Home Tamil Cinema News விஜய் சேதுபதியுடன் நடனமாட மறுத்த நயன்தாரா!

விஜய் சேதுபதியுடன் நடனமாட மறுத்த நயன்தாரா!

170

vijay-nayantaraவிஜய் சேதுபதி-நயன்தாரா நடிப்பில் வெளிவந்த நானும் ரவுடி தான் படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதில் நயனுடன் விஜய் சேதுபதுயின் கெமிஸ்ட்ரி பரவலாக எல்லோராலும் பேசப்பட்டது.

இதை தொடர்ந்து விஜய் சேதுபதி அடுத்து சீனுராமசாமி இயக்கத்தில் தர்மதுரை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக தமன்னா நடிக்க மேலும் மூன்று கதாநாயகிகள் நடிக்கவுள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட நயன்தாராவிடம் பேச்சு வார்த்தை நடந்ததாம். இந்தப்பாடலில் விஜய்யுடன் குத்தாட்டம் பொடுவார் நயன் என்று திரையுலக வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டது.

ஆனால் நயன்தாரா ஒரு பாடலுக்கு என்னால் நடனமாட முடியாது என்று கூறி மறுத்து விட்டாராம். இதனால் படக்குழு வேறு நடிகையை வைத்து இந்தப் பாடலை எடுக்கலாமா என்ற யோசனையில் உள்ளனராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here