Home Tamil Cinema News நயன்தாராவும் பீரும்

நயன்தாராவும் பீரும்

124

நயன்தாராவும் பீரும்தமிழ் திரையுலகில் ஒரு படம் ஹிட்டானால் அதன் காரணங்களை கண்டரிந்து அதே பாணியில் தொடர்ந்து செய்வது வழக்கமாகிவிட்டது. ஹிட்டாகும் படங்களில் ஏதாவது ஒரு காட்சி வித்தியாசமாக இருந்தால், தொடர்ந்து அடுத்தடுத்து அந்த நடிகர் அல்லது நடிகை நடிக்கும் படங்களில் அதே போன்ற காட்சிகள் இடம்பெறும்.

அதே போல் தற்போது நயந்தாரா பீர் வாங்குவது, கையில் வைத்திருப்பது, மது குடிப்பது பொன்ற காட்சிகளில் நயன்தாரா நடித்து அந்த படங்கள் அமோக வெற்றி பெற்றது.

nayan 2

குறிப்பாக தனுசுடன் ‘யாரடி நீ மோகினி’ படத்தில் மது குடிப்பது போல் நடித்தார். அந்த படம் வெற்றிபெற்றது. அதைத்தொடர்ந்து ஆர்யாவுடன் நடித்த ‘ராஜா ராணி’ படத்தில் நயன்தாரா தன் அப்பா மற்றும் கணவருக்கு பீர் கொடுப்பது போன்ற காட்சி இடம்பெற்றது. நானும் ரவுடிதான்’ படத்தில் ‘டாஸ்மாக்’ கடைக்கு சென்று நயன்தாரா பீர்பாட்டில் வாங்கி வருவது போன்ற ஒரு காட்சியை வைத்தனர். இந்த காட்சியில் நடித்ததற்காக அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பின. ஆனாலும் திரைத்துரையினர் நயன்தாராவை விடுவதாக இல்லை.

தற்போது ‘திருநாள்’ என்ற படத்தில் ஜீவா வுடன் நயன்தாரா நடித்துக்கொண்டு இருக்கிறார். இந்த படத்திலும் சென்டிமென்டாக நயன்தாரா கையில் பீர் பாட்டிலுடன் இருப்பது போன்ற காட்சிகள் வேளிவந்து இருகின்றன. எப்படியும் நயன்தாராவுக்கு பொதை நாயகி என்ற பெயர் வைக்காமல் விடமாட்டார்கள் போல் இருக்கிறது.