Home Tamil Movie Reviews நவரச திலகம் – விமர்சனம்

நவரச திலகம் – விமர்சனம்

423
TheNeoTV Tamil Movie Rating
  • Our Rating

Summary

நவரச திலகத்தை ஒரு முழு நீள நகைச்சுவை படமாக எடுத்திருக்கிறார் இயக்குனர் கம்ரான். முதல் பாதி கொஞ்சம் போரடித்தாலும், இரண்டாம் பாதி விறுவிறுப்பாக செல்கிறது.

மொத்தத்தில் நவரச திலகம் - நகைச்சுவை விரும்பிகள் பார்க்கலாம்.

2.5
இயக்கம்: கம்ரான்
ஒளிப்பதிவு: ரமேஷ்
இசை: சித்தார்த் விபின்
தயாரிப்பு: சுதர்சன் வெம்பட்டி
நடிகர்கள்: மா.கா.பா.ஆனந், ஸ்ருஷ்டி டாங்கே, கருணாகரன், சித்தார்த் விபின்

முன்னால் சின்னத்திரை காம்பயர் மா.கா.பா.ஆனந்தின் இரண்டாவது படம் தான் நவரசதிலகம். அவருக்கு ஜோடியாக சிருஷ்டி டாங்கி, கருனாகரன் மற்றும் ஜெயப்பிரகாஷ் நடிக்க, இயக்குனர் கம்ரான் இயக்கிய படத்தை இயக்கியுள்ளார். வேலையில்லாமல் திரியும் ஆனந்த் தனது காதலியை மணப்பதற்காக செய்யும் சேட்டைகளே படம்.

Navarasathilagam-11

படத்தின் கதைப்படி, ஹீரோ மா.கா.பா.ஆனந்தின் அப்பா இளவரசு திருச்சியில் மதுக்கடை ஒன்றில் பார் நடத்திக் கொண்டிருக்கிறார். எந்த வேலை வெட்டிக்கும் செல்லாத மா.கா.பா, ஓரே டீலில் ஒரு கோடி சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக தனது அப்பாவின் சொத்துக்களை அப்படி, இப்படி, கொஞ்சம் கொஞ்சமாக அழித்துவருகிறார். கிட்டத் தட்ட அந்த மதுக்கடைபார் இருக்கும் இடம் மட்டுமே இவர்களுக்கு, சொந்தமாக மிச்சமிருக்கிறது.

இந்நிலையில், ஒருநாள் ரெயிலில் நாயகி சிருஷ்டிடாங்கேவை பார்க்கும் மா.காபா. அவரை கண்டதும் காதலில் விழுந்து விடுகிறார். சிருஷ்டியை மா.கா.பா நோட்டமிடுவதை பார்க்கும் சிருஷ்டியின் அப்பாவான தஞ்சை வல்லம் பகுதி மிட்டா மிராசு ஜெயப்பிரகாஷ், மா.கா.பாவை கழட்டி விடுவதற்காக சிருஷ்டிக்கு, காது கேட்காது, வாய் பேசமுடியாது என்று மா.கா.பா.விடம் கதை விடுகிறார்.

04-1441363573-navarasa-thilagam456

ஆனால், அது, சிருஷ்டி மீதான மா.கா.பா.வின் காதலை அதிகமாக்குகிறது. அவளை எப்படியாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அவள் பின்னாலேயே சுற்றுகிறார் மா.கா.பா. ஒருகட்டத்தில் சிருஷ்டிக்கு நன்றாக வாய் பேசத் தெரியும் என்று மா.கா.பா.விற்கு தெரிய வருகிறது. பின்னர், சிருஷ்டியும் மா.கா.பா.மீது காதல் வயப்படுகிறார்.

இந்நிலையில், சிருஷ்டி டாங்கேவின் குடும்பத்தோடு நெருங்க மா.கா.பா. திட்டம் போடுகிறார். அப்போது, சிருஷ்டியின் அக்காவுக்கு அரசு நியாய விலைக்கடையில் அநியாய ஊழியராக வேலையில் இருக்கும் சித்தார்த் விபினை திருமணம் செய்ய பேசி முடித்திருக்கும் செய்தி தெரிய வருகிறது.

Navarasa Thilagam Movie Stills

இது, தெரிந்ததும் மா.கா.பா, விபினுடன் நெருக்கமாகி, சிருஷ்டி குடும்பத்தோடு நெருங்க திட்டமிடுகிறார். இதற்காக விபினுடன், தன் நண்பர் கருணாகரன் உதவியுடன் நெருங்கி பழகி நண்பராகிறார். நிச்சயதார்த்த தேதி நெருங்கும் வேளையில், சித்தார்த் விபின் தனது தாய் மாமா என்பதும், அவரது அக்கா தான் தனது இறந்து போன அம்மா என்பதும் மா.கா.பா.விற்கு தெரியவருகிறது.

விபின், சிருஷ்டியின் அக்காவை திருமணம் செய்துகொண்டால், சிருஷ்டி தனக்கு அத்தை – மாமி உறவு ஆகிவிடுவார். என்பதால், சித்தார்த்விபின் – சிருஷ்டியின் அக்கா கல்யாணத்தை எப்படியாவது நிறுத்தவேண்டும் என மா.கா.பா. முடிவெடுக்கிறார்.

இறுதியில், அந்த திருமணத்தை தனது நடிப்பாற்றலால் நிறுத்தி தனது காதலி சிருஷ்டியை மா.கா.பா. கைபிடித்தாரா? இல்லையா..? தாய் மாமா சித்தார்த் விபினுக்கு வேறு பெண் பாத்தாரா? மா.கா.பா. வின் ஒரே டீல் ஒரு கோடி சம்பாத்தியபுத்தியால் வேறு என்னென்ன கலாட்டாக்கள் அரங்கேறின..? என்பதை காமெடி கலாட்டாவாக சொல்ல முயற்சித்து அதில் பாதி வெற்றியும் பெற்றிருக்கிறது. நவரசத்திலகம் படத்தின் மீதிக்கதை.

Navarasa-Thilagam-Movie-Stills-2

படத்தில் சோலோ ஹீரோவாக வரும் மா.கா.பா.ஆனந் தனது காமெடியான நடிப்பை காட்டியிருக்கிறார். நாயகி சிருஷ்டி டாங்கி தன்னை எழிமையான காதலியாக காட்டி நடித்துள்ளார். இவர்களுடன் கருனாகரன், நமோ நாராயண, இளவரசு மற்றும் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் தமது இயல்பான நடிப்பின் மூலம் படத்திற்கு பலத்தை சேர்த்துள்ளனர்.

இசையமைப்பாளர் சித்தார்த் விபினின் நடிப்பு மற்றும் பின்னணி இசை படத்திற்கு மிகப் பெரிய பலம். ஓளிப்பதிவாளர் ரமேஷ் மற்றும் இசையமைப்பாளர் சித்தார்த் விபினின் ஆகியோர் படத்திற்கேற்ப தங்கள் ஒளி மற்றும் இசையை அமைத்துள்ளனர் எனலாம்.

நவரச திலகத்தை ஒரு முழு நீள நகைச்சுவை படமாக எடுத்திருக்கிறார் இயக்குனர் கம்ரான். முதல் பாதி கொஞ்சம் போரடித்தாலும், இரண்டாம் பாதி விறுவிறுப்பாக செல்கிறது.

படத்தில் நடித்தவர்கள் எல்லோரும் இன்னும் கொஞ்சம் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தால், நன்றாக இருந்திருக்கும்!

மொத்தத்தில் நவரச திலகம் – நகைச்சுவை விரும்பிகள் பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here