Home World News மத்திய அமெரிக்க நாடுகளில் நேட் புயல் : 25 பேர் உயிரிழப்பு

மத்திய அமெரிக்க நாடுகளில் நேட் புயல் : 25 பேர் உயிரிழப்பு

30

ஹோஸ்டாரிக்கா: மத்திய அமெரிக்க நாடுகளில் நேட் புயல் தாக்கத்தால் இதுவரை 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நேட் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல், மத்திய அமெரிக்க நாடுகளான ஹோஸ்டாரிக்கா, நிகரகுவா, ஹோண்டுரோஸ் நாடுகளை நேற்று முன்தினம் தாக்கியது. இந்த புயல் காரணமாக அந்த நாடுகளில் பெருமழை பெய்து எங்கும், வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி, பல இடங்களில் பெருத்த நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.

மரங்கள் வேரோடு சாய்ந்து பல்லாயிரக்கணக்கான வீடுகள் இடிந்து பெருத்த சேதமடைந்துள்ளன. மண்சரிவு மற்றும் மின்சாரம் துண்டிப்பினால் பல்வேறு நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன. மேலும், ரயில் மற்றும் விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கிப்போய் உள்ளது. இந்த நேட் புயல் வலுப்பெற்று அமெரிக்க வளைகுடா கடலோரப் பகுதியை ஞாயிற்றுக்கிழமை தாக்கும் என யாமி அமெரிக்க தேசிய புயல் மையம் கணித்துள்ளது.

Related Posts