Home Tamil Cinema News நான்கு கோடி சம்பளம் கேட்கும் நயன்தாரா!

நான்கு கோடி சம்பளம் கேட்கும் நயன்தாரா!

172

nayanthara

நடிகை நயன்தாரா தனது சம்பளத்தை தடாலடியாக ரூ 4 கோடியாக உயர்த்திவிட்டாராம். தமிழ் சினிமா வரலாற்றில் இந்த சம்பளம் நிர்ணயித்திருக்கிற முதல் ஹீரோயின் நயன்தாரா மட்டும்தான் என்பது கோடம்பாக்கத்தின் இன்றைய பரபர பேச்சு. கடந்த ஆண்டு தொடர்ந்து 4 ஹிட் படங்களில் நடித்திருந்தார் நயன்தாரா. அவற்றில் இரண்டு படங்கள் இவருக்காகவே ஓடியவை.

இப்போது இது நம்ம ஆளு, திருநாள், காஷ்மோரா, இருமுகன், மற்றும் தெலுங்கில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படங்களில் நயன்தாரா சம்பளம் ரூ 3 கோடி வரை. இந்தப் படங்களுக்குப் பிறகு ஒப்பந்தமாகும் படங்களுக்கு ரூ 4 கோடி என சம்பளத்தை உயர்த்தியிருக்கிறராம் நயன்தாரா.

இந்நிலையில் தெலுங்கு இயக்குநர் ஒருவர் சமீபத்தில் திகில் படம் ஒன்றில் நடிக்க நயன்தாராவை அணுகினார். அந்த படத்தில் நடிக்க நயன்தாரா கேட்ட சம்பளம் ரூ 4 கோடி. இதனால் அதிர்ச்சி அடைந்த இயக்குனர் உடனே நயன்தாராவுக்கு பதில் அஞ்சலியை ஒப்பந்தம் செய்து விட்டார்களாம்.

இதனை அறிந்த நயன்தாரா, தாராளமாய் பண்ணிக்கோங்க என்னை விடுங்க என்று கும்பிடு போட்டுவிட்டாராம் நயன்தாரா. தமிழிலும் இந்த சம்பள உயர்வை விரைவில் அறிவிக்கப் போகிறாராம்.