Home Tamil Cinema News விஜய் சேதுபதியின் தர்மதுரை படத்தில் குத்தாட்டம் போடும் நயன்தாரா

விஜய் சேதுபதியின் தர்மதுரை படத்தில் குத்தாட்டம் போடும் நயன்தாரா

127

sathyam

இந்த வருடத்தில் அடுத்தடுத்து 3 வெற்றிப்படங்களை கொடுத்து டாப் நாயகி இடத்தை பிடித்திருப்பவர் நயன்தாரா. வளர்ந்த நடிகர்களுடன்தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்காமல் வளர்ந்து வரும் நடிகர்களுடனும் நடித்து தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்திவருகிறார்.

சமீபத்தில் வெளியான ‘நானும் ரௌடிதான்’ படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப்படத்தில் இவர்களிடையிலான கெமிஸ்ட்ரி அதிகம் பேசப்பட்டது.

இதனைத்தொடர்ந்து இந்த ஜோடி மீண்டும் புதிய படத்தில் இணைய இருக்கிறார்கள். ஆனால், நயன்தாரா கதாநாயகியாக நடிக்காமல், ஒரு பாடலுக்கு பாடலுக்கு மட்டும் அயிட்டம் டான்ஸ் ஆடயிருக்கிறாராம்.

விஜய் சேதுபதி தற்போது சீனு ராமசாமி இயக்கத்தில் ‘தர்மதுரை’ படத்தில் நடித்து வருகிறார். இதில் இடம்பெறும் ஒரு சிறப்பான பாடலுக்கு நயன்தாரா குத்தாட்டம் ஆட இருக்கிறார். இந்த பாடலுக்கான படப்பிடிப்பு அடுத்த வாரம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

சீனுராமசாமி இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தேனி அருகே நடந்து வருகிறது. விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தமன்னா, ஸ்ருஷ்டி டாங்கே, ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவடா நாயர் ஆகியோர் நடிக்க இருக்கின்றனர்.