Home Tamil Cinema News நெடுஞ்சாலை நாயகி ஷிவதா நாயர் மலையாள நடிகர் முரளி கிருஷ்ணனை இன்று மணக்கிறார்!

நெடுஞ்சாலை நாயகி ஷிவதா நாயர் மலையாள நடிகர் முரளி கிருஷ்ணனை இன்று மணக்கிறார்!

530

nedunchalai

நெடுஞ்சாலை நாயகி ஷிவதா நாயருக்கும் மலையாள இளம் நடிகர்களில் ஒருவரான முரளி கிருஷ்ணனுக்கும் நாளை கேரள மாநிலத்தில் இந்து பாரம்பரிய முறைப்படி திருமணம் நடைபெறவுள்ளது. முரளி கிருஷ்ணன் மலையாளத்தில் ஜக்கரியா போத்தன் ஜீவிச்சிருப்புண்டு என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

முரளி கிருஷ்ணன் – ஷிவதா நாயர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக மாறியது. தற்போது இருவரின் பெற்றோரும் திருமணத்திற்கு பச்சைக்கொடி காட்டி விட்டனர்.

திருமணத்திற்குப் பின்னர் நல்ல வேடங்கள் வந்தால் தொடர்ந்து நடிப்பேன். ஆனால் முன்னுரிமை எனது குடும்பத்திற்குத் தான் என்று நடிகை ஷிவதா தெரிவித்து இருக்கிறார்.