Home Tamil Cinema News சண்டை காட்சியின்போது “நிக்கி கல்ராணியின்” கை விரலில் எலும்பு முறிவு

சண்டை காட்சியின்போது “நிக்கி கல்ராணியின்” கை விரலில் எலும்பு முறிவு

141

Nikki-Galrani

நடிகை ‘நிக்கி கல்ராணி’ தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், கன்னட படங்களிலும் நடித்துள்ளார். இவர் தற்போது விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக எழில் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் நிக்கி கல்ராணி போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். போலீஸ் வேடத்தில் நடிப்பதால் நிக்கி கல்ராணி இப்படத்தில் சண்டைக் காட்சியில் எல்லாம் நடித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் படமாக்கப்பட்ட கராத்தே சண்டைக் காட்சியில் நிக்கி கல்ராணி டூப் இல்லாமல் அவரே நடித்ததாக கூறப்படுகிறது.

அப்போது, சண்டை போடும்போது நிக்கி கல்ராணியின் கை விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதையடுத்து, படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு, நிக்கி கல்ராணியை உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர். தற்போது நிக்கி கல்ராணி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

நிக்கி கல்ராணி ஏற்கனவே அவர் நடித்த டார்லிங், யாகாவராயினும் நாகாக்க உள்ளிட்ட தமிழ் படங்கள் ஹிட் ஆனது. தற்போது ‘கோ 2’, ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here