Home Tamil Cinema News மீண்டும் பேய் படத்தில் நடிக்கும் நயன்தாரா

மீண்டும் பேய் படத்தில் நடிக்கும் நயன்தாரா

121

Nayanthara-Maya

தமிழ் சினிமாவில் ஐயா படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது முன்னனி நடிகை மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் இருப்பவர் நடிகை நயன்தாரா. தனது தனிப்பட்ட கசப்பான அனுபவங்களைத் தாண்டி இவரது இரண்டாவது இன்னிங்ஸ்தான் வெற்றிகரமான படங்களை அளித்துள்ளது.

இந்த ஆண்டில் வெளியான மாயா, தனி ஒருவன், நானும் ரவுடிதான் ஆகிய படங்கள் தொடர் வெற்றியை பெற்றதன் மூலம் வெற்றி கதாநாயகியாக மாறியிருக்கிறார். தற்போது திருநாள், இது நம்ம ஆளு படங்கள் விரைவில் வெளியாக தயராகவுள்ளது.

இவரது நடிப்பில் இந்த வருடம் வெளியான மாயா திரைப்படத்தில் சோலோ ஹீரோயினாக தனது வெற்றியை நிலைநாட்டினார் தற்போது மீண்டும் ஒரு புதிய திகில் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம் நயன்தாரா. இதிலும் நாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட திகில் கதைக்களமாக இந்த படத்தை உருவாக்கவிருக்கிறார்களாம் படக்குழுவினர்.

களவாணி, சண்டிவீரன் படங்களை இயக்கிய சற்குணம் தயாரிக்கும் இப்படத்திலும் நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த வேடம்தானாம்.சற்குணத்தின் உதவியாளர் தாஸ் ராமசாமி இப்படத்தை இயக்கவுள்ளார்.

சந்திரமுகி, மாசு, மாயா, ஒரு மலையாள பேய் படத்தை தொடர்ந்து இது நயன்தாரா நடிக்கும் 5வது பேய் படம். இத்தனை பேய் படங்களில் நடித்துவிட்டதால் தனக்கு பேய் படங்களில் நடிப்பது பழகிவிட்டது என்கிறார் நயன்தாரா.