கபாலி படத்தின் கதை குறித்து வைரலாகும் செய்தி

கபாலி படத்தின் கதை குறித்து வைரலாகும் செய்தி

223

kabali_2899368f

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள கபாலி படத்தை காண்பதற்கு பல கோடி ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் இந்தப் படத்தின் கதை குறித்து சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பரவிவருகின்றது.

அந்த கதைப்படி ‘மலேசியாவில் தோட்ட வேலை செய்பவர்கள் அங்கு மிகவும் மோசமாக நடத்துகிறார்கள், அவர்கள் அனைவரும் தமிழகர்கள், அவர்கள் நலனுக்காக கபாலி போராடுகிறார்.

அதே தோட்டத்தில் வேலை செய்பவர் ராதிகா ஆப்தே, அவருக்கு ரஜினிக்கும் காதல் உண்டாகிறது, அதன் பின் திருமணம், இருவருமே சேர்ந்து ஆதிக்கத்தை போராடுகின்றனர்.

அப்போது ஒரு கும்பல் சதி வேலை செய்து ரஜினியை சிறைக்கு செல்ல வைக்கின்றது, பின் 25 வருடம் சிறையில் இருந்து வெளியே வரும் ரஜினி எந்த ஒரு சண்டையும் இனி வேண்டாம் என முடிவு செய்கிறார்.

ஆனால், ரஜினி வந்ததை அறிந்த வில்லன் கும்பல் மீண்டும் அவரை டார்ச்சர் செய்கின்றது. அதன் பின் ரஜினி பழைய கபாலியாக மாறி அவர்களை பழி வாங்கும் எமோஷ்னல் ட்ராமா தான் காபாலி’ என்று ஒரு கதை உலா வருகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY