கு நடிகை நமீதா வாழ்த்துக்கள் கூறி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் “புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா தலைமையிலான அதிமுக அமோகமாக வெற்றி பெற்றுள்ளது. இது அம்மாவின் நிர்வாக திறனுக்கும், ஆட்சிமுறைக்கும் கிடைத்த மகத்தான வெற்றி.

ஏழை மக்களுக்கும் தினமும் பசியில் வாடுவோருக்கும் அம்மா ஏற்படுத்திய நலத்திட்டங்கள் தான் வாக்குகளாக மாறியுள்ளது. இனி வரும் ஐந்தாண்டுகளும் அம்மாவின் தலைமையில் பொற்கால ஆட்சி தொடரப்போகிறது.

வரும் தலைமுறைகளின் நோக்கங்களையும் எதிர்பார்ப்புகளையும் அம்மா அவர்கள் பூர்த்தி செய்வார். மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்கள் பெற்ற பெருவெற்றிக்கு என் பணிவார்ந்த வாழ்த்துகள்” தெரிவிப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.