Home Tamil Cinema News ராதையாக நடிக்கும் நயன்தாரா

ராதையாக நடிக்கும் நயன்தாரா

106

Nayanthara

நயன்தாரா ஏற்கனவே வெங்கடேஷுடன் ‘லட்சுமி’, ‘துளசி’ ஆகிய படங்களில் நடித்தார். இரண்டு படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றன. இப்போது அவருடன் 3–வது படத்தில் இணைகிறார். இந்த படத்தை மாருதி இயக்குகிறார். ஜிப்ராம் இசை அமைக்கிறார்.

வெங்கடேஷ் கடந்த ஜனவரி மாதம் ‘கோபால கோபாலா’ படத்தில் நடித்தார். அதன் பிறகு எந்த படத்திலும் நடிக்கவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது நயன்தாராவுடன் புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் தயார் ஆகிறது. இது பக்திப் படம் அல்ல. மலையாளத்தில் வெற்றி பெற்ற ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ படத்தின் ரீமேக் என்று கூறப்படுகிறது.

‘ஸ்ரீராம ராஜ்யம்’ படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் பாலகிருஷ்ணாவுடன் நயன்தாரா சீதையாக நடித்தார். அடுத்து தெலுங்கு முன்னணி நடிகர் வெங்கடேஷுடன் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். இதில் நயன்தாரா ராதையாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.