Home Tamil Movie Reviews நையப்புடை – விமர்சனம்

நையப்புடை – விமர்சனம்

453
TheNeoTV Tamil Movie Rating
  • Our Rating

Summary

போராட்ட குணத்தை முதுமை அழித்துவிட முடியாது, நல்லது செய்ய வயது ஒரு தடை இல்லை எனும் எஸ்.ஏ.சி முயற்சி, எம் எஸ் பாஸ்கர் ராஜேந்திரனின் நகைச்சுவை கலந்த வில்லத்தனமான நடிப்பை பாராட்டலாம்.

2.5
இயக்கம்: விஜய் கிரன்
ஒளிப்பதிவு: எம். ஜீவன்
இசை: தாஜ் நூர்
தயாரிப்பு: கலைப்புலி எஸ் தாணு
நடிகர்கள்: எஸ்.ஏ.சந்திரசேகரன், பா.விஜய், சாந்தினி, விஜி சந்திரசேகர், நான் கடவுள் ராஜேந்திரன், எம்.எஸ்.பாஸ்கர், மேனேஜர் கிருஷ்ணமூர்த்தி, ஆடுகளம் நரேன், ரஞ்சன், மாஸ்டர் ஜாக்சன், சி.ரங்கநாதன்

விஜய் கிரணின் இயக்கத்தில், இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன், கதை, திரைக்கதை, வசனம் எழுதி கதையின் நாயகராக நடித்தும் இருக்கும் திரைப்படம் தான் ‘நையப்புடை’. அவர் கூடவே பா.விஜய் அவர்களும் இணைந்து நைய்யப்புடைக்க களமிறங்கியிருக்கிறார்கள்.

13

அநியாயத்தை தட்டிக்கேட்கும் துணிச்சல் மிகுந்த, ஒய்வு பெற்ற ராணுவ அதிகாரியான எஸ்.ஏ.சி அவர்கள் ஒரு நாள் பேருந்தில் பயணிக்கும் பொழுது கலாட்டா செய்யும் லோக்கல் ரவுடிகளை துவம்சம் செய்ய அதை ஒரு மாணவி வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்ய மிக பிரபலமாகிறார் எஸ்.ஏ.சி. அதனால் பத்திரிக்கையாளரான பா. விஜய்யுடன் அறிமுக ஏற்பட பின் இருவரும் சேர்ந்து பல சமூக பிரச்சனை எதிர்க்கொண்டு எதிரிகளை எவ்வாறு நைய்யப்புடைக்கிறார்கள் என்பதே படத்தின் கதை.

மொத்தப் படக் கதையும், இதில் தாதாவையும் அவனுக்கு சப்போர்ட் பண்ணும் போலீஸையும் காட்டிலும் எஸ்.ஏ.சியாலும், பாடலாசிரியர் பா.விஜய்யாலும் அதிகம் நையப்புடைக்கப்படுவது பாவம் ரசிகர்கள் தான் என்பது டிராஜிடி.

Nayyapudai-Movie-Stills-5

இயக்குனர் எஸ்.ஏ.சி சமூக பிரக்ஞை கொண்ட முதியவராக ஒய்வு பெற்ற இராணுவ வீரராக இயல்பாக நடிக்க முயற்சித்திருக்கிறார். “இளைய தளபதி நடிச்ச துப்பக்கி படம் பார்த்திருக்கியா, நாங்க அப்பன் பேச்சு கேட்க மாட்டோம் ஆனா, அப்பனுக்கு ஒரு பிரச்சினைன்னா சும்மா இருக்க மாட்டோம், எனும் காட்சியை, எஸ்.ஏ.சி, இப்படத்தில் பயன்படுத்தியிருப்பதில் தொடங்கி ஏரியா சிறுவர்கள் மீது எஸ்.ஏ.சி காட்டும் அளவுக்கு அதிகமான பாசம், ஒடும் பேருந்தில் கத்தி, அருவாளுடன் பேருந்தை கடத்துபவர்களை தான் எழுபது வயது தாண்டிய பெரியவர், முதியவர் என்றெல்லாம் பாராமல் எகிறி பாய்ந்து அடிப்பது, காருக்கு கார்தாவி மொட்டை ராஜேந்திரனை புரட்டி எடுப்பது வரை ஒவ்வொரு காட்சியிலும் அளவுக்கு அதிகமாகவே நடித்திருக்கிறார் எஸ்.ஏ.சி.

பாடலாசிரியர் பா.விஜய்யும், தன் பங்குக்கு, நீங்க, மிலிட்டரி, நான் மீடியா இருவரும் சேர்ந்து புரட்சியில குதிப்போம், என எஸ்.ஏ.சியை உசுப்பி விட்டு பட்டையை கிளப்புவதாக நினைத்து பாய்ந்து அடிக்கிறார். பாவம் ரசிகன்.

Nayyapudai-movie-13

கதாநாயகி சாந்தினி கச்சிதம், விஜி சந்திரசேகர், நான் கடவுள் ராஜேந்திரன், எம்.எஸ்.பாஸ்கர், மேனேஜர் கிருஷ்ணமூர்த்தி, ஆடுகளம் நரேன், ரஞ்சன், மாஸ்டர் ஜாக்சன், சி.ரங்கநாதன் உள்ளிட்டோரின் நடிப்பும் ரசிகனை நையப்புடைக்கிறது! மஸ்காரா அஸ்மிதாவின் ஒற்றைப் பாடல் குத்தாட்டமே ஆறுதல்!

போராட்ட குணத்தை முதுமை அழித்துவிட முடியாது, நல்லது செய்ய வயது ஒரு தடை இல்லை எனும் எஸ்.ஏ.சி முயற்சி, எம் எஸ் பாஸ்கர் ராஜேந்திரனின் நகைச்சுவை கலந்த வில்லத்தனமான நடிப்பை பாராட்டலாம்.

11

படத்தை கையாண்ட விதம், திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லாமல் போனது. லாஜிக் மீறல்களும், எதார்த்தமின்மையும், நாடகத்தனமும் சற்று அதிகமாக உள்ளது. இதனாலேயே படத்துடன் ரசிகர்களால் ஒன்றமுடியாமல் போகிறது.

எம்.ஜீவனின் ஒளிப்பதிவு மட்டுமே இப்படத்தின் பெரும் ப்ளஸ் பாயிண்ட் அதே மாதிரி தாஜ்நூரின் இசையில நான் பாரின் காரு என்ஜின், குத்துப் பாடலும் அதற்கான மஸ்காரா அஸ்மிதா அழகியின் ஆட்டம், பாட்டமும் அசத்தல்.

மொத்தத்தில் நையப்புடை – ரசிகர்களை நையப்புடைந்திருக்கிறது