Home Tamil Cinema News தயாரிப்பாளர் ஆகிறார் நயன்தாரா!

தயாரிப்பாளர் ஆகிறார் நயன்தாரா!

135

Nayanthara

நடிகை நயன்தாரா தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம் வருகிறார். சமீபகாலமாக தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதைகளாகத் தேர்வு செய்து நடித்து வருகிறார் நயன். மாயா, நானும் ரவுடி தான், தனி ஒருவன் என அவரது சமீபத்திய படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றுள்ளன.

இந்த நிலையில், கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார் நயன். இப்படத்தை முருகதாஸிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ஜெகன் இயக்குகிறார்.

இப்படத்தில் மாவட்ட ஆட்சியாளராக நயன் நடிக்க இருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனது கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் உள்ள இந்தப் படத்தை தானே தயாரிப்பது என நயன்தாரா முடிவெடுத்துள்ளாராம். தமிழ் மற்றும் தெலுங்கில் கைவசம் உள்ள மற்ற படங்களை முடித்து விட்டு இந்தப் படத்திற்கான அறிவிப்பை நயன் வெளியிடுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here